Friday, June 30, 2017

தண்டத்துடன் ஒரு XXX பதிவு....

வெள்ளி மாலை....

அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வண்டியை  எடுக்கையில்......அலறியது அலை பேசி...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்...

ஜூலை 4  ...இப்பதான் போன மாதிரி இருந்தது வந்துடுச்சி ...

எங்கே இருந்து பேசுற... நவம்பரில் தானே வரேன்னு சொன்ன...

பசங்க தொந்தரவு வாத்தியாரே. பத்து நாள் லீவ் போட்டு வந்து இருக்கேன். ஜூலை 4 க்கு என்ன பண்ற?

இதுவரை ஒன்னும் பிளான் இல்ல .. என்ன பண்ணலாம் சொல்லு?

சுந்தரி வரும் போதே ஒரு கண்டிஷனோடு தான் வந்தா..

என்ன கண்டிஷன்...

இந்த பத்து நாளும் கிச்சனில் நுழைய மாட்டாளாம்..

கொடுத்துவைச்சவன் தண்டம் நீ.. அடுத்த பத்து நாள் உனக்கு ருசியான  சாப்பாடு...வாத்தியாரே.. ஸ்பீக்கரில்  இருக்க ...

என்று தண்டம் சொல்லும் போதே..

அண்ணே என்ன சொன்னீங்க..?

சுந்தரி, எப்படி இருக்க? வீட்டில எல்லாம் சௌக்கியமா?

அதெல்லாம் அப்புறம் பேசலாம்.. நீங்க முதலில் என்ன சொன்னீங்க?

பத்து நாளைக்கு பசிக்கு என்ன செய்ய போறேன்னு கேட்டேன்..

என்னமோ ருசின்னு கேட்டுச்சே...

சே.. சே ... நீ கூட பசியில் இருப்ப போல இருக்கு, அதுதான் தப்பா கேட்டுடிச்சி...

அது...

தண்டம்...

சொல்லு வாத்தியாரே...

சுந்தரி அப்பா அம்மா சொந்தங்கள் எல்லாரும் நல்லா இருக்காங்க தானே..

வாத்தியாரே.. அவ போய்ட்டா.. நீ ஸ்பீக்கரில் இல்ல... விஷயத்துக்கு வா..

பாணி.. ஸ்பீக்கரில் போட்டு அம்மணி பக்கத்துல இருக்கும் போது எப்படி ஆரம்பிக்கனும்னு தெரியும் தானே.. என்ன வம்புல  மாட்டி விட இருந்தீயே...

இந்தியா போனதில் மறந்துடிச்சி வாத்தியாரே...

டேய்.. ஹலோ சொல்லும் போதே... ஸ்பீக்கரில் இருக்க.. சுந்தரிக்கு ஹலோ சொல்லு...அப்படி தானே ஆரம்பிக்கணும்..

சாரி வாத்தியாரே.. சரி.. ஜூலை 4  என்ன பிளான்?

ஒன்னும் இல்ல.. நீ காலையில் கிளம்பி வந்துடு.. பீச் போகலாம்.. அப்புறம் சுட்ட கரி.. சுடாத கரி..

வாத்தியாரே ..சாயங்காலம்  வான வேடிக்கை..

அட பாவி .. வான வேடிக்கையை ஏன் நினைவு படுத்துற..

அதை மறக்க முடியுமா வாத்தியாரே? ஜூலை 4ன்னு சொன்னாலே  அந்த நிகழ்ச்சி தானே நினைவுக்கு  வருது. வேடிக்கை பாக்க நல்ல இடம்ன்னு என்னை கூட்டினு போனீயே..

(அந்த மறக்க முடியாத நிகழ்ச்சியை படிக்க இந்த சொடுக்குங்கள்.. தம்பிக்கு எந்த ஊர் ? )

சரி... சினிமா பார்க்க ஆரம்பிச்சிட்டியா வாத்தியாரே..

இல்ல தண்டம்... என்ன விஷயம்.. ?

வாத்தியாரே.. தமிழில் இப்ப எல்லாம் சில படங்கள் சூப்பரா இருக்கு.. நீ பாரு..இருபது வருஷம் கிட்ட ஆகா போது இன்னும் பாபா சோகத்தில் இருந்தா என்ன ஆகுறது.

சாதாரண சோகமா அது.. மறக்க ...வேணும்னா மூணாம் தேதியே கிளம்பி வா.. இராண்டாவது ஆட்டத்துக்கு போகலாம்..

வாத்தியாரே... ரெண்டாவது ஆட்டம்.. எம்புட்டு நாள் கழிச்சி அந்த வார்த்தையை கேட்டேன்..

ஏன் .. இந்தியாவில் சொல்றது இல்லையா?

இல்லை.. அம்புட்டும் உடைஞ்ச இங்கிலிஷ் தான்..

சரி.. வா ... மூணாம் தேதி ஏதாவது தமிழ் படம் போகலாம்..

நீ போ வாத்தியாரே.. நான் தமிழ் படம் பாக்குறத விட்டுட்டேன்...

தண்டம்.. என்ன சொல்ற? தமிழ் பட வெறியனாச்சே.. நீ...என்ன ஆச்சி..

உனக்கு பாபா மாதிரி எனக்கு ஒன்னு  மாட்டிச்சி...

என்ன படம்..?

படத்து பேரு XXX ... சிம்பு..

கிழிஞ்சது  போ... அவன் XXX அர்த்தத்துல பாட்டுத்தானே பாடுவேன். இப்ப இந்த மாதிரி படத்துல நடிக்க ஆரம்பிச்சிட்டானா.. எங்கே வைச்சி பார்த்த..

சரியா சொன்ன வாத்தியாரே.. . அந்த பாட்ட கூட இந்த படத்துக்கு தான் ரெடி பண்ணி இருப்பான் போல இருக்கு. குடும்பத்தோடு பொய் தொலைச்சேன் வாத்தியாரே..

தண்டம்.. என்னடா சொல்ற? எப்படி..

பொறுமையா கேளு.. படத்து பேரு என்னமோ AAA தான்.. ஆனா நடந்து எல்லாம் XXX .. பாதியில் வாந்தி எடுக்காத குறையா  ஓடி வந்தேன்.. சுந்தரி என்ன அடிக்காத குறை..

சரி விடு... ஒரு படம் தானே.. அதுக்கு போய்...

வாத்தியாரே.. பாபாக்கே படத்தை பாக்குறத நீ நிறுத்திட்ட.. இத மட்டும்  பாத்த உன் விரலாலே உன் கண்ணையே நொண்டி வெளியே போட்டு இருப்ப...

அம்புட்டு கேவலமா? சரி விடு.. இனிமேல் இந்த படம் பாத்தியா அந்த படம் பாத்தியானு என் தலையை துன்ன மாட்ட.. சிறப்பு...

அதே தான் வாத்தியாரே.. சிறப்பு.. சிறப்புன்னு சொல்லி உடம்பெல்லாம்  படை வந்த மாதிரி அரிப்பு...ஆமா.. உனக்கு எப்படி அந்த சிறப்பு விஷயம் தெரியும்..

யு டுயூப் தட்டி பார்...

சரி.. .அப்புறம் கடலை தர்பூசணி விதை எடுத்துனு  வந்து இருக்கேன்... அம்மணி எப்ப வூட்டுல இல்லேனு சொல்லு.. விதைச்சிடுவோம்..

(அந்த விஷயத்தை அறிய இங்கே சொடுக்கவும்.. தோட்டத்துல பாத்தி கட்டி..)

வேணாம் தண்டம்.. நீயே வைச்சிக்க? அதை சமாளிச்சிட்டேன்..

சரி.. திங்கள் பாப்போம்..

சுந்தரியை கேட்டதா சொல்லு...

நீ தான் ஸ்பீக்கரில் இல்லைனு  சொன்னேனே..

3 comments:

 1. சிம்பு படத்துக்கு குடும்பத்தோடவா?!

  ReplyDelete
 2. படமும் பயங்கர தண்டம்... ஹா.. ஹா...

  ReplyDelete
 3. தண்டமான படத்தை தண்டம் பார்த்தாரா??!!! (தண்டமான படம் என்பதே தண்டம் சொல்லித்தான் தெரியும்!!!!)

  கீதா

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...