திங்கள், 4 ஆகஸ்ட், 2014

(7)துப்பறியும் வீம்பு:: பெண்களிடம் எனக்கு பிடித்தது


என்னங்க, இந்தியாவில் யாரோடையோ  நேத்து பேசி இருக்கீங்க?

எப்ப?ஞாபகம் இல்லையே...

நேத்து பேசி இருக்கீங்களே, அதுவும் நான் கடைக்கு கிளம்பின ரெண்டே நிமிஷத்திலே, அப்படியென்ன ரகசியம், நான் வெளியே போன ரெண்டே நிமிஷத்தில் கூப்பிடற  அளவுக்கு.



ஒன்னும் இல்ல, சும்மா தான் கூப்பிட்டு இருப்பேன்.

சும்மா கூப்பிடறத நான் வீட்டில் இருக்கும் போதே கூப்பிடலாம் இல்லையா? இது நான் வெளியே போனவுடன் அவசர அவசரமா கூப்பிட மாதிரி இருக்கே, அது தான் கேட்டேன்.

அது எப்படி? அவ்வளவு அழகா நேரத்தை எல்லாம் சொல்லுற?

போன்ல ரீ டையல் போட்டா தான் உங்க வண்டவாளம் எல்லாம் இருக்கே..

ஒ, அப்படியா? சரி.. சும்மாதான் கூப்பிட்டேன்.


சரி நேத்து சனியும் அதுவுமா, ஆப்பிஸ்ல எதோ வேலை இருக்குன்னு சொல்லிட்டு மூணு மணி நேரம் போனீங்களே, ஆபிஸ் போலியா?

அது வந்து... வந்து..

சும்மா என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்காதீங்க... உண்மைய சொல்லுங்க..

அது வந்து வந்து...

நீங்க இங்க இருந்து நேரா "கோல்ப்" ஆட போய் இருக்கீங்க..

ஆமா வந்து... வந்து.. சரி எப்படி தெரியும்.

கார் முழுவதும், ஒரே புள், அது மட்டும் இல்லாமல் உங்க ஷூவில் கொஞ்சம் சேறு. உங்க ஆபிஸ்ல இது எல்லாம் எப்படி வரும்?

அது வந்து வந்து...

சரி, எத் தனை முறை சொல்லி இருக்கேன், வெளிய சாப்பிடாதீங்கோன்னு, திரும்பவும் நேத்து மதியம் வெளிய சாப்பிட்டு இருக்கீங்க..

அது வந்து ... வந்து... (மனதில்... நான் கிரிடிட் கார்ட் கூட வெளிய எடுக்கவில்லையே..எப்படி தெரிய வந்தது?)

உங்க காரில் அந்த கடையோட "கெட்ச் அப்" பாக்கட் இருந்தது.. அதுதான்.

இல்ல ரொம்ப பசியா இருந்தது, அது தான்...

சரி, இப்ப எப்படி உங்க கையில் காபி வந்தது..

நீ காலையில் கொடுத்தியே அததான் கொஞ்சம் கொஞ்சம்மா ஊதி ஊதி குடிக்கேறேன்.

பொய் சொல்லாதீங்க. நான் குளிக்க போய் இருக்கும் போது திரும்பவும், போய் ஒரு காபி போட்டு இருக்கீங்க..

அது வந்து ...வந்து...சாரி, ரொம்ப சோர்வா இருந்தது.. அது தான்..சரி எப்படி கண்டு பிடிச்ச? நான் தான் பாத்திரம் எல்லாம் கழுவி வைச்சேனே.

ரொம்ப சுலபம். அடுப்பு இன்னும் சூடா தான் இருக்கு.

சரிங்க.. குளிக்கன்னு சொல்லும் போதுதான் நினைவிற்கு வருது.. ரெண்டு நாளா காலையில், குளிக்கிறேன்னு சொல்லிட்டு அங்கே போய் என்ன பண்ணுறீங்க?

என்னத்த பண்ணுவேன்? குளிக்கிறேன்..

குளிக்கிறீங்க  சரி...ஆனால் அங்க தான் சோப்பே இல்லையே.. ரெண்டு நாளா அங்கே சோப்பு தீந்து போச்சு. உங்க சொம்பேரிதனத்தினால் நீங்க எவ்வளவு நாள் தான் சோப்பு இல்லாமல் குளிக்கிரீங்கன்னு பாத்தேன்.. விட்டால் சோப்பே இல்லாமல் வாழ்க்கையை தள்ளிடுவிங்க போல இருக்கே..

அது வந்து அது வந்து..

சரி, எத்தனை தரவை பல் விளக்காமல் காபி குடிகாதீங்கோன்னு சொல்லி இருப்பேன்.. திரும்பவும் ஏன் அந்த மாதிரி பண்ணுறீங்க...

அது வந்து... நான் விளக் ...

பொய் சொல்லாதீங்க. கல்யாணம் ஆனதில் இருந்து என்னிக்கு பேஸ்ட் எடுத்துட்டு அதை மூடி வச்சிங்க... இன்னைக்கு மட்டும் மூடி இருக்கு..

சாரி.. நான் மறந்துட்டேன்..

சரி, நம்ப தண்டத்தோட மனைவி சுந்தரி போன் பண்ணாங்க.
(மனதில்,  மாட்டினான். தண்டபாணி). என்ன சொன்னாங்க?

 போன வாரம் நீங்க ரெண்டு பேரும் இங்க பக்கத்தில் ஒரு தமிழ் கருத்து அரங்கத்திற்கு போறோம்ன்னு சொல்லி கிளம்பினிங்க   இல்ல?

ஆமாம் .. பாரதியின் "புதுமை பெண்" என்ற தலைப்பில் நடந்த கருத்து அரங்கம். அதுக்கு என்ன இப்ப?

நீங்க ரெண்டு பேரும் அங்கே போகவேயில்லையாம், உண்மைய சொல்லுங்க எங்க போனீங்க...

அது வந்து.. வந்து..

உண்மை ப்ளீஸ்.

வந்து, தண்டம் தான் லாஸ் அன்ஜெல்ஸ் நடக்கும் " NBA " ஆட்டத்திற்கு ரெண்டு டிக்கட் இருக்கு போகலாமா என்றான், நானும் உணர்ச்சி வசப்பட்டு பொய் சொல்லிட்டேன்.. சாரி.. அது சரி, அதை எப்படி கண்டுபிடிச்சிங்க..

ஒன்னும் இல்லீங்க...அந்த கருத்து அரங்கம் நடக்கின்ற இடம் இங்கே இருந்து 3 மைல், ஆனா, அன்னிக்கு தண்டபாணி கார் மட்டும் கிட்டத்தட்ட 95 மைல் ஓடி இருக்கு. சுந்தரி தான் அந்த "ஸ்பீடோ மீட்டரை" பார்த்து கண்டு பிடிச்சி என்னை கேட்க சொன்னா?

சாரி, என்னை மன்னிச்சிக்கோ..

சரி, நான் பேசினே இருக்கும் போது போனை தூக்கி கொண்டு ஏன் பாத்ரூம் போறீங்க?

அது வந்து.. வந்து..

நீங்க ரெண்டு பேரும் மாட்டிகிட்டிங்கன்னு தண்டபானிட்ட சொல்ல தானே...

இல்ல வந்து..


இப்படி என் வீட்டு பெண்ணின் துப்பறியும் தன்மை என்னை "பேய் அறைந்தவன் போல் (அந்த பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) ஆகினாலும், எனக்கு பிடித்த ஒன்று.

24 கருத்துகள்:

  1. பாஸ் அருமையா அதே நேரத்தில் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் சபாஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மதுரை தமிழன்... எல்லாம் உங்களை போல நல்ல உள்ளங்களின் ஊக்குவிப்பு தான்..

      நீக்கு
  2. அதுசரி.. பரவாயில்ல விடுங்க. இதெல்லாம் எல்லா வீட்டிலும் நடப்பதுதான். இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு. எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க. காயத்துல தையல் எதாச்சும் போட்டங்களா....? எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா..? விடை சொல்லாத ஒவ்வொரு கேளிவிக்கும் ஒரு பூரிக்கட்டைன்னாலும் 20 - 25 அடி விழுந்திருக்குமே...? ஹா....ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாது, பூரிக்கட்டை எல்லாம் நியூ யார்க் பழக்கம். நாங்க இங்கே கலிபோர்னியாவில் அடி எல்லாம் வாங்க மாட்டோம். ஒவ்வொரு தவறுக்கும் ஒரு பூ.. அதுதான் மன்னிப்பு.. வருகைக்கு நன்றி,

      நீக்கு
  3. வணக்கம்
    நகைச்சுவை கலந்தகலவையாக கதையை நகர்த்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. இவ்வளவு நல்ல ஷெர்லாக் ஹோம்ஸ் கிட்ட எதுக்கு மறைச்சு மாட்டிக்கிறீங்க ....பேசாம ஒழுங்கா ஒவ்வொண்ணையும் ஒப்பிசுடுங்க...லைப் ஸ்மூத்தா இருக்கும் !!!
    நல்ல நகைச்சுவை.ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒப்பிக்கிரதினால் தான் வாழ்க்கை ஓடுது உஷா. இருந்தாலும் நடு நடுவே ஆண்களுக்கே உரிய அந்த புத்தி வந்து விடுவதால் கொஞ்சம் கஷ்டம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. நான் இப்பதிவை வாசிக்கவில்லை ..........

    பதிலளிநீக்கு
  6. நான் பேயில்லா இப்பதிவை வாசிக்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, மறுபடியும் சொல்கிறேன், பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் எழுதுவேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. Hilarious Visu.எங்க வீட்டுலயும் அடிக்கடி நடக்கற கதைதான். அது சரி ஆண்களெல்லாம் இப்புடித்தானோ ? ஆனா நாங்க எப்புடி கரெக்டா கண்டு பிடிச்சிடறோம் பாத்தீங்களா ?

    Sujatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த சொல்லுவேன் சுஜாதா... வாழ்க்கையே அலை போல..

      நீக்கு
  8. நல்லாவே துப்பறியறாங்க! ஹாஹாஹா! நல்ல காமெடி! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னமோ போங்க தளிர்... ஜான் ஏறுனா முழம் சறுக்குது....

      நீக்கு
  9. கண்டுபிடிச்சதெல்லாம் கொஞ்சம்தான் , ஆனா கண்டுபிடிக்காம விட்டதுதான் அதிகம் , உண்மையா இல்லையா விசு ?

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. எடுப்பார் கை பிள்ளை போல் ஆகிவிட்டேன் ஐய்யா...

      நீக்கு
  11. //நீ காலையில் கொடுத்தியே அததான் கொஞ்சம் கொஞ்சம்மா ஊதி ஊதி குடிக்கேறேன்.//

    நல்ல காமெடி. ஆனாலும் இதைப் படித்தால் பரிதாபமாகவும் உள்ளது. என்ன எல்லாம் சொல்லி தப்பிக்க வேண்டி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவன் கஷ்டம் உங்களுக்கு காமடியா... இருக்கட்டும் இருக்கட்டும்...

      நீக்கு
  12. சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. பட்டி மன்றத்தை விட உங்கள் பதிவு பன்மடங்கு நன்று! வெகுவாக இரசித்தேன்

    பதிலளிநீக்கு
  14. அய்யோ பாவமா இருக்கு....இப்படி கண்டுபுடிக்கிறாகன்னு தெரிஞ்சும் தப்பு செஞ்சு மாட்டிக்கிறவங்கள என்ன சொல்வது..நல்லா சிரித்தேன்....நன்றி சார்.

    பதிலளிநீக்கு