என் வலைத்தளம்!

Saturday, January 28, 2017

ஒருதலை பட்சம்...

நேற்று  "இந்த கவர்னர் சனியனை என்ன செய்வது" என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.

அதில் மெரினா போராட்டத்தில் நான் கண்ட நன்மை தீமைகளை   சுட்டி காட்டி விட்டு ..பின்னர் ராதா ராஜன் மற்றும் சண்முகநாதன் போன்றோர்களின் கேவலமான போக்கை கண்டித்து எழுதி இருந்தேன்.

அந்த பதிவிற்கு ஒரு  பெயர் சொல்ல விரும்பாத ஒரு நபரிடம் (இந்த பெயர் சொல்ல விரும்பாதவர்கள் .. கருத்தை நாம் எப்போது பொருட்படுத்துவதே இல்லை, இருந்தாலும் இந்த அறிவுஜீவிக்கு சில வார்த்தைகளை சொல்லியாகவேண்டும் என்ற நிர்பந்தம்)   பின்னூட்டம்  வந்தது. அதை இங்கே படியுங்கள்.



//சரியா சொன்னிங்க,. இந்த பாதிரியார் சனியனுங்களும் இப்படி தான். நீங்க அமெரிக்கால இருக்கிறதால் உங்களுக்கு தெரியாது. இங்க டெய்லி பாதிரியார்களின் அக்கபபோர் தான். பாதிரி சனியனுங்க ஏதாவது பண்ணி தொலைக்க வேண்ணுயது. அதுக்கு போபு மன்னிப்பு கேட்க வேண்டியது. சண்முகநாதன்கள் கிறிஸ்தவத்திலும் இருக்க தானே செய்வான்கள்.//


இந்த கருத்தை எழுதியவருக்கு முதலில் ஒரு விண்ணப்பம். முதலில் தங்களின் உண்மையான பெயரை சொல்லி கருத்தை வையுங்கள். அதுதான் ஒருத்தருக்கு அழகு.  பெயர் சொல்லி கூட கேள்வி  கேட்க தைரியமில்லாமல் இருந்தால் என்னையா மனிதர் நீர்.

சரி.. உங்கள் பின்னூட்டத்திற்கு வருவோம். நான் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே பாதிரியார் சனியங்களின் போக்கு எனக்கு தெரியாது என்றீர்கள். உண்மை தான். எனக்கு தெரிந்தவற்றை பற்றி நான் எழுதுகிறேன். அந்த பாதிரியார் சனியங்களின் கேவலமான நடத்தையை தான் தாம் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள்.. அதை பற்றி தம்மை போல் நால்வர் எழுத வேண்டியதுதானே.

உங்களுக்கு ஒரு சிறிய அறிவுரை. நாளையே தங்களின் உண்மையான பெயரை வைத்து ஒரு பதிவு ஆரம்பியுங்கள். தங்கள் கண்ணுக்கு தெரியும் அனைத்து  பாதிரியார் சனியங்களை பற்றியும் அதற்கு மன்னிப்பு கேட்க்கும்  போப்பை பற்றியும் எழுதுங்கள். இந்த சனியங்களின் கேவலமான நடத்தையை நாங்களும் அறிவோம்.

அப்படி எழுதும் போது தைரியமாக தங்களின் பெயரை போட்டு எழுதுங்கள்.

நான் ஏன் இப்படி எழுதினேன் என்று கேட்கும் உரிமையே பெயர் சொல்ல பயப்படும் உனக்கு இல்லை.. நீயோ நான் ஏன் இதை எழுதவில்லை என்று கேட்கிறாய்.

பக்தனாகிய  உனக்கு இன்னொரு விஷயம். நீ கண்டிப்பாக சுனா சானா வின் ரசிகனாக தான் இருப்பாய். அவரின் தளத்திற்கு சென்று  சில விஷயங்களை கேள்..

சோனியா காந்தி என்ன படித்தார் ( இந்த சனியன் பிடித்த காங்கிரசை  மறக்க நினையஹாலும் இந்த பக்தர்கள் விடமாட்டேன் என்கிறார்களே) எங்கே கக்கூஸ் போனார்.. என்று தரம் பிரித்து சொல்லும் இவரிடம்..

மோடி என்ன படித்தார் .. ஸ்மிரிதி இராணி என்ன படித்தார் என்று கேட்டு பாருங்கள் .. பதில் வராது.

அரசியலில் அனைவரின் மொள்ளைமாரித்தனத்தை அறிந்து இருக்கும் இவர் சிலரை மட்டுமே எதிரி என்று கருதுவார். அவர்களை பற்றி தான் எழுதுவார்.

Bottom line is " Start your own Blog with your identity and write about the wrong doings of people around you, instead of taking offense"

And BTW, one last question.. Does the wrong doings of Paathriyaar Saniyangal Justify the actions of Raadha Raajan and Shanmuganaathan".

I am eagerly waiting for your reply (offcourse with your name). And if you cant answer with your identity dont bother writing! 

1 comment:

  1. மேலும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டாம்...

    Settings --> Posts, Commands and sharing ---> Who can comment ---> Select Registered User --> PROBLEM SOLVED...!

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...