Wednesday, November 16, 2016

மத்தவன் உடைச்சா மண் குடம்.. மோடி உடைச்சா பொன் குடம்... !

சகபதிவர் கருத்து கந்தசாமி... அடியேனின் ஒரு பதிவிற்கு

//அண்ணே.. தப்பா நினைக்கப்படாது. நீங்க, யாசிர் அண்ணன் எல்லாம் மோடியின் நடவடிக்கையை பாராட்டினால்தான் அதிசயம்.. மோடி விவகாரங்களில் நீங்க ரொம்ப predictible.. வேற என்ன சொல்ல? நகைச்சுவை உங்கள் பலம். ஆனால், bias உங்கள் எதிரி. நகைச்சுவை (மட்டும்) தொடரட்டும்//.
பொதுமக்களின் மனநிலையை.. 


அவரின் மனம் திறந்த இந்த கருத்துக்கு  மிக்க நன்றி. இருந்தாலும் அடியேனின்  தன்னிலை விளக்கம் தரவேண்டும் அல்லவா.. அதனால் தான் இந்த பதிவு..

நன்றி கந்தசாமி அவர்களே.. உங்கள் கருத்து முற்றிலும் உண்மையே. அரசியலில் அடியேனின் எழுத்துக்கள் பொதுவாக "Baised " தான். அதை நான் எப்போதும் மறுக்கமாட்டேன். மறுக்கவும் இயலாது.


யாரோ ஒருவர் மோடியை தாக்கி போட்ட பதிவை மாற்றி அடியேன் கேடு கெட்ட காங்கிரஸின் தலைவர் ராகுலை கலாய்த்தேனே.. இதுவும் "Bias" தானே?

ஆனால் இந்த "Bias" மோடிக்கு மட்டும் அல்ல. எல்லா அரசியல்வாதிகளுக்கும். என்னை பொறுத்தவரை அரசியல்வாதி என்றாலே  அவன் எந்த கட்சியை  சார்ந்தவன் என்றாலும் பேராசைக்காரன், சுயநலவாதி என்ற ஒரே நினைப்பு தான்.

நீங்கள் நான் மோடிக்கு "Biased" என்று  கருதியதும் சரிதான். அவர்தானே ஆட்சியில் உள்ளார். அதனால் தான் அவரை பற்றி அதிகம் எழுத வேண்டிய அவசியம்.
அதிமுக மற்றும் திமுகவை 

என்னுடைய மற்ற பதிவுகளும் சரி ... முகநூல் ஸ்டேட்டஸ் களும் சரி.. ஒவ்வொருமுறை நான் எழுதும் போதும் ..

"கேடு கெட்ட காங்கிரஸ்" என்று தான் எழுதுவேன். ஜெயா மற்றும் கருணாநிதியை நான் கலாய்த்த காலாய்ப்புக்கு எல்லையே இல்லை.

 The Bottom line is, I could be biased, but thats not only towards "Modi" but towards every Politician.

நம் நாட்டு அரசியல்வாதிகளை தான் அன்றே Sir.வின்ஸ்டன் சர்ச்சில் என்ன அழகாக படம் பிடித்து காட்டிவிட்டான். இந்தியாவை விட்டு அவன் செல்லும் போது ...

“Power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre & men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles. A day would come when even air and water would be taxed in India.”


எவ்வளவு அழகாக சொல்லிவிட்டான்.


சரி .. இப்போது இன்றைய நிலைமைக்கு வருவோம். 5௦௦ -1௦௦௦ தடை செய்து ஏராளமான பொதுமக்கள் அலையும் போது.. கர்நாடகாவில் பிஜேபியின் மாஜி மந்திரி 5௦௦ கோடி செலவில் மகளின் திருமணம் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றார்.

இந்த வயித்தெரிச்சலுக்கு நாம் "கேடு கெட்ட காங்கிரெஸ்ஸை" அல்ல ஜெயாவை அல்ல கருணாவையா திட்ட முடியும்? மோடியின் அரசாங்கத்தை தான் திட்ட முடியும்?


இந்த பதிவிலேயே நான் மற்ற அரசியல்வாதிகளை கலாய்த்த கலாய்ப்புகளை தந்து இருக்கின்றேன்.

பின்குறிப்பு :

தங்கள் பின்னூட்டத்தில் அடியேனின் நகைசுவை உணர்வை பாராட்டி எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி.

No comments:

Post a Comment

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...