சனி, 30 செப்டம்பர், 2017

தன்ஷிகாவின் கண்ணீர்...

அடியேனுக்கு இரண்டு ராசாத்திக்கள். மூத்தவளுக்கு 18  வயது கல்லூரியில் முதலாமாண்டு  படிக்கிறாள். இளையவள் 15  வயது பள்ளியில் பத்தாவது படித்து வருகிறாள்.

இருவருமே கோல்ப் (Golf ) ஆடுபவர்கள்.மூத்தவள் கல்லூரிக்காகவும் இளையவள் பள்ளிக்காகவும் ஆடுவாள்.
கேடு கெட்டவனின் காலை தொட்டு.. 

அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த  விஷ்யங்களில் ஒன்று பள்ளிக்கூடங்களும் விளையாட்டு மைதானங்களும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளியை பார்க்கவே முடியாது ( off course there are exceptions, but exceptions cant be examples). சரி அதை பற்றி இன்னொரு பதிவில் பாப்போம். இப்போ தலைப்பிற்கு வரலாம்.

மூத்தவள் கல்லூரி அடியேனின் இல்லத்தில் இருந்து 100  மைல் தொலைவு.  அங்கேயே விடுதியில் தங்கி படித்து வருகின்றாள். அவள் கோல்ப் போட்டி ஆட்டத்தை பார்க்க முடியாத சூழ்நிலை.



இளையவளோ இல்லத்தின் அருகிலேயே உள்ளப பள்ளியில்.  பள்ளிகளுக்கு  எதிராக நடக்கும் இந்த போட்டியின் விதி முறைகள் சற்று வித்தியாசம்.

ஒவ்வொரு  அணியிலும் 6  பேர் போட்டியிருடவார்கள். அதில் இந்த அணியில் இரண்டு பேர் - எதிர் அணியில் இரண்டு பேர் என்று நால்வர்  சகிதம் போட்டி ஆரம்பிக்கும். அணியின் தரவரிசை (ஆடும் திறமையை - மற்றும் அவர்களின் புள்ளி விவரத்தை கொண்டு இந்த தரவரிசை நிர்ணயிக்க படும்).

முதல் நால்வர் ஆட ஆரம்பிக்க அடுத்த நால்வர் அவர்களை தொடர கடைசி நால்வர் முடித்து வைப்பார்கள். பொதுவாக ஆட்டம் ஆரம்பித்து முடிய மூன்று மணி நேரம் போலாகும்.

பனிரெண்டு பேர் ஆடி முடித்த பின் அவர்களின் ஸ்கோர் கணக்கிடப்பட்டு வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். மொத்தம் ஆறு பேர் ஆடினாலும்  இரண்டு அணியிலும்  சிறப்பாக ஆடிய ஐந்து பேர் ஸ்கோர் மட்டும் கணக்கிடப்படும். ஆறு பேரில் நன்றாக ஆடாதவரின் ஸ்கோர் ஏற்க படாது. இரண்டு அணிகளிலும் நன்றாக ஆடிய ஐந்து பேரின் ஸ்கோர் கூட்ட பட்டு வெற்றி தோல்வி நிர்ணயிக்க படும்.

தோல்வியுற்ற அணியின் பெண்கள் சோகமாக காணப்படுவார்கள் - சில நேரங்களில் அழுவார்கள். ஆனால் அப்படி நடக்கும் போது அணியின் ஆறு பெண்களும் ஒருவரைவொருவர் ஆறுதல் சொல்லி கொள்வார்கள்.

இப்போது அடியேனின் இளையவள் பள்ளிக்கு வருவோம். இந்த பகுதியில்  இவர்கள் அணி மிகவும் சிறப்பான அணி. இந்த வருடம் துவங்கி இது வரையில் இவர்கள் இன்னும் எவரிடமும் தோற்கவில்லை. ஆனாலும் ஓவொரு முறை போட்டி முடிந்ததும் அந்த ஆறாவதாக வந்த பெண் அழுது கொண்டே வருவாள்.

அதை பார்க்கவே மிகவும் சோகமாக  இருக்கும். பெற்றோர்கள் - பாரவையாளர்கள் - அணியை சார்ந்தவர்கள் என்று அனைவரும் அந்த பெண் அழுகையை நிறுத்தும் வரை மாறி மாறி ஆறுதல் சொல்லி கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு முறை போட்டி நடக்கும் போதும் , பெற்றோர்களில் ஒருவர் இந்த பெண்களுக்கு அவர்களுக்கு பிடித்த விஷயம் ஏதாவது ஒன்றை சாப்பிட வாங்கி வருவார்கள்.  அதை முதலில் அந்த அழுது கொண்டு இருக்கும் பெண்ணிற்கு கொடுத்து அவளை ஆறுதல் செய்து அவள்  மீண்டும் அணியின் வெற்றியை கொண்டாடும் மனநிலைக்கு வந்தவுடன் தான் வெற்றியே கொண்டாடப்படும்.

அந்த ஆறு பேர் விளையாடி முடித்து மீண்டும் வரும்போதே முதலில் ஒரு பெண் ஓடி வந்து அங்கே உள்ளவர்களிடம் யார் சரியாக ஆட வில்லை என்று சொல்லி விடுவாள். அது ஒரு எச்சரிக்கையையே.

அது தெரிந்தவுடன் எங்களில் யாரும் அந்த பெண்ணிடம்  அவளின் ஸ்கோர் என்ன? எப்படி விளையாடினாள் என்று கேட்க மாட்டோம். அவளின் பெற்றோரிடம் மட்டும்... "இட்ஸ் ஓகே. ஷி ஹாட் எ பேட் டே " என்று சொல்லி வைப்போம்.

பொது இடங்களில் ஒரு பெண் அழுவது, அதுவும் தான் சரியாக விளையாடவில்லையே என்று அழுவதையே ஒரு சராசரி மனிதனால் தாங்கி கொள்ள முடியாது.

அப்படி இருக்கையில்..பொது மேடையில் ஒரு பெண்ணை அமரவைத்து.. அவளை கேலி - கிண்டல் - பரிகாரம் செய்து ... அனைவரும் கை  கொட்டி சிரித்து...

இந்த தற்பெருமை TR அவர்களின் பேச்சை கேட்டால் வாந்தி தான் வருகின்றது.

இந்த பேச்சிலே அவர் சொன்ன சில விடயங்கள்...

சினிமா ப்ரோமோஷனுக்கு நிறைய பேர் வருவதில்லையாம். எப்படி வருவார்கள்? தம்மை போல் இடம் பொருள் ஏவல் தெரியாமல் எதுகை மோனை என்ற பெயரில் தரக்குறைவாக தருதலையாக பலர் இருக்க இவர்கள் எப்படி வருவார்கள்?

அடுத்து...

மேடை நாகரீகத்தை அந்த பெண் கற்று கொள்ளவேண்டுமாம்!

இவரின் மேடை நாகரீகம் போல் கேவலமான ஒன்றை நான் பார்த்ததே இல்லை.

மரியாதை தரவேண்டுமாம்..

கேட்டு வாங்குவது மரியாதை இல்லை .. பிச்சை..

கடைசியாக.. என் பெயரை இவர்கள் சொல்லவில்லை என்று வருத்தம் இல்லை.

அட பாவி.. உன் கோவத்திற்கு முதல் காரணமே உன் பெயரை சொல்லவில்லை என்று தானே..

இந்த அறிவுஜீவியை விடுங்கள். அங்கே மேடையில் இருந்த மற்றவர்கள். இந்த கழிச்சடை பேசி கொண்டு இருக்கையில் கை கொட்டி சிரித்து கொண்டு .. இவர்களின் இல்லத்தில் வாழும் பெண்களுக்கு ஐயோ.

ஒரு ஜென்டில்மேனாக இருந்தால், அவர் அந்த பெண்ணை  இப்படி பேசுகையில்  எழுந்து.. எதையாவது பேசி நிறுத்தி இருக்கலாம். அதை விட்டு விட்டு ... இப்பொது..

எங்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. நாங்கள் சிரிக்கவில்லை.. எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது ஏற்க தக்கது அல்ல.

Grow a pair Guys...

"All that is necessary for the triumph of evil is that good men do nothing."

She could have been your own Family... !

இந்த நிகழ்ச்சியில் எனக்கு அந்த பெண்மணியின் மேலும் கொஞ்சம் கோவம் தான். இவ்வளவு கேவலமான ஒரு மனிதனின் காலை தொட வேண்டுமா? இப்படி செய்வதினால் தான் இவர்களின் திமிர் அடங்கவில்லை. "சரிதான் போ" என்று சொல்லி எழுந்து வந்து இருக்க வேண்டும்.

பின் குறிப்பு:

பெண்களின் கோல்ப் போட்டியில் தான் இப்படி என்று அறிந்து ஆண்கள் அணியில் இருக்கும் ஒரு  தகப்பனை அங்கே எப்படி? ஆறாவதாக வந்தவன் அழுவானா என்று கேட்டேன்..

அழுவானா? அது எல்லாம் இல்லை. ஒரு கோவமாக இருப்பான். தேவையில்லால் தன்னை தானே திட்டி கொண்டு கையில் கிடைத்தை எதையாவது உடைத்து கொண்டு இருப்பான்.

ஆண்டவா.. எனக்கு ரெண்டு பெண்ணை கொடுத்த உனக்கு கோடி நன்றி.

11 கருத்துகள்:

  1. எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் அவனை செருப்பால் அடிக்கவும் தயங்கமாட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. ஏன்னா.. நீ ஒரு ராசாதிக்கு அன்பான அப்பன். ஒரு அம்மணிக்கு மரியாதை கொடுக்கும் புருஷன்..

      அங்கே மேடையில் இருந்த அப்ரெண்டிஸ்ங்க அப்படி இல்லையே..

      நீக்கு
    2. மதுர.. அது இருக்கட்டும் ...... உங்க வீட்டு ராசாத்தி ஹாக்கி கேம் விளையாடிட்டு வரும் போதும் இந்த மாதிரி அழுகைகள் உண்டா?

      நீக்கு
    3. இவ விளையாடும் கேம் டீம் விளையாட்டு என்பதால அழுகை எல்லாம் கிடையாது....

      நீக்கு
    4. ஓ மதுரைதமிழன் தங்கள் ராசாத்தி ஹாக்கி விளையாடுகிறாரா?!!! இப்போதுதான் அறிகிறோம்....வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

      நீக்கு
  2. //ஒரு ஜென்டில்மேனாக இருந்தால், அவர் அந்த பெண்ணை இப்படி விசாரிக்கையில் எழுந்து.. எதையாவது பேசி நிறுத்தி இருக்கலாம். அதை விட்டு விட்டு ... இப்பொது..//
    பதிவுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

  3. மேலை நாட்டவர்களின் நல்ல பண்பாடுகளில் ஒன்று நீங்கள் குறிப்பிட்ட விசயம். ஒன்றில் ஜெயித்தவரைவிட தோற்றவருக்கு அதிக ஊக்கம் கொடுக்க அவர்கள் படாதபாடு படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு மற்றவர்களின் மனம் புண்பட்டு, உளவியல் ரீதியிலான பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அக்கறை அதிகம். நீங்களே குறிப்பிட்டதை போல... off course there are exceptions, but exceptions cant be examples ! !!

    டி.ராஜேந்தரை போல நம்மிடையே பல கோமாளிகள் உள்ளனர் ! தங்களை அதீதமான திறமைசாலிகளாக பாவித்துக்கொண்டு ஒரு வட்டத்துக்குள் தேங்கிவிட்டவர்கள் ! இவர்களை சாடுவதைவிட என் கோபமெல்லாம் இப்படிபட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களின் மேல் தான் !

    எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
    https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  4. நீ கட்டிட்டு வரல சாரி இப்ப நீ கேக்கற சாரி. ன்னு சொன்னபோது தலயில அடிச்சிகறத தவிர தவிர வேற வழியில்ல . இவரு திருந்த மாட்டாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரு சொன்னதை விட அசிங்கம்.. அதுக்கு அந்த மேடையில் இருந்த அப்ரெண்ட்ஸ் கை தட்டி சிரித்தது.

      நீக்கு
  5. இவரெல்லாம் மனுஷன்! ஹும்! எல்லார் பதிவும் பார்த்தோம்....அந்த மேடைல இருக்கறவங்களுக்குமா புத்தி இல்லை?!!! எல்லாம் கேட்டுக்கிட்டு ச்சே...ஆடியன்ஸாவது குரல் எழுப்பிருக்கணும்ல...அதுவும் இல்லையே....எதுக்கெல்லாமோ அழுகின முட்டைய வீசுறாங்க.....எதிர்ப்புக் குரல் எழுப்பறாங்க...இதுக்கு ஆடியன்ஸ் கூட எழுப்பலையே....ஆடியன்ஸ் எழுப்பிருந்தா கண்டிப்பா எல்லாருக்கும் உரைச்சுருக்கும்...

    பதிலளிநீக்கு
  6. அந்தப்பெண் காலைத்தொட்டபோது ஆஹா.ஹா...ஒஹோ.ஹோ என்று சிரிச்சான் பாருங்க , அதுதான் அசல் சைக்கோ சிரிப்பு. அசிங்கத்தின் உச்சம்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...