Tuesday, May 15, 2018

கர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும்!

இரண்டு நாட்களுக்கு முன் முடிந்த கர்நாடக தேர்தல் ஒட்டுமொத்த இந்தியர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
தென் இந்தியாவில் தங்கள் இருப்பை ஆரம்பிக்கவும், தக்கவைத்து கொள்ளவும் பிஜேபிக்கு இதை விட நல்லதோர் சந்தர்ப்பம் கிட்டாது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தேர்தலில் முடிவுகளுக்கு முன் சென்ற தேர்தலில் பிஜேபி ஏன் தோற்றது என்று அலசி பார்த்தோம் என்றால்.. அது கட்சியின் பிளவே . எடுயூரப்பா மற்றும் இன்னொரு தலைவர் கட்சியை விட்டு வெளியேறி தனி தனியாக நிற்க காங்கிரஸ் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது. அந்த தேர்தலில் BJP ஒன்றாக இணைந்து நின்று இருந்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருக்குமா என்பதே சந்தகேம்.
2014 ல் ..நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிளவுபடாத BJP (மோடி - மோடி - மோடி ) 40 % க்கும் மேல் வாக்குகள் வாங்கி 28 தொகுதிகளில் 17 இடத்தை கைப்பற்றியது. மீதம் இருந்த ௧௧ இடங்களில் காங்கிரஸ் 9 ம் JDS 2 ம் பெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் JDS 11 இடங்களை பெற்றதே ஆச்சரியமான ஒன்று தான் (மோடி - மோடி - மோடி).


இந்த தேர்தலில் சித்தராமையா என்ன தான் நம்பிக்கையோடு இருந்தாலும் ஆளும் கட்சியின் மேல் மக்களுக்கான வெறுப்பு எப்போதும் போல் இருந்து வந்தது. அது மட்டும் இல்லாமல் 1985 ல் ஹெக்டேக்கு பிறகு, எந்த ஒரு ஆளும் கட்சியும் தனது ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது சித்தராமையா மட்டும் எப்படி இவ்வவ்ளு நம்பிக்கையோடு இருக்கின்றார் என்று பலரும் வியந்தது உண்மையே.
என் கணிப்புபடி பிஜேபி எடுயூராப்பாவை முதல்வராக முன் நிறுத்தி இருக்க கூடாது. அவரின் ஊழல் வழக்கில் சிறை சென்றவர். அதில் விடுதலையாகி வந்து இருந்தாலும் அவர் மேல் பட்ட கரை மக்களின் மனதில் இருந்து நீங்காது ( எப்படி மாறன் அவர்கள் தலைவரின் சக்கர வண்டியை தேர்தல் பொது கூட்டங்களில் தள்ளி கொண்டு வந்து திமுகவின் வெற்றியை அழித்தாரோ, அதே போல் தான்).
சரி... இந்த தேர்தலுக்கு வருவோம். மூன்று கட்சிகள் போட்டி போட்டாலும், தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே இது BJP -காங் போட்டி என்றும் JDS எதிர் அணியின் B டீம் என்றும் இரு அணியினரும் மார்தட்டினார்.
சென்ற மாதம் போல் BJP - காங் இருவருக்கும் ஆதரவு சமமாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும். மோடியும் ஷாவும் ஜகதலபிரதாபர்கள் ஆயிற்றே. மோடியை வைத்து 20க்கும் மேல் கூட்டங்களை நடத்தி (மோடி - மோடி- மோடி) பகத் சிங்கில் இருந்து திம்மய்யா, கரியப்பா என்று கூறி .. இந்தியாவில் இன்று நடக்கும் அனைத்து கெட்ட காரியங்களுக்கும் நேரு தான் காரணம் என்று கூற, மக்களும் 2014 ல் இவர் கூறிய தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று என்பதை மறந்து கூச்சலிட.. மோடி மந்திரம் பிஜேபி யின் ஆதரவை கூடியது.
எதிர் அணியின் ராகுலோ சித்தராமையாவின் பேச்சை நம்பி , தாங்களும் வெற்றி பெறுவோம் என்று பிரச்சாரங்களில் பேசினார். ஆனால், இவரின் பேச்சு மோடியின் (மோடி - மோடி-மோடி) தில்லாலங்கடி பேச்சுக்கு அருகில் கூட வர முடியாதே. இதற்கிடையில் JDS ன் குமாரசாமி நான் இந்த மண்ணின் மைந்தன். இந்த தேர்தலில் எனக்கு ஆதரவு தராவிட்டால் நான் இறப்பதற்கு சமம் என்று வேண்டினார்.
இங்கே அமித் ஷாவின் தந்திரத்தை சொல்லியாகவேண்டும். Its a Freaking Master Stroke and the man is Brilliant! JDS - காங் இரண்டுக்கு மட்டுமே ஆதரவு உள்ள (இந்த தேர்தலிலும் BJP இங்கே பல தோகுதியில் டெபாசிட் இழந்தது) பழைய மைசூர் பகுதியில் ஷா, மோடியை பிரச்சாரம் செய்ய விடவில்லை. இந்த பகுதியில் மோடி பேசினால் (மோடி - மோடி-மோடி) BJP க்கு 10% வாக்குகள் கிடைத்தாலும் அது JDS கட்சியை பாதித்து CONG கட்சிக்கு அதிக இடங்களை பெற்று தரும், என்பதை ஷா நன்கு அறிந்து இருந்தார்.
தேர்தல் முடிந்தது. முடிவுகளும் வந்தது.
BJP 104 காங் 78 JDS 38 ....
பாதி முடிவுகள் வருகையில் BJP பெரும்பான்மை பெரும் என்று அவசரப்பட்டு அர்னாப் கோஸ்வாமி மிளகாய் விழுங்கிய கழுதைபோல் அலறி கொண்டு BJP துதி பாடி கொண்டு இருக்கையில்..
அரை கிணறு தாண்டியதும் வெற்றி என்று BJP அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனுக்கு கேக் ஊட்டி கொண்டு இருக்கையில் ..
ஹலோ ...
ஹேலூரி ..
மே ராகுல் காந்தி ஹை..ஆப் கி பாப் ஹை?
பாப், அபி சொய்தாரே.. தும் போலோ...
நீங்க தான் அடுத்த முதல்வர், அதுக்கு நான் என்ன செய்யணும்?
நிபந்தனையற்ற ஆதரவு..
ஓகே..
டீல் முடிந்தது.
காலையில் கேக் சாப்பிட்ட எடுயூரப்பாவிற்கு மாலையில் டயாபடீஸ் ஏறியது தான் மிச்சம்.
இந்த தேர்தலில் சில விஷயங்களை நாம் நுணுக்கமாக கவனிக்க வேண்டும்.
என்ன தான் மோடி மந்திரம் (மோடி - மோடி- மோடி) இருந்தாலும் பிஜேபி யினால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 35 - 36 % க்கு மேல் வாக்குகளை பெற இயலாது. ஆனால் எதிர் அணியினரை பிரிப்பதின் மூலம் இந்த வாக்குகளை வைத்தே அவர்கள் மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வர இயலும்.
அடுத்த 9 மாதங்களில் ஷாவின் வேலையே, எதிர் அணியினரை துண்டு துண்டாக போடுவதில் தான் இருக்கும். இந்த கர்நாடக தேர்தலிலே CON மற்றும் JDS தேர்தலுக்கு முன்னே கூட்டணி வைத்து இருந்தால் BJP யின் இடங்கள் கணிசமாக குறைந்து இருக்கும். இந்த தேர்தலில் இவர்கள் பெற்ற வாக்குகள் கிட்ட தட்ட 54%. BJP க்கு கிடைத்ததோ 37% மட்டுமே.
இந்த தேர்தலில் BJP அதிகமாக இடங்களை பெற்று இருந்தாலும், அறிந்த BJP ஆட்கள் இந்த முடிவை ஒரு தோல்வியாக தான் பார்ப்பார்கள் (அதை வெளியே சொல்ல மாட்டார்கள், சொல்லவும் கூடாது). ஆளும் கட்சியின் மீதான வெறுப்பு, மற்றும் மோடி (மோடி - மோடி- மோடி) அவர்களின் பேச்சு திறன், ஷாவின் தந்திரம் அனைத்தும் இருந்தும் இவர்கள் காங்கிரசை விட 2 % குறைவாகவே வாக்குகள் பெற்று இருக்கின்றார்கள்.
ஒரு வேளை, JDS - CON கூட்டணி ஆட்சி அமைந்து விட்டால் ( BJP எப்படியாவது Beg, Borrow or Steal ஆட்சி அமைக்கும் என்று தான் நான் நம்புகிறேன்) அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் இருவரும் சேர்ந்தே போட்டியிடுவார்கள். அங்கே தான் BJP சற்று அதிரும். தமிழ் நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது ( May I add, thanks to H.Raja and Tamilisai), ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பூஜ்யம். கேரளாவில் சேட்டன்கள் பூஜ்யம் தான் கொடுப்பார்கள்.ஆக மொத்தம் தென் இந்தியாவில் சுத்தம்.
வடக்கை பொறுத்தவரை மஹாராஷ்டிராவில் சிவசேனா - காங் -BJP மும்முனை போட்டி. குஜராத்திலும் (சட்டசபை தேர்தலை வைத்து பார்க்கையில்) பாதி இடம் தான். உத்தர பிரதேசத்தில் மட்டும் அகிலேஷ் மற்றும் மாயாவதி கூட்டணி வைத்தால் ..
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் BJP க்கு சங்குதான்.
இந்த விஷயத்தை மோடி -ஷா நன்கு அறிந்தவர்கள் தான். They need to start their War and they need to start it now.
இன்னும் சில மாதங்களில் மத்திய பிரதேஷ் மற்றும் ராஜஸ்தானில் வரும் சட்டசபை தேர்தல்களில் BJP வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம்.
கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் :
பிஜேபி.. நேருவை பற்றி பேசுவதை விட்டு ஏதாவது ஓரு யாத்திரை ஆரம்பித்து கோயில் குளம் கட்ட போகின்றோம் என்று அறிவித்து விட்டு எதிரிகளை சிதறடிக்க வேண்டும்.
காங்கிரஸ் .. ராகுல் அவர்கள் ஒருபோதும் மோடியை (மோடி - மோடி - மோடி) போல் பேச தெரிந்தவர் அல்ல என்பதை உணர்ந்து மற்ற தலைவர்களை உருவாக்க வேண்டும் (பைலட் - சிந்தியா நினைவு வருகின்றார்கள்) . அதுமட்டும் அல்லாமல் மாநில கட்சிகளோடு சேர்ந்து பிஜேபி யை எதிர்க்கவேண்டும். எதிரணியின் மந்திரமே.. "நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" இல்லையேல் "அனைவருக்கும் சாவு " என்றாகவேண்டும்.
ஷப்பா.. இதை எழுதி முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குது.
வாழ்க ஜனநாயகம்!

3 comments:

  1. மிக சரியான பார்வை

    ReplyDelete
  2. என்னுடைய பார்வையும் இதுதான்.. எதிரிகளை சிதறடித்துதான் BJP வெற்றியை உருசிக்கிறது.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.. இல்லையேல் சாவுதான். மேடி மஸ்தான் சாகடிச்சுடுவான்.

    ReplyDelete
  3. அருமையான அலசல் நண்பரே..! பாஜக காங் நேரடிப்போட்டி இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலையென்ற வரலாறு இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக 29 இடங்களில் வைப்புத்தொகை இழந்தும் கவனிக்கப்படத்தக்கது.

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...