திங்கள், 14 ஜூலை, 2014

வெள்ளைக்காரன் வீட்டு வெள்ளை எலி!

மிஸ்டர் விசு. GM. டோனி நம்ம ரெண்டு பேரையும்  அவர் ஆபீசிக்கு வர சொன்னார் என்று அடித்து பிடித்து கொண்டு வந்தார் என்னுடன் பணி புரியும்  என் அருமை நண்பன் "இளந்தோப்பு கிழிஞ்செயில் மத்தாய் அமநிகுட்டி குஞ்சு குஞ்சு"" என்று பெயர் கொண்ட நல்லதோர் "பாலக்காட்டு மாதவன்" (என்ன பெயர் வித்தியாசமாய் இருக்கேன்னு பாக்கறீங்களா, அந்த கதையை இங்க படியுங்கள்).

(இந்த உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தது தான்,  ஆனால் இடத்திற்கேற்ப "அங்கே -  இங்கே" தமிழாக்கம்  செய்யப்பட்டுள்ளது)

ஜென்டில்மென், ப்ளீஸ் சிட் டவ்ன்!

தேங்க்ஸ் டோனி, வாட்ஸ் ஹப்பெநிங்?

நான் என் கோடை விடுமுறைக்காக லண்டன் போகிறேன், இன்னும் 3 வாரம் இங்கே இருக்க மாட்டேன், அஸ் வி அல்வேஸ் டூ, ஐ  டிரஸ்ட் யு போத் டு ஹோல்ட் தி போர்ட். ஓகே.

டன்! டோனி. ஹவ் எ கிரேட் ஹாலிடே.

தேங்க்ஸ் விஷ். சி யு லேட்டர்.

ஒ, பை தி ,வே மிஸ்டர் "KK"  (டோனி ஒரு ஆங்கிலேயன். இவர் வாயில் "குஞ்சு குஞ்சு" என்ற பெயர் நுழையாது, அதனால் நம் நண்பரை "KK" என்று தான் அழைப்பார்)

எஸ் மிஸ்டர்.டோனி.
"KK" நான் எத்தனை முறை சொல்லி இருப்பேன். டோனி இஸ் மை "பர்ஸ்ட் நேம்", ப்ளீஸ் கால் மீ " டோனி" நோ நீட் பார், Mr.

ஓகே மிஸ்டர் டோனி...சாரி,, டோ.. சாரி மிஸ்டர் டோனி, எனக்கு மிஸ்டர் டோனின்னு கூப்பிட்டு பழகி விட்டது, இப்ப மாத் த முடியாது, அப்படியே இருக்கட்டும்.

ஓகே, "KK', நான் சொல்ல வந்த விஷயம், நான் இந்த லீவில் இருக்கும் போது, வருடா வருடம் செய்யற மாதிரி, அந்த பூச்சி கொல்லி மருந்து கம்பனியை கூப்பிட்டு கொஞ்சம் சுத்தம் பண்ணிவிடுங்கள். சம்மரில் வீடு பூட்டி இருந்தால் நாங்க திரும்ப வரும் போது, கரப்பான் பூச்சி மற்றும் சிலந்தி அந்த மாதிரி வந்து விடும்.

ஓகே,, மிஸ்டர் டோனி.

ஒ, "KK", பி போர் ஐ பர்கெட், என் 10 வயது பையன் அறையில் "வி ஹவ் ஹிஸ் பெட்  ஹம்ஸ்டர்", இந்த பூச்சி கம்பனி வரும் போது, ப்ளீஸ் டேக் கேர் ஆப் இட்.

மிஸ்டர், டோனி, என்ன இருக்குன்னு சொன்னேங்க?

KK , "மை சன் ஹஸ் எ "பெட் ஹம்ஸ்டர் (Pet Hamster) " அண்ட் "ப்ளீஸ் டேக் கேர் ஆப் இட், வென் தே கம் டு கிளீன் தி ஹவுஸ்", ப்ளீஸ், டேக் கேர் ஆப் தி ஹம்ஸ்டர்.

ஓகே, மிஸ்டர் டோனி.

இந்த உரையாடல் முடிந்து, நானும் "குஞ்சு குஞ்சு " இருவரும் அவரர் அறைக்கு வந்து ஒரு அரை மணி நேரம் இருக்கும். அதன் பின்:

மிஸ்டர்.விசு, அந்த மிஸ்டர் டோனி, எதோ "அங்கவஸ்திரம்" இருக்குன்னாரே, அப்படின்னா ஏன்னா?

அங்கவஸ்திரம் இல்லை மிஸ்டர். குஞ்சு குஞ்சு, அது "ஹம்ஸ்டர்"

தட்ஸ் OK மிஸ்டர் விசு, அப்படின்னா ஏன்னா?

என்னானே தெரியாமே டோனி கிட்ட தலையை நல்லா ஆட்டிட்டு வந்துட்டியா குஞ்சு குஞ்சு?

மிஸ்டர் விசு, ப்ளீஸ்.. ஹம்ஸ்டர்னா ஏன்னா? அவர் இந்த பூச்சி மருந்து கம்பனி வரும் போது அதை "ப்ளீஸ் டேக் கேர்" ன்னு சொன்னார். இந்த பூச்சி மருந்து கம்பனி அடுத்த வாரம் வருவாங்கோ, அதுதான் கேட்கிறேன்.

மிஸ்டர். குஞ்சு குஞ்சு, "ஹம்ஸ்டர்" என்றால் ஒருவகையான எலி. அது ஒன்னு அவர் வீட்டில் அவர் பையன் அறையில் உள்ளதாம், இந்த பூச்சி மருந்து அடிப்பவங்க வரும் போது, "ப்ளீஸ் டேக் கேர் ஆப் இட்" ன்னு டோனி உங்களிடம் சொன்னார்.

தேங்க் யு மிஸ்டர் விசு, இந்த வெள்ளைகாரங்க ஒவ்வொரு விஷயத்திற்கும் நாலு பெயர் வைப்பாங்க. எலின்னு சொல்லி துலைக்க வேண்டியது தானே.

மூன்று வாரம் முடித்து, டோனி விடுமுறையில் இருந்து திரும்பிவிட்டார்.

மிஸ்டர் விசு. GM, டோனி நம்ம ரெண்டு பேரையும்  அவர் ஆபீசிக்கு வர சொன்னார் என்று சிரித்து கொண்டே வந்தார், நண்பர் " குஞ்சு குஞ்சு".

ஹாய், டோனி, வெல்கம் பேக்!

ஹாய் விஷ்... KK , தேங்க்ஸ். ஹொவ் ஆர் யு கைஸ்?

இருக்கோம், ஹோப் யு ஹட் எ கிரேட் ஹாலிடே அண்ட் ரெடி டு ரன் தி ஷோ.

அப் கோர்ஸ். ஐ அம். பை தி வே KK , தேங்க்ஸ் பார் டேக்கிங் கேர் ஆப் மை ஹவுஸ்.

யு ஆர் வெல்கம் மிஸ்டர். டோனி.

அண்ட் பி போர் ஐ பர்கெட், டிட் யு டேக் கேர் ஆப் தட் "ஹம்ஸ்டர்"    இன் மை சன்ஸ் ரூம்?

எஸ் மிஸ்டர் டோனி.

ஒ, தேங்க்ஸ் KK . அதை எங்கே வைச்சி இருக்கீங்க. என் பையன் சாயங்காலம் வரும் போது எடுத்து வர சொன்னான்.

நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியல்ல மிஸ்டர். டோனி.

"கேன் ஐ ஹவ் தி ஹம்ஸ்டர் பேக்"?

மிஸ்டர் விசு, உங்களுக்கு புரியுதா?

மிஸ்டர். குஞ்சு குஞ்சு , அவர் எலி ஏன்னா ஆச்சின்னு கேட்கிறார்.

மிஸ்டர் டோனி, நீங்க சொன்ன மாதிரி " ஐ டுக் கேர் ஆப் இட்"

தேங்க்ஸ் KK , தேங்க்ஸ். "கேன் ஐ ஹவ் இட் பேக்". என் பையனுக்கு அது மேல உயிர்.

மிஸ்டர் டோனி, நீங்க என்ன சொல்லுறீங்க ஒன்னும் புரியல.

விஷ், நீங்க அவருக்கு எடுத்து சொல்லுங்க.

மிஸ்டர் குஞ்சு குஞ்சு, அவர் எலிய அவர் பையன் செல்லமா வருஷ கணக்கில் வைச்சி இருக்கானாம். அது மேல உயிரே வைச்சி இருக்கானாம்? அந்த எலி  எங்க வச்சி இருக்கீங்க, எப்ப எடுத்து விட்டு வருவீங்கன்னு கேட்கிறார்.

என்ன மிஸ்டர் விசு, உயிரா? அந்த பூச்சி மருந்து அடிக்க வரும் போது வீட்டில் எலி இருக்கு, மறக்காம அவங்களிடம் சொல்லுங்க. "டேக் கேர் ஆப் இட்" ன்னு சொல்லிட்டு இப்ப எலி எங்கன்னு கேட்டா?

மிஸ்டர் குஞ்சு குஞ்சு, டொனிய விடுங்க, இப்ப நான் 'கன்புயுஸ்"ஆகிட்டேன்
.
மிஸ்டர் விசு, வீட்டில் எலி இருக்கு, பூச்சி மருந்துகாரன்ட சொல்லி அதை பாத்துக்கோன்னு நம்ப ஊரில் சொன்ன என்ன அர்த்தம்?

இவன் இத சொன்ன வுடன் தான் எனக்கு இவன் என்ன காரியம் பண்ணி இருக்கானு என் மண்டைக்கு புரிந்தது.

சரி, இப்ப டோனி ஊர்ருக்கு போனவுடன், இவனும் பூச்சிமருந்து காரங்களும் பேசியதை இப்ப பார்க்கலாம்.

மாத்தாய் சாப், நாங்க பூச்சி அடிக்கிற கம்பனியில் இருந்து வந்து இருக்கோம்.

வாங்க, வாங்க, இது எங்க GM வீடு, அந்த ஆள் கொஞ்சம் கறார் பார்ட்டி, வேலை சுத்தமா இருக்கணும்.

ஓகே மத்தாய் சாப், நாங்க ஆரம்பிக்கிறோம்.

வெயிட் எ மினிட். அவர் வீட்டில் ஒரு எலி இருக்கறதா சொன்னாரு. அதை தேடி கண்டுபிடிச்சு சாகடிக்காம நீங்க இந்த இடத்தை விட்டு போக கூடாது. அதை அடிச்சி என்னிடம் காட்ட வேண்டும் ஓகே.

ஓகே, மாத்தாய் சாப்.

ஐந்து நிமிடம் கழித்து.

மத்தாய் சாப், எலிய அடிச்சிட்டோம். இதோ பாருங்கோ.

ஆமா, இது என்னா வெள்ளை எலியா இருக்கு?

நீங்க பாருங்கோ மத்தாய் சாப், "வெள்ளை காரான் வீட்டில் எலி கூட வெள்ளை எலி" தான் போல இருக்கு.

எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சிங்க?

மத்தாய் சாப், வெள்ளை காரன் வழியே தனி. நம்ம ஊரில் எலிக்கு நம்ப கருவாடு தானே பொறியில் வைப்போம். இவன் தண்ணி, சாப்பாடு, அது விளையாட ஊஞ்சல், உடற் பயிற்ச்சிக்கு ஏறி இறங்க ஏணி எல்லாம் வைச்ச பொறி என்னும் பெயரில் ஒரு அபார்ட்மண்டெ  கட்டி வைச்சு இருக்கான்.

இவ்வளவு இருந்தால் எலி என்ன? நம்மலெ போய் உள்ள செட்டில் ஆகிடுவோம்  இல்ல. அந்த எலி என்ன பண்ணும்?. எல்லாத்தையும் பார்த்து ஆசை பட்டு அது உள்ள மாட்டிக்கிச்சி.

நம்ம உன்னி கிருஷ்ணன், ஒரு கோணிப்பையை மேல போட்டு கவர் பண்ணி  ஒரே அடி. இதல என்ன ஒரே பிரச்சனைன்னா இவன் அடிச்ச அடியில் அந்த பொறியும் காலி.

அது ஓகே, இங்க ஒரே எலிதான் இருக்குன்னு சொன்னாரு. இனிமேல் அந்த பொறி தேவை படாது

5 கருத்துகள்:

  1. வெள்ளை காரன் எலி - கொடுத்து வைத்த எலி...?!

    பதிலளிநீக்கு
  2. எங்கட பக்கம் சொல்லுவாங்கள், 'தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்,' என்று, :-)
    பாவம் அந்த ஹாம்ஸ்டர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னோட வீட்டுக்காரம்மா மாதிரியே கதைக்கிரீங்கோ. நான் இந்தியாவில் பிறந்து வளந்தவந்தான். கல்யாணம் ஆனா புதுசில அவங்க இப்படி கதைக்கும் போது என்ன சொல்றான்கனே தெரியாது. இப்ப இதனை வருஷம் கழித்து என்ன சொல்ல வராங்கனெ தெரியாது. அவங்க சொந்த ஊர் யாழ்பாணம்.

      நீக்கு