செவ்வாய், 9 செப்டம்பர், 2014

(2)மூன்றாம் பிறை - தொடர் கதை


மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

"காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சந்நிதி"

இந்த பாடலின் வரிகள் லக்ஷ்மியின் நினைவில் இருந்து பிரிய மறுத்தன. யார் இதை பாடுவது. ஏன் எனக்கு மட்டும் கேட்கின்றது என்று பரிதவித்தாள். தான் வரைந்த அந்த படத்தில் உள்ள முகத்தை பார்த்தால், தனக்குளே ஒரு சொல்ல முடியாத துயரம் கலந்த சந்தோசம்.



யார் இவன்?

"உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே"

இது ஒரு வேண்டுகோளா? இல்லை உத்தரவா? இரண்டில் எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அந்த படத்தில் உள்ளவன் இதை சொல்லி இருகின்றான் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது. நேராக தன் அப்பாவின் அறைக்கு சென்றாள்.

அப்பா, இந்த படத்தில் உள்ளவரை உனக்கு தெரியுமா?

இவரா.. இல்லையே.. ஏன்...

என்னவென்றே தெரியவில்லை அப்பா. இவரை எங்கேயோ பார்த்து பழகிய  மாதிரி ஒரு உணர்வு. நல்லா யோசித்து பாருங்கள் அப்பா, இவரை நீங்கள் எங்கேயும் பார்த்தது இல்லை?

இல்லை பாக்கி ... நீ போய்   நல்லா ரெஸ்ட் எடு...

சரி அப்பா..

என்று சொல்லி தன் அறையினுள் நுழைந்தாள். சற்று நேரத்தில் இடி மின்னலுடன் மழை. "தடால்" என்று பலத்த சத்தம் போட்ட இடியை கேட்டு மீண்டும் தன் தகப்பன் அறையினுள் நுழைந்தாள். அங்கே அவர் அயர்ந்து தூங்குவதை கண்டு அவரை வற்புறுத்த விரும்பாமல் மீண்டும் தன் அறைக்கே வந்து விட்டாள்.

மீண்டும் ஒரு முறை சத்தமான இடி இடிக்க, தலையணை வைத்து தன் தலையை மூடிக்கொண்டு தானே அமைத்து கொண்ட இருட்டான அமைதியான உலகில்   பெருமூச்சு விடுகையில்....

அவன் வந்தான், அதே சிறிப்பு, ஒர்விதமான பாசம். இந்த பாசம் சகோதர பாசம் அல்ல, உறவினர் பாசம் அல்ல, நட்பின் பாசம் அல்ல. இது வேறு எதோ ஒன்று. இவ்வளவு உரிமையோடு எனக்குள் வருகின்றானே யார் இவன் எற்று நினைக்கையில்... அடுத்த பலத்தான "இடி".. அப்பா என்று அலற நினைக்கையில் அவன் கதை பாட ஆரம்பித்தான்..

"முன்பு ஒரு காலத்தில... முருங்கை மற காட்டுக்குள்ள... தந்திரம் மிக்க நரி வாழ்ந்து வந்துச்சாம்.. அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்திச்சாம், என்ன பண்ணிச்சாம்? என்று அவன் கேட்க்க..

"ஓடி வந்துச்சாம்" என்று சொல்லி தன்னைஅறியாமலே பதில் பாட்டு பாட துவங்கினாள்.

இவன் யார் என்று தெரியவில்லை,ஆனால் என் உயிருக்கும் மேலானவன். எங்கே சந்தித்தேன் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக சந்தித்தேன்... எனக்குள் இருக்கும் இவனை எப்படி மீண்டும் சந்திப்பது... என்று மீண்டும் யோசிக்க ஆரம்பிக்கையில்...

அடுத்த அறையில்..

ஐயா, வைத்தியரா? நான் பாக்கியலட்சுமி அப்பா பேசுறேன்.

லட்சுமி எப்படி இருக்கா?

நிலைமை கொஞ்சம் மோசம் ஐயா.

இன்று ஒருவரின் படத்தை காட்டி இவரை தெரியுமா என்று கேட்கின்றாள்.

அப்படியா. அவளுக்கு சென்ற வருடம் நடந்தது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிற்கு வருகிறது. நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். அந்த படத்தை ஒரு நகல் எடுத்து எனக்கு அனுப்பிவையுங்கள், அது யார் என்று நான் விசாரிக்கிறேன். இன்னொரு காரியம்...அவள் நன்றாக தூங்க வேண்டும், வேலைக்கு சாப்பிட வேண்டும். அவளுக்கு கல்யாணத்திற்கு ஒழுங்கு பண்ணுங்கள். அது ஒரு நல்ல மாற்றமாக  இருக்கும்.

அங்கே ஊட்டியில்...

அந்த பள்ளி கூட மாணவர்கள் புதிதாக வந்துள்ள ஆசிரியரின் ஆணை படி உடற் பயிற்சி செய்து கொண்டு இருக்க, அவர்களுக்கு பின்னால் அந்த மரத்தின் அடியில் .... சீனு.... மற்றும் சுப்பிரமணி...

வழக்கம் போல் சுப்பிரமணி வாலை ஆடிக்கொண்டு இருக்க, சீனு மட்டும் அட்ரா ராமா, அட்ரா ராமா என்று அந்த மாணவர்களை போல் செய்ய முயற்சி பண்ணி கொண்டு இருந்தான்..

தொடரும்...அடுத்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்


http://www.visuawesome.com/

5 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. தொடர்ந்து படித்து பின்னோட்டம் அளிக்குமாறு வேண்டி கொள்கிறேன்.

      நீக்கு
  2. சுவாரசியம் நிறைந்ததாக செல்கிறது சார், தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி. தொடர் எண் 3யும் வெளியிட்டு விட்டேன். படித்து கருத்து சொல்லவும்.

      நீக்கு