வெள்ளி, 12 செப்டம்பர், 2014

(6)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)

போனை வைத்து விட்டு பாக்கியின் அப்பா அவள் அம்மாவிடம்...

நான் உடனே ஊட்டி போக வேண்டும்..

ஊட்டியா ஏன்...?

பாக்கியோட வைத்தியர் என்னை அவசரமா பார்க்கவேண்டும் என்று சொல்கின்றார்.



என்னவா இருக்கும்? இவளோட நடவடிக்கையே ரெண்டு மூணு நாளா, சரி இல்லை. ஒரு படத்தை வரைந்து விட்டு அந்த ஆளை  தெரியுமா, தெரியுமான்னு ஒரே நச்சரிப்பு.

அந்த ஆள் படத்தைதான் நானும் வைத்தியருக்கு அனுப்பினேன். அவருக்கு அவரை தெரியும் போல இருக்கு அதுதான் உடனே வர சொன்னார்.

ஒரு வேலை இந்த ஆள் தான் லக்ஷ்மியை கடத்தி கொண்டு போய் வைச்சி இருந்துப்பானோ? நீங்க போகாதீங்க..... சொல்லவே நா கூசுது. அந்த ஆளிடம் உங்களுக்கு என்ன வேலை? நீங்க போகாதிங்க...

இல்லை மா. எதையுமே தீர விசாரிக்கணும்...நான் போயிட்டு வரேன்.

சரி, ஜாக்கிரதையா இருங்க... நீங்களும் போய் அங்கே மாச கணக்கில் காணா போய் விடாதீர்கள்.

அப்படியா காணமல் போனாலும்.. "பாக்கி"தான் அந்த மாப்ளைய பிடிக்க வில்லை என்று சொல்லிவிட்டாளே  ,  நீ கட்டிக்கொண்டு செட்டில் ஆகிவிடு..

இப்படி இவர்கள் பேசி கொண்டு  இருப்பதை, அந்த அறையின் வெளியே இருந்த பாக்கியலட்சுமி கேட்டு விட்டாள்.

சிறிது நேரம் கழித்து..

அப்பா, எங்க கிளம்புறிங்க?

கொஞ்சம் அவசரமா ஊட்டி வரை போக வேண்டும்.

நானும் வரேன் அப்பா, நானே வண்டி ஓட்டுறேன்.

வேண்டாம் பாக்கி.. நீ  இங்கேயே இரு, உங்க அம்மாவை தனியா விட்டு போக முடியாது. கொஞ்சம் நாளாவே கல்யாணம்..கல்யாணம்னு அலையிறா?

பேச்சை மாத்தாதிங்க அப்பா, நானும் வரேன்.

இல்லை பாக்கி, ஒரே நாள் தான், நான் ட்ரெயினில் போயிட்டு வரேன்.

சரி, ஏன் ஊட்டி போறீங்க..?

நான் வந்து சொல்றேன்...

நான் அட்லீஸ்ட் ஸ்டேசன் வரை வந்து உங்களை ட்ரெயினில் ஏத்தி  விடடும்மா.

சரி பாக்கி..

அங்கே ஸ்டேசனில்...

அப்பா, பத்திரமா போயிட்டு வாங்க. நாளைக்கு நானே வந்து உங்களை "பிக் அப்"  பண்ணி கொள்கிறேன்.

சரி பாக்கி நீ, பத்திரமா வீட்டுக்கு போ,

அப்பா, கடைசியா ஒரு விஷயம்..

என்ன பாக்கி?

அந்த வைத்தியரிடம் அந்த படத்தில் உள்ளவரை பற்றி எல்லா விஷயத்தையும் அறிந்து கொண்டு வாங்க. எனக்கு என்னமோ அவர் ரொம்ப நல்லவர்ன்னு படுது,அப்பா..

பாக்கி..!?

நீங்க அம்மாவிடம் பேசி கொண்டு இருந்ததை நான் கேட்டு விட்டேன்.

சரி பாக்கி.. நான் எல்லாம் விசாரிக்கிறேன்..

அப்பா, ப்ளீஸ், நானும் வரட்டுமா?

இல்லை, பாக்கி, நீ வீட்டிற்கு போ, நான் எல்லாவற்றையும் விசாரித்து விட்டு வருகிறேன்..

இவர்கள் இப்படி பேசி கொண்டு இருக்கையில்.. அந்த ஸ்டேசனில்... அடுத்த பிளாட்பார்மில்..

டேய், கதிர்... இவள எங்கேயோ பார்த்த மாதிரி இல்ல?

ஆமா, அக்கா... இவள்.....இவள்...

கதிர், இவ விஜயா, அந்த கிறுக்கு பொண்ணு... நீ கொஞ்ச நாளுக்கு முன்னால கூட்டிக்கொண்டு வந்து விட்டாயே... வந்த அடுத்த நாளே, ஒரு "பார்ட்டி "வெளியே கூட்டின்னு போறேன்னு போயிட்டு, திரும்பும் வரவே இல்லை. இவ எப்படி இங்கே.. அதுவும், நல்ல மாதிரி இருக்காளே.

அவளே தான் ,அக்கா . எனக்கும் ஒரே குழப்பமாய் இருக்கு..

கதிர், நீ ஒரு காரியம் பண்ணு...

அவ அவங்க அப்பனை வண்டியில் ஏத்திவிட்டு தனியா தான் திரும்ப போறா...

என்ன செய்வியோ தெரியாது... அவ எனக்கு வேணும்... அவளுக்காக நீ வாங்கின 2000 ருபாய் இன்னும் பாக்கி இருக்கு தெரியும் இல்ல..

தெரியும் அக்கா, அந்த கடனை அடைக்க தான் தெரு தெருவா எவளாவது கிடைப்பாளானு நான் அலையிறேன்.

கதிர்... கடனை அடைக்க நேரம் வந்துடிச்சி.. இவள எப்படியாவது தள்ளின்னு வந்துடு.

அக்கா... இவ கிறுக்கா இருந்த போதே 2000 ரூபாய்க்கு போனாள். இப்ப இவ ரேட் ஏறிடிச்சு. இன்னும் ஒரு 2000 எடுத்து வை, நான் இவள எப்படியாவது தள்ளின்னு வரேன்.

அப்பாவை ஏற்றி விட்டு, அந்த கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தாள் லட்சுமி, பின்னால் தொடர்ந்து வருவது யார் என்று தெரியாமல்...

அங்கே ஊட்டியில்... சந்துருவும் நடந்து கொண்டு தான் இருந்தான்... எதை தொடருகிறோம் என்று தெரியாமல்..

நானும் தொடருகிறேன்... 

தொடரும்...அடுத்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்

www.visuawesome.com

6 கருத்துகள்:

  1. சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது சார்... சரியான வேகத்தில் தான் செல்கிறது, இப்படியே தொடருங்கள்... நாங்களும் தொடருகிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்வதற்கு நன்றி ஜெயசீலன். இது நான் ஏற்கனவே எழுதி வைத்தது அல்ல, தினமும் நேரம் கிடைக்கும் போது அடுத்த பதிவை மட்டும் எழுதி வைக்கிறேன். அடுத்து எங்கே போகிறேன் என்பது யாருக்கும் (என்னையும்) சேர்த்து தெரியாது... தொடர்ந்து பிரயாணிப்போம்.

      நீக்கு
  2. மூன்றாம் பிறையின் சிறப்பே அந்த மறக்க முடியாத கிளைமாக்ஸ் தான். அதில் வில்லனில்லை. அந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை. உங்கள் கதையின் போக்கு அந்த உயிர் நாடியையே மாற்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,வார்த்தைகளுக்கும் நன்றி, தமிழ் பையன் அவர்களே! நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை. மூன்றாம் பிறையின் சிறப்பே அதன் க்ளைமாக்ஸ் தான்! யாரர்லும் மறக்க-மறுக்க முடியாது.
      // உங்கள் கதையின் போக்கு அந்த உயிர் நாடியையே மாற்றுகிறது//
      கொஞ்சம் பொருத்து இருந்து பார்ப்போமே! நேரம் கிடைத்தால் கண்டிப்பாக இந்த தொடரை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

      நீக்கு
    2. வில்லன் இல்லை, இதிலும் வில்லன் போல யாரையும் சொல்லவில்லையே... படத்திலும் இப்படித்தானே பநீ தேவி மாட்டிக் கொள்வார், முதலிலிருந்து படித்துப்பாருங்கள் தோழரே,... இது கற்பனை தானே ...

      நீக்கு
  3. //வில்லன் இல்லை, இதிலும் வில்லன் போல யாரையும் சொல்லவில்லையே//
    கொஞ்சம் தான் பொறுப்போமே... கதை இப்போது தானே ஆரம்பித்து உள்ளது... தொடரும் வருகைக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு