திங்கள், 27 நவம்பர், 2017

பால் இருக்கு....

நாலு நாட்கள் தொடரந்து விடுமுறை..

ஆட்டம் பாட்டம் போட்டு விட்டு அசதியினால் ஞாயிறு 7  : 30  உறங்க சென்றவனை .. காலை 5  :45 க்கு அம்மணி எழுப்ப...

இன்னைக்கு திங்கள் அவளுக்கு 7 :30  மணிக்கு பள்ளியில் விட்டா போதும். ஆளை விடு.. இன்னும் அரை மணி நேரம் ப்ளீஸ்.

ஏங்க.. கொஞ்சமா பொறுப்பா இருங்க..

பொறுப்பா  இருக்குறனால தான் இம்புட்டு பொறுமையா பேசினு இருக்கேன்.. இல்லாட்டி நடக்குறதே வேற..

என்ன சொன்னீங்க...?

சொல்லு...

அவளை பாருங்க.. ஒரே கால் வலின்னு முனகின்னு இருக்கா.. கொஞ்சம்.. என்னனு விசாரியுங்க..

அட பாவி.. நேத்து தூங்க போகும் போது எனக்கும் கால் வலின்னு சொன்னேன்னு.. அதுக்கு, இது எல்லாம் வலி இல்ல.. மனபிராந்தி ..விஸ்கி .. ரம்ன்னு சொல்லிட்டு கம்முன்னு இருந்தியே..



உங்க வயசு என்ன அவ வயசு என்ன?

தவறான கேள்வி? நீங்க யாரு பிள்ளை.. அவ யாரு பிள்ளைன்னு கேட்டு இருக்கணும்?

சும்மா கூட கூட பேசாதீங்க.. சீக்கிரம் கிச்சன் போய் ஸ்டவ்வில் சுடு தண்ணி வைச்சி இருக்கேன்.. அதை அந்த ஹாட்வாட்டர் பேகில் ஊத்தி எடுத்துன்னு வந்து அவள்ட்ட  கொடுங்க..

இதோ..

அம்மணி வேலைக்கு தயாராக கிளம்ப... அடித்து பிடித்து கிச்சன் சென்று...ஸ்டவ்வில் இருந்த ஹாட்வாட்டரை அந்த பையில் ஊற்றி அவளிடம் கொடுத்துவிட்டு .... நான் குளித்து விட்டு வருகையில்..

அம்மணி அலறினார்கள்..

ஏங்க.. கிச்சன் போய்.. அங்கே பால் கொழுக்கட்டைக்கு கொஞ்சம் பாலை ஏலக்காய் போட்டு காய வச்சி இருக்கேன்.. அதை மெதுவா கலக்கி விடுங்க...

ஐயோ... நீயே செஞ்சுடு.. ஒன்பது மணிக்கு ஒரு மீட்டிங்.. துணி முழுக்க ஏலக்காய் வாசனை வரும்..

எனக்கு கூட தான் வேலை.. உங்க சட்டை மேலே வேற ஒரு டீ ஷர்ட் போட்டு கலக்கி விடுங்க..

மீண்டும் கிச்சனுக்கு போய்...

பாலை எங்க வைச்சி இருக்க?

அடுப்பு மேலே?

அங்கே தான் இருக்கேன்.. அடுப்பு மேலே பால் எதுவும் இல்லையே..

லைட் போட்டு பாருங்க..

லைட் போட்டு தான் இருக்கு..

பத்து நிமிசத்துக்கு முன்னால தான வைச்சேன் .. ஒரு அடுப்புல சுடு தண்ணி.. இன்னொன்னுல பால்..

சுடு தண்ணி இருக்கு... பால் தான்..

அட பாவி... ஒரு வேளை..

மனதில் ஸ்லொ மோஷனில் ரிவைண்ட் போட்டு பார்த்தால்... சுடு தண்ணிக்கி பதிலாக அந்த ஹாட்வாட்டர் பையில் ஏலக்காய் போட்ட பாலை..

ஏங்க..மேலே தான் இருக்கு..

நீ குளிக்க போ.. நான் கலக்கி விடுறேன்...

அம்மணி தயாராக கிளம்ப .. பிள்ளையின் அறைக்கு சென்றால்..

டாடா.. இன்னைக்கு இந்த பேக் சூப்பரா இருக்கு.. கொஞ்சம் ஹெவியா காலுக்கு ஒரு மாஸ்ஸாஜ் போடுறமாதிரி..

தேங்க்ஸ்.. ஒரு நிமிஷம் கொடு... இன்னும் கொஞ்சம் சூடு தண்ணி ஊத்தி தரேன்..

வேணாம் .. இது போதும்.

அசரீரி கேட்டது..

ஏங்க..

சொல்லு..

இன்னொரு முறை .. கொஞ்சம் லேசா கலக்கி விடுங்க..

ஓடி போய்..

பாத்திரத்தில் கொஞ்சம் பாலை ஊத்தி.. ஏலக்காய் போட்டு ..கொதிக்கும் வரை காத்திருந்து அம்மணியின் சத்தம் கேட்டு கலக்கி கொண்டு  இருக்கையில்...

என்ன தப்பு பண்ணீங்க..?

ஏன்?

திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி முழிக்கிறிங்க?

அதெல்லாம் ஒன்னும் இல்ல..

பாலை சரியா கலக்குனீங்களா?

ஹ்ம்..

அளவு கம்மியா இருக்கே..

அதே தானே..

இல்லை.. ஏலக்காய் போட்ட பாலை பார்த்ததும் ஒரு கப் எடுத்து எனக்கு டீ போட்டு வைச்சீங்களோன்னு நினைச்சேன்..

வேணும்னா நேரா சொல்லு.. இந்த டபுள் மீனிங் எல்லாம் வேணாம்.

டபுள் மீனிங் .. உங்கள்ட்ட..

சரி.. அவளுக்கு சுடு தண்ணி ஊத்தி தரலையா?

தந்தேனே.. ஏன்?

இல்ல, அந்த பாத்திரலத்தில சுடு தண்ணி அப்படியே இருக்கே...

அதை நாம் ரெண்டாம் முறை நிரப்பி வைச்சேன்...அவளுக்கு திரும்பவும் வேணும்னு சொன்னாலும் சொல்லுவா..

ரொம்ப சமத்துங்க .. நான் வரேன்..

அப்பாடா .. தப்பிச்சேன்...

4 கருத்துகள்:

  1. திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி முழி
    ///

    நாம இன்னும் டெவலப் ஆகனுமோ!

    பதிலளிநீக்கு
  2. கிச்சனில் செஞ்ச தப்பை மறைக்கறது இருக்கே, அதுதான் பெரிய கஷ்டம்.

    இதை படிக்காமலேயே அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க பாருங்க!!!

    (எல்லாம் சொந்த அனுபவம்தான்)

    பதிலளிநீக்கு
  3. எப்படிச் சாமர்த்தியமாய்ச் செய்தாலும் மாட்டித்தான் ஆவோம் Same blood ஆதலால் பதிவு கூடுதல் சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா ஹா ஹா ஹா ஏற்கனவே நீங்களே சொல்லிருக்கீங்க துப்பறிவாளினினு அப்புறம் எப்படிக் கண்டு பிடிக்காம இருப்பாங்க....அது சரி இன்னுமா தப்பிக்க வழி கண்டு பிடிக்கல இத்தன வருஷத்துல.... ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...