செவ்வாய், 15 ஜூலை, 2014

ஒரே கேள்வி; இரண்டு பதில்கள் (இருபது வருடம் முன்னும், பின்னும்)

தலைப்பே கூறியிருக்கும், நான் என்ன சொல்ல போகிறேன் என்று.

கேள்வி ஒன்றே; ஆனால் இரண்டு பதில்கள். இந்த கேள்வியை முதல் முறை கேட்கும் போது தமிழ்நாட்டில் பர்கூர் என்ற ஊரில் ஆறாவது படித்து கொண்டு இருந்தேன்.

இரண்டாம் முறை கேட்கையில் கட்டார் என்ற நாட்டில் ஒரு "பன்னாட்டு நிறுவனத்தில் தணிக்கையாளராக" பணி  புரிந்து வந்தேன்..



இப்போது அந்த கேள்வி பதிலுக்கு போவோமா?

என்ன விசு, ராத்திரி தூங்கும் முன் பை" எதோ தாயார் செய்து கொண்டு இருக்கிறாய்? காலையில் எழுந்தவுடன் எங்கேயாவது பயணமா?

பர்கூர் ; ஆமாங்க. நாளை காலை நாங்கள் ஆறாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் பெங்களூருக்கு சுற்றுலா போகின்றோம். யோசித்தாலே தூக்கம் வராது. காலை 5 மணி போல பஸ் வரும், நாங்க எல்லாரும் அதில் ஏறி 6-7 மணி நேரம் போனா பெங்களூர். அது இங்க இருந்து கிட்டதட்ட 200 கிலோ மீட்டர்ன்னு சொல்றாங்க.

கட்டார்;  மாப்பு, இந்த கொடுமைய ஏன் கேட்கிறாய்? காலைல 5 மணிக்கு வேலை விஷயமா துபாய் போகணும். ஒரு ரெண்டு மணி நேரம் பயணம், இருந்தாலும் இந்த வாடகை காரை அங்கே போய் நிறுத்தி அங்கே இருந்து விமானம் நிலையம் போய் சேருவதற்குள், என்னத்த சொல்லுவேன். நாய் வேஷம் போட்டாச்சி, கொலைக்கிரன், அவ்வளவு தான்.

கேள்வி ; அங்க என்ன செய்யபோறீங்க?

பர்கூர்; எங்க பள்ளிகூடத்தில் இதுவரை யாருமே விமானத பார்த்தது இல்ல.அதனால் நேரா விமான நிலையம். நாங்க அங்கே போய் சேர கிட்ட தட்ட மதியம் 2 மணி போல் ஆகும். அங்க ஒரு 3 மணி போல் டெல்லி விமானம் வந்து இறங்கும். அதை பார்க்க தான் முக்கியமா போறோம்.


கட்டார்; என்னத்த செய்ய போறேன்? என் தொழிலே அடுத்தவன் என்ன தப்பு செய்றான் என்றத கண்டுபிடிச்சி அவன போட்டு கொடுக்கணும். எத்தனை பேரை போட்டு கொடுக்குரோமோ அவ்வளவு நல்ல பேர் நமக்கு. என்ன வாழ்க்கையா இது. அடுத்தவன் தவறில் நம்ம ப்ரோமோசன். நம்ம உள்ள நுழையரத பார்த்தவுடன் அவனவன் பேய் அறைந்த மாதிரி முழிக்கிறான் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்லுகிறேன்).


கேள்வி : சாப்பாடு எல்லாம்?

பர்கூர்; காலை சாப்பாடு, எங்க வாத்தியாரே எல்லாருக்கும் எடுத்து கொண்டு வருவாரு. அவர் ரொம்ப நல்ல மனுஷன். இந்த மாதிரி நாட்களில் குறைந்தபட்சம் ஆளுக்கு ரெண்டு இட்லியும் பொட்டுகடலை சட்டினியும். மதியத்திற்கு அவங்க அவங்க வீட்டில் இருந்து கொடுத்து அனுப்புவாங்க. எங்க வீட்டில் புளி சோறு, வேக வைச்ச முட்டை.

கட்டார்; மாப்பு, அது இன்னொரு கொடுமை. 5 மணிக்கு விமானத்தில், ரெண்டு மணி நேரம் போக வேண்டும் அல்லவா? ஏதாவது தருவான். இந்த சின்ன வயசில் சொல்லுவாங்க தெரியுமா? வெந்தத தின்னு விதி வந்தா சாவோம்னு அந்த கதை தான். அவன் தருவது மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது.
மதியத்திற்கு அங்கே துபாயில் இப்ப அஞ்சப்பர்னு  ஒரு தமிழ் ஹோட்டல் திறந்து இருக்கானாம். அங்கே என்னோட பள்ளிகூடத்தில் படித்த நண்பர்கள் ரெண்டு பேர் சாப்பிட கூப்பிடாங்க. இதல ஒரு விஷயம் பாரு. இந்த பள்ளி கூட நண்பர்கள் சொன்னேன் அல்லவா. இவன்க பள்ளிகூடத்து காலத்தில் அவ்வளவு சந்தோசமா இருப்பாங்க. இப்போ அப்படியே மாறிட்டாங்க. எப்ப பாரு பொலம்பல்.

கேள்வி; இங்க இருந்து அங்கே போய் சேருவதிர்குள் சோர்ந்து போய் விட மாடீர்களா?

பர்கூர்: நான் இதுக்கு முன்னால பெங்களூர் போனது இல்ல. எங்க அண்ணன் சொல்லுவாரு. ரோட்டின் ரெண்டு பக்கமும் அவ்வளவு அழகா இருக்கும்னு. பச்சை பசேல்ன்னு நெல் வயல். பசுமையான மலைகள். நீரோடிவரும் ஆறுகள், மற்றும் மரம்,செடி கொடிகள். எங்களுக்கு நேரம் நல்லா இருந்தா போறவழியில் ரயில்வே கிராசிங்கில்  ரயில் பார்க்க கூட வாய்ப்பு உண்டு என்று.  இதை எல்லாம் பார்த்து கொண்டே போகலாம்னு நானும் நண்பர்களும் பேசி வைத்து கொண்டுள்ளோம்.

கட்டார் ; நல்லா கேட்ட போ. விமானத்தில் ஏறினோமா? பேல்ட போட்டோமா? குறட்டை விட்டோமா? அங்கே போய் இறங்கும் பொது விமான டயர் தரையில் படும் இல்ல, அப்பத்தான் எழுவேன். பக்கத்தில இருக்கிறவன் எவனும் பேசி தொலைக்காட்டி போதும்.

அன்று இரவு; 11 மணி போல்.

கேள்வி : என்ன விசு எப்படி போச்சி பயணம் எல்லாம்?

இன்னைக்கு பெங்களூர் போனும் இல்ல, விமானத்த பாக்க. அந்த டெல்லி விமானம் கேன்சல் ஆகிவிட்டதாம். அவ்வளவு நேரம் போய் அதை பார்க்க முடியவில்லை என்று நாங்க நிறைய பேர் அழுதுவிட்டோம். என்ன செய்றது நாங்க கொடுத்து வைச்சது அவ்வளவு தான்னு திரும்பும் போது எங்க வாத்தியார் அருகில் இருந்த ஒரு இடத்தில கண்காட்சி சாலைல நிக்க வைத்து இருந்த ஒரு விமானத்த காட்டுனார். எதோ வந்ததிற்கு, பறக்கறத பார்க்காவிட்டாலும் நிக்கிரத பார்த்தோமே அது போதும்.

கட்டார்; "ஜான் ஏற முழம் சறுக்குது". போகும் போது காரில் பெட்ரோல் இல்ல. அதை போட்டு கொண்டு அந்த பார்கிங் போனா, அங்கே அவனிடம் கொடுக்க சில்லறை இல்ல. அதுக்கு அப்புறம், அங்க விமான நிலையத்தில்... இத காட்டு அத காட்டுன்னு அவங்க செக்குரிட்டி கொடுமை. ஏறி உட்கார்ந்த பக்கத்தில் இருக்கவன் தூங்க விடலை. அங்கே இறங்கியவுடன் விசாவில் எதோ பிரச்சனையாம். அதை முடிச்சா? அத முடிச்சி வெளிய வந்தா, அங்க "ரெண்ட் எ காரை" காணோம். எப்படியோ கண்டு பிடிச்சி போனா, ஆபிசில் தலைக்கு மேல வேலை. என்ன கொடுமை மாப்பு.



கேள்வி; இன்றைக்கு இந்த பயணத்தில் நீ கற்று கொண்டது என்ன?

பர்கூர்; நல்ல படிச்சி, எப்படியாவது, அடிகடி விமானத்தில் போற மாதிரி ஒரு வேலை. காலையில் எழுனும், காரை எடுக்கணும், விமான நிலையம் போகணும், மீண்டும் கார், பெரிய ஹோடேலில் சாப்பாடு, பிறகு அன்னைக்கே வேறு ஒரு விமானம் பிடித்து வீட்டுக்கு வரணும். அம்புட்டுதேன். 

கட்டார்; என்னத்த கத்துகிட்டேன். ஏன்டா கத்துகிட்டேன்னு கோவமா இருக்கு. சின்ன வயதில், "ரோட்டின் ரெண்டு பக்கமும் அவ்வளவு அழகா இருக்கும். பச்சை பசேல்ன்னு நெல் வயல். பசுமையான மலைகள். நீரோடிவரும் ஆறுகள், மற்றும் மரம்,செடி கொடிகள்". புளி சோறு, முட்டை.. அந்த சந்தோசம் எல்லாம் போச்சு மாப்பு. பேசாம எல்லாத்தையும் மூட்டைக்கட்டிடு ஊரில போய் ஒரு பொட்டிகடை போடலாம்ன்னு இருக்கேன்.அம்புட்டுதேன்

8 கருத்துகள்:

  1. உண்மையிலே அந்த சந்தோசமெல்லாம் இனி வருமா...? சந்தேகம் தான்.... ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பின்னோடத்திர்க்கும் நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், பின்னோடத்திர்க்கும் நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், பின்னோடத்திர்க்கும் நன்றி..

      நீக்கு
  4. பச்சை பசேல்ன்னு நெல் வயல். பசுமையான மலைகள்.
    இக்கரைக்கு அக்கறை எப்பவுமே பச்சைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பின்னோடத்திர்க்கும் நன்றி..

      நீக்கு