Friday, November 11, 2016

எஸ் வி சேகருடன் ஒரு நேரடி பேட்டி.

நாடக பிரபலம், சினிமா துறையில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்ட நடிகர் எஸ் வி சேகர் அடிக்கடி கட்சி மாறி, ஆளும் கட்சியே என் கட்சி என்ற புதிய விதியை நமக்கு வகுத்து தந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தற்போது இவர் சேர்ந்துள்ள கட்சி தான் பாரதிய ஜனதா பார்ட்டி (என்ன ஒரு முட்டாள்தனமான தகவல் என்று நீங்கள் கூறுவது தெரிகின்றது, ஆளும் கட்சி இது தானே.. இதில் தானே இருப்பார்)

இவர் அவ்வப்போது நாடகம் மற்றும் சினிமாவில் மட்டும் இல்லாமல்  வாழ்க்கையிலும் நன்றாக முட்டாள்தனமான பேசிச்சு பேசுவார்.

உதாரணத்திற்கு ... சில மாதங்களுக்கு முன்...

"இப்ப எல்லாம் ஹிந்தி தெரியாமல் சரவணபவாவில் கூட மசாலா தோசை வாங்க முடியாது"

என்று கூறினார்...நம்ம ஆட்கள் தான் சும்மா நின்றாலே கலாய்ப்பார்களே .... விடுவார்களா..?

நீங்க சர்வரிடம் மாசாலா தோசை ஆர்டர் பண்ணவேண்டியது தானே.... அதைவிட்டுட்டு மேசையை துடைக்கிறவனிடமும் பாத்திரம் கழுவுபவனிடம்  ஏன் ஆர்டர் பண்ணீர்கள் என்று கலாய்த்து விட்டார்கள்.

இந்த சேகர் அவர்கள், ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால் அந்த கட்சியின் தலைமையை புகழ்ந்து தள்ளி விடுவார். அதுமட்டும் இல்லாமல், இன்னொரு நாடக சினிமா பரிபாலமான விசு அவர்களையும் அந்த கட்சிக்கு அழைத்து வந்து விடுவார்.

இந்த கூத்தாடிகளிடம் ஒரு வேடிக்கை உள்ளது. என்ன விஷயம் என்றாலும் தங்களின் அபிப்ராயத்தை தமிழன் மேல் திணித்து விடுவார்கள்.

தற்போது மோடி அவர்களின் அறுவை சிகிச்சை நடவடிக்கை ( Surgical Strike)  தான் சேகரின் உலக மகா அதிசயம். மோடி அவர்களின் இந்த நடவடிக்கையில் நன்மை - தீமை, என்று இரண்டும் உண்டு.

ஆனால் நம் சேகரோ... இந்த நடவடிக்கையை பாராட்டி பேசுகையில் தாம் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை மறந்து விட்டு, ஒட்டுமொத்த தமிழனை எவ்வளவு பெரிய முட்டாள் என்று பாருங்களேன்.

இவர் ஐநூறு ருபாய் தாளில் கடலை வாங்கி சாப்பிட்டு கொண்டு (அவை இன்னும் இந்திய அரசாங்கத்தின் பணம்.) புதிதாக வரும் இரண்டாயிரம் ரூபாயை பற்றி பேசுகையில்..

"புதிதாக வந்துள்ள இந்த இரணடாயிரம் ரூபாயில் சாட்டிலைட் தொடர்பு உண்டு. இந்த பணத்தை யார் பதுக்கி வைத்தாலும் அது அரசாங்கத்திற்கு அறிவித்து விடும் அதை உடனே மோடி அரசாங்கம் கைப்பற்றும்".

என்ன ஒரு கேவலமான பேச்சு.

இவரை போலவே.. வேறு சில கூத்தாடிகளும்   வாய்க்கு வந்ததை பேசி கொண்டு...

கூட நடிக்க வந்த கூத்தாடிக்காக கட்டிய மனைவியையும் இரண்டு ராசாதிக்களையும் கைவிட்டு வந்தவர் கூறுகிறார்...

புதிய  தாளில் காதல் சின்னம் தாஜ் மஹால் இருக்கவேண்டும் என்று.

இன்னொருவர்.. அவர் வழியில்..."புதிய இந்தியா" பிறந்ததாம்.

அட பாவி.. கூத்தாடிகள் நாட்டு நடப்பை பற்றி பேசும் வரையில் ... புதிய இந்தியா உருவாகாது.

சரி.. இந்த சாட்டிலைட் ருபாய் பற்றி சேகர் பேசிய தகவல் அறிந்து நாம் அவரை சந்தித்தோம். இதோ அந்த பேட்டி..

சேகர் அவர்களே... இந்த சாட்டிலைட் ருபாய் பற்றி... தங்கள் கருத்து ...

நன்றி.. மோடி அவர்கள் வாழ்க.. அவரை நாம் எல்லாரும் இரு கை கூப்பி வணங்க வேண்டும்.

இருக்கட்டும்... இந்த சாட்டிலைட் இரண்டாயிரம் ரூவா பற்றி...

இரண்டாயிரம் என்றதும் நினைவிற்கு வந்தது.. என் மகன் நடிக்கும் மணல்கயிறு - 2  என்ற படத்தின் தலைப்பை மணல்  கயிறு -2000  என்று மாற்றி வைத்துள்ளோம்.

சந்தோசம் ... இந்த சாட்டிலைட் ரூவா பற்றி...

மோடி அவர்களின்   அச்சா தின் ஆரம்பித்து விட்டது. தமிழர்கள் நாம் பெருமை படவேண்டும்.

படலாம் ...இந்த சாட்டிலைட் ரூவா பற்றி...

மோடி அவர்களின் இந்த நடவடிக்கையை பற்றி பேசி கொண்டே இருக்கலாம். மோடி வாழ்க.. மோடி வளர்க...

யோ... இந்த சாட்டிலைட் ரூவா பற்றி பேச போறியா இல்லையா?

இப்ப ஏன் என்னோடு மோடிகிறீர்கள்.. சாரி மோதுகிறீர்கள்... பேசலாமே..

இந்த ருவாயில் சாட்டிலைட் தொடர்பு இருக்குன்னு உங்களுக்கு யார் சொன்னா?

சாட்டிலைட் மூலம் மோடி ஜப்பானில் இருந்து சொன்னார். ஜப்பானிலும் இதை அறிமுகப்படுத்துவதாக கேள்வி.

இருக்கட்டும்... இந்த ரூவாயை பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்க...

மோடி வாழ்க... இந்த ரூவாயை மாதம் ஒரு முறை காதிற்கு அருகில் வைத்தால் மோடி அவர்களின் "மான் கி பாத் " பேச்சை ரேடியோ இல்லாமலே கேட்கலாம் (முக நூல் நண்பருக்கு நன்றி)

மேலே சொல்லுங்க..

இந்த புது ரூவா நோட்டில் GPS பொருத்த பட்டுள்ளது.. அதனால் கணவன் இதை எப்படி செலவு செய்யுறானு மனைவிக்கும் மனைவி எப்படி செலவு செய்யுறானு கணவனுக்கும் உடனடியாக தெரிய வாய்ப்பு உள்ளது.

சந்தோசம் ... மேல அப்படியே டாப் கியர் போட்டு தூக்குங்க... ...

இதுல ஒரு கமெரா பொருத்தப்பட்டுள்ளது.. அதனால் இந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எங்கே இருக்கின்றது என்பதை பார்க்கலாம்..

என்று சேகர் சொல்லும் போது.. கூட வந்த காமெராமேன் காதை கடித்தார்.

விசு.. ஒரு நிமிஷம் .. பேட்டியை நிறுத்து.. அவசரமா ஒரு வேலை இருக்கு.

என்ன அவசரம்..

காலையில் எனக்கும் 4000  கிடைச்சது ... அதை பத்திரமா இருக்கட்டும்ன்னு  உள்ளாடையில் வச்சி இருக்கேன். இந்த கமெரா விஷயம் இப்ப தான் தெரிய வந்தது. அதை எடுத்து வேற இடத்தில வைச்சிட்டு வரேன்.
(நன்றி மலர்வண்ணன்)

சரி.. சேகர்... இந்த ரூபாயில் வேற ஏதாவது விஷயம்...?

வரதட்சணை .. மற்றும் கள்ளக்கடத்தல் அந்த மாதிரி ஏதாவது விஷயத்தில் ஈடுபட்டால் ...ஒரு சிவப்பு விளக்கு எரியும், உடனே போலீஸ் அங்கே போய் அவங்களுக்கு தேவையான லஞ்சம் வாங்கிக்குவாங்க.

வேற...

இந்த ரூவா பாக்கெட்டில் இருந்தா.. செல் போன் ரீ சார்ஜ் பண்ண தேவை இல்லை .. மோடி வாழ்க.

மேலே எதாவது சொல்லுங்க..

இந்த ருவாயில் நம்ம ஜாதகம் வேற இருக்கு. நம்ம பிறந்த தேதி நேரத்தை சொன்னா அது நமக்கு நம்ம ஜாதகத்தை சொல்லும்.

வேற...

ரெண்டு ரெண்டாயிரம் ரூவாயை ஒரே பர்சில் போட்டு ஒரு மணிநேரம் தனியா வைச்சா... மயில் குட்டி போதுமே.. அந்த மாதிரி இதுவும் குட்டி போடும்.

வேற..

இந்த மாதிரி பல விஷயங்க இருக்கு, எல்லாத்தையும் நானே சொன்னா எப்படி.. மீதி விஷயத்தை பின்னூட்டத்தில் மத்தவங்க சொல்லுவாங்க.. நீங்க அங்கே போய் படிச்சிக்குங்க.

நன்றி சேகர்...

மோடி வாழ்க...

3 comments:

 1. ஒரு பொருளாதார மேதையைப் பற்றிய தவறான கருத்தாக எனக்கு தோன்றுகிறது. ஜி.பி.எஸ் வைக்காத அரசை கண்டிப்பதை விட்டு விட்டு பொ.மேதையை குறை சொன்னால் எப்படி?.

  ReplyDelete
 2. அடேங்கப்பா...@!!!!! இவ்வளவு இருக்கா....! ஹா... ஹா....

  ReplyDelete
 3. என்னமோ போடா மாதவா... என்கிற மூடில் இருக்கு மொத்த இந்தியாவும்..
  இன்று ஆதரவுப் பதிவு செய்வோர் அடுத்த மூன்று மாதத்தில் என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்..
  தம +

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...