செவ்வாய், 30 அக்டோபர், 2018

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா .. பெண்களா?

இது என்ன விஷ பரீட்சை என்று வியப்பா? இந்த தலைப்பை படித்ததும்  எனக்கும் இந்த வியப்பு வந்தது.

தென் கலிபோர்னியா தமிழ் சங்கத்தின் 2018  தீபாவளி கொண்டாட்டத்தில் நடக்க இருக்கும் பட்டிமன்றத்தில் தலைப்பு தான் இது. சங்கத்தின் தலைமையில் இருந்து இதில் பங்கேற்கும் படியான அன்பான விண்ணப்பம் வந்தது. இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் ஏற்று கொள்ள முடியாத நிலை.

சிரிக்க சிந்திக்க என்று வந்த இந்த பட்டிமண்டப தலைப்பை பார்த்தவுடன்  மனதில் ஏக பட்ட  நினைவுகள்.

ஒரு வேளை, இந்த பட்டிமன்றத்தில் நான் பேசும்படி இருந்தால்...

குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களே என்று தான் பேசி இருப்பேன்.

என்ன விசு?

ஒரு ஆணாக இருந்து கொண்டு எப்படி மகிழ்ச்சி பெண்களால் வருகின்றது என்று சொல்வாய் என்று அநேகர் கேட்பது காதை  கிழிக்கின்றது. இருந்தாலும் அது தானே உண்மை..  அடியேனின் சில வாதங்கள்.


இந்த தலைப்பில் பெண்களா ஆண்களா என்று இருந்தாலும் அதை கணவனா அல்ல மனைவியா என்று தான் விவாதிக்க தேவை படுகின்றது.