Wednesday, October 12, 2016

படித்த செய்திகளும் ... .மனதில் பட்டவைகளும்..


கடந்த சில நாட்களாக நிறைய செய்தி வந்து  இருக்கின்றது. அதை படித்து மனதில் பதட்டத்தை முகநூலில் பகிர்ந்து வந்தேன்.

என் முகநூலில் இல்லா நண்பர்களுக்காக.. இதோ..

தேவை படும் போது கண்டிப்பாக பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பார் - தமிழக பி ஜே பி .
சரியா சொன்னாங்க. அவருக்கு தேவை படும் போது கண்டிப்பாக வந்து பார்ப்பார்.

அட பாவீங்களே.. நான் எவ்வளவோ சொன்னேன் அந்த கேடு கெட்ட கவிதையை பார்க்க - கேட்க மாட்டேன்னு.
இல்ல., நீ கண்டிப்பா பார்க்கனும்ம்னு வற்பறுத்தி... நானும் அன்பு தொல்லைக்கு அடிமையாகி.. காலையில் பார்த்தேன்.
இதுவரைக்கும் ஆறு முறை வாந்தி...
அது சரி... இந்த சனியன் பாராட்டுறத எல்லாம் விடுங்க.. நடுவுல.. பயமா இருக்குன்னு ஒரு டயலாக் விட்டாரே...அது எதுக்கு?


நடிகர் மற்றும் எம் எல் ஏ கருணாஸின் தோலை பேசி எண் கிடைக்குமா? அவரிடம் ஒரு உதவி கேட்க வேண்டும்.
இங்கே என்னை ஒரு ஆள் ரொம்ப நாளா டார்ச்சர் பண்ணின்னு இருக்கான். கருணாஸ் அவர்கள் இந்த ஆளை பாராட்டி " நீங்க நல்லா இருக்கணும்" பாட்டை ஒரே முறை பாடினா போதும். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை.
ஒரே முறை.. கருணாஸ்.. ப்ளீஸ் .. பாடுங்க..!

அட பாவிங்களா ...
அடுத்ததாவது.....கூத்தாடி துறையை சாராத தமிழன் தமிழச்சி நமக்கு முதல்வரா வரணும்ன்னு ஏங்குது.
இங்கே என்னடானா கதையே வேற மாதிரி போகுது.
மக்களே... சினிமா துறையில் இருந்து வந்த கடைசி தலைமை நேற்றோடு முடியட்டும்.
நெஞ்சு பொறுக்குதில்லையே..

நான் அப்பவே சொல்லல... ஜெயலலிதா கண்டிப்பா வெளிநாட்டில் சிகிச்சை எடுப்பாங்கனு !
எப்படி இவ்வளவு அழுத்தமா சொல்ற?
கூடிய சீக்கிரம் பிரதமர் Modiji ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திப்பேனு சொல்லி இருக்காரே.

கருத்து தெரிவிக்க விரும்பவில்லை : அப்பல்லோவில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
ஒருவேளை இது அவங்களுடைய சொந்த கருத்தாக இருக்குமோ ?

தமிழ் நாட்டுக்கு அடுத்த முதல்வராகணும்னு ஆசையா?
உடனடியா அப்போலோ மருத்துவமனை எதிரில் போய்..
அம்மாவுக்கு என்ன ஆச்சின்னு தெரியுற வரை சாகும் வரை உண்ணாவிரதம்ன்னு ஒரு டயலாக் விட்டுட்டு.. ரெண்டே நாளில் ஆளுங்கள செட் பண்ணி உங்களை மானபங்க படுத்துன்னாங்க ன்னு சொல்லி ஒரு ஸ்டண்ட் விடுங்க..
ங்கோயாலா.... அடுத்த தேர்தலில் நீங்க தான்.. மாண்பு மிகு...
நெஞ்சு பொறுக்குதில்லையே..

டொனால்டு மாதிரி ஆளை எங்க வீடு வாகன ஓட்டுநர் பதவிக்கு கூட நம்பி வைக்க முடியாது. இவரை போய்.. அதிபரா?
நெஞ்சு பொறுக்குதில்லையே..

குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க கற்றுக்கொடுத்தவர் விசு: பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்!
பொன். ராதா சாப்.. விசு என்னமோ குடும்ப பிரச்சனையை சமாளிக்க தான் கற்று கொடுத்தார். உங்க தலைவர் "மோடிஜி" குடும்ப பிரச்சனையே வராதமாதிரி இருக்க கற்று கொடுத்தாரே.. அவரையும் பாராட்டுங்க!

அட பாவிகளே.. வருசத்துல 365 நாளும் தமிழ் நாட்டில் பாதி பேருக்கும் மேலே ரேஷன் கடையில் கல்லோட சேர்ந்து கிடைக்கிற அரிசியில் பொங்குற "மண் சோறு" தானே திங்கிறாங்க. இது என்னடா? உங்களுக்கு புதுசாக கிரேனைட் கல் மேலே "மண் சோறு"?
நெஞ்சு பொறுக்குதில்லையே...

ஜெயலலிதா முழுசுகம் அடையும்வரை பரமஹம்சா நித்தியானந்தாவை தமிழக தற்காலிக முதல்வராக நியமிக்க "நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் " சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

பொறுப்பு முதல்வர் என்பதை அ.தி.மு.க.,தான் முடிவு செய்ய வேண்டும்: வெங்கையா!
ஏன் நீங்கதான் முடிவு பண்ணி பாருங்களேன்... வெங்காய நாயுடு... அண்ணன் எப்ப சாவான் ... கதை தான் போங்க..

//சாதனை பெண்களுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி///
கல்லூரிக்கு போகாத சாதாரண பெண்ணுக்கே கல்வி துறை அமைச்சர் பதவி கொடுத்தவராச்சே.. நம்பிட்டோம் .. நம்பிட்டோம்..

கண்ணாடி கூரைகளால் ஆன புதிய ரயிலை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே!
இனிமேல் எந்த கம்பார்ட்மெண்ட் கூரையை ஓட்டை போட்டு திருடனும்ன்னு மண்டையை பிச்சிக்க தேவையில்லை. !


“நானும் டாக்டர் தான் – முதல்வருக்கு சிகிச்சை அளிக்க தயார்” தமிழிசை !
அது மருத்துவர் தமிழிசையின் சொந்த கருத்து பா ஜ க வின் தலைவி தமிழிசை கூறினார்.

கும்புடுறேன் சாமி...
என்னமோ சொல்ல தோணுச்சி !


ஜெ., குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க குழு!
கிழிஞ்சது போ... இதை வச்சி ஒரு 100 கோடி சுட்டுடுவாங்களே..

அட பாவி...
நரி குறவன் பாணியில் ஆயுத பூஜை பண்ணினத்துக்கு ஆயுத சட்டம் பாயுதா?
கூடவே, பாசி - ஊசி - மணி எல்லாம் வைச்சி இன்னொரு பூஜை பண்ணி அட்ஜஸ்ட் மாடி..
நெஞ்சு பொறுக்குதில்லையே


இடைவிடாத வேலைகள் காரணமாக தற்போதைக்கு பிரதமர் மோடி முதல்வரை பார்க்க அப்போலோ வருவது சாத்தியமில்லை..
- பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
அம்மையாரை அவசரமா அயல்நாட்டுக்கு அனுப்புங்க. அடுத்தகணமே அவர் அட்டெண்டன்ஸ்க்கு ஆஜர் ஆகிடுவார்!
அடே டே.. அம்புட்டும் "அ" னாவில் ஆரம்பிக்குதே.


1 comment:

  1. அம்மா பற்றி வதந்தி பரப்பிய 8 வது ஆள் விரைவில் கைது.

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...