செவ்வாய், 21 ஜூன், 2022

கெட்டி மேளம் கெட்டி மேளம், மோதிரத்தை மாத்துங்கோ!

 கெட்டி மேளம் கெட்டி மேளம், மோதிரத்தை மாத்துங்கோ!

அலை பேசி அலறியது...

சனியும் அதுவுமா மதியம் மூணு மணிக்கு  நாம ஒரு குட்டி தூக்கம் போடலாம்னு இருக்கையில் அலை பேசி அலறுதுன்னா அது நம்ம தண்டபாணியா தான் இருக்கும், என்ன அவசரமோ ?

"சொல்லு தண்டம்!!"

"என்னத்த சொல்லுவேன்” வாத்தியாரே"

"சரி, சொல்லாத, அப்புறம் பாக்கலாம்"

"வாத்தியாரே, எம் பொண்ணு கல்யாணத்தை பத்தி  முக்கியமான விஷயம்"

"தண்டம், ஈஸ்வரி கல்யாணத்தை பத்தி இன்னும் ஏன் டென்ஷன் ஆகுற? இட்ஸ்  ஓகே டு மேரி எ வொய்ட்  பாய், அவன் நல்லவனா, நம்ம பொண்ணை நல்லா வைச்சி காப்பாத்துவானான்னு நம்ம ரெண்டு பெரும் பிரிச்சி ஆரஞ்சிட்டோம், அவனும் பாஸ் ஆகிட்டான்"

"வாத்தியாரே, மனசுல இனம் இனத்தோட சேரணும்ன்னு எனக்கு ஒரு ஆசை, இருந்தாலும் சின்ன வயசுல இருந்தே ஈஸ்வரி கேட்ட எதுக்குமே நான் இல்லனு சொன்னது இல்ல"

"தண்டம், கொஞ்சம் மாத்தி யோசி! இதுவரைக்கும் நீ முடியாதுன்னு சொல்ற எதையுமே ஈஸ்வரி உன்கிட்ட கேட்டது இல்ல, ஈஸ்வரி உலகம் அறிஞ்சவ, நல்ல பையனைத்தான் பாத்து இருக்கா, சும்மா கண்டதையும் போட்டு மண்டை காயாத. என்ஜாய் தி மொமெண்ட், தண்டம்."

"ஐயோ,வாத்தியாரே, நான் தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேனே"

"அப்புறம் என்ன முக்கியமான விஷயம், கெட்டி மேளம் கொட்டி மோதிரத்தை மாத்த வேண்டியதுதானே"!"

"கெட்டி மேளம், மோதிரம், நல்ல  சொன்ன வாத்தியாரே, நான் இப்ப சொல்ல வந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல.."