புதன், 28 ஜூன், 2017

எஸ் வீ க்கு சுப வீயின் பதில் என் மூலம்..

சுப வீ அவர்களுக்கு எஸ் வீ சேகர் எழுதிய பதில் கடிதத்தை படித்தேன்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நாடக நடிகரின் IQ என்னவாக இருக்கும் என்று வியந்தேன்.

ஏன் என்று பார்ப்போம்.



சாதி மதத்தை பற்றி எழுதுகையில்..

//சாதி மதம் என்பது அவரவருக்கு தாய் தந்தைதான். அதாவது தாய் தந்தை இருப்பவர்களும் மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்று கொள்வார்கள் //

என்னதோர்  கேவலமான மனநிலை. வளரும் உலகத்தில் அவனவன் ஜாதியை ஒரு தொற்று நோய் வெறி பிடித்த நாய் என்று பார்க்கையில் இவரோ சாதியை பெற்றோருக்கு  ஒப்பிட்டு பேசுகின்றார். தான் உயர்ந்த சாதி என்று உடம்பில் உள்ள கடைசி சொட்டு ரத்தம் வரை வெறி கொண்ட  ஒருவனால் மட்டும் சாதியை இப்படி உயர்த்தி பேச முடியும்.

அடுத்து ...

//இப்போதும் என் வீட்டில் சமையல் வேலை செய்பவர், வீடு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்து கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்ல. அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்//

இங்கே என்ன சொல்லவருகின்றார்? உலகமே மாறினாலும்.. நீங்கள் என்ன தான் சாதி ஒழிக சாதி ஒழிக என்று கேட்டாலும் நாங்கள் இன்னும் ஒரு சமூகத்தினரை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி எங்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அவர்களை தான் வைப்போம் என்று சொல்ல வருகிறாரா?  என்ன ஒரு சாதி வெறி? எப்படி ஒரு மனிதனால் இப்படி அருவருப்பாக பேச முடிகின்றது?


//சாதிகள் இல்லையடி பாப்பா  என்று பாரதி சொன்னதாக கூறுகின்றீர்கள் . அதே பாரதி தான் "காக்கை குருவி எங்கள் சாதி" என்று பாடியிருக்கிறார்//

நடிகரின் அறிவு திறனை நாம் இங்கே அறியலாம். நான் ஒரு முட்டாள் என்பதை  இந்த உலகத்திற்கு தாம்பள தட்டில் வைத்து சொல்லி இருக்கின்றார். பாரதி சொன்ன சாதி.. அனைத்து ஜீவனையும் நாம் அனுசரித்து வாழ வேண்டும் என்று.பிறப்பால் மனிதனை கூறு போடும் சாதியை அல்ல.  இவரை போல தரங்கெட்ட மனிதர்களினால் தான் புரட்சி  கவிஞன் பாரதியும் சோடை போகின்றான்.


//உங்களால் மட்டும் அல்ல யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது//

என்ன ஒரு திமிர். இதில் இவர் சொல்ல வருவது.. சாதியையும் மதத்தையும் நாங்கள் ஒழிக்க விட மாட்டோம் என்ற தொனியில் உள்ளது. இந்த மாதிரி அயோக்யத்தன எண்ணத்தில் உள்ளவர்கள் தங்களின் இறுதி மூச்சு வரை சாதி வெறியில் தான் இருப்பார்கள்.

//நான் அனைவரையும் மதிப்பவன், இது என்னுடன் பழகியவர்களுக்கு தெரியும்/

மதிப்பவன்..? ராம நாராயணன் இயக்கிய படமொன்றில்.. சற்றும் தயங்காமல் .. ஒரு பெண்ணின் இல்லத்திற்கு சென்று.. இரட்டை அர்த்தத்தில்  " ஒழுகுமா" என்ற தங்களின் வசன உச்சரிப்பில்  இருந்தே தெரியும் தாம் மற்றவர்களை எப்படி மதிப்பவர் என்று. அது மட்டுமா.. தங்கள் நாடகத்தின் இரட்டை அர்த்த வசனங்கள்... நாடக பாத்திரங்கள்.. கபாலி ரிக்ஷாகாரன்.. முனியம்மா வேலை காரி..

//ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு  கன்னத்தை தடவி கொண்டு நிற்பவன் பிராமணன் அல்ல, அதையும் நீங்கள் புரிந்து  கொள்ளுங்கள் , புரிந்து கொள்வீர்கள்//

நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும். என்ன ஒரு அழகாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கிறித்துவ மதத்தின் மேல் தனக்குள்ள  வெறுப்பை கொட்டி தீர்த்து இருக்கின்றார். மறு  கன்னத்தை காட்டுவது  ஒன்றும் கேவலமானது அல்ல, புனிதமானது. காலை தூக்கி எட்டி மிதித்தவனை நீ எதற்கு காலை தூக்க வேண்டும், சொல்லி இருந்தால் நானே குனிந்து இருப்பேனே என்று கூறிய காந்தியையே நேர் எதிரில் சுட்டவரின் ரசிகர் தானே இவர்.. அதனால் அவருக்கு இந்த புனித தன்மை புரியாது.

மற்றும்.. இங்கே சுபவீக்கு ஒரு சவால் .. புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்து கொள்வீர்கள்.  சுயநலத்திற்காக கட்சி விட்டு கட்சியை குரங்கை விட அதிகம் தாண்டும் இவர் தற்போது பா ஜ க யில் உள்ளார். மத்தியில் ஆளும் கட்சி தானே அந்த மிரட்டல் தான்.

//என் நண்பர் ஸ்டாலின்  அவர்களின் உழைப்பால் திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது//

ஸ்டாலின்  அவர்கள் சாக்கிரதையாக  இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த பச்சோந்தியை கட்சியில் சேர்க்க கூடாது.

கடைசியாக..

//வாழ்க சாதிய மறுப்பு ... ஹி ஹி ஹி//

என்ன ஒரு ஆணவம்.. பொது இடத்தில்  ஹி ஹி ஹி என்று சிரிக்கும்  அளவிற்கு வந்து விட்டது.

நெஞ்சு பொறுக்குதில்லையே..

9 கருத்துகள்:

  1. Why edit sekar answer? answer all question.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I will answer your question when you grow a pair and comment with your name. Till then, hold your thoughts.

      நீக்கு
    2. அவர் சொல்வதில் நியாயமிருந்திருந்தால் உண்மையான அடையாளத்துடன் வந்திருப்பார்.

      நீக்கு
    3. for answering the question why you need name....you feel guilty on your task...else what....

      நீக்கு
    4. Guilty.... Nice one... Let me know once they get dropped.On a serious note.. You gotta come out with your identity, and I have all the answers. Be a man.. (or a woman.. if you are ) You just cant be a coward and ask question.

      நீக்கு
  2. சாதி என்ற அவலத்தை பார்ப்பான் மட்டும் தூக்கி பிடிப்பதில்லை. பல மருத்துவ படிப்பு படித்தவர்கள் நடத்தும் கட்சிகள், சாதி கட்சிகள் இந்த அவலத்தை மூடத்தனமாக பிடித்து கொண்டு தொங்குகிறார்கள். இவர்கள் எதற்கு கல்வி கற்றார்கள் என்று தெரியவில்லை. சாகும் போது கூட அறிவு தெளிவு இல்லாமல் சாதியை போற்றுகிறார்கள். பார்பான் என்றும் நேராக சொல்ல மோத மாட்டான். அவனுக்கு இங்குள்ள அற்ப எண்ணம் கொண்ட சாதி கட்சிகளே கவசம்.

    பதிலளிநீக்கு
  3. சேகர் சொல்வது யதார்த்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்க்கு சுபவீயின் பதில்தான் படு செயற்க்கையாகவாவும் யதார்த்தத்தை மீறியும் இருக்கிறது ...பார்ப்பன எதிர்ப்பு என்பது பழைய விஷயம் ..தற்போது பயன் படாது ..ஆனால் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதை பயன் படுத்தலாம் அதைத்தான் சுபவீ செய்கிறார்... சேகர் யதார்த்தமாக இருக்கிறார் என்பதுதான் எனக்கு தோன்றுகிறது ..

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...