வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

"லிங்கா" இல்லை, இல்லை " நெற்றி கண்"? ரஜினிக்காக!

எனக்கு பிடித்த ரஜினிகாந்த் பாத்திரம்; நெற்றிகண் சக்ரவர்த்தி.

அடுத்த சில இடுகைகளில் "எனக்கு பிடித்த ரஜினிகாந்த்" என்ற தலைப்பில் சில இடுகைகள் பதிவு செய்யவுள்ளேன். சிலர் ஏன் என்று கேட்பது செவியில் விழுகிறது. ஒன்றும் இல்லை "லிங்கா" படபிடிப்பின் சில ஸ்டில்களை பார்க்கையில் ரஜினிகாந்த் அவர்கள்  மிகவும் வயதாகி சோர்வாகவும் மற்றும் ஒரு நோயாளியாகவும் என் கண்களுக்கு படுகிறார்.

நான் ஏற்கனவே கூறியது  போல் படையப்பாவிற்கு பிறகு நான் ரஜினியின் படங்களை பார்ப்பதை விட்டு விட்டேன். வயதான இவர் முகத்தில் சுண்ணாம்பு அடித்து கொண்டு தன பேத்தி வயதில் உள்ள பெண்களோடு ஓடி ஆடி விளையாடுவதை பார்க்க சகிக்க முடிய வில்லை. ஆனால் 80-90 களில் இவர் படத்தை ரசித்து பார்த்தவன் என்ற காரணத்தினால் எனக்கு படித்த ரஜினி தொடர்ச்சி.

எனக்கு பிடித்த ரஜினி கதா பாத்திரங்களிலே "மூன்று முகம் - அலெக்ஸ் பாண்டியன்"னிற்கு நிகர் எதுவும் இல்லை. அதை நான் எவ்வளவு விரும்பினேன் என்பதை இங்கே படிக்கலாம். அதற்கு அடுத்த படியாக சில வேடங்கள் வந்தாலும் அதில் ஒரு முக்கிய பாத்திரம் "நெற்றி கண் - சக்ரவர்த்தி".

வயதான இந்த காலத்து ரஜினி வாலிபனாக நடிப்பதை பார்த்து மனம் வேதனை பட்டாலும், வாலிப வயதில் அவர் வயதானவராக நடித்த இந்த பாத்திரம் நிறைவில் நின்றது.
இந்த பாத்திரத்தில் இவர் காம இச்சைக்கு அடிமையான வயதான தந்தை பாத்திரம் . கதை கே.பாலச்சந்தர், வசனம் : விசு மற்றும் சில முக்கிய வேடத்தில் லட்சுமி, சரிதா, மேனகா, சிரிப்புக்கு தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் கவுண்ட மணி.

சரத்பாபுவிடம் " வாழ்கையில் ஒருத்தன் மேல போறதும், கீழ வரதும்  அவனுடைய கொள்கையில் தான் இருக்குன்னு ஆணிதரமா நம்புறவன் இந்த சக்ரவர்த்தி"...."நீங்க நம்ம ஜாதி...." அந்த டைலாக் உச்சரிப்பு, பின்னணி இசை.

அடுத்த காட்சியில் தன் அலுவலகத்திற்கு சென்று அங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு ஒரு அறிவுரை.

மற்றும் அந்த தந்தை - மகன் அந்தபுரத்தில் சந்திக்கும் காட்சி.. சொல்லி கொண்டே போகலாம்.

மற்றும் "நீ உபதேசம் பண்ணி நான் கேக்குறதுக்கு நான் ஒன்னும் ஈஸ்வரன் இல்லடா! கோட்டீஸ்வரன்..."

இந்த மாதிரி பல காட்சிகளில் தன்னுடைய பாணியில் வந்து கலக்கும் சக்ரவர்த்தி எனக்கு போதும்.

லிங்கா படம் ரிலிஸ் ஆகும் (ஜக்குபாய் போல முடியாமல் இருந்தால் சரி தான்) நாளில் எனக்கு யு டியுப்பில் :"நெற்றி கண்"

http://www.visuawesome.com/

3 கருத்துகள்:

  1. ***சரத்குமாரிடம் " வாழ்கையில் ஒருத்தன் மேல போறதும், கீழ வரதும் அவனுடைய கொள்கையில் தான் இருக்குன்னு ஆணிதரமா நம்புறவன் இந்த சக்ரவர்த்தி"***

    தல: அது சரத்பாபு! என்ன இப்படி என்னை ஒரு ப்ரூஃப் ரீடராவே ஆக்கிப் புட்டீங்க! :(

    --------------
    நெற்றிக்கண் என்னால் ரசித்துப் பார்க்க முடியாத ரஜினிபட வகையைச் சேரும்.

    எனக்குப் பிடித்த வசனம்னு பார்த்தால்..

    "வீக்னெஸ் இல்லாத மனிதனே உலகில் இருக்க முடியாது!" னு சக்ரவர்த்தி பேசும் "உண்மைத் தத்துவம்"தான். :)

    ------------

    ***நான் ஏற்கனவே கூறியது போல் படையப்பாவிற்கு பிறகு நான் ரஜினியின் படங்களை பார்ப்பதை விட்டு விட்டேன். ***

    பாவம், நீங்க கொடுத்து வச்சது அம்புட்டுத்தான்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி வருண். அது சரத்பாபு தான். தவறை திருத்தி விட்டேன். சுட்டி காட்டியதிர்க்கு நன்றி.
      மற்றும் படையாப்பாவிர்க்கு பிறகு ரஜினி படம் மட்டும் இல்லை, மொத்தமாகவே கூட்டி பார்த்தால் ஒரு 5 அல்ல 6 படம் தான் பார்த்து இருப்பேன்.

      நீக்கு
  2. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு