Tuesday, January 30, 2018

பிறவி பலன் என்பது இது தானோ..

அலை பேசி அலறியது...

டாடி ஹியர்...

டாடா ...யாராவது போன் எடுத்து டாடி ஹியருன்னு சொல்லுவாங்களா... பேர சொல்லுங்க..

போனில் தான் உன் போட்டோ போட்டு வந்ததே அது தான்.. காலேஜ் எப்படி போது?

சென்ற வருடம் செப்டெம்பரில் கல்லூரியில் சேர்ந்த மூத்த ராசாத்தி இந்த ஜனவரியில் கல்லூரியில் ரெண்டாவது செமெஸ்டர் ஆரம்பிக்கிறன்றாள். சிறுவயது முதலே தானும் கணக்கு பிள்ளையாகவேண்டும் என்ற ஒரு எண்ணம்.

11 -  12  வது படிக்கையில்  ..என்ன மகள் அறிவியல் மற்றும் வரலாறில் மார்க்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கே என்று கேட்க்கையில்..

அந்த ரெண்டு மார்க்க வைச்சி நான் என்ன பண்ண போறேன்.. கணக்கு மட்டும் பாருங்க..

என்று பதில் கூறியவள்...

சரி..

செப்டம்பரில் .. கல்லூரியில் சேர்க்கும் போது அங்கே இருந்த  கவுன்செலரிடம்  ....

மகள் கணக்கியல் - காமெர்ஸ் - மார்க்கெட்டிங்  - மற்றும் இன்டர்நெஷனல் பிசினெஸ் படிக்க போகின்றாள்.. முதல் செமெஸ்டரில் எந்த எந்த பாடம் ..

என்று கேட்க..

அவர்களோ...

முதல் ஆறும் மாசம் இதில் எதுவும் கிடையாது...

பின்ன என்ன படிக்க போறா? இந்த ஆறு மாதத்தில்..

டிராயிங் - கோல்ப் ஆட்டம் - இசை வகுப்பு - சோசியல் சயன்ஸ் மற்றும் ரிலீஜியன் ...

அப்ப.. கணக்கியல்..

என்று நான் அலற..

அந்த அம்மணியோ, மகளை சற்று வெளியே நிற்க சொல்லிவிட்டு...

"முதல் செமஸ்டர் இவர்கள் என்ன படிக்க போகின்றார்கள் என்று கல்லூரி தான் முடிவு பண்ணும், இவர்கள் அல்ல.."!

"அது சரி... அதுக்குன்னு ஏன் ஒரு கஷ்டமான பாடம் கூட இல்ல"?

"விஷ் ... டேக் இட் ஈஸி.. இவள் இன்னும் அஞ்சு வருஷம் இங்கே தான் இருக்க போறா? பள்ளியில் இருந்து கல்லூரி படிப்பு முற்றிலும் வித்தியாசமானது. இவ்வளவு நாள் வீட்டில் இருந்த பிள்ளை.. இப்ப திடீர்னு ஹாஸ்டல்.. பெற்றோர்கள் உதவி இல்லாம தனியா.."

மனதில்.. இது ஒரு விஷயமா... இவளாவது பரவாயில்லை .. 18  வயசு.. நான் ஆறு வயதிலே ஆஸ்டெலில் போய் ..அங்கே என்னை எண்ணெய் கூட ஊத்தாம தாளிச்சாங்களே....

சொல்லுங்க..

"எஸ்.. இந்த பிள்ளைகளோட காலேஜ் வாழ்க்கை சந்தோசமா ஆரம்பிக்கணும். ஆரம்பத்திலேயே  இவங்கள நம்ம டார்ச்சர் பண்ண கூடாது. அதனால முதல் செமஸ்டர் படங்களை நாங்க தான் முடிவு பண்ணுவோம்".

"கேக்க நல்லா இருக்கு.. இருந்தாலும் ஆறு மாசம்... !?"

"ஆறு மாசம்..சீக்கிரம் போயிடும். இந்த ஆறு மாதத்தில் இவங்க இந்த ஊர்.. கல்லூரி .. நூலகம்... வேலை..."

"வேலையா...?!

"இங்கே வாரத்துக்கு மூணு நாள் தான் வகுப்பு.. மீதி நாலு நாள் என்ன பண்ணுவாங்க.. அதனால பக்கத்துலே ஏதாவது ஒரு கம்பெனியில ... இல்லாட்டி  கல்லூரி உள்ளேயோவ வேலை தேடி கண்டு  பிடிக்கணும்...
அதனால தான் முதல் ஆறு மாதம் .. கொஞ்சம் ஈஸி பாடங்கள்.."

"ஜனவரியில் கணக்கியல் ஆரம்பிச்சிடும் இல்ல...."!?

"கண்டிப்பாக.."

சென்ற டிசம்பர் வரை...  மகள்.. படிப்பு எப்படி...

"நேத்து ஒரு பூனை குட்டி வரைஞ்சேன்..."

நாளைக்கு புலியா?

எப்படி கரரெக்ட்டா சொன்னீங்க..

"லக்கி கெஸ்..பூனை குட்டி எப்படி வந்தது.."?

"எனக்கு ட்ராயிங் சரியா வரல டாடா.."!

"பரவாயில்லை.."

"இல்லை.. இல்லை.. இன்னும் ஆறு மாசத்துக்கு ட்ராயிங் கத்துக்குலாம்னு இருக்கேன்.."

"மகள்.."!!!

அலறியே விட்டேன்..

"ஜோக் டாடா.. டோன்ட் ஒரி. ஐ அம் ரெடி பார் அக்கவுண்ட்ஸ்.."

சரி தலைப்பிற்கு வருவோம்...

அலை பேசி அலறியது....

"டாடா ஹியர்.."

"உங்கள மாத்தவே முடியாது.."

"அவசியமும் இல்லை.. சொல்லு.."

"என்ன டாடா..? ஒரு அக்கவுண்ட்ஸ் புக் 250  டாலர்.."

"ஜோக் பண்ணாத.. விஷயத்தை சொல்லு.."

"உண்மையா டாடா.. இன்னைக்கு தான் முதல் வகுப்பு.. அவர் சொன்ன புக்  250  டாலர்.."

"அட பாவி.. மகள்.. நான் படிக்கும் போது என் மொத்த காலேஜ் செலவும் 250  டாலர் வந்து இருக்காது.. சாப்பாட்டையும் சேர்த்து.. என்ன சொல்ற...? "

"உண்மையா டாடா.."!

"சரி.. ஒன்னே ஒன்னு வாங்கிக்கோ...

"நோ டாடா.. நம்மளே வாங்குறதுனா 250  டாலர்.. ஆனா நூலகத்தில் வாடகைக்கு எடுத்தா 35  டாலர் தான் ... வாங்கட்டா  இல்லாட்டி.."

"வாடகை போதும் மகள்.."

"நானும் அது தான் யோசித்தேன்..."

 அலை பேசி  மீண்டும்  அலறியது...

"சொல்லு மகள்..!"

"டாடா.. அக்கௌண்ட்ஸில் ஒரு பிரச்சனை..."

"என்ன சொல்லு..?!"

"பாலன்ஸ் சீட்டில்  அஸெட்ஸ் பக்கமும் லையபிலிட்டிஸ் பக்கமும்  டெலி  ஆக மாட்டுது."

"உங்கள யாரு முதல் வகுப்பில் பேலன்ஸ் சீட் போக சொன்னது.."!

"எனக்கு என்ன தெரியும்? ப்ரொபஸர் தான் சொன்னாரு.."

"சரி .. உடனே கேள்வி பதிலை  எனக்கு அனுப்பு.."

அனுப்பினாள்.

"அட பாவி... நம்ம படிக்கும் போது கடைசியாக படித்த பேலன்ஸ் ஷீட்டை இவங்க முதல் வகுப்பில் படிக்குறாங்களே..."

பதிலில் ஒரு சிறிய தவறு செய்து  இருந்ததால் .. உடனே அழைத்து சொன்னேன்.

"எப்படி டாடா.. இவ்வளவு சீக்கிரமா..."

"இருபது அஞ்சு வருஷம் .. இதுதானே மகள் பிழைப்பு.."

"நைஸ்.. இனிமேல் சந்தேகம் வந்தா கேக்குறேன்.."

இன்று மாலை இல்லத்திற்கு வந்து.. முதல் வேலையாக..

மகள்...

"சொல்லுங்க..."

"ஏதாவது சந்தேகம்..!?"

"வந்தா கேக்குறேன்..!"

அரை மணி நேரம் கழித்து ...

"மகள்...!? "

"சொல்லுங்க.."

"ஏதாவது சந்தேகம்...!?"

"நான்தான் சொன்னேனே.. வந்தா கேக்குறேன்..."

மீண்டும் ஒரு முறை..

"மகள்...!? "

"டாடா.. இன்னொருமுறை சந்தேகம்ன்னு சொன்னா.. நான் நேரா போய் திரும்பவும் பூனை படம் வரைஞ்சிட்டு அக்கௌண்ட்ஸ்க்கு பிரைவேட் வகுப்பில் சேர்ந்துடுவேன்..."

"ஐயோ.. வேணாம்..சந்தேகம் வந்தா நீயே கூப்பிடு..."

"குட் நைட்.."

பின் குறிப்பு :

கணக்கியல் படிப்பு மட்டும் ஒன்பது வருடம்.. அதன் பின் இருபத்தி ஐந்து வருடம் கணக்கியல் துறையில் பணி.. வாழ்க்கையில் லட்சக்கணக்கான  பேலன்ஸ் ஷீட்களை சரி பார்த்து இருப்பேன்..

இருந்தாலும் மகளின் பேலன்ஸ் சீட் பார்க்கும் போது கிடைத்த சுகம்..

பிறவி பலனை அடைந்தேன்...

4 comments:


 1. தம்பி உன் மேல் பொறாமையாகவும் அதோடு எனக்கு அழுவாச்சியும் வருது . என் மகளும் கணக்குதான் படிக்கிறாள் .ஆனால் என்னிடம் ஒருமுறை கூட சந்தேகம் கேட்டதேயில்லை .ஏன்னா அவளுக்கு நன்னாவே தெரியும் கணக்கில நான் நான் நான் >>>>>>>>

  ReplyDelete
 2. //வாழ்க்கையில் லட்சக்கணக்கான பேலன்ஸ் ஷீட்களை சரி பார்த்து இருப்பேன்..// வாழ்க்கையே ஒருமாதிரியான பேலண்ஸ் ஷீட் போலவே !!;)

  ReplyDelete
 3. முதலில் வாழ்க்கையை balance செய்யக் கற்றுக்கொண்ட பின் balance sheet.

  ReplyDelete
 4. வணக்கம், நலமா ?

  பதிவின் கடைசிவரிகள் மனதை தொட்டன...

  எனக்கும் கணக்குக்கும் காத தூரம் ! அனைத்து பாடங்களிலும் தொண்ணூரை தொட்ட எனது பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அறுபத்து சொச்சம் என ஞாபகம். அதுவும் அந்த வருடம் மிக மிக சுலபமான வினாத்தாள் என்று வேறு சொன்னார்கள் ! மற்ற பாடங்களில் அறுபதை தொடாத நண்பர்களெல்லாம் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கினார்கள் !!!

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
  http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  ReplyDelete

www.visuawesome.com