Friday, June 16, 2017

கிரிக்கெட் : நாட்டை பிடித்த ஏழரை ..


மீள் பதிவு தான் !

இந்த பதிவை ஆரம்பிக்கும் முன் ஒரு காரியத்தை சொல்லி கொள்கிறேன். கிரிக்கட் விளையாட்டை மிகவும் விரும்பி ரசித்து விளையாடியவன் அடியேன். விளையாடினது மட்டும் அல்லாமல் தொலைகாட்சியில் இந்த ஆட்டத்தை அதிகமாக பார்த்து நாட்களை தொலைத்தவனும் நான் தான். இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நுழைந்து அஜாருதீன் – மாலிக் (அக்ரமும் தான்) – ஹன்சி போன்றவர்கள் அதில் ஈடுபட்டார்கள் என்று தெரிந்தவுடன் இந்த விளையாட்டை அறவே வெறுத்து விட்டு விட்டேன். இந்த கேடு கெட்ட ஆட்டம் நாட்டை மேலும் கெடுக்க வந்தது தான் ஐ பி ல் …

ஐ பி ல் … இந்த சனியன் உருவானதின் காரணமே ஊழல் தான் . இதை உருவாக்கியவர் லலித் மோடி என்று அவருக்கு வேண்டிய சிலர் பாராட்டி புகழ்ந்து தள்ளினார்கள் .
யார் இந்த லலித் மோடி . ஒரு குஜராத்தி வியாபார குடும்பத்தில் பிறந்தவர். தனது வாலிப வயதில் அமெரிக்காவில் கல்லூரி படிப்பு படிக்க வந்து இருக்கையில், அமெரிக்க நாட்டில் கோக்கைன் (Cocaine ) என்னும் போதை பொருளை கடத்தியதர்காகவும் மற்றும் வேறு ஒரு நபரை “கிட் நப் ” பண்ணியதர்காகவும் இங்கே கைது செய்ய பட்டார். இங்கே உள்ள நீதி மன்றத்தில் தன் தவறை ஒப்பு கொண்டு சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து அது முடிந்ததும் இன் இந்த பக்கம் எட்டி பார்க்காதே என்று இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப பட்டார். இந்த புகழ் பெற்ற மோடி தான் ஐ பி ல் உருவாக்கியவர் .அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்கு மத்தியில் NBA மற்றும் NFL போன்ற ஆட்டங்களின் விதிமுறைகளை காப்பி அடித்து ஐ பி ல் என்ற சனியனை உருவாக்கினார் .

இவருக்கு இவர் மனைவியின் மூலம் ரெண்டு பிள்ளைகள், இவர் மனைவிக்கு மற்றொரு திருமணம் மூலம் இன்னொரு பிள்ளை ( அது சரி.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் .. நம்ம நாட்டு .. கலாசாரம் என்ன ? மண்ணாங்கட்டி என்னன்னு சொல்லு கொண்டு திரியுறோமே … நம்ம நாட்டு பிரபலம் யாரை பார்த்தாலும் ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டி, பெரும்பாலான அம்மணிகள் அடுத்தவ வீ ட்டுகாரனோடு உறவு …. என்னத்த சொல்ல.. கல்யாணம் ஆனவர் ஆகலை என்று சொல்றார், கல்யாணம் ஆகாதவர் ஆனவர் போல் நடிக்கின்றார்..அதை பத்தி இன்னொரு பதிவில் பார்ப்போம்.)
இந்த ஐ பி ல் மூலம் நம் நாட்டிற்க்கு வந்தது முழுவதுமே சனி மேல் சனி தான். அரசியலிலும் வியாபாரத்திலும் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற இந்த சனியன் உதவ போனது நாடறிந்த விஷயம். இந்த விளையாட்டு இப்போது விபரீதமாக மாறி , காலை சுற்றிய பாம்பு இப்போது நாட்டையே விழுங்க போகிறது.
சென்ற வருடம் சஷி தரூர் அவர்களின் மனைவி சுனந்தா மர்மமான முறையில் இறந்தார் . நம்ம “சுனா சானா” இது ஐ பி ல் கிரிக்கட் சம்மந்தப்பட்ட கொலை என்றார். நெருப்பு இல்லாமல் புகையாதே.
இந்த ஐ பி ல் ஆட்டத்தில் கருப்பு பணம் கோடி கணக்கில் புரள , நம்ம ஊர் கருப்பு பண முதலைகள் உனக்கு எனக்கு என்று போட்டி போட்டு கொண்டு அணிகளை வாங்க ஆரம்பித்தனர். இதற்கு எல்லாம் தலைவர் நம்ம போதை பொருள் கடத்தல் ஆசாமி லலித் மோடி .
இந்த சனியன் துவங்கிய இரண்டே வருடத்தில் இவர் மேல் 1700 கோடி ஊழல் என்ற புகார் எழுந்தது . புகார் என்னவோ, 1700 கோடிதான், ஆனால் உண்மையில் சொல்லபோனால் பல்லாயிரகணக்கான கோடிகளை கடந்து இருக்கும் என எண்ண படுகின்றது .
தன் மேல் இந்த புகார் எழுந்தவுடன் மோடி இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்று அங்கே தங்கிவிட்டார். அங்கே இருந்து கொண்டு சும்மா இருக்காமால் ஆட்டம் பாட்டம் களியாட்டம் என்று இவர் வாழ்க்கை போய் கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் இவரை கைது செய்ய கோரி காங்கிரஸ் (அவங்களுக்கு போய் சேர வேண்டியது அனுப்பி வைக்கவில்லை போல் உள்ளது) சர்வதேச அளவில் நடவடிக்கை எடுத்தது.
இந்த நேரத்தில் தான் , நம்ம ஆசாமிக்கு இங்கிலாந்து நாடு சலித்து விட்டது. வங்கியில் கோடி கணக்கில் ஊரான் சொத்து, இவர் பெயரில், அதை எப்படி செலவழிப்பது என்று யோசித்து , தம் நெருகிய தோழி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை நாடினார். என் மனைவிக்கு புற்று நோய், நான் உடனடியாக போர்சுகல் நாட்டிற்க்கு செல்லவேண்டும், உங்கள் பதவியை  வைத்து எனக்கு எப்படியாவது பயணம் செய்ய தேவையான சான்றிதல்களை வாங்கி தாருங்கள் என்று சொல்ல சுஷ்மா உடனடியாக மனிதாபமான முறையில் இதை வாங்கி தந்தார்.
வெறும் வாயை மெல்லுவதில் வல்லவரான அர்னாப் கோஸ்வாமிக்கு இது “பபுள் கம்” கிடைத்தமாதிரி அல்லவா?
இது சுஷ்மா செய்த தவறு.. என்றும் .. சுஷ்மாவின் கணவன் இந்த போதை பொருள் கைதிக்கு இருபது வருடங்களாக வாதாடும் வக்கீல் என்றும் மற்றும் சுஷ்மாவின் அருமை மகள் தான் இந்த ஆசாமியின் தற்போதைய வக்கீல் என்றும் உலகிற்கு சொல்லி கொடுத்தார்.
இதை அறிந்தவுடன் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகள் .. இதுதான் சந்தர்ப்பம் என்று .. சுஷ்மா உடனே பதவி விலகவேண்டும் என்று போராட்டம் நடத்த .. அருண் ஜெயிட்லி , அமித் ஷா , ராஜ் நாத் போன்ற தலைவர்கள் .. இது சுஷ்மா அவர்களின் நல்ல குணத்தை தான் காட்டுகின்றது, ஒரு தனி மனிதனின் கஷ்டத்தை புரிந்து இவர் இந்த உதவியை செய்தார் என்று சொல்லி ..” ஆடு நனைய ஓணான் அழுத” கதையை நமக்கு நினைவு படுத்தினார்கள் .
தற்போதைய நிலவரம் …
பிரதமர் மோடி அவர்கள் … இதுவரை இதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஏன் .. ஒரு செல்பி கூட போடவில்லை.
சுஷ்மா அவர்கள் இன்னும் இந்த பிரச்சனையில் இருந்து மீளவில்லை. பயணசீட்டு கிடைத்த லலித் மோடி ஊரார் பணத்தில் பலநாடுகளுக்கு பிரயாணம் (போதை பொருள் கடத்துவது என்பது அமெரிக்காவில் பெரிய குற்றம், அதனால் மோடி அவர்கள் இங்கே வர முடியாது) , அமர்க்களம் , அட்டகாசம் … என்று இருக்கையில் BJP இனி தனக்கு எந்த உதவியும் செய்யாது என்று அறிந்து….
என்னை அழிக்க நினைத்தால், உங்கள் எல்லாரையும் அழிப்பேன் என்று சபதமிட்டு ஒரு திடுக்கிடும் தகவலை கொடுத்து அடுத்த பிஜேபி தலைவருக்கு ஒரு ஆப்பு வைத்தார்.. அது என்ன? அடுத்த பதிவில் பார்ப்போம்.
பின் குறிப்பு :
இந்த இந்திய திருமண கலாசாரத்தை பற்றி இப்படி எழுதி இருகின்றீர்களே … உதாரணம் தர முடியுமா என்று கேட்பவர்களுக்கு …
உங்களுக்கு தெரிந்த இந்திய பிரபலங்கள் ஐந்து பேரை கூகிள் செய்து பாருங்கள் .. நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

No comments:

Post a Comment

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...