என் வலைத்தளம்!

Thursday, November 10, 2016

S.V.Sekar....அந்த வீட்டில் 2000 பண்டல் இருக்கு.... OVER!

நடிகர் எஸ் வி சேகர்! இவர் சினிமா நடிகர் என்று அறிவேன். அறிந்த நாடக கலைஞர் கூட..இவரின் படிப்பறிவு பொது அறிவை பற்றி எனக்கு தெரியாது.

ஆனால் கடந்த வருடங்களில் இவர் ஒவ்வொரு அரசியல் காட்சிகளாக மாறும் போது.. இவர் காலத்துக்கேற்ப கோலம் போடுபவர் என்று நான் அறிந்தேன். அதில் இவரின் சுயநலமும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தது

இப்படி கட்சி மாறி மாறி கடைசியாக இவர் சேர்ந்த கட்சி தான் பி ஜெ பி . இதில் சேர்ந்ததில் இருந்து தனது சட்டை பாக்கெட்டில் ஒரு இந்தியா கொடி வைத்து கொண்டு அலைந்தார் (ஒரு வேளை சேருவதற்கு முன்னாலும் இருக்கலாம், நான் பார்த்தது இல்லை)

இந்த கட்சியில் சேர்ந்ததில் இருந்தே மோடி அவர்களோடு எடுத்து கொண்ட படத்தை முகநூலில் போட்டு கொண்டு.. மோடி தன்
திருமணத்திற்கு வாழ்த்து சொன்ன மடலை முகநூலில் போட்டு.. தமிழக பா ஜா கா வை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.



மோடி அவர்கள் தான் தனக்கு பிடித்த ஆட்களுக்கு எந்த பதவி வேண்டுமானுல்லாம் தருவாரே (கல்லூரிக்கே செல்லாத ஸ்மிரிதி இராணி - கல்வி துறை அமைச்சர் உதாரணம்) அதே பணியில் சேகருக்கு   தணிக்கை துறையில் ஒரு பதவி போட்டு தர...

இவரோ... மோடி அவர்களின் துதி பாடுதலை வேற லெவெலுக்கே எடுத்து சென்று விட்டார்.

இந்த துதி பாடலின் உச்சக்கட்டம் தான் இந்த வீடியோ.

(அந்த கன்றாவியை பார்க்க மேலே சொடுக்குங்கள் 8.10ல் இருந்து பாருங்கள்... சிரிப்புக்கு நான் கேரண்டி ..)

புதிதாக வரப்போகும் ரெண்டாயிரம் ரூபாயை செயற்கை கொள் வைத்து எங்கு இருக்கின்றது என்று கண்டு பிடித்துவிடலாமாம். யாராவது எங்கேயாவது பண்டலாக வைத்து இருந்தால் , இந்த செயற்கை கொள் காட்டி கொடுத்து விடுமாம்... அதை வைத்து அரசாங்கம் அதை எடுத்து கொள்ளலாமாம்.

என்ன ஒரு முட்டாள் தானம். இவர் கல்லூரியில் இளங்கலை படித்தவர் என்று எங்கேயோ படித்த நினைவு. இந்த படிப்பை தான் என்ன  சொல்வது.

கேட்கிறவன் கேனையாக இருந்தால் , மோடியே விண்வெளி சென்று அந்த செயற்கை கோளை இயக்குவார் என்று கூட இந்த அறிவுஜீவி சொல்வார் ( மோடி விண்வெளி செல்ல வாய்ப்பு இருக்கின்றது, அது வேற விஷயம்).

திரு சேகர் அவர்களே... செயற்கை கொள் காட்டி கொடுப்பது இருக்கட்டும்.. தங்கள் திருவாளரின் தோழி சுஷிமா டாட்டா காட்டி அனுப்பி வைத்தார்களே.. லலித் மோடி... அவரிடம் இல்லாத கருப்பு பணமா? முதலில் அதை எடுத்து வாருங்கள்.

நானும் கணக்கு பிள்ளை தான். மோடியின் இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பல விதங்களில் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில் இதனால் பெரிய அரசியல் - வியாபார முதலைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் வரப்போவது நடுத்தர பணக்காரர்களின் பணமும் மட்டுமே.

ஏழை எளியவர்களுக்கு இதனால் நிறைய பிரச்சனை. ஆனால் நம் இந்தியாவில் ஏழைகளை பற்றி கவலை பட யாரும் இல்லை.

இந்த நடவடிக்கையை எடுத்ததால் மோடி அவர்களை நிச்சயம் பாராட்டலாம், ஆனாலும் இந்த அறிவு ஜீவி போல் ... முட்டாள்தனமாக பேச கூடாது.




6 comments:

  1. namakkati alluthu natta innum rendu varusam paakki athukkull india for sale

    ReplyDelete
  2. இவரையெல்லாம் ஒரு அறிவு ஜீவின்னு சொல்ல கூடாது நண்பரே! கோமாளி வேஷம் போடுறவர் கோமாளியாத்தான் இருப்பார் போல!

    ReplyDelete
  3. Can you write the pro/con of this move from accountant perspective pls?. Thx.

    ReplyDelete
  4. என்னது? சாட்டிலைட் கண்டுபிடிக்குமா? எஸ் வி சேகருக்கு முட்டியில் கூட மூளைதான் போல. இதோடு விட்டாரே. புதிய 2000 ரூபாய் நோட்டில் ஹெட் செட் இணைப்பு இருக்கிறது. அதன் மூலம் மோடியின் மண் கி பாத் பேச்சை கேட்கலாம் என்று சொல்லாமல் இருக்கிறார்.

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...