புதன், 29 நவம்பர், 2017

நடுவுலே மானே தேனே போட்டுக்குங்க.

அமெரிக்காவில் "Stand Up" என்று ஒரு மேடை பேச்சு உண்டு. நகைச்சுவையோடு பேசும் நபர் ஒருவன் மேடைக்கு வந்து பேச சபையோர் சிறிது கை கொட்டி ஆரவரிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியை மிகவும் விரும்பி பார்ப்பவன் நான். இதில் பலரை நான் ரசித்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நபர் George Carlin. என்ன ஒரு பேச்சு? எந்த ஒரு தலைப்பை எடுத்தாலும் நூல் பிடித்தவாறு அவர் சொல்லி கொண்டு போகும் விதம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க செய்யும்!

அரசியல்வாதிகளை பற்றி அவர் பேசியதை இங்கே மொழி பெயர்கிறேன். இதை படிக்கும் பொது .. இதில் ஏது நகைசுவை ? எங்கே சிரிப்பு என்று நினைக்க தோன்றும். படித்து முடித்து விட்டு அந்த காணொளியை காணுங்கள். அரங்கமே அதிரும் அளவிற்கு சிரிப்பு.




இதோ அந்த மொழி பெயர்ப்பு.

என் பேச்சில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருக்கலாம்.. நான் அரசியல்வாதிகளை பற்றி குறை சொல்லமாட்டேன். இப்போதெல்லாம் அனைவரும் அரசியல்வாதிகளை குறை சொல்கின்றார்கள் . அரசியல்வாதிகள் கேவலமானவர்கள் என்று.

இந்த கேவலமான அரசியல்வாதிகள் எங்கேயிருந்து வருகின்றார்கள். வானத்தில் இருந்து விழவில்லை. வேற எதோ ஒரு கிரியையில் இருந்து அவர்கள் வரவில்லை.

அவர்கள் அமெரிக்க குடும்பத்தில் இருந்து வருகின்றார்கள்.  அவர்கள் அமெரிக்க பெற்றோர்களிடம் இருந்து அமெரிக்க  குடும்பத்தில் இருந்து, அமெரிக்க பள்ளியில் இருந்து, அமெரிக்க பல்கலை கழகத்தில் இருந்து அமெரிக்க  கோயில்களில் இருந்து அமெரிக்க நிறுவனத்தில் இருந்து வருகின்றார்கள். இவர்கள் தான் நம்மில் சிறந்தவர்கள்.

இவர்கள் தான் நம்மில் அருமையானவர்களே. உள்ளே வெளியே மொத்தமும் குப்பையே.

சுயநலமான அறிவுகெட்ட குடிமக்கள் வாழும் இடத்தில்  சுயநலமுள்ள அறிவுகெட்டவனே தலைவராக வரமுடியும். தேர்தலும் நான்கு வருடத்திற்கு ஒரு முறை என்பதும் பிரயோஜனம் இல்லை.. அது செய்வதெல்லாம்.. மற்றொரு சுயநலமுள்ள அறிவுகெட்டவனை  நமக்கு தருவதே.

ஒரு வேளை.. ஒரு வேளை .. ஒருவேளை..

 அரசியல்வாதிகள் கேவலமானவர்கள் என்பதை விட வேறொரு விஷயம் இருக்கின்றது என்பதை நாம் அறிய வேண்டும். அரசியல்வாதிகளை விட கேவலமானவர்கள்  பொதுமக்கள்.

ஒரு வேளை நம் அனைவரின் பிரச்சனையும் இந்த அரசியல்வாதிகள் என்று வைத்து கொண்டால்.. பெருந்தன்மையான அறிவான தலைவர்கள் எங்கே?
உண்மையான திறமை வாய்ந்த மென்மக்கள் ஏன் அரசியலுக்கு வருவதில்லை. ஏன் என்றால் அந்த மாதிரியான மக்கள் நம் மத்தியில் இல்லை.

இந்த மாதிரியான கேவலமானவர்களை தேர்ந்தெடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, அதனால் இந்த பிரச்சனைக்கு நான் எனக்கு தெரிந்த முடிவை எடுத்து விட்டேன்.

தேர்தல் நாள் அன்று நான் இல்லத்தை விட்டு வெளியே வருவது இல்லை. நான் வாக்கு செலுத்துவதை விட்டுவிட்டேன். அதற்கு இரண்டு காரணங்கள்.

முதல் காரணம்.. வாக்கு செலுத்துவது அர்த்தமற்றது. இந்த நாடு வெகு நாட்களுக்கு   முன்பே விலைக்கு போய் விட்டது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் என்ற பெயரில் செய்வதெல்லாம் மாயாஜால வித்தையே.

இரண்டாவது காரணம்..

ஒருவேளை நான் வாக்கு அளித்தால்.. அந்த அரசியல்வாதிகளை குறை சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை.

பொதுவாக மக்கள் இந்த கருத்தை மாற்றி சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள். வாக்கு செலுத்தாத உனக்கு குறை சொல்ல உரிமை இல்லை என்று.

இப்படி சொல்வதில் ஒரு தத்துவமும் இல்லை.

சுயநலமுள்ள அறிவுகெட்ட  திருடர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் அதற்கு முழு காரணமும் அவருக்காக வாக்களித்தவர்களே. இவர்களுக்கு வாக்களித்து பதவியில்  அமர வைத்தவர்களுக்கு இவர்களை பற்றி குறை சொல்ல உரிமை இல்லை.

அதே நேரத்தில்.. தேர்தல் நாள் அன்று இல்லத்தை விட்டு வெளியே செல்லாமல் இருந்த எனக்கு மட்டுமே இந்த திருடர்களை பற்றி குறை சொல்ல அதிகாரம் உண்டு. வாக்களித்த முட்டாள்கள் செய்த அறிவுகெட்ட காரியத்தினால் இன்று நான் பாதிக்க பட்டு இருக்கின்றேன்.


இந்த வருட இறுதியில் மீண்டும் ஒரு தேர்தல் வருகின்றது.. நீங்கள் அனைவரும்  ரசித்து வாக்களியுங்கள். என்னை பொறுத்தவரை இல்லத்தில் தான்.

(George  Carlin  நடுவுலே கொஞ்சம் மானே தேனே போட்டு பேசுவார்... )

இவர் சொல்வதெல்லாம் நம் நாட்டுக்கும் பொருந்தும் ... அரங்கத்தின் அதிரலையை நீங்க பாருங்கள்.

1 கருத்து:

  1. நம்ம நாட்டுக்கும் அப்படியே பொருந்துது!!! வாசித்து வரும் போது என்னடா அவருக்கு நம்ம நாடு பத்தி நல்லாவே தெரிஞ்சுருக்கேனு நினைச்சா அது சரி அமெரிகாவுலயும் அப்படித்தான்னு தோனிடுச்சு ...நானும் மகனும் இது பற்றி நிறைய பேசிருக்கோம்...மகன் சொல்லுவான் என்ன இங்க சிஸ்டம் கொஞ்சம் நல்லா இருக்கும் நம்ம ஊர்ல கொஞ்சம் மோசமா இருக்கும்..இங்கயும் ஊஷல் உண்டு...பெர்செண்டேஜ்தான் வித்தியாசம் அப்படினு சொல்லிப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...