சனி, 12 ஜூலை, 2014

என் பெயர் விசு... எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு.

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஓமான் நாட்டின் தலைநகரமான மஸ்கட் என்னும் ஊரில் குப்பை கொட்டி கொண்டு இருந்த நாட்கள். நல்ல வேலை. திருமணம் ஆகி சில நாட்களே. என்ன விசு.. புது வீடு, புது கூலிங் கிளாஸ்சு, புது காரு, புது பொண்டாட்டி என்று அவனவன் கேட்க்கும் நாட்கள். இப்படி போகையில் என் அருமை நண்பன் "இளந்தோப்பு கிழிஞ்செயில் மத்தாய் அமநிகுட்டி குஞ்சு குஞ்சு"" என்று பெயர் கொண்ட நல்லதோர் "பாலக்காட்டு மாதவன்" என்னோடு பணி புரிந்து வந்தார்.



சரி, இவ்வளவு நீளமான பெயராக உள்ளதே, அவரை சுருக்கமாக எப்படி அழைப்பீர்கள் என்று நீங்களே ஏதும் தவறான முடிவிற்கு வந்து விடாதீர்கள். நாங்கள் அவரை சுருக்கமாக "மத்தாய்" என்று அழைப்போம்.  நான் அவரை சந்தித்த முதல் நாளிலேயே எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய மன உளைச்சல்.


மிஸ்டர் விசு... மீட் " மிஸ்டர். இளந்தோப்பு கிழிஞ்செயில் மத்தாய் அமநிகுட்டி குஞ்சு குஞ்சு"

நைஸ் டு மீட் யு மிஸ்டர்... மிஸ்டர்.... மிஸ்ட்..

மிஸ்டர் விசு, நீங்கள் என்னை சுருக்கமா "மத்தாய்' என்றே அழைக்கலாம்

நைஸ் டு மீட் யு மிஸ்டர். "மத்தாய்". இப் யு டோன்ட் மைண்ட் உங்கள் பெயரை பற்றி ஒரு கேள்வி கேட்கலாமா?

ஆர் யு தமிழ் மிஸ்டர் விசு?.

எஸ் 'மத்தாய்"

நீங்கள் என் பெயரை பற்றி என்ன கேட்க போகின்றீர்கள் என்று தெரியும், இட் மீன்ஸ் "ஸ்மால்" அல்ல "லிட்டில்". எங்கள் பகுதில் எப்போதும் கடைசி பிள்ளைக்கு "குஞ்சு" என்ற பெயரை வைத்து கொஞ்சுவார்கள்.

தேங்க்ஸ் பார் தி இன்பர்மேசன். ஆனால் நான் கேட்க வந்தது அது இல்லை.

ஒ, ஐ காட் இட், மிஸ்டர் விசு. என் இல்லத்தில் 6 பேர். எனக்கும் மூத்த அண்ணனை கடைசி என்று நினைத்து அவனுக்கு 'குஞ்சு" என்று பெயர் வைத்து கொஞ்ச ஆரம்பித்துவிட்டனர். இரண்டு வருடம் கழித்து நான் பிறந்து விட்டேன் அல்லவா? அதனால் எனக்கு இரண்டு "குஞ்சு - குஞ்சு" என்று வைத்து விட்டனர்.

"டூ மச் இன்பர்மேசன்" மிஸ்டர். மத்தாய், நான் கேட்க வந்தது அதுவும் இல்லை.

மிஸ்டர் விசு. என் பெயரை கேட்டவுடனே, தமிழ் மக்கள் உடனடியாக சிரித்து விட்டு இந்த பெயர் எப்படி வந்தது என்பார்கள் , அதனால் தான் நீங்களும் அதையே கேட்பீர்கள் என்று தவறுதலாக நினைத்து விட்டேன். என் பெயரில் உங்களுக்கு என்ன கேள்வி?


பெயர் இவ்வளவு நீளமாக உள்ளதே..., இது எப்படி சாத்தியம்?

அது ஒன்றும் இல்லை மிஸ்டர். விசு. எங்கள் மாநிலத்தில் நாங்கள் பிறந்த ஊர், தாலுக்கா, பிறகு அப்பா பெயர், அதன் பின் முடிந்தால் அம்மா பெயர் அதனை அடுத்து எங்கள் பெயரை வைத்து கொள்வோம்.

அப்படியா மிஸ்டர். மத்தாய் .. ரொம்ப ஆச்சரியமா வித்தியாசமா இருக்கே.

நீங்க பாருங்கோ மிஸ்டர்.விசு!

"இளந்தோப்பு"  நான் பிறந்த ஊர்,

"நைஸ் நேம் பார் எ சிட்டி", மிஸ்டர். மத்தாய்

"கிழிஞ்செயில்" எங்க தாலுக்கா. "மத்தாய்", என்னுடைய அப்பா பெயர்

லெட் மி கெஸ், "அமநிகுட்டி" உங்க அம்மா பேரு தானே

எப்படி மிஸ்டர் விசு அவ்வளவு கரெக்டா சொல்றீங்க?

"லக்கி கெஸ்", மிஸ்டர். மத்தாய், நீங்க சொல்லுங்க.

"குஞ்சு குஞ்சு"  தான் என் பெயர்.. ஆமாம், இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?

இல்லை, மிஸ்டர்.  மாத்தாய். இவ்வளவு டீடைல்ஸ் பெயரில் இருக்கே, நீங்க ஒரு வேலை பண்ணுங்கோ.

சொல்லுங்க, மிஸ்டர். விசு.

இந்த பெயரோட, உங்க ஊர் "பின்கோட்" எண்ணையும் சேர்த்து கொண்டால், பெயர் சொல்லும்போதே உங்க அட்ரசும் சேத்து சொல்லிவிடலாம் அல்லவா? ஒரு கல்லில் ரெண்டு மாங்கா.

மிஸ்டர். விசு, நீங்க என்ன கிண்டல் பன்னுரிங்கன்னு நினைக்கிறன்.

சும்மா தமாஸ் பண்ணேன் மிஸ்டர். மத்தாய். என்ன இருந்தாலும், மரியாதை இல்லாமல் உங்களை உங்க அப்பா பெயரை வச்சி கூப்பிட எனக்கு விருப்பம் இல்ல, நான் உங்க பெயர வெச்சே கூப்பிடுறேன், இதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?

தட்ஸ் ஓகே, மிஸ்டர் விசு.

நைஸ் மீட்டிங் யு "குஞ்சு - குஞ்சு". லுக்கிங் பார்வர்ட்.

நான் மிகவும் குழந்தைத்தனமான, இன்னோசெண்டாக கேட்ட இந்த கேள்வியை எவனோ ஒரு எட்டயபுரதன் " மிஸ்டர்.விசு உங்களை கிண்டல் தான் பண்ணினார்" என்று போட்டு கொடுத்து விட்டான். அதில் இருந்து நானும் அவரும் எலியும் பூனையும் போல ஆகி விட்டோம்.

சில நாட்கள் கழிந்தது. அவர் என்னை எப்போதும் பழி வாங்கும் சந்தர்பத்தை எதிர் பார்த்து கொண்டு இருந்தார் என்பது அங்கே இருந்த எல்லாருக்கும் தெரியும். அப்படி போகையில், ஒரு நாள்.

அலுவலகத்தில் அமர்ந்து இருந்த எனக்கு .. இண்டர்காமில் இருந்து ஒரு போன்.

மிஸ்டர்.விசு. வெளியே "அடை மழை" பெய்கின்றது.

அப்படியா?  "குஞ்சு - குஞ்சு" கொஞ்சம் "தக்காளி சட்னி" செஞ்சி எடுத்து கொண்டு வா, நம்ப ரெண்டு பெரும் ஜாலியா போய், "தொட்டு தொட்டு" அடை சாப்பிட்டு வரலாம்.

மிஸ்டர். விசு, "பி சீரியஸ்". இந்த மழையில் உங்க காரில் நாலு சன்னலும் திறந்து இருக்கு, முதலில் ஓடி போய் மூடுங்க.

அவன் சொன்னது தான், அன்னிக்கு பார்த்து என் வீட்டு அம்மணி காரை ஓட்டிகிட்டு வந்ததால், "துண்டை காணோம், துணியை காணோம்னு" வெளிய ஓடி போனா, அங்க 48 டிகிரி வெயில். என்னை பார்த்தவுடன் அங்கே இருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்து விட்டனர்.

"ஏன் விசு, வளைகுடா பகுதியில் மே மாதமும் அதுவுமா எப்ப மழை வந்துச்சி. என்ன இருந்தாலும் நீ பொண்டாட்டி காரை காப்பாதிறேன் பேர்வழின்னு இயற்கையை கூட மறந்து விட்டாயே. போ, போய் வேலைய பாரு. என்று யாரோ ஒருவன் சொன்ன மாதிரி நினைவு.

"குஞ்சு- குஞ்சு", எனக்கே வாழக்காய் சிப்சா? ஆஞ்சநேயருக்கே ஹை ஜம்ப்பா? "ஏறி மேல போற ஆத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா" என்ற பழமொழியை போல என்ன தூண்டி விட்டு விட்ட...உன்னை நான் கவனிச்சிக்கிறேன்.

சில மாதங்கள் சென்றன..வெயில் 50 டிகிரியை தாண்ட வேண்டும் என்று நான் காத்து கொண்டு இருந்தேன். அந்த வருடம் பார்த்து ஆகஸ்ட் மாதம் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு வெயில். ஓகே, ஸ்டார்ட்... "அக்சன்'

ஹலோ .... மிஸ்டர். "இளந்தோப்பு கிழிஞ்செயில் மத்தாய் அமநிகுட்டி குஞ்சு குஞ்சு" இருக்காரா?

எஸ், ஸ்பீகிங்.

மிஸ்டர்.இளந்தோப்பு , நான் மஸ்கட் இந்திய கலாசார சங்கத்தில் இருந்து பேசுறேன். திஸ் இஸ் "தேஷ்முக்"

சொல்லுங்க, மிஸ்டர். தேஷ்முக்.

வாட் கென் ஐ டூ பார் யு?

மிஸ்டர். இளந்தோப்பு, ஆர் யு தி ப்ரெசிடெண்ட் ஆப் 'கேரளா கல்சரல் அச்சொசியாசன்?

எஸ். மிஸ்டர்.தேஷ்முக். நான் தான். வாட் கேன் இ டூ பார் யு.

மிஸ்டர். இளந்தோப்பு, எங்க சங்கதில்ல வருஷ வருஷம் நாங்க சுதந்திர நாள் அன்னிக்கு ஏதாவது ஒரு மாநிலத்த சேர்ந்த சமூக சேவை செய்கின்றவர்களை அழைத்து "கொடி ஏத்த" வைப்போம். இந்த வருஷம் அந்த முறை கேரளாவிற்கு. நீங்க அவர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமானவர் என்பதால்.. வி வில் பிஹானர்ட், இப் யு கேன் ஹோய்ஸ்ட் தி பிளாக்.

ரொம்ப சந்தோசம் மிஸ்டர் தேஷ்முக். இந்த ப்ரோக்ராம் என்னைக்கு. இந்த வாரம் முழுவதும் நான் ஆபீசில் ரொம்ப பிசி அதுதான்.

மிஸ்டர் இளந்தோப்பு. இந்த வருஷம் சுதந்திர தினம் வெள்ளிகிழமை  தான் வருது. வெள்ளி தான் இங்கே வார இறுதி ஆச்சே,   எங்க சங்கத்து வெளியே காலையில் 11 மணிக்கு சந்திப்போம். 11;30 டு 12; தான் கொடி ஏற்று விழா.

11;30 டு 12;00 ஆ? அப்ப ரொம்ப வெயிலா இருக்குமே மிஸ்டர். தேஷ்முக்.

என்ன பண்றது மிஸ்டர் .  இளந்தோப்பு. இந்த நிகழ்ச்சிக்கு நம்ப இந்திய தூதுவரும் வராரு. அவர் காலையில் இந்திய பள்ளிகூடத்தில் 10 மணிக்கு கொடி ஏத்தனுமாம். அது முடிஞ்சவுடன் அங்கே சிற்றுண்டி. அவர் தான் இங்க பேச போறார். அதை மனதில் வைத்து தான்.

சரி, மிஸ்டர்.தேஷ்முக். நான் 15 அன்றைக்கு 11 போல் அங்க சிந்திப்போம்.

மிஸ்டர்.இளந்தோப்பு, பி போர், அய் லெட் யு கோ, ஒரு முக்கியமான விஷயம். இந்த நிகழ்ச்சியில் சில மற்ற நாட்டு நண்பர்களும் இருக்காங்கோ, அதனால், கொஞ்சம் பார்மலா டிரஸ் பண்ணி வாங்கோ.

வாட் டூ யு மீன் மிஸ்டர்.தேஷ்முக்?

இல்லை, கொஞ்சம் டை, சூட் போட்டு கொண்டு வாருங்க. ஓகே. வெள்ளி சந்திப்போம்.

வியாழன் அன்று.. அலுவலத்தில்

மிஸ்டர். குஞ்சு-குஞ்சு, என்னப்பா கையில துணி மூட்டை.

ஒன்னும் இல்ல மிஸ்டர் விசு. சூட் ஒன்னு லாண்டரியில் போட்டேன். அதை இப்பதான் எடுத்துட்டு வந்தேன்.

ஏன்யா.. இந்த சூட்டில் சூட்ட பத்தி நினைக்கிற ஒரே ஆளு நீ தான். இந்தியா எங்கேயாவது போறீங்களா? சரி. 15ம் தேதி என்ன பன்னுரீஎங்க? சும்மா இருந்தா எங்க வீட்டு பக்கம் லஞ்ச், போல வாங்க. நம்ம நண்பர்கள் சில பெரும் இருப்பாங்கோ. நம்ப நாட்டு சுதந்தி"ரம்" கொண்டாடலாம்.

இல்ல, விசு.. வேற பிளான் இருக்கு.

மிஸ்டர். குஞ்சு.. அன்னிக்கு என்னமோ 50 டிகிரி தாண்ட போதாம். வெளிய எங்கேயும் சுத்தமா, பேசாம வீட்டிற்கு வாங்க.

தேங்க்ஸ் மிஸ்டர் விசு, எனக்கு வேற பிளான் இருக்கு.

அப்படி என்ன சார் பிளான்.. எங்களுக்கு தான் சொல்லுங்க.

நான் சனி காலையில் எல்லாம் முடிந்தவுடன் சொல்லுறேன்.

ஓகே... ஹாப்பி வீக்கெண்ட். பை.

வெள்ளியும் அதுவுமா, அவருக்கும் முன்னால நானும் சில நண்பர்களும், ஓர் மறைவான இடத்தில காரை நிறுத்திவிட்டு.. AC ஆன் பண்ணி விட்டு  குஞ்சு-குஞ்சுகாக காத்துகொண்டு இருந்தோம்.

சரியாக 11. அவரின் கார் உள்ளே நுழைந்தது. பார்கிங் நிறுத்திவிட்டு, வியர்வை கொட்ட கொட்ட, டை அட்ஜஸ்ட் செய்து கொண்டே , கோட் பட்டனை திறந்து விட்டு அந்த அலுவலகத்து முன் கதவை தட்டினார். எப்படி, யார் திறப்பார்கள்?அன்று சுந்ததிர நாள் தினத்தன்று விடுமுறை, அதனால் அவனன் இல்லத்தில் AC போட்டு நிம்மதியாக இருப்பான் அல்லவே.

ஒரு 10 நிமிடம் கழித்து.. மீண்டேம் அந்த கதவை தடுமம் போது அங்கே நான் ஏற்கனவே எழுதி வைத்த மற்றொரு சீட்டு அவரின் கண்ணுக்கு பட்டது.
For emergency call .......XX XXX.. XXX ( அது என் மற்றொரு நண்பனின் எண்).

ஹலோ.. திஸ் இஸ் தேஷ்முக்.

மிஸ்டர் தேஷ்முக்.. திஸ் இஸ் மத்தாய்.

யாரு..

அய் மீன்.. மிஸ்டர்.. இளந்தோப்பு

ஒ, சொல்லுங்க மிஸ்டர். இளந்தோப்பு, வேர் ஆர் யு?

நான் இங்க தான் உங்க சங்கத்தின் பார்கிங் பக்கத்தில இருக்கேன். நோ படி இஸ் ஹியர்.

சாரி மிஸ்டர்.இளந்தோப்பு , இங்க பள்ளிகூடத்தில் கொஞ்சம் லேட்
 ஆச்சி. நீங்க அங்கேயே இருங்க. வி வில் ஸ்டார்ட் அட் 2.

அப்படியா...ஓகே. ரெண்டுக்கு ஆரம்பிச்சிடும் இல்ல..

ஆமா!மிஸ்டர்  இளந்தோப்பு . கரெக்டா ரெண்டுக்கு. ஒன் மோர் திங்.. நிறைய பள்ளிகூட மாணவர்களும் அவங்க பெற்றோரும் வராங்க, நீங்க பார்மல் டிரஸ் பண்ணி தானே இருக்கீங்க.. ஐ ஹோப் சோ.

ஆமா மிஸ்டர் . தேஷ்ம்மூக்.

ரெண்டு, ரெண்டரை ஆனது. அந்த எண்ணிற்கு மீண்டும் சில முறை கூப்பிட்டு விட்டு, அவர் இங்கே எதோ தவறு நடந்து விட்டது என்று புரிந்து கொண்டு..வண்டியில் ஏறி புறப்பட்டார்.  நாங்களும் அவரை தொடர்ந்து சென்றோம். அருகில் இருந்த மார்க்கெட்டில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று ஒரு குளிர்ந்த பானம் எடுத்து பருகி கொண்டு இருந்தவரின் எதிரில் நான் சென்று..

என்ன மிஸ்டர்.. குஞ்சு - குஞ்சு, வெளியே இவ்வளவு சூடு.. இதில் உங்களுக்கு சூட்டு.இங்கே என்ன அடை மழை பெய்வதாக நினைப்பா?

இல்ல மிஸ்டர் விசு. இங்க இன்னைக்கு சாயங்காலம் 4:30 போல ஒரு பிறந்த நாள் விழாவிற்கு போறன்.. அது தான்.

ஒ ஆமா இல்ல. என்னயும் இன்வைட் பண்ணி இருக்காங்கோ. வாட் எ கோ-இன்சிடெண்ட்

இப்படி நான் சொன்னவுடன் பேய் மிஸ்டர். குஞ்சு குஞ்சு பேய் அறைந்ததை போல் (பே ய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்லுகிறேன்) முழித்து, அடுத்த சில வினாடிகளில் தனது முகத்தில் இருந்த அசடை துடைத்து கொண்டு,

மிஸ்டர் விசு, என்ன சொல்ல வரீங்க?

மிஸ்டர். குஞ்சு குஞ்சு.. என் பெயர் விசு.. எனக்கு "தேஷ்மூக்"னு இன்னொரு பெயர் இருக்கு.. ஹாஹா ....ஹாஹா  


 மாணிக் பாஷா பாணியில் சொல்லிட்டு வண்டியை எடுத்தேன்.

10 கருத்துகள்:

  1. ஹா... ஹா... இப்படி ஆகி விட்டதே அவர் நிலை...!

    ஆத்தா பழமொழி புதுசா இருக்கு....! ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. Fantastic Visu ! You are evolving into a wonderfully hilarious writer. ovoru variyum sirippai varavazhaithtathu ! Sujatha

    பதிலளிநீக்கு
  3. உங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் போல! இப்படி பழி வாங்குறீங்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அப்படி இல்ல ராஜி...! மிஸ்டர். குஞ்சு குஞ்சு வேற எந்த காரியத்தில் விளையாடி இருந்தாலும் மன்னித்து விட்டு இருப்பேன். விசு, மனைவிக்கு பயந்தவன் என்ற "சிதம்பர ரகசிய"த்த எல்லாருக்கும் எதிரில் போட்டு உடைச்சானே அது தான். அன்னிக்கு அது என் காரா இருந்தா, அது அடை மழையோ வடை மழையோன்னு நான் வெளியவே போய் இருக்க மாட்டான். மனைவி கார் என்பதால் தானே ஓடினேன், அதுதான். வருகைக்கும் - பின்னோடத்திர்க்கும் நன்றி!

      நீக்கு

  4. 50 டிகிரி வெயிலில் நஞ்சு போன குஞ்சு அப்புறம் என்ன
    ஆனார்? ஆனாலும் உனக்கு நெஞ்சு அழுத்தம் கொஞ்சம் அதிகம்தான் தம்பி !!!!!!

    பதிலளிநீக்கு
  5. அஹஹஹ்ஹ்ஹ....என்ன நண்பரே! செமயா ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க!!! இது கவுண்டமணி செந்தில் ஸ்டைல்.....ஹஹாஹஹ்.....ஏட்டிக்குப் போட்டி.....ஹஹஹந்த நண்பர் அந்த ஊர் வெயில்ல காஞ்சாரோ இல்லையோ உங்க கலாய்ச்சல்ல காய்ச்சல் வந்து காஞ்சுருப்பாரு!

    பதிலளிநீக்கு