வெள்ளி, 9 ஜூன், 2017

கோடை கால காற்றே..

  கோடை விடுமுறை விட்டு ஒரு வாரமாச்சி.. என் பிரச்சனை ஆரம்பிச்சிடிச்சி.

மூத்தவள் 12  வந்து  முடிச்சிட்டு கல்லூரிக்கு  போக தயாராகிட்டா.. செப் கடைசி வாரத்தில் கல்லூரி ஆரம்பிக்கும்.

இளையவள் 9ம் வகுப்பில்  இருந்து 10வது போறா.

விடுமுறை ஆரம்பிச்சி  ஒரு வாரம் ஆச்சி.  காலையில் வேலைக்கு போகும் போது  7  மணிக்கு  ரெண்டு பேரையும்  எழுப்ப போனா அடிக்கவே வந்துட்டாளுங்க.

ஆர் யு ஜோக்கிங்.. ப்ளீஸ் டெல் மீ யு ஆர் ஜோகிங்ன்னு .. கத்துறாளுங்க.

சரி.. அம்மணி பண்ண சுமதியை குடிச்சிட்டு வேலைக்கு போனேன். வழியில்..

விஷ்.. எங்கே இருக்க?

அலுவலகத்தில் இருந்து போன்.

இன்னும் 5  மினிட்ஸ்.. அங்கே இருப்பேன்.

ஒரு ஹெல்ப் பன்னு. பக்கத்தில் இருக்கும் டோனட் கடைக்கு போய் ப்ரேக்பாஸ்ட வாங்கினு வந்துடு. நாங்க ஏற்கனவே பெ பண்ணிட்டோம். ஜஸ்ட் பிக் இட் அப்.



சரி, என்று சொல்லி விட்டு வண்டியை அங்கே விட்டேன். அடியேனின் அலுவலகம் மற்றும் ராசாத்திக்களின்  பள்ளி கூடம் இரண்டும் அடுத்த அடுத்த தெரு. பள்ளி கூடத்தை கடக்கும் போது..

இந்த கோடை விடுமுறையை ஏன் விடுறாங்கன்னு நினைத்து கொண்டே..கடைக்குள் சென்றேன்.

கடையில் பணி புரிந்து கொண்டு இருந்த மூவரும் தெரிந்த முகம். என்னை பார்த்தவுடன்.. சிரித்து கொண்டே..

டஸ் யுவர் டாட்டர் க்நொவ் தட் யு ஆர் ஈட்டிங் டோனட் .. ?

சிரித்து கொண்டே..

திஸ் ஐஸ் பார் மை ஆபிஸ்.

மூவரும் இளையவள் வகுப்பு தோழிகள். டோனட் அனைத்தையும் வாங்கி கொண்டு புறப்படுகையில் .. ஒருத்தி ஒரு சிறிய பெட்டியை கொடுத்து

திஸ் ஐஸ் பார் மை பிரென்ட் ..

என்று கொடுத்தாள்..

திறந்து பார்த்தேன்.. அதில் அவளுக்கும் எனக்கும் பிடித்த வகையான டோனட் ஒன்று இருந்தது.

வண்டியில் வந்து ஏறி ஒரே நிமிடத்தில்.. அலை பேசியில் குறுந்செய்தி, இளையவளிடம்  இருந்து ...

அதில் நான் டோனட்  கடையில் சாம்பிளுக்கு வைத்து இருந்த ஐட்டங்களை ருசி பார்த்ததை எனக்கே தெரியாமல் யாரோ வீடியோ எடுத்து அவளுக்கு அனுப்பி இருக்கின்றார்கள்.

தொடர்ந்து அலை பேசி அலறியது...

டாடி..

சொல்லு...

காலையில் என்ன டோனட்?

டோனட் காலையில் தான் சாப்பிடுவாங்க..

அது இல்ல.. சாம்பிள்க்கு இருந்தத இப்படியா சாப்பிடுவாங்க?

என்ன சொல்ற?

டாடி.. உளுந்து  வடையை சட்டினியில் தொட்டு சாப்பிடற மாதிரி சாப்பிடறீங்க..

எல்லாம் ஒன்னு தானே மகள்..

இப்படி நீங்க சாம்பிளை சாப்பிட்டா என் பிரெண்ட்ஸ் என்னை பத்தி என்னா நினைப்பாங்க..

ஓ.. ரொம்ப டேஸ்ட் ராசாத்தி..

கொஞ்சம் டீசெண்டா நடந்துக்குங்க..

ஐ வில் ட்ரை ...

ஒன் மோர் திங்.. அந்த சின்ன டப்பாவில் கொடுத்தது எனக்கு.. சாயங்காலம் டிப்பன்னு சொல்லி நீங்களே முடிச்சிடாதீங்க..

ஓகே..

சரி.. 7:30  ஆச்சி.. சீக்கிரம் எழுங்க...

யு மஸ்ட் பி ஜோக்கிங்..நான்  திரும்பவும் தூங்க போறேன்.

அலுவலகம் வந்து... சேர்ந்தாச்சி..

10  : 30  க்கு வங்கியில் ஒரு மீட்டிங்.. கிளம்பி போனேன். அங்கேயும் தெரிந்த முகங்கள்..

விஷ்..

ஹே நீ இங்க என்ன பண்ற.. ?

மூத்தவளின் தோழி..வகுப்பு தோழி மற்றும் கோல்ப் அணியில் உள்ளவள். சிறந்த ஆட்டக்காரி.

சம்மர் ஜாப். எனக்கு செப்டம்பரில் தான் கல்லூரி. தினமும் 8  ல் இருந்து 1  மணி வரை வேலை..

ஆல் தி பெஸ்ட்.

என்னுடைய மீட்டிங் முடித்து விட்டு வண்டிக்கு வருகையில், மூத்தவளிடம் இருந்து குறுந்செய்தி..

என்ன டாடி.. 150  டாலர் காஷ் எடுத்தீங்களாமே.. அம்மாவுக்கு தெரியுமா?

அது வந்து... அது வந்து...

என்னடா இது .. வம்பா போச்சே.. எங்கே போனாலும் இவளுங்க தோழிகள்.

மதிய உணவு நேரம்...

அருகில் உள்ள மெக்சிகன் உணவகத்தில்..மீண்டும்.. அதே கதை.. இம்முறை கடையில் உள்ளே இருக்கும் போதே.. குறுந்செய்தி..

அங்கேயே இருங்க.. பத்து நிமிசத்தில் நாங்களும் இருப்போம்.

ரெண்டு பேரும்  வந்தார்கள்.

அம்மாவுக்கு தெரியுமா?

எது...?

நீங்க இங்க சாப்பிடுறது?

அது ... வந்து..

சரி .. எங்களுக்கும் வாங்கி கொடுங்க...

மூவரும் சாப்பிட்டு விட்டு...முடிக்கையில்... அந்த வங்கியில் பணி புரியும் தோழி வர...

அனைவரும் கிளம்பினர்.

எங்கே போறீங்க..

வி ஆர் கோல்பிங் டுடே..

ராசாத்தி.. ஒன்னு கேப்பேன் கோச்சிக்க மாட்டிங்களே..

நீங்க என்ன கேக்க போறீங்கன்னு எனக்கு தெரியும்.. நானே பதில் சொல்லிடுறேன்.

எங்கே சொல்லு..

எல்லா பிரெண்ட்ஸும் வேலைக்கு போறாங்களே .. நீங்க ரெண்டு பேரு மட்டும்...

ஆமா மகள்...

டாட்.. ரெண்டு பேரும் கோல்ப் கோர்ஸில் தான் வேலைக்கு போக பெற்றோம். திங்களில் இருந்து ஆரம்பிக்கும். அடுத்த ரெண்டு மாசம் பிசி. இட் ஸ்டார்ட்ஸ் அட் 6:30 ... AM. அதனால தான் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் எக்ஸ்டரா தூங்கறோம்.

அப்பாடா...

சரி .. நாங்க கிளம்பறோம்.. எங்க பங்கு 100 டாலர் கொடுங்க..

உங்க பங்கா? 100  டாலரா ? என்ன சொல்ற?

நூத்தி ஐம்பதை மூனால வகுத்தா தலைக்கு 50  தானே..

எனக்கே கணக்கா?

பின் குறிப்பு :

கோடை விடுமுறையில் 15  வயது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பிடவிட வேண்டும். பொதுவாக இந்திய பெற்றோர்களுக்கு இது பிடிக்காது. வேலைக்கு பதிலாக.. சிறப்பு வகுப்பு.. லொட்டு லொசுக்கு என்று ஏதாவது செய்வார்கள். வேலைக்கு செல்வத்தின் மூலம் அவர்களுக்கு புதிய அனுபவம் கிட்டும். மற்றும்  கொஞ்சம் பணம்.



இதை படித்த உடனே.. இதோடா .. விசுக்கு நாலு சம்பளம்னு ஒரு கணக்கு போட்டு 68 ல் பெருக்க கூடாது.

இன்னும் 68  தானா .. இல்லாட்டி நம்ம குடுகுப்புகாரன்  "நல்ல காலம் புறக்குது " ஸ்ரீ ஸ்ரீ .. சொன்ன மாதிரி 4௦க்கு வந்துடுச்சா!

4 கருத்துகள்:

  1. மிகவும் இரசித்துப் படித்தோம்
    64 இல் பெருக்கியும் பார்த்துட்டோம்
    அந்தச் சென்டர் லைனான கடைசிப் பாராவை
    வைத்து நீங்கள் எழுதிய இந்தப் பதிவு
    உங்கள் எழுத்துத் திறமைக்கு மற்றுமொருச் சான்று

    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  2. அதானே...? உங்களிடமே கணக்கா...? கில்லாடிகள்...

    பதிலளிநீக்கு
  3. எனக்கு இப்படி இரண்டு புத்திசாலி மகள் இரூந்தால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன். யதார்த்தமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. என் பிள்ளைகள் அல்ல எல்லா பிள்ளைகளும் இங்கே சமத்தாக கோடை விடுமுறையில் வேலைக்கு சென்று விடுவார்கள்.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...