Tuesday, October 30, 2018

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா .. பெண்களா?

இது என்ன விஷ பரீட்சை என்று வியப்பா? இந்த தலைப்பை படித்ததும்  எனக்கும் இந்த வியப்பு வந்தது.

தென் கலிபோர்னியா தமிழ் சங்கத்தின் 2018  தீபாவளி கொண்டாட்டத்தில் நடக்க இருக்கும் பட்டிமன்றத்தில் தலைப்பு தான் இது. சங்கத்தின் தலைமையில் இருந்து இதில் பங்கேற்கும் படியான அன்பான விண்ணப்பம் வந்தது. இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் ஏற்று கொள்ள முடியாத நிலை.

சிரிக்க சிந்திக்க என்று வந்த இந்த பட்டிமண்டப தலைப்பை பார்த்தவுடன்  மனதில் ஏக பட்ட  நினைவுகள்.

ஒரு வேளை, இந்த பட்டிமன்றத்தில் நான் பேசும்படி இருந்தால்...

குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களே என்று தான் பேசி இருப்பேன்.

என்ன விசு?

ஒரு ஆணாக இருந்து கொண்டு எப்படி மகிழ்ச்சி பெண்களால் வருகின்றது என்று சொல்வாய் என்று அநேகர் கேட்பது காதை  கிழிக்கின்றது. இருந்தாலும் அது தானே உண்மை..  அடியேனின் சில வாதங்கள்.


இந்த தலைப்பில் பெண்களா ஆண்களா என்று இருந்தாலும் அதை கணவனா அல்ல மனைவியா என்று தான் விவாதிக்க தேவை படுகின்றது.

Monday, October 1, 2018

பெட்ரோல் விலை! தமிழிசை மேல் தவறே இல்லை!

விசு.. ஒரு கணக்கு பிள்ளையா பொறுப்பா ஒரு பதில் தேவை.
பெட்ரோல் டீசல் விலையை இந்த அரசாங்கம் குறைக்குமா.. குறைந்த பட்சம் முயற்சியாவது செய்யுமா?

பொறுப்பா.. ஓகே..  Heres my Two Cents!

பெட்ரோல் டீசல் விலையை இனிமேல் இந்த அரசாங்கத்தினால் குறைக்க முடியாது. Period! They missed the bus! Let me tell you why!

2014 ல் மோடி அரசாங்கம் பதவி ஏற்றவுடன் அவங்களுடைய நல்ல காலம் கச்சா எண்ணையுடைய கொள்முதல் விலை  கிட்டத்தட்ட 65% குறைஞ்சிடுச்சி. அந்த நேரத்தில் பெட்ரோல் விலை 60 சொச்சம் ருபாய் இருந்தது. இந்த நேரத்தில்  60 ரூவாய் சொச்சம் விலையை கொடுக்க மக்கள் பழகிட்டாங்க. கேள்வி எதுவும் கேக்காம இருந்தாங்க.  இங்கே தான் அரசாங்கம் மக்கள் மேலே ஒரு பெரிய அட்வான்டேஜ் எடுத்துடுச்சி.

இவங்க தான் 60 ரூவாய்க்கு பழகிட்டாங்களே, கேள்வி எதுவும் கேக்கலையேன்னு என்ற நினைப்பில், கச்சா எண்ணெய் கொள்முதல் விலை கம்மியானாலும், வரி வரி வரின்னு ஏத்தி 30 ௫வாய்க்கு விக்க வேண்டிய பெட்ரோலை 60 லேயே வித்தாங்க. மக்களும் சரி விடு, விலை இரங்காவிட்டாலும் பரவாயில்லை ஏறாம இருக்கேன்னு பல்லை கடிச்சினு  காலத்தை கடத்துனாங்க.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...