புதன், 4 ஜனவரி, 2017

எங்கே ஆளையே காணோம்...?

அலை பேசி அலறியது...

விசு கதைக்கிறேன்...

என்ன வாத்தியாரே... ஈழத்து பாணியில் ....

சாரி .. பாணி... விஷயத்த சொல்லு..

என்னத்த சொல்றது..

சரி பின்னேரம் சந்திப்போம்...

நீ ஏன் வாத்தியாரே, எவனோ எழுதி கொடுத்ததை படிக்கிற மாதிரி பேசுற ?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

சரி.. எங்கே ஆளையே காணோம்...

இங்கே தான் நிக்கிறேன்..

என்னாது நிக்கிறியா?

ஓம்..

வாத்தியாரே .. என்ன கடுப்பு ஏத்துற...உனக்கு என்ன ஆச்சி..?

ஒன்னும் இல்ல தண்டம்... அம்மணியோட ஒன்று விட்ட சகோதரி... சுவிஸில் இருந்து குடும்பத்தோட வந்து இருக்காங்க.. அவங்க, அவங்க வீட்டுக்காரர் .. ரெண்டு ராசாத்திங்க ...



அப்படி போடு.. நீ கதைக்கிறேன்னு ஆரம்பிக்கும் போதே நினைச்சேன். எவ்வளவு நாள்...

டிசம்பர் 23   வந்தாங்க.. ஜனவரி ரெண்டு வெளிக்கிட்டாங்க..

வெளிக்கிட்டு...அடப்பாவி.. கிட்ட தட்ட 10  நாள் .. எதுவுமே ஜீரணிக்கலையா?

தண்டம் .. அந்த வெளிக்கி இல்லை... இவங்க வெள்ளிக்கிட்டேன்னு சொன்னா .. கிளம்பிட்டாங்கன்னு அர்த்தம்.

சரி.. அவங்க உங்க அம்மணியோட தமிழில் பேசி இருப்பார்களே.. ஏதாவது புரிஞ்சுதா?

கொஞ்சம் அங்கே இங்கே தடுமாறினாலும்... எதோ புரிஞ்சது.

அவங்க ராசாத்திங்க .. அவங்க எந்த மொழி..

தண்டம்.. நல்லா கேட்ட தண்டம். நம்ம எல்லாம் வெக்க பட்டு தலை குனியனும்.

சரி, குனிஞ்சினே சொல்லு...

தண்டம்.. ரெண்டு பிள்ளைகளுக்கும் முதல் மொழி தமிழ்.. ஒரு உச்சரிப்பு பிழை இல்லாமல் அவ்வளவு அழகா பேசுறாங்க..

ஆங்கிலம்..?

ஆங்கிலம் அவங்களுக்கு புரியுது தண்டம்.. ஆனால் சரளமான பேச முடியல.

அப்ப பள்ளி கூட படிப்பெல்லாம்..

அதெல்லாம் பிரெஞ்சு மொழியில்.. சுவிஸ் நாட்டின் முதல் மொழி பிரெஞ்சு.

அடே... இம்புட்டு நாளா நான் சுவிஸ் நாட்டில் ஸ்விஸ்ஸ்னு எதோ ஒரு மொழி இருக்குனு நினைச்சிட்டு இருந்தேன்...

உனக்கு என்ன மூளை வருத்தமா? இது கூடவா தெரியாது..

என்னாது .. மூளையை வறுத்தியா? அதை கொஞ்சம் கிரேவியா பண்ணா தானே நல்லா இருக்கும்...

டேய்...மூளை வருத்தம்னா... மண்டையில் பிழைன்னு அர்த்தம்..

சரி...மூளை வருத்தம்னா... மண்டையில் பிழைன்னு அர்த்தம்..அப்ப மண்டையில் பிழைன்னா என்ன அர்த்தம்...?

மண்டையில் பிழைன்னா,உனக்கு கிறுக்கு பிடிச்சி இருக்கான்னு...அர்த்தம்..

அதை ஏன் அப்படி... மூளை வறுவல்... தலை கறின்னு.. நேரா சொல்ல வேண்டியது தானே...

இல்ல பாணி.. அந்த அம்மணியோட வீட்டுக்காரர் .. ரெண்டு கேள்வி கேட்டார் பார்.. ரொம்ப கேவலமா போச்சு...

என்ன கேட்டார்..?

நம்ம ஊரு அரசியல் பத்தி பேசிட்டு.. உங்களுக்கு எல்லாம் என்ன "மூளை வருத்தமா? அல்ல மண்டையில் பிழையானு' கேட்டார் ...

சரி விடு.. அவர் கேட்டதில் என்ன தப்பு...? சரி....உன்னிடம் ஒன்று வினவலாமா?

விளங்கவில்லை...

உன்னிடம் ஒன்று வினவலாமா..?

வினவலாமானா என்னன்னு விவரமா சொல்லு...


வாத்தியாரே , அவங்கள மாதிரியே நானும் சுத்தமான தமிழில் கதைக்க முயற்சித்தேன்.

டேய்.... அந்த மொழியை நம்ம கதைச்சா வடிவா இருக்காது... விசுரா இருக்கும். நம்ம மொழியில் பேசு.

உன்னை ஒன்னு கேக்கணும்..

கேளு...

ஒரு ரெண்டு மாசமா பதிவு எதுவும் போடாமல் அமைதியா இருக்கியே .. உன் வாசகர்கள் என்னை பத்தி என்ன நினைப்பாங்க..

என்னடா சொல்ற? குழப்புற...

வாத்தியாரே.. உன் பதிவில் முக்காவாசி என் கதை தானே... அதை தானே அம்புட்டு பேரும் விரும்பி படிப்பாங்க, அதை எல்லாம் எடுத்து விடு வாத்தியாரே...

சரியா சொன்ன பாணி... இருந்தாலும்.. .

இருந்தாலும்...முழுக்க சொல்லு..

கடைசி ரெண்டு மாசம் ரொம்ப பிசி பாணி..

சரி.... ரெண்டு மாசம் பிசி.. இப்ப எழுத வேண்டியது தானே...

இல்ல பாணி.. இந்த மாசம் கூட நேரமே இருக்காது...இதோட அடுத்த மாசம் 15  போல தான் எழுத முடியும்..

ஏன்..அப்படி என்ன பிசி...

பாணி.. மூத்தவளுக்கு கல்லூரி தேடும் நேரம்... வார வாரம் கோல்ப் போட்டி... கணக்கு பிள்ளை வேலை வேறு.. ஆண்டு இறுதி... அப்படி நிறைய..

என்ன வாத்தியாரே.. தமிழக அரசியல் நடக்கிறத வைச்சி ... ஆயிரக்கணக்கில் நையாண்டி பண்ற நேரத்தில்...

தண்டம்.. தமிழகத்தின் அரசியல் பத்தி இனி எழுத போறது இல்ல.. ரொம்ப கேவலமா போச்சி தண்டம்.. அதை அப்படியே விட்டுறது தான் நமக்கு நல்லது.

சரி.. நிறைய பேர் உன் பதிவ விரும்பி படிப்பாங்களே...அவங்களுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்தாவது சொன்னீயா?

ஐயோ.. சுத்தமா மறந்துடிச்சி தண்டம்..

என்ன வாத்தியாரே. ..இதை கூடவா மறப்பாங்க... உனக்கு என்ன மூளை வருத்தமா... இல்லை மண்டையில் பிழையா?

டேய்....

வாத்தியாரே ... கடைசியா ஒரு விஷயம்...

சொல்லு...

இந்த ஒன்று விட்ட சகோதரின்னு சொன்னீயே... அந்த "  ஒன்று விட்ட " அப்படி ஒரு பேர் எப்படி வந்தது வாத்தியாரே...

பாணி.. நம்ம பத்தி நாமே அறியாத விஷயத்தை கூட  "ஒன்னு விடாம " அறிஞ்சி இருப்பாங்க இல்ல... அதுதான்.. " ஒன்று விட்ட " சகோதரி..

சோக்கா சொன்ன வாத்தியாரே...

பின் குறிப்பு :

பிரியமானவர்களே... உங்கள் அனைவருக்கும் அடியேனின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

11 கருத்துகள்:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்.... வேலைகளாள் நீங்கள் பீஸியாகத்தான் இருப்பீர்கல் அதற்க்காக பதிவு எழுதாம இருக்கலாமா தப்பு இல்லையா?

    பதிலளிநீக்கு
  2. உங்களை தான் ஆளை காணோம்...!

    http://dindiguldhanabalan.blogspot.com/2017/01/Find-Thirukkural-Chapter.html

    பதிலளிநீக்கு
  3. ஒன்று விட்ட சகோதரிகளால்
    பிரச்சனை இல்லை
    இந்த உடன் பிறவா...க்களால்தான்
    ஆயிரம் தொல்லை

    பொறுத்து இருந்து பார்ப்போம்

    தங்களுக்கும் தங்கள்
    குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சுவிஸ் நாட்டின் முதல் மொழி பிரெஞ்சு.??//தப்புத்தப்பா தண்டவாளத்தின் நின்று தண்டோரா போடுவது யாருப்பா?அவங்க கொஞ்சம் இங்கிட்டு வந்திட்டு போங்க. பெரிய்ய்ய கட்டுரை எழுதி விளக்கம் சொல்ல இப்போதைக்கு நேரம் இல்லை. அம்பாலிக்கா வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தான் தவறாக புரிந்து கொண்டு இருப்பேன். பிரெஞ்சு டச் டௌச் பரவலாக பேசப்படுகின்றது என்று சொன்னார்கள்.

      தங்கள் கட்டுரையை எழுதுங்கள். புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

      நீக்கு
  5. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. புத்தாண்டு வாழ்த்துகள் விசு! இப்பதான் களைகட்டுது. சீக்கிரம் வாங்க. வந்து எழுதுங்க!!!

    கீதா: //நீ ஏன் வாத்தியாரே, எவனோ எழுதி கொடுத்ததை படிக்கிற மாதிரி பேசுற ?// அஹஹஹ் ஹப்பா நம்ம தமிழ்நாட்டுக்கு ஒரு தலைவர் கிடைச்சுட்டாருப்பா!!!! முதல்ல இங்க வந்து சீட்ட பிடிச்சுருங்க அப்பால சென்டருக்குப் போயிக்கிடலாம் அதென்ன கஷ்டமான வேலையா என்ன...!!!

    பதிலளிநீக்கு
  7. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு..... மகிழ்ச்சி.

    புத்தாண்டு வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  8. எங்கே ஆளையே காணோம்...? வாங்க வாங்க :)

    பதிலளிநீக்கு
  9. அண்ணே.. புத்தாண்டு நல்வாழ்த்துகள் (நல்வாழ்த்துக்கள் தப்பாமே)

    Switzerland has four national languages: French, German, Italian and Romansh. English, though not an official language, is often used to bridge the divides. German (both High German and Swiss German) is spoken by about 63% of the population, French by about 23%, and Italian by about 8%

    http://traveltips.usatoday.com/people-speak-switzerland-109672.html

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...