வியாழன், 23 பிப்ரவரி, 2017

இன்னாத்த எழுதி தொலைப்பது..!

இந்த வருடம் துவங்கியதில் இருந்தே.. இன்னாத்த எழுத போறோம் என்கிற ஒரு நினைப்பு.

எழுத துவங்கி மூன்று வருடமாயிற்று. வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதி முடித்தாகிவிட்டது.

மொத்த சம்பவமே இம்புட்டு தானா ? நல்ல கேள்வி.

மற்ற சம்பவங்களை எழுத முடியாதே. அதனால தான்.

சரி..

இங்கே அமெரிக்க வாழும்  முறை பற்றி எழுதினா.. இதோ வந்துட்டாரு
"பீட்டர்ன்னு" பின்னூட்டம்.

இந்திய நிலைமையை எழுதினா .. நீ தான் இது எல்லாம் வேண்டாம்னு கிளம்பிட்டியே .. இப்ப எதுக்கு எங்களை பற்றி என்ற பின்னூட்டம்...

தமிழக அரசியல் பற்றி எழுத மனமும் இல்ல.. இனிமேல் அதைப்பற்றி எழுத குணமும் இல்லை. சொன்னா வெக்க கேடு சொல்லாக்கட்டி மானக்கேடு.



சினிமாக்கள் பற்றி எழுதலாம் ... ஆனா அதுக்கு படம் பார்க்கணுமே.. அந்த நல்ல பழக்கம் தான் இல்லையே.

விளையாட்டு துறை.. அஜாருத்தீனுக்கு நன்றி. மருந்துக்கு கூட அந்த பக்கம் போறது இல்லை.

சமையல் குறிப்பு.. வருடம் ஏற ஏற சமையல் குறைந்து விட்டது. மருத்துவர் எதையுமே சாப்பிடாத.. புள் பூண்டு மேஞ்சிட்டு அப்படியே தூங்கிடுன்னு சொல்றாரு.


பின்ன எதை பத்தி எழுதுவது.

அருமை நண்பன் தண்டபாணியின் வேளையில் சற்று மாற்றம். ஊரிலே இருப்பது இல்ல. அவன் இருந்தாலாவது நிறைய எழுத விஷயம் தருவான்.

ராசாதிக்களை பற்றி எழுதலாம்னா .. அவளுகளும் வளர்ந்து கொண்டே போறாளுங்க. நம்மிடம் பேச கூட நேரம் இல்லை.

அம்மணி ... அந்த பேச்சே வேண்டாம்..

எதை பத்தி எழுதுவது.

பேசாம .. ரொம்ப நாளா மனதில் சேர்த்து வைச்சி இருந்த 1800  வருடங்களை சார்ந்த தமிழ் தொடர்கதையை ஆரம்பிச்சிடலாமா?

என்ன சொல்றீங்க..? 

4 கருத்துகள்:

  1. மெகா சீரியல் மாதிரி இல்லாமல் இருந்தால் சரி...! ஆரம்பியுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. விசு,

    சிந்துபாத் கதை மாதிரி எதுவும் ஆரம்பிக்கப் போறிங்களா?

    பதிலளிநீக்கு
  3. இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும்...அதனால் அந்த ஆயிரத்து எண்ணூறு வருடம் பழமையான தொடர்கதையையே ஆரம்பித்துவிடுங்கள்.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...