Wednesday, September 27, 2017

பேய்க்கு பயந்து பிசாசோட.......

BJP மெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்க முக்கிய காரணமே காங்கிரஸ் கட்சி தான் என்று முகநூலில் ஒரு பதிவு போட்டு இருந்தேன். அதை படித்த நான் மதிக்கும் ஒருவர்... காங்கிரஸ் அப்படி என்ன தவறு செய்தது என்று கூறி அதற்கான விளக்கத்தை கேட்டு இருந்தார்.காங்கிரஸ் தவறுகள்  (என் பார்வையில்  இருந்து)

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் நாட்டை ஆண்டும்...

அடிப்படை கல்வி - பள்ளி அமைப்பு அமைக்காதது.
அடிப்படை மருத்துவம் - சுகாதாரம் அமைக்காதது
அடிப்படை சாலை - போக்குவரத்து  அமைக்காதது
அடிப்படை தேவையான மூன்று  வேலை உணவை மக்களுக்கு அளிக்காதது.
அடிப்படை தேவையான மின்சாரத்தை அளிக்காதது..

மேலே சொன்ன அனைத்தும் பொதுவாக சொன்னது.  இன்னும் விவரமாக கீழே பார்க்கலாம்.


  • வாரிசு அரசியல் ..
இன்னும் எத்தனை காலம் தான் நேரு  குடும்பத்தில்  இருந்தே கட்சியின் தலைமைக்கு ஆள் எடுப்பார்கள்? இந்திரா காந்தியோடு நேரு குடும்பம் நிறுத்த பட்டு இருக்க வேண்டும். இந்திரா இறந்தவுடன் எங்கேயோ  இருந்த ராஜீவை அழைத்து வந்து... ராஜீவ் இறந்தவுடன் சோனியா.. தொடர்ந்து ராகுல்..

  • ஊழல்.. 
மிக முக்கியமான காரணம்! எதை எடுத்தாலும் ஊழல். போபோர்ஸில் துவங்கி DG வரை.  ஊழல் ஊழல்.. ஊழல்..

இந்த ஊழலை தடுக்க காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஏன்..கல்மாதி போன்ற ஊழல்வாதிகள்.. உங்கனால ஒரு ஆணியும் புடுங்க  முடியாது என்று பேசி கொள்ளும் அளவிற்கு ஊழல்.

224  மில்லியன் மக்கள் வறுமை கோட்டின் கீழே.  நால்வரில் ஒருவர்    ஒரு வேளை உணவு ... மூவரில் ஒருவர் இரவு உணவில்லாமல் படுக்க செல்லும் நாட்டில் இந்த காங்கிரஸ் அரசியல்வாதிகள் ஊழலில் சேர்த்த பணம்..  நெஞ்சு பதறுகிறது.

இதை யாராவது மறுத்தால்.. You are in Denial...  • கூட்டணி அதர்மம்.
கூட்டணியில் உள்ளவர்களை கொஞ்சமும் அடக்கி வைக்காமல் அவர்களுக்கு அடங்கி போனது! கூட்டணியில் உள்ளவர்களின் ஆதரவு இழந்து விட்டால் ஆட்சி கலையும்  தான். அப்படியே கலைந்தாலும் களவாணிகள் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் மக்களுக்கு எடுத்து சொல்லி வந்து இருக்கலாம்.


  • கருப்பு பணம்.
கருப்பு பணம் கோடி கோடி யாக அதிகரித்து வந்தாலும் அதை நிறுத்த ஒரு முயற்சியும் எடுக்காதது. அது மட்டும் இல்லாமல் வெளி நாட்டில் உள்ள கருப்பு பணத்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது.
சுதந்திர இந்தியாவை பெரும்பாலும் ஆண்டவர்கள் இவர்கள் தான். ஏழ்மை - பசி - அசுத்தம் - சாலை -  போக்குவரத்து - இயற்கை வளம் பாதுகாப்பு  என்று ஒரு காரியத்திலேயும் நாட்டை எள்ளளவும் முன்னேற்றவில்லை.


  • பெட்ரோல் விலை நிர்ணயிப்பு :

தனியார் கையில் அவர்களே பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் (கொல்லலாம்) என்று விட்டு கொடுத்தது


  • NEET தேர்வு
நீட் போன்ற தேர்வுகளை ஆரம்பித்து வைத்தது..


இவை எல்லாம் தான் BJP யை மெஜாரிட்டியோட ஆட்சியில் அமர்த்தியது.


இதை படித்தவுடன் ...

அம்புட்டையும் BJP தொடர்ந்து செய்யுதே என்பவர்களுக்கு  !

இம்புட்டு  மட்டும் இல்ல.... இதோட மதவெறி கலாச்சாரமும் சேர்த்து தான் செய்யுறாங்க ... . செய்வாங்க..

 ஆனால் அது வேற விவாதம்.


பின் குறிப்பு :

இதற்கான மாற்று  இல்லையா?  புதிதாக ஒரு கட்சி உருவாகலாம். டெல்லியில் நடந்ததை போல். ஆனால் தேசிய அளவில் அது சாத்தியமா? கண்ணுக்கு எட்டிய வரை தெரியவில்லை.

காங்கிரஸ் மீண்டும் வருவது... ஒரு வேளை நடந்தாலும் நடக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள்...

தலைமையை மாற்றுங்கள். கட்சியில் களை எடுங்கள்.  இன்று வேண்டுமானால் பக்தாஸ் மோடி மோடி என்று இருக்கலாம். ஆனால் இந்த ஆட்சியின் மதவெறி என்றாவது ஒரு நாள் ஒட்டு மொத்த இந்தியனையும்  பாதிக்கும் . அன்று இந்தியர் அனைவரும் ஒன்று சேர்ந்து (பக்தாசும் தான்) பிஜேபி க்கு மாற்று தேடுவார்கள். அந்த நாளை நோக்கி நகருங்கள்.

இல்லாவிடில் இந்த நாடும் -  மக்களும் நாசமா போவோம்!


No comments:

Post a Comment

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...