வெள்ளி, 5 நவம்பர், 2021

பரத்வாஜ் ரங்கன் - கதறு ... கதறு... " ஜெய் பீம்"

 "I am so sorry.. so sorry for your unhappiness, Mr. Baradwaj Rangan"!

Marshall என்ற ஆங்கில படத்தில் நீதி மன்றத்தில் சாட்சி கூண்டில் விசாரிக்கையில் நிற்கும் ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு எதிராக வாதாடும் வக்கீல் கூறுவார்... 

" I am so, so sorry for your unhappiness"  என்று!


அந்த படத்தை பார்க்கையில் அந்த காட்சியை பார்க்கையில் அந்த வக்கீலோடு  சேர்ந்து நாமும் மனதில் அந்த பொய் சொல்லும் பெண்ணை பார்த்து அவர் செய்வது சொல்வது அனைத்தும் பொய்யாக இருந்தாலும் ...

"I am so, so sorry for your unhappiness" என்று சொல்லும் படி அந்த காட்சி அமைந்து இருக்கும்.

நேற்று 'ஜெய் பீம் " படத்திற்கான விமர்சனம் என்று பரத்வாஜ் ரங்கன் என்றவரின் கதறலை காணுகையில் என்னை அறியாமலே நான் சொன்னது..

"I am  so, so sorry for your unhappines, Mr. Barathvaj Rangan"

அந்த விமர்சனத்தில் தான் என்னே ஒரு காழ்ப்புணர்ச்சி, வன்மம், சாதி, திமிரு , ஆணவம்!

"ஜெய் பீம்" படத்தில் அநியாயத்தின் உச்சகட்டமாக வரும் போலீஸ் அதிகாரி  குருமூர்த்தியை விட இந்த விமர்சனத்தை உளறிய பரத்வாஜ் கொடூரமானவர் என்று தான் சொல்லவேண்டும்.

இவரின் விமர்சனத்தின் சில பகுதிகளுக்கு செல்வோம்.

ஆரம்பத்தில் " பாக்குறவங்க பாருங்கோன்னு"  பொதுவா ஒரு டிஸ்கி போட்டு விட்டு, 

இது ஒரு "Crying   Baby "என்று ஆரம்பிக்கிறார். "Crying   baby" பேபி என்று தான் சொல்வதற்கான காரணம் என்று இவர் கூறுவது...

இருளர் சமூகத்தை சார்ந்த முழு பிரசவ பெண்ணை காவல் அதிகாரிகள் கொடூரமாக இழுத்து கொண்டு போகிறார்களாம் , அப்போது பின்னணி  இசை உச்சத்தில் உள்ளதாம், அதற்கும் மேலே கமெரா அங்கும் இங்குமாக போட்டி போட்டு கொண்டு அலைய அந்த காட்சி இன்னும் அதிகமாக பிரதிபலிக்க பட்டு இருக்கின்றதாம். இது எல்லாம் போதவில்லை, பார்வையாளர்களின் பரிதாபம் பெற இன்னும் தேவை  என்று  இயக்குனர் மீண்டும் அந்த கேமராவை திருப்பி அங்கு இருக்கும் குழந்தை ( ஏழு - எட்டு வயதான அந்த பெண்ணின் மூத்த மகள்) மீது திரும்ப அந்த குழந்தை அழுகிறதாம். இந்த காட்சிக்காக தான் இந்த படத்தை இவர் "Crying Baby "என்று  அழைக்கின்றாராம்.

"Again, I am so, so sorry for your unhappiness, Mr. Rangan"! For this movie ain't a crying baby my man, you are the crying baby.

கிட்டத்தட்ட மூன்று மணி நேர படத்தின் விமர்சனத்தில்  இந்த ஆசாமி ஏன் இந்த சிறுமியை வைத்து ஆரம்பிக்கின்றார் என்ற கேள்வி மனதில் எழு முன்னே அதற்காக விடை உதித்தது.

கடந்த பதிவில்  (ஜெய் பீம் - ஒரு பார்வை.) நான் ..

// படத்தின் இறுதி காட்சியில் இடது காலை வலது கால் மேல் தூக்கி போட்டு செய்தி தாள் படிக்கும் அந்த சிறுமியை பார்த்தவுடன் சூர்யாவுடன் சேர்ந்து நானும் மகிழ்ந்து சிரித்து ரசித்தேன்.

வார்த்தைகள் வெளிவராவிட்டாலும் மனதில் ஒரு ஆர்ப்பாட்டம்..

அந்த சிறுமியை  நாங்கள் கொண்டாடுகிறோம்.. நீங்க..

கதறுங்கடா.. கதறுங்க...//

என்று முடித்து இருப்பேன்.

அந்த கதறல் தான் இது and all I can say is," I am so, so sorry for your unhappiness"

அந்த "Crying baby" பகுதியை கடந்து அடுத்து சில வார்த்தைகளை வாந்தி எடுத்துவிட்டு பின்பு வக்கீல் சந்துருவிடம் வருகிறார்... 

"வக்கீல் சந்துரு இந்த விசாரணையில் பேசும் விதமும், அவர் உண்மைகளை அறிந்த விதமும், சாட்சிகளை பொய் என்று நிரூபிக்கும் விதமும், மிகவும் அடாவடியாகவும் யாழ்பாணத்தனமாகவும் உள்ளதாம்"

கதறு, ரங்கா, கதறு..

முதல் கதறல் அந்த சிறுமி கால் மேல் கால் போட்டு அமர்ந்ததை சகிக்க முடியாதலால்! இந்த சந்துருவிற்கான கதறல், இம்மாதிரியான பிள்ளைகளை நிஜ வாழ்வில் சூர்யா படிக்க வைப்பதால். ஒடுக்க பட்டவர்கள் படிப்பதா?

விமர்சனம் செய்யும் காணொளிக்கு சென்று  சப்தத்தை முயூட் செய்துவிட்டு  இவர் பேசுவதை பாருங்கள், அவர் முகத்தில் அவ்வளவு வெறுப்பு.

I can't help saying it again, Mr. Rangan. I am so, so sorry for your unhappiness!

அதை தொடர்ந்து கதறுகையில்...

யார் இந்த சந்துரு! புகை பிடிப்பாரா? குடிப்பாரா (Drinked ?.. really.. he did say drinked? He was so filled with hate and just couldn't get his words right)? அவருடைய அம்மா யார்? மனைவி யார்?

"I am so, so sorry for your unhappiness"! Why would you want to know whether Chandru had a Mom or wife? அது எப்படி யாரை பற்றி பேசினாலும் அவன் அம்மா யாரு அவன் பொண்டாட்டி யாருன்னு கேக்குறீங்க!  அடுத்தவன் மனைவியை பத்தியே தான் உங்க நினைப்பு எப்பவுமே இருக்குமா?  

இந்த கதறலில் உங்களுக்கு சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் மேலான வெறுப்பு தெரிகின்றது.

மேலும் இவர் வாந்தி எடுக்கையில் 

"படத்தில் ஒரு காட்சியில் அந்த இருளர் இனத்தை சார்ந்தவர் தன் மகளுக்கு ஒரு விளையாட்டு சாமான் வாங்கி வருகையில் போலீஸ் அந்த நபரை கைது செய்ய அந்த போலீஸ் வாகனம் விளையாட்டு சாமான்கள் மேல் ஏறி அனைத்தையும் சிதறடித்து உடைத்து போட, I am sorry, why do you have to amplify everything? என்று கேட்கின்றார்.

Here, I gotta say something personal to this man.

Do you have a family? Do you have kids? Do you have a daughter?! Have you ever felt the pain of not giving your daughter what she wanted, because you couldn't afford it! I don't think you have! For your moronic blabber on this scene proves it. 

For the sake of your own good and your closed ones, take a deep look at the mirror and change yourself. You should be ashamed of being  Castestist, racist, fascist, misogynistic, and supremacist!

In the words of Plato," The highest form of knowledge is empathy, for it requires us to suspend our egos and live in another’s world”!

You aint got it! Shame on you!

And let me say again..

"I am so sorry.. so sorry for your unhappiness" !


பின் குறிப்பு :

ஒவ்வொரு சராசரி  ஆம்பளைக்கும்  தன் மனைவி பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்துன்னு  ஏதாவது ஆபத்து வந்தால் எப்படியாவது தலையை வைச்சாவது காப்பாத்தனும்னு ஒரு உணர்ச்சி தைரியம் வரும். அந்த மாதிரி ஒரு சராசரி மனிதனை போலீஸ் அடிச்சி இழுத்துன்னு போதும் போது அவன் பொண்டாட்டியை பாத்து ...

"செங்கனி என்னை விட்டுடாத செங்கனி.. செங்கனி என்னை விட்டுடாத செங்கனினு" அழுவானே...

அந்த காட்சி கூட உனக்கு தெரியல பாரு ரங்கன்.. அங்க தான் நீ ஒரு  சாதி வெறியன்னு உன்னையும் அறியாமல் நிக்குற.

உன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி எதுவும் வர கூடாதுனு நான் வேண்டிக்கிறேன். அப்படி வந்தா, பாவம் அவங்க.

அதையும் இப்படி தான் கிண்டலா கேவலமா அலட்சியமா.. இவங்க எல்லாரும் "Crying Baby"ன்னு சொல்லிட்டு பின்னால இருக்குற மணி ரத்தினம் ரஜினிகாந்த்  புத்தங்கங்களை படிக்க போயிடுவ. 

1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...