திங்கள், 29 செப்டம்பர், 2014

தலைக்கு அவ்வளவுனா... உடம்புக்கு?

என்னங்க....சீக்கிரம் கிளம்புங்க...

என்னடா இது.. ஞாயிறு  மதியமும் அதுவுமா....என்று யோசித்து கொண்டே...

எங்கமா போற?

போற இல்லை...போறோம்..

சரி எங்க போறோம்?

ஆப்பிள் - பேரி காய் வாங்க...



அடேங்கப்பா.. ஆப்பிள் - பேரி காய் நீயே போய் வாங்கலாமே, அதுக்கு ஏன் நான்?

இது கடை இல்லைங்க, நேர போய் வாங்க.. அந்த பழ தோப்புக்கு போய் நாமே பிடுங்கி கொண்டு வரவேண்டும்.

மனைவி இந்த வார்த்தை சொன்னவுடன், சின்ன வயதில், கரும்பு- திராட்சை- மாங்காய் மற்றும் சில விஷயங்களை தோப்பில் சென்று திருடியது
நினைவுக்கு வந்தது, மனதிலே ஒரு சிரிப்பு சிரித்தேன்.

எங்க, சின்ன வயதில் நீங்க இது எல்லாம் திருடி இருக்கீங்களா?

இல்... ஆமா... அதை எப்படி சரியா இந்த நேரத்தில் கேட்ட?

நான் பழ தோட்டம் போய் பிடுங்கலாம் என்று சொன்னவுடனே.. உங்க முகத்தில் மலரும் நினைவுகள் தெரிந்தது... சரி, அங்க தோப்புல வேற என்ன எல்லாம் பண்ணீங்க... நல்ல பிள்ளை மாதிரி சொல்லுங்க..

அங்கே...நான் வேறு எதுவும் செய்யல...

சரி கிளம்புங்க... நம்ம கூட நம்ம நண்பர்கள் ரெண்டு பேரும் வராங்க.
நான் மட்டும் தான் இளிச்ச வாயன் என்று நினைத்தேன்... வேறு யார் ஒருவன் என்று நினைத்து, எவ்வளவு தூரம் என்று கேட்க்கையில்... ஒரு 150 கிலோ மீட்டர் என்று பதில் வந்தது.

இது நமக்கு அவசியாமா என்று கேட்க்க நினைத்து, அது பின்னால் வேறு ஓர் நாள் எனக்கு எதிராக உபயோக படுத்த படும் என்று மூளை சொல்ல, பேஷா போகலாம் என்று வண்டியை விட்டோம். வழியில் நண்பர்கள் மூவரையும் ஏற்றி கொண்டு ... பயணம் ஆரம்பித்தது.

நாங்கள் வசிக்கும் கலிபோர்னியாவின் மண்ணில் எதை போட்டாலும் வளர்ந்து விடும். அவ்வளவு மண் வளம்.ஒன்றரை மணி நேரத்து பயணத்தின் பின் அந்த பழ  தோப்பை அடைந்தோம்.

சுற்றும் முற்றும் நிறைய மலைகள்,இந்த தோப்பே ஒரு பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. என்னுடன் கூட வந்த நண்பர் ஒரு புகைப்பட விரும்பி. எப்போது பார்த்தாலும் கைலையில் புகைப்பட கருவியோடு தான் இருப்பார். அவர் மனைவி, மற்றும் இன்னொரு நண்பரின் மனைவி, என் மனைவி, நான் என்று ஐந்து பேரும் வண்டியை விட்டு இறங்கி அந்த நுழை வாசலுக்குள் சென்றோம்..


அங்கே இருந்த பெண் மணியிடம் என் மனைவி, இங்கே ஆப்பிள் - பேரிகை பிடுங்க வந்துள்ளோம், என்று சொல்ல, அந்த மிஸி, தலைக்கு ஒரு ருபாய் என்றாள். நான் நடிகர் நாகேசின் (அனுபவி ராஜ அனுபவி) விசிரியல்லாவா. யார் எந்த நேரத்தில் "தலைக்கு" என்று சொன்னாலும், உடனே அப்ப "உடம்பிற்கு" (ஆங்கிலத்தில் How much for the Body)என்று கேட்க்க என் மனைவி என்னை முறைத்து பார்த்து விட்டு, முதலில் ஆப்பிள் - பேரி காய் பிடுங்கறேன். அப்புறம் வீட்டில் போய் உங்களை பார்த்து கொள்கிறேன் என்று பார்வையிலே சொல்ல, நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை. சும்மா நகைசுவைக்காக அப்படி கேட்டேன் என்றேன். எந்த மனிதனாவது நகைசுவைக்காக முன் பின் தெரியாத பெண்ணிடம் ...How much for the body? என்று கேட்ப்பானா? என்று என்னை கேட்டு விட்டு, இங்கே இருந்து போற வரைக்கும் வாய திறக்காதீர்கள் என்றாள்.


சரி, தவறு நடந்து விட்டது. அதை சரி செய்யலாம் என்று நினைத்து.. அவ்வளவு தூரம் வந்தாலும் ஒரு டாலர் கொடுத்து விட்டு பழம் பிடுங்கலாம் என்றாள் அது நமக்கு ரொம்ப லாபம் என்றேன்.

நீயெல்லாம் ஒரு கணக்கு பிள்ளையா? என்று ஓர் பார்வை.

உள்ள போக தாங்க ஆளுக்கு ஒரு டாலர். உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அத்தனை பை வாங்கி கொள்ளலாம். ஒரு பை 7 டாலர். அந்த பை முழுவதும் நிரப்பி கொள்ளலாம் என்றாள்.

சரி மூன்று குடும்பத்திற்கு 3 பை வாங்கி கொண்டு உள்ளே செல்கையில், அந்த மிஸி.. பேரி காய் அவ்வளவாக இல்லை, உங்களுக்கு கொஞ்சம் தான் கிடைக்கும் என்று சொல்ல, மூன்று அம்மணிகளும் பேரி காய் தோப்பை நோக்கி ஓடினார்கள். இவர்கள் அந்த பக்கம் போக, நான் எதி புறத்தில் இருந்த ஆப்பிள் தோப்பில் நுழைந்தேன். அங்கே மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தை பறிக்க பெரு நீளமான குச்சில் கம்பியால் செய்ய பட்ட ஒன்று மாட்டப்பட்டு இருந்தது.

அதில் ஒன்றை வாங்கி கொண்டு, என் வீட்டு அம்மணியை தேடி ஓடினேன். நான் அவர்களை நோக்கி செல்லும் போதே, துணைவியார் எங்கே போனீங்க? நீங்க உயரமா இருக்கீங்கனு தானே உங்களை கூப்பிட்டு கொண்டு வந்தோம், எங்கே போனீங்க என்ற கேள்விக்கு, என் புகைப்பட நண்பர் அவர் லேட்டா  வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கார். கையில் பாருங்க குச்சி என்று சொல்லி எல்லாரையும் மகிழ வைத்தார்.


அடுத்த சில நிமிடங்களில் அறுவடை ஆரம்பித்தது. பேரிகையை தொடர்ந்து ஆப்பிள்- மற்றும் பூசணி இன்னும் சில பூவகைகள், வாங்கி கொண்டு வெளியே கிளம்பினோம்.




அப்போது அங்கு இருந்த இன்னொரு மிஸி அருகில் இன்னொரு ஸ்ட்ராபெர்ரி
தோட்டம் இருக்கு அங்கே போய் அந்த பழமும் பறித்து கொள்ளுங்கள் என்று சொல்ல, என் மனைவி அதற்கு எவ்வளவு கேட்டார்கள். அதற்க்கு பதிலாகே அந்த மிஸி "தலைக்கு ரெண்டு டாலர்" என்று சொல்ல... நான்... சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது போல்..."How much for ... "என்று கேட்டு  முடிப்பதற்குள் .. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்ற பழமொழி நினைவிற்கு வந்தது.


பின் குறிப்பு; இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், மரத்தில் இருப்பதை விட, நாம் பறித்ததை விட, கீழே கொட்டி கிடந்த பழங்கள். இவ்வளவு வீணா போகிறதே... என்றதும், சிறிய வயதில் ஒரு ஆப்பிள் கிடைக்கும்மா என்று நான் ஏங்கிய நாட்கள் நினைவிற்கு வந்தது.

www.visuawesome.com

11 கருத்துகள்:

  1. இது தான் நமக்கும் அங்குமான வித்தியாசமோ, 150 கிமீ பயணித்தாலும் மரத்திலிருந்து பறிப்பது போல் வராதல்லவா?? ரசனையோடு பகிர்ந்திருக்கிறீர்கள் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க ஜெயசீலன். அவ்வளவு தூரம் போனாலும், மரத்தில் இருந்து பறிப்பது ஒரு சுகம் தான். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. நாங்க நியூஸி வந்த புதுசுலே...இப்படி பிக் யுவர் ஓன் என்று ஆப்பிள் தோட்டத்துக்குப்போய் காணாததைக் கண்ட மகிழ்ச்சியில் ஆர்வம் பொங்க பூந்து வெளையாடினோம். எடை போட்டப்பதான் தெரிஞ்சது 20 கிலோ ஆப்பிள்!


    கிட்டத்தட்டஒரு மாசம் வரை, வீட்டுக்கு யார் வந்தாலும் ஆப்பிளோ ஆப்பிள்தான்.

    கிலோ அம்பது செண்ட்.

    இன்னொன்னு........... எங்க ஊரில் பத்துப்பதினைஞ்சு நிமிஷ ட்ரைவில் பழத்தோட்டங்களும் காய்கறிப் பண்ணைகளும் இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிளோ ஆப்பில்... கூவி கூவி கொடுத்திங்க போல இருக்கு, நீங்கள் புகுந்து விளையாடியதையும் ஒரு பதிவில் புகைப்படத்தோடு போடுங்களேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆப்பிளைவிடுங்க.... எங்கூர்லே செர்ரி பிக்கிங் கூட இருக்கு. ராஸ்பெர்ரி ப்ளூபெர்ரி எல்லாமும் கூடப் பண்ணைகளில் போய் பறிச்சு வாங்கலாம்.

      பறிக்கும்போதே நாம் தின்னது போக பாக்கியைத்தான் வாங்குவோம்!
      போனமுறைபோன ராஸ்பெர்ரி பண்ணை இங்கே:-)

      http://thulasidhalam.blogspot.co.nz/2012/02/blog-post_10.html

      நீக்கு
  3. inga athu ponra thoppa engaiyum paarkka mudiyathu
    unga pathivu engalaiyum antha thodathil payanikka seythathu sir...

    rasithom. thodarnthu eluthungal sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மகேஷ். நான் தமிழ்நாட்டில் பல ஊர்களில் வளர்ந்தவன். அங்கே நிறைய விவசாய நிலங்களை - பழ தோட்டங்களை பார்த்து உள்ளேன். ஆனால் இவ்வாறான பறிக்கும் பழக்கம் கண்டது இல்லை.

      நீக்கு
  4. வித்தியாசமாத்தான் இருக்கு! எங்க ஊர்ப் பக்கம் ஓர் பண்ணை இருக்கு! அங்கு கொய்யா நாமே பறித்து எடுத்துக் கொண்டு வந்து எடை போட்டு அதற்கேற்ப காசு கொடுத்து எடுத்துவரலாம்! தோப்புக்குள்ளேயே நம்மால் முடிந்த அளவு சாப்பிடலாம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கேள்வி பட்டு இருக்கேன் சுரேஷ். ஆனால் இங்கே, அந்த தோப்பின் உள்ளே சாப்பிட கூடாது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. சின்ன வயதில் இதேபோல் மாங்காய் பறித்து அம்மியில் உப்பு மிளகாய் அரைத்து கூடவே பறித்த மாங்காயை அதில் இட்டு நசுக்கி (கத்தியால் நறுக்குவதெல்லாம் கிடையாது)......... ஆஹா...........எழுதி முடிக்கிறதுக்குள்ள வாயெல்லாம் ஊறுதே

    பதிலளிநீக்கு
  6. என்னுடைய அக்கா மகள் இதைக் குறித்து சொல்லியிருக்கிறாள்.. புகைப்படமும் பார்த்திருக்கிறேன்....அனுபவம் நல்லாயிருக்குமில்லே

    பதிலளிநீக்கு