வெள்ளி, 9 ஜூன், 2017

இஞ்சிரிங்கோ... இனிஜெரோ..

சென்ற வாரம் நண்பர் ஆரூர் பாஸ்கர் தாம் ஒரு எத்தோப்பிய  உணவகத்திற்கு சென்றதையும் அங்கே அவர் உண்ட "இனிஜெரோ"  என்ற ஒரு உணவை பற்றியும் எழுதி இருந்தார்.

நாம் தான் உணவு பிரியர் ஆயிற்றே.. எதிர்த்த வீட்டில் குழம்பு கொதித்தால் நம்ம வீட்டில் தட்டை எடுப்போமே..

நண்பரிடம் சற்று விசாரித்த பின் ... அம்மணியிடம்...

பிரென்ட் ஒருத்தர் பிளோரிடாவில் இருக்கார்..

என்ன .. உங்களுக்கு பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்களா? சொல்லவேயில்லை.

ஜோக்.. இருக்கட்டும் இருக்கட்டும்..

சொல்லுங்க..



அவர் ஒரு எத்தோப்பியன் ஹோட்டலுக்கு போனாராம். சாப்பாடு நல்லா  இருந்ததாம். நம்மளும் போலாமா?

ஏங்க.. எந்த அறிவாளியாவது ஒரு வேளை  சாப்பாட்டுக்காக கலிபோர்னியாவில் இருந்து பிளோரிடா போவானா? அதுவும் குடும்பத்தோட.. தலைக்கு பிளைட் டிக்கெட்டே 500  டாலருக்கு மேலே வரும். அறிவா பேசுங்க.

ஐயோ.. பிளோரிடாவில் இருக்க ஹோட்டலுக்கு இல்ல.. இங்கே நம்ம வீட்டு பக்கத்திலே இருக்க எத்தோப்பியன் ஹோட்டலுக்கு போலாமே..

அங்கே என்ன கிடைக்குதாம்?

இஞ்சிருங்கோ...

எங்க.. அதை நாங்க பெட்டைங்க தான் சொல்லணும்.. நீங்க சொல்ல கூடாது.

சாரி.. என்னமோ ஒரு ஐட்டம் .. "இனிஜெரோ"ன்னு நினைக்கிறன். கோதுமை தோசை மாதிரி இருக்குமாம். ரொம்ப நல்லா இருக்காம். கூட தொட்டுக்க 7 வித சட்டினி தரங்களாம். போலாமா?
ஏழு வித சட்டினின்னு தான் யோசித்தேன்.. ஆனால் அது காய்வகையறா .. 

உங்க நண்பருக்கு கல்யாணம் ஆச்சா?

ஏன்?

இந்த கல்யாணம் ஆகாத ஆளுங்க எதை சாப்பிட்டாலும் நல்லா இருக்குனு சொல்லிடுவாங்க. நாக்கு செத்து போன ஆளுங்க..

அப்படியா. .எனக்கு என்னமோ கல்யாணத்துக்கு பின்னால தான் நாக்கு செத்து போன மாதிரி பீலிங்..

ஏன் இருக்காது....?

60  கிலோ இருந்த ஆளை ஒரு வருசத்துல 85  கிலோவா மாத்துனனே.. நாக்கு செத்து தான் போய் இருக்கோம்.

நீ தான 85  கிலோக்கு மாத்துன.. பின்ன எதுக்கு நீயே திரும்பவும் 60  கிலோவுக்கு வர சொல்ற? சரி. ..அந்த ஹோட்டலுக்கு போலாமா?

அரை மணி நேரம் கழித்து ..

ஏங்க... இங்கே டிஸ்னி லேண்ட் பக்கத்துல ஒன்னு இருக்காம். சனி  கிழமை மதியம் புக் பண்ணி இருக்கேன். வேற எதுவும் பிளான் வச்சிக்காதீங்க. இன்னொன்னு அந்த இனிஜெரோ.. நம்ம ஊர் தோசை மாதிரி தாங்க.. கிட்ட தட்ட கோதுமை தோசை மாதிரி தான் இருக்குமாம்.  மூணு வேளைக்கும் அது கிடைக்குமாம்.

சரி...

வெள்ளி மாலை.. நண்பர் ஒருவர்..

விசு..

நாளைக்கு என்ன பிளான்..?

சொல்லு..

இங்கே ஒரு "ம்யூசிக் கான்சர்டுக்கு" பசங்கள அனுப்புறேன்..ரெண்டு டிக்கட் எக்ஸ்டரா இருக்கு உன் பொண்ணுங்க பிரியா ?

ஒரே அஞ்சே நிமிஷம் இரு, கேட்டுட்டு கூப்பிடுறேன்.

அம்மாடி.. ராஜ் அங்கிள் நாளைக்கு "ம்யூசிக் கான்செர்ட்டுக்கு"  ரெண்டு டிக்கட் வைச்சினு இருக்காராம்.. நீங்க போறீங்களானு கேக்குறார்..

போறோம் டாடி .. எப்ப ப்ரோக்ராம்...?

நாளைக்கு மதியம்..

சரி..

அலை பேசி..ராஜ் .அவளுங்க வாரங்களாம்.

மதியம் ஒன்னரை போல நேர  அங்கே ஹாலுக்கு வந்துட சொல்லு.

ஓகே..

என்னங்க.. நாளைக்கு மதியம் அந்த ஹோட்டல்..?

அட பாவி ... மறந்தே போச்சே...

ஒரு காரியம் ஒழுங்கா..

சரி இப்படி பண்ணலாமே.. இன்னைக்கு டின்னர் போகலாம்.

கிளம்பினோம்..

25  மைல் தொலைவில் ..

அடைந்தோம்..

சிறிய இடம் தான்.. மிக நேர்த்தியாக இருந்தது.. அவர்கள் மேசையை காட்ட அமர்ந்தோம்..

என்ன சாப்பிடுறீங்கோ..

இது தான் முதல் முறை... எங்களுக்கு "இனிஜெரோ"  வேண்டும்.

இனிஜெரோ கூட என்ன வேணும்?

புரியல..

இது உங்க ஊர் தோசை போல.. அதுக்கு கூட ஏதாவது வச்சி தான் சாப்பிடணும்.

ஓ .. என்ன இருக்கு..

முனியாண்டி விலாஸ் மெனுவை போல் ஒன்றை காட்டினார்கள்.

சரி, ஒரு பீப் ... ஒரு சிக்கன்.

இளையவள் மெனுவை பார்த்து அலறினாள்..

டாடி.. "சமோ"சா இருக்கு.

எங்கே காட்டு..

"சம்பூசா" என்று எழுதி இருந்தது.

இது என்ன "சம்பூசா"?

உங்க ஊர் "சமோசா" போல இருக்கும்...

அதுவும் நாலு கொடுங்க..

கீரையா  அல்ல பீப்..

இதுல ரெண்டு அதுல ரெண்டு..

கொஞ்ச நேரத்தில் "சம்பூசா" வந்தது..

ஆளுக்கு ஒன்றை கடிக்க.. நம்ம ஊரில் உள்ளது போலவே இங்கேயும் அந்த ஓரத்தில் இருந்ததை ரசிக்க முடியவில்லை.. அப்படியே வைத்து விட..
சம்பூசா ... 

பீப் மற்றும் கோழி வந்தது. இரண்டுமே எண்ணெய்  வழிய வழிய ஊத்தி செய்ய பட்டு இருந்தது. எங்க வூட்டு அம்மணி அதில் இருந்த எண்ணையை வைத்து ரெண்டு வாரம் ஒட்டிவிடுவார்கள் .. அம்புட்டு எண்ணெய்..
ரெண்டு வார சமையல் எண்ணெய் 

நால்வரும் காத்து கொண்டு இருந்தோம்.

ஏன் சாப்பிடலையா?

எதை வைத்து..

"இனிஜெரோ" தான்..எடுத்துனு வாங்க..

இங்கே தான் மேசையில் இருக்கே..

அதுவரை டவல் என்று நான் நினைத்து இருந்ததை காட்ட..
டவல் போல் இருந்த தோசை. 

அசடை வழித்து கொண்டு..

ஏங்க...என் நண்பன் இதுக்கு ஏழு  விதமான சட்டினி தருவீங்கன்னு சொன்னாரே...

ஓ.. அதுவா.. அதுக்கு நீங்க விஜிடேரியன் ஆர்டர் பண்ணனும்.

சரி.. ஒரு விஜிடேரியன்..

உடனே வந்தது..

ஒரு பெரிய தட்டில் ... ஒரு "இனிஜெரோ".. அதன் மேல் ஏழு  வகை காய்.. எதுவுமே சூடாக இல்லை..
நல்லதோர் உணவு

காய்வகைகளில்.. ஒன்று முட்டை கோஸ்.. கீரை... பருப்பு.. வெங்காய சட்டினி.. தக்காளி சட்டினி , உருளை கிழங்கு..மற்றும் சாலட். ஒரே தட்டில் இருந்து அனைவரும் உண்டோம்.

இதை ஆவி பறக்க சூடா கொடுத்தீங்கனா இன்னும் நல்லா இருக்குமே..

எத்தியோப்பியாவில் இப்படி தான் சாப்பிடுவோம்.

ஏன்..

அங்கே எப்பவும் ரொம்ப வெயில் அல்லவா.. அதனால் தான்..

மனதில்.. எங்க மதராஸில் இல்லாத வெயிலா.. 110  டிகிரியை தாண்டினா கூட.. ஒரு சூடான பிரியாணி சொல்லிட்டு.. நெத்தி வியர்வையை  தொடைச்சி போட்டுட்டு மூக்கை மட்டும் உறுஞ்சிட்டு.. கடைசியா.. சூடா ஒரு மசாலா டீ வேற..

பின்னர் அருகில்  மடித்து வைக்க பட்ட "இனிஜெரோவை" வைத்து பீப் மற்றும் சிக்கனையும் முடித்த பின்.. இன்னும் ஐந்து ஆறு "இனிஜெரோ" மீதம் இருந்தது.

மொத்த  ருசியும் நம் சமையலை போலவே இருந்தது. அந்த பணியாளரும் அன்பாக உபசரித்தார்கள்.

மொத்த பில். 70  டாலர். இங்கே தற்போதைய நிலவரப்படி 20 % டிப்ஸ் எதிர்பார்ப்பார்கள். 85  டாலரை கொடுத்துவிட்டு கிளம்பினோம். ஒரு நல்ல வித்தியாசமான இரவு உணவு.

நன்றி ஆரூர் பாஸ்கர்.

முடித்து விட்டு வெளியே வந்தவுடன், அந்த ஹோட்டலை ஒரு படம் பிடிக்கும் போது தான் கவனித்தேன். அடுத்த ஹோட்டலின் பெயர் கென்யா குசின்.

சீக்கிரம் வந்து வண்டிய எடுங்க.

ஏன்.. அவசர படுற..

அப்புறம் கென்டக்கியில் இருந்து இன்னொரு பிரென்ட் கென்யா சாப்பாடு நல்லா  இருக்குனு அடுத்த வாரமே இங்கே வந்து நிப்பீங்க..

வண்டியை எடுத்து கிளம்பி இரண்டாவது நிமிடத்தில் டிஸ்னி அருகே வர...

இளையவளோ..

டாடி. நான் சின்னதா இருக்கும் போது டிஸ்னிக்கு வருடம் முழுக்க போற பாஸ் வச்சின்னு இருந்தோம் .. இப்ப ஏன் அதை வாங்குறது இல்ல.

ராசாத்தி .. அது கிட்ட தட்ட 10  வருசத்துக்கு முன்னாலே.. அப்ப ஒரு பாஸ் 175  டாலர் தான்.

இப்ப ..

கிட்ட தட்ட 700  டாலர்.. கட்டுபடியாகாது...

ஐ அண்டர்ஸ்டாண்ட்..

பேசி கொண்டே வருகையில்.. டிஸ்னியின் வான வேடிக்கை துவங்கியது.. கொஞ்சம் மெதுவாக போங்க என்று அன்பான அதட்டல் வர.. வான வேடிக்கையை பார்த்து கொண்டே ...
வரும் வழியில் டிஸ்னி லேண்டின் வான வேடிக்கை - Video

இஞ்சிரிங்கோ.. இஞ்சிரிங்ன்னு என்று பாடி கொண்டே இல்லத்தை அடைந்தோம்.

2 கருத்துகள்:

  1. இஞ்சிரிக்கோ அனுபவத்தை மிகவும்
    இரசித்தோம்
    இயல்பாய் வந்து விழுந்திருந்த
    இந்த வரிகளை


    மிகவும் இரசித்தோம்

    நாம் தான் உணவு பிரியர் ஆயிற்றே.. எதிர்த்த வீட்டில் குழம்பு கொதித்தால் நம்ம வீட்டில் தட்டை எடுப்போமே..

    மனதில்.. எங்க மதராஸில் இல்லாத வெயிலா.. 110 டிகிரியை தாண்டினா கூட.. ஒரு சூடான பிரியாணி சொல்லிட்டு.. நெத்தி வியர்வையை தொடைச்சி போட்டுட்டு மூக்கை மட்டும் உறுஞ்சிட்டு.. கடைசியா.. சூடா ஒரு மசாலா டீ வேற..

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...