வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ஆம்பிளையா பிறக்க கூடாது ..

இன்று முக நூலில் ஒரு சிறு துணுக்கு போட்டு இருந்தேன். மேலே தொடருமுன் முதலில் அதை படிக்கலாமே..

ஜோடியா  ஊர் சுத்த வந்து இருக்கியே...லைசன்ஸை எடு...

இதோ..

இது ஒரிஜினல் இல்ல ....ஒரிஜினல் எங்கே..?

காணமல் போச்சி.

அது கிடைக்குற வரை வண்டிய சீல் பண்ணி உள்ளே வைக்க போறோம்.

சார்.. என் கல்யாண ஒரிஜினல் செர்டிபிகேட் கூட காணாம போச்சி சார்


இப்பொது பதிவிற்கு வருவோம்.

இந்த பதிவை படித்த சிலர் லைக் - சிரிப்பு என்று சொல்லி இருந்தாலும் பலர்... உள் டப்பியில் வந்து சிறிது கோவமாக அறிவுரையை அள்ளி தந்தார்கள்.

இதில் என்ன கோவம்...

ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்து கொள்வது நல்லது தான். இருந்தாலும் அது கையில் இல்லாவிடில் இன்றைய முன்னேற்ற சூழ்நிலையில் தொலைபேசியின் மூலம் காட்டலாம். அல்ல நகல் வைத்து கொள்ளலாம் ... அதை விட்டு விட்டு ஒரிஜினல் இல்லாவிடில் கைது என்பது பெரிய தண்டனை தானே..

அதை தானே சொன்னேன். அதற்கு என்ன கோவம் என்று சொன்னேன்.

அதற்கு பலர்...

நாங்கள் அதை பற்றி பேசவில்லை.. வேறொரு விஷயம் பற்றி பேசினோம் என்று சொல்ல...

நானோ..

ஆமாம்.. இந்த மாதிரி வண்டியை சீல் செய்து ஸ்டேஷனில் வைப்பது வண்டிக்கு நல்லது அல்ல.. மற்றும் வண்டி இல்லாமல் ஒருவன் எப்படி தன் தினந்தோர வேலையை செய்ய முடியும் ...

என்று என் வாதத்தை எடுத்து வைத்தேன்.

இவ்வளவு சொல்லியும் பலரின் கோவம் தணியவில்லை.

கடைசியாக ஒரு அம்மணி..

மனைவி முகநூலில் இல்லை என்ற காரணத்தினால் தானே இம்புட்டு தகிரியமாக எழுதிகின்றீர்கள் என்று போட்டார்களே ஒரு போடு.

அப்போது தான் எனக்கு இவர்களின் கோவத்திற்கான காரணம் புரிந்தது.

என் இனிய தமிழ் மக்களே..

இந்த முழு உரையாடலும் அம்மணிக்கும் - போலீஸ்காருக்கும் நடந்தது தான் என்று நான் சொல்ல வந்தேன்.

இப்போதாவது என் மேல் உள்ள கோவத்தை குறைத்து கொண்டு பரிதாப படுங்கள்.

நன்றி.. 

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

"காலா" தலைவர் மாஸ் இன்ட்ரோ....!

முதல் சீனில்  வானத்தை காட்டுறோம். அப்படியே கமெராவை வானத்துல இருந்து கீழ இறக்குறோம்... நீல வானம் அப்படியே மெதுவா காவியா மாறுது...காவி அப்படியே லாங் ஷாட் போகுது... கமெரா தொடர்ந்து கீழ இறங்க.... வெள்ளை ... பச்சைனு இந்திய தேசிய கொடி ....அந்த கொடியில் நடுவுல இருந்த சக்கரத்தை மட்டும் காணோம்.

அப்படியே காமெராவா.. கொடிக்கம்பத்தில் இருந்து...இறக்கி அருகில் உள்ள பள்ளி கூடத்த காட்டுறோம்.. பள்ளி கூடத்தின் கூரையில் ரெண்டு வெள்ளை புரா...



ரெண்டு புறாவும் பயங்கர சண்டை போட்டுன்னு இருக்கு. இங்கே தான் .. ஹே.... ஹே .. ஹே .. ஹே...ன்னு BGM  ஆரம்பிக்குது...

நான் ஊத்தாத பாலா ...
நான் அடிக்காத கோலா...
நான் நறுக்காத வாலா....

என்று.... தாடியை தடவி கொண்டே தலைவர் பாட... கூட இருந்த நடன கலைஞ்ர்கள்...

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

டேக் இட் ஈஸி பாலிசி...!

அலை பேசி அலறியது...

விசு..

திஸ் இஸ் ஹிம்...

ஓ.. கிரேட்.. இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து கூப்பிடுறேன்...

ஓ.. தேங்க்ஸ் பட் நோ தேங்க்ஸ்.. எனக்கு நல்ல பாலிசி இருக்கு..

ஹே.. திஸ் இஸ்யுவர் பிரென்ட் ... உனக்கு நல்ல பாலிசியை கொடுத்ததே நான் தான்..

ஓ.. சாரி.. ஹொவ் ஆர் யு?

இருக்கேன்.. எனக்கு சில இன்பர்மேஷன் வேணும்.. கொடுத்தீனா... உன் ஆட்டோ பிரீமியம் கம்மி பண்ணுவேன்...

ஆட்டோ பிரீமியம் கம்மி ஆகுதுன்னா... கொஞ்சம் என்ன நிறைய இன்பர்மேஷன் தரேன்... சொல்லுங்க..

நீ என்ன படிச்சி இருக்க?

படிப்புக்கும் பெர்மியத்துக்கும் என்ன சம்மந்தம்...?

சொல்லு.. மாஸ்டர்ஸ் முடிச்சியா?

ஆமா..

அந்த காப்பிய கொஞ்சம் அனுப்பு..

அம்மணி?

அவங்க ரொம்ப ஸ்மார்ட்....

அப்புறம் எப்படி உன்னை  கல்யாணம் பண்ணாங்க..?

விதி.... விஷயத்துக்கு வா.. அவங்களுக்கு என்ன?

மாஸ்டர்ஸ் முடிச்சி இருக்காங்களா?

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

ஆசைக்கு அம்மா.. ஆஸ்திக்கு அப்பா...

அலை பேசி அலறியது..

கிளம்பிட்டீங்களா?

மனதில் .. கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க...? எங்கேயோ கிளம்பிட்டாயானு கேக்குறாங்க.. நம்ம எங்கேயோ போக வேண்டி இருக்க போல இருக்கு.. எங்கே... எங்கே.. எங்கே..?

இதோ இன்னும் அஞ்சி நிமிசத்துல கிளம்பிடுவேன்..

இன்னும் ஆபிசில் தான் இருக்கீங்களா?

ஆமா. இதோ கிளம்பிட்டேன்..

ஒரு உதவி பண்ணுங்க..

சொல்லு..

டேக்ஸ் ரிட்டர்ன் ஒரு காப்பி பிரிண்ட் பண்ணி எடுத்துன்னு வாங்க..நான் உங்களை அங்கே மீட் பண்றேன்.

சரி.

எங்கே ... எங்கே .. எங்கே.. மனதில் ஒரு நினைவும் இல்லை..

டேக்ஸ் ரிட்டர்ன் எடுத்துனு..?

உடனே அம்மணியின் ஜி மெயில் கணக்கில் நுழைந்து அவர்களின் காலெண்டரை தடவினால்... ஆகஸ்ட் 15 - காலை 10 மணி - லாயர் ஆபிஸ் வித் மூத்தவள் அண்ட் கணவர்.(கூடவே ரிமெம்பர் டு கால் ஹிம் அட் 9 : 15 & Tax return Copy )

படித்தவுடன் சுந்தர் பிச்சைக்கு ஒரு கோடி நமஸ்காரம் போட்டு விட்டு ...


ஓ மை காட்.. நல்ல வேலை 9 : 15 க்கு அம்மணி போன் .. இல்லாட்டி நம்ம நிலைமை...?என்று யோசிச்சு கொண்டே வண்டியை விடுகையில்.. மனதில்...
மூத்தவள் 18 ஆகி விட்டது. இந்த மாதம் கடைசி வாரத்தில் கல்லூரிக்கு போகின்றாள். வீட்டில் இருந்து செல்லவில்லை.. அங்கேயே ஹாஸ்டெலில் தங்கி விடுவாள். அவளுக்கு பத்து வயது இருக்கும் போதே கல்லூரி நாட்கள் இப்படி தான் இருக்கும் என்று தனியாக இருக்க வேண்டி வரும் என்று சொல்லி தான் வளர்த்து வந்தோம். அதற்கான நேரம் வந்து விட்டது.

சரி  அதற்கும் இந்த லாயர் ஆபிசுக்கு என்ன தொடர்பு? ஏன் பெற்றோர்களையும் அவளையும் வர சொல்லி இருக்கின்றார்கள் என்று யோசிக்கும் போது  அந்த அலுவலகம் வந்தது.

காரை நிறுத்திவிட்டு .. 

எங்கே உங்க ரெண்டு பேரையும்  காணோம்?

கொஞ்சம் ட்ராபிக்கில் மாட்டி கொண்டோம்.. அஞ்சு நிமிசத்தில் வந்துடுவோம்.

உங்களுக்கு ஆச்சுன்னா ட்ராபிக் .. எங்களுக்கு ஆச்சுன்னா.. உதாசீனம்.. என்னடா என்று மனதில் மட்டும் நொந்து கொள்ள..

நீங்க உள்ளே போய் உக்காருங்க.. நாங்க வந்து ஜாயின் பண்றோம்.

என்று சொல்ல.. உள்ளே நுழைந்தேன்...

பெரிய - வசதியான அலுவலகம்..

அட பாவி.. ஒரு வாய்தா வேண்டும் என்றால் கூட வீடை  எழுதி வைக்க சொல்லுவாங்க போல இருக்கே என்று நினைக்கையில்.. எதிரில் வந்த கொரியன் பெண் மணி.. 

விவாகரத்து வழக்கா? 

ரைட்டில்போங்க .. என்று சொல்ல.. 

மனதில்.. ரைட்டா போய் இருந்தா விவாகரத்து எதுக்கு என்று நினைத்து கொண்டே ... 

விவாகரத்து இல்லை. ஐ அம் ஹாப்பிலி மாரீட் என்று சொல்ல.. 

அவளோ.. யு ஆர் ஹாப்பிலி மேரீட் .. வாட் அபௌட் யுவர் வைப் ? என்று கேட்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு ..

பின் இங்கே எதற்கு என்று வினவ..

தெரியவில்லை.. அம்மணி மற்றும் 18 வயது மூத்தவளோடு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் என்று சொல்ல..

ஓ.. கல்லூரி விஷயம்..  இரண்டாவது ரூம் என்று சொல்ல.. 

அங்கே சென்று அமர்ந்தேன்..

மனதிலோ.. என்னடா இது.. என்னை பார்த்தவுடனே .. விவாகரத்துன்னு எப்படி அவள் முடிவு பண்ணா .. நம்ம லுக் என்ன நம்பியார் லெவலுக்கு போயிடிச்சானு நினைக்கையில்.. 

குட் மார்னிங்.. என்று இன்னொரு கொரியன் பெண்மணி நுழைய.. 

குட் மார்னிங்..அம்மணியின் மூத்தவளும் இப்ப வந்துடுவாங்க...நம்ம வேணும்ன்னா பேச ஆரம்பிக்கலாம்..

இல்லை.. முக்கியமான குடும்ப விஷயங்கள் பல இருக்கு, அவங்களுக்காக வெயிட் பண்ணலாம்.. 
என்று சொல்லி அவங்க கிளம்ப.. 

மனதில்.. ஆமா .. முக்கியமான குடும்ப விஷயத்தை நம்மக்கிட்ட இதுவரை யாரு பேசுனா ..
என்று நினைக்கையில்..

காப்பி.. டீ... தண்ணீர்.. ஏதாவது ..

காப்பி ப்ளீஸ்.. வித் க்ரீம் அண்ட் சுகர்.. 

இரண்டு நிமிடத்தில் .. காப்பி பிஸ்கட்டோடு வந்தது..

நீங்க இங்கேயே இருங்க.. அவங்க வந்தவுடன் நான் வரேன்.

கிளம்பினார்கள்.

எதிரில் காப்பி .. மற்றும் பிஸ்கட் ..

தமிழனுக்கே உரிய சபலம் மணத்தில் வர.. அறையை சுற்றி கமெரா இல்லை என்று உறுதி செய்து கொண்டவுடன்.. பிஸ்கட்டை காபியில் அமுக்கி உண்டு முடிக்கையில்..

மூவரும் வந்தார்கள்.

இங்கேயே இருங்க.. உங்கள் பைலை எடுத்துன்னு வரேன்னு சொல்லி அந்த கொரியன் அம்மணி கிளம்ப..

மூத்தவளோ..

காப்பி பிஸ்கட்டை ஒன்னா பாத்துட  கூடாதே.. உடனே ஊற வச்சிடுவீங்களே என்று சொல்ல.. 

நானோ.. சே.. சே. தனி தனியாத்தான் சாப்பிட்டேன்.. 

காலரில்  பாருங்க.. கொழ கொழன்னு பிஸ்கட்.. என்று அம்மணி சொல்ல.. 

ஓ.... முதலில் பிஸ்கட்  அங்கே விழுந்தது.. அதுக்கு அப்புறம் காப்பி எதுக்கு மேலே விழுந்து இருக்கும்..

அது எப்படி குறி தவறாம ..

பாட்ட காலரில்  படும் சொல்லுவாங்க தானே அந்த மாதிரி தான். 

கொரியன் அம்மணி வந்தார்கள்..

பெற்றோர்கள் இரண்டு பெரும் பதில் எதுவும் சொல்ல வேண்டாம். பிள்ளை மட்டும் பேசினால் போதும் என்று சொல்லி விட்டு..

உனக்கு தற்போது 18  வயது. இந்த மாத இறுதியில் கல்லூரிக்கு செல்ல போகின்றாய். அதற்க்கு பின் உனக்கு மருத்துவ ரீதியாக - பண ரீதியாக ஏதாவது பிரச்னை வந்தால்...

என்று செல்லுகையில்.. நான்.. என்ன சொல்ல வரீங்க என்று அலற ..

அம்மணி கண்ணாலே.. வாயை கொஞ்சம் மூடுறீங்களானு சொல்ல.. 

அமைதி காத்தேன்..

லாயர் தொடர்ந்தார்கள்..

உன்னுடைய மெடிக்கல் ரெகார்டஸ் உன் பெற்றோர்களுக்கு தர படலாமா..?

ஆம்.

உனக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு நீ நினைவு இல்லாமல் இருந்தால் உன் பெற்றோர்கள் உனக்கான மருத்துவ முடிவுகளை எடுக்கலாமா?

அப்பா வேண்டாம்.. அம்மா மட்டும் எடுத்தால் போதும்.

அப்பா .. வேண்டாம்? எதுக்கு?

அவர் கொஞ்சம் எமோஷனல்.. அம்மா தான் சரி.

உன்னுடைய லேப் ரிப்போர்ட் மற்றும் எக்ஸ் ரே போன்றவை உன் பெற்றோருக்கு தரப்படலாமா? 

ஆம்..

உன்னுடைய வங்கி  கணக்கு விவரங்கள் உன் பெற்றோருக்கு தரலாமா?

அம்மாவுக்கு வேண்டாம்.. அப்பாவுக்கு மட்டும்.
அம்மாவுக்கு ஏன் வேண்டாம்..

அவங்க  கொஞ்சம் எமோஷனல்.. அப்பாதான்  இதுக்கு சரி ..

என்று பொருத்தமான பதிலை அளித்தாள்.

இப்படி பல கேள்விகள் கேட்டு பதில் அளித்து முடிக்கையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிந்தது.

சரி.. அடுத்தவாரம் இதன் அதிகார பூர்வ அறிக்கை உங்களுக்கு வரும் என்று சொல்லி முடிக்கையில்.. 

நான் அவர்களிடம்..

18 வயது பிள்ளைக்கு இந்த மருத்துவம் மற்றும் நிதி பெற்றோர்கள் தானே பார்க்க வேண்டும் 

இதற்க்கு எதற்கு .. அதிகாரபூர்வ அறிக்கை.. ?

என்று கேட்க..

மனைவியோ.. நேரமாச்சு கிளம்புலாம்.. அதை நான் உங்களுக்கு அப்புறம் சொல்றேன் என்று முறைக்க..

வெளியே...

என்ன கணக்கு பிள்ளைங்க நீங்க.. ? யாராவது லாயரிடம் போய் எக்ஸ்டரா கேள்வி கேப்பாங்களா? 

அதுல என்ன தப்பு? சந்தேகம் தானே கேட்டேன்.

நீங்க கேட்பீங்க சரி.. அதுக்கு அவங்க வீடை எழுதி   கொடுக்க சொல்லி பில் அனுப்புவாங்க..  

அதுவும் சரி.. நீ தான் சொல்லு.. இது எல்லாம் எதுக்கு?

எல்லாருக்கும் எல்லாம் நல்லாவே நடக்கணும்னு நாம நினைச்சாலும் சில நேரங்களில் விபத்து..சுகவீனம் அப்படி இப்படின்னு ஏதாவது வந்தா அதுக்கு தயாரா இருக்கணும்.

ஏன் அப்படியெல்லாம் ஆகுதுன்னு யோசிக்கணும்.

அப்படி யோசிக்க தேவை  இல்லை. அப்படி ஆனா என்ன பண்றதுன்னு யோசிக்கணும். அந்த மாதிரி நேரத்தில் நம்ம எல்லாரும் ஒன்னா இருந்து மத்த வேலைகளை கவனிக்கணும். அப்படி நடக்கும் போது அடிச்சி பிடிச்சி லாயரிடம் ஓடுறது.. எல்லாம் ரொம்ப கஷ்டம்.. வருமுன் காப்போம்.. அது தான்.

அம்மணி த்தான் என்னே யோசிக்கிறாங்க..

சரி.. மருத்துவம் ஓ கே.. நிதி..?

மருத்துவம் எவ்வளவு முக்கியமோ.. நிதியும் அவ்வளவு முக்கியம். கல்லூரிக்கு போனவுடன் 

அவளுக்கு தனியா க்ரெடிட் கார்ட் வாங்கி கொடுப்பேன்..

யு மீன் கொடுப்போம்..

ஆமா. கொடுப்போம் தானே.. அதுல என்ன என்ன எங்கே எங்கே எப்ப எப்ப செலவு பண்ரான்னு எனக்கு தெரியணும்..

யு மீன் நமக்கு..

ஆமா.. நமக்கு தெரியணும் இல்ல அதுக்கு தான்.

அடேங்கப்பா... இம்புட்டு விஷயம் இருக்கா..

சரி.. அடுத்தவாரம் இதே நேரத்துக்கு திரும்பவும் வாங்க..

ஏன்.. 

உங்க நிதி விஷயத்தை நான் எப்ப வேணும்னா தெரிஞ்சிக்கணும் .. அதுக்கு ஒரு டாக்குமென்டில் உங்கள் கை எழுத்து வேண்டும்.. அதுக்கு தான்.

மாசத்துக்கு இருபது டாலர் செலவுக்கு  தர.. அதை வேற நான் எப்படி செலவு செஞ்சேன்னு வேற  தெரியனும்மா? 

சிறு துளி பெரு வெள்ளம்..அதனால தான்.

என் சோகமான வாழ்க்கையை நானே யோசித்து அழுததில்   என் கண்ணில் திரண்ட சிறு கண்ணீர் பெரு வெள்ளமாக மாறியது.

பின் குறிப்பு:

அமெரிக்காவில் கல்லூரி வயது பிள்ளைகளை  கொண்டுள்ள பெற்றோர்களே.. இந்த விஷயம் மிகவும் முக்கியமானது.. என் வீடு அம்மணி உங்கள் எல்லாருக்கும் சொல்ல சொன்னார்கள். 

அது எல்லாம் சரி.. டேக்ஸ் ரிட்டர்ன் காப்பி எதுக்குன்னு நீங்க கேக்குறது கேக்குது. எனக்கு தெரியல.. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.