செவ்வாய், 27 ஜூன், 2017

அரளி !

அருகில் சென்றேன்
அதிர்ந்து நின்றேன்
அழகின் இலக்கணம்
அயர்ந்தேன் ஒரு கணம் .

அவளும் தமிழா
அசையில் உமிழா
அவளுக்கு என்றேன்
அருகே சென்றேன்

அனைத்தவனுக்கு மட்டும்
அவளுக்கு எப்படி கிட்டும்
அடியேன் பெயர் செவத்தி
அடுத்தவளோ வெள்ளைச்சி.
அல்ப ஆசைக்கு தோற்க
அழகிற்கு அழகு சேர்க்க
அறுவடைக்கு துணிந்தேன்
அந்தாபத்தை எங்கே உணர்ந்தேன்.
அரளி அரளி
அலறல் கிளறி
அசரீரி ஒன்று
அலைபோல் இன்று .
அறிந்தேன் தருணம்
அடித்தேன் கரணம்
அரைகல் தூரம் சரணம்
அதை மீறினால் மரணம்..
அரளி !

1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...