ஞாயிறு, 6 ஜூலை, 2014

சச்சின் ஒப்பற்ற வீரர்.. ஆனால் உப்பற்ற மனிதர்.


டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சச்சினை யார் என்றே தெரியாது என்ற ஒரு உண்மையை சொன்னதினால் சச்சின் ரசிகர்கள் கோபம் அடைந்தனராம். அட அப்பரண்டீஸ்கலா.



கிரிக்கெட் என்ற விளையாட்டு ஒரு சில நாடுகளில் விளையாடப்படும். அதுமட்டும் இல்லாமல்,  இந்த விளையாட்டை யாரையெல்லாம் ஆங்கிலேயன் அடிமை படுத்தி வைத்து இருந்தானோ அங்கே திணித்து விட்டு சென்றான். ஒரு நாடு கிரிக்கெட் ஆடுகிறது என்றாலே அவர்கள் அடிமையாய் இருந்தார்கள் என்று தான் அர்த்தம். இதை நான் இங்கே ஏன் சுட்டி காட்டுகிறேன் என்றால், கிரிக்கெட் என்பது மிகவும் கௌரவமான விளையாட்டு என்று யாரும் யோசிக்க வேண்டாம்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த மரியா சொன்னதை கேட்டவுடன் நம்மில் பலர் பொங்கி எழுந்தனர். அதில் ஒருவர் கூறுகிறார், சச்சின் ஒரு ஒப்பற்ற வீரர் என்று. அவர் வேண்டும் என்றால் ஒப்பற்ற வீரர் ஆகா இருக்கலாம். ஆனால் அப்பழுகில்லாத மனிதர் இல்லை. இன்னும் சொல்ல போனால் அவர் ஒரு உப்பற்ற மனிதர்.

கிரிக்கெட் ஆட்டம் ஊழலில் மூழ்கி நாறி போய் கொண்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அது இல்லை என்று சொல்பவர்களிடம் நான் வேறு ஒரு நேரத்தில் ஒரு பட்டிமன்றம் வைத்து பேசி கொள்கிறேன்.
இந்த கிரிக்கெட் நார ஆரம்பித்தது எப்போது? 1985-1990 நேரத்தில் தான். 1990ல் இருந்து இன்று வரை இந்த ஆட்டதின் துருநாற்றம் தாங்க முடியாததால் நான் தள்ளியே நின்று கொண்டேன். தள்ளி நின்ற எனக்கு இங்கே நடப்பது எப்படி என்று கேட்பீர்கள். கேட்க்க வேண்டும்.

 கூவம் ஆற்றின் நாற்றத்தை சுவாசிக்க அங்கே படகு சவாரி செல்ல தேவை இல்லை, பக்கத்தில் உள்ள சாலையில் சென்றால் போதும். அப்படி நான் சுவாசித்த நாற்றம் தான் இது.

1990ல் இருந்து 2000ம் வரை, நம் அணியின் உடற்பயிற்சியாளர் சலீம், தலைவன் அஜார், ஜடேஜா, பாகிஸ்தானின் சலீம்,வாகார், வாசிம், முஸ்தாக், ஆசியின் வார்னே, வாக்ஹ் மற்றும் தென் ஆப்ரிக்காவின் தலைவர் குரோநீ அவர்கள் எல்லோருடைய ஆசியில் முமும்மரமாக நடந்து வந்த காலம். இந்த நேரத்தில் தான் நம் ஒப்பற்ற வீரர் சச்சின் 100க்கு மேல் 100 அடித்து விளம்பரங்களில் வசூலித்து கொண்டு இருந்தார். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த நாட்களில் இந்தியாவிற்கு தெரிந்தது எல்லாம் தோல்வி தான். ஆதலால் மற்ற நாட்டை சேர்ந்த வீரர்கள் சரியாக ஆட கூடாது என்று விட்டு கொடுத்து ஆட வேண்டிய நிர்பந்தம்.

இந்த சில்மிஷங்களை உள்ளே அமர்ந்து கொண்டு பார்த்து கொண்டு இருந்த சச்சின் ஒரு முறையாவது அதை பற்றி பேசி இருப்பாரா?  இந்த விஷயங்கள் இவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டா? இவருக்கு தேவை எல்லாம் கோடிகளாக மாறும் 100கள் மற்றும் இறக்கு மதி செய்யப்பட்ட வரி குறைந்த வாகனம் அவ்வளவு தான்.

ஜென்ட்லேமேன் கேம் என்று அழைக்கப்பட்ட கிரிக்கெட்டை "பொறம்போக்கு கேம்" என்று மாற்றியதில் இவருக்கும் பங்கு உண்டு.

ஒப்பற்ற வீரராம்... சரிதான் போங்கப்பா... இதை படித்து விட்டு என்னை கேள்வி கேட்க விரும்புவர்கள் நாகரீமாக இங்கே பின்னோட்டத்தில் கேட்காலாம். அநாகரீகமாக எழுதுபவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. புற முதுகு உனதாகிலும், அம்பு எனதாக இருக்க கூடாது என்று நினைப்பவன் நான். நன்றி.

“In keeping silent about evil, in burying it so deep within us that no sign of it appears on the surface, we are implanting it, and it will rise up a thousand fold in the future. When we neither punish nor reproach evildoers, we are not simply protecting their trivial old age, we are thereby ripping the foundations of justice from beneath new generations.” 
― Aleksandr SolzhenitsynThe Gulag Archipelago 1918-1956

2 கருத்துகள்:

  1. "ஒரு நாடு கிரிக்கெட் ஆடுகிறது என்றாலே அவர்கள் அடிமையாய் இருந்தார்கள் என்று தான் அர்த்தம்."
    மிகச்சரியான வாதம்

    பதிலளிநீக்கு