புதன், 12 அக்டோபர், 2016

வாழும்வரை சாகடிப்போம்...!

இன்று நம் அதிபர் ஒபாமாவின் மேடை பேச்சு ஒன்று கேட்க நேர்ந்தது. நவம்பர் மாதம் வரும் தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க சொல்லி மிகவும் உணர்ச்சிவச பட்டு பேசினார்.

இந்த வாக்கு சீட்டில் என் பெயர் இருக்காது..

ஆனால்...



"முன்னேற்றம்" அந்த வாக்கு  சீட்டில் இருக்கும்!

"சகிப்பு" அந்த வாக்கு  சீட்டில் இருக்கும் !

"ஜனநாயகம்" அந்த வாக்கு  சீட்டில் இருக்கும்!

"நீதி" அந்த வாக்கு  சீட்டில்  இருக்கும்!

"நல்ல பள்ளிக்கூடங்கள் "அந்த வாக்கு  சீட்டில் இருக்கும் !

எனக்கு ஒரு நல்ல "பிரியாவிடை" கொடுக்க வேண்டுமா? அதை நீங்கள் அடுத்த தேர்தலில் வாக்கு செலுத்துவதில் மூலம் கொடுக்கலாம்.

2008 மற்றும் 2012 ல் வாக்கு பதிவு மிக அதிகமாக இருந்தது. 2016 ல் இது குறைந்தால் .. அதை நான் எனக்கு தனிப்பட்ட முறையில் வந்த "இழிவு - இழுக்கு" என்று தான் கருதுவேன்.


ஒபாமா அருமையான பேச்சாளர். அவர் எப்போது பேசினாலும் அதை கேட்க்கையில்  நம்மை இருக்கையின் முன்னுக்கு அழைத்து வந்து விடுவார். இந்த பேச்சும் அப்படியே தான் இருந்தது.

இங்த பேச்சில் அவர் மக்களை வாக்களிக்க அழைத்து இருந்தாலும் .. இதில் என்னை கவர்ந்தது..


 " அமெரிக்காவின் சட்ட திட்டம்."

 ஒருவர் ஒரு பதவியில் அதிக பட்சமாக இரு முறை தான் செயல் பட முடியும். இது  அமெரிக்க அதிபருக்கும் சரி, மாநில கவர்னர்களுக்கும் சரி.

இரண்டு முறை ஆண்டவுடன் .. மக்களுக்கு நன்றி கூறி அடுத்தவர்களுக்கு இடத்தை கொடுத்து கிளம்ப வேண்டும். இதற்கு விதி விலக்கு அல்ல.

இந்த சட்டம் மட்டும் நம் இந்தியாவில் இருந்து இருந்தால்...

கருணாநிதி 80 ல் விடை பெற்று இருப்பார்.. ஜெயலலிதா 90 களில் விடை பெற்று இருப்பார்.

புதிய தலைமுறைகள் இளைய தலைமுறைகள் வந்து இருக்கும்.

எவ்வளவு முறை வேண்டுமானாலும் பதவியில் இருக்கலாம் என்ற சட்டத்தினால் தானே இன்று தமிழகத்தில்...


சக்கர நாற்காலியும் - படுக்கையும்.. ஆண்டு கொண்டு இருக்கின்றது.

இந்த சட்டத்தை மாற்றவே முடியாதா?

நெஞ்சு பொறுக்குதில்லையே.. 

5 கருத்துகள்:

  1. கவர்னர்கள் விட்டு விட்டு (இடைவெளி விட்டு) இரண்டு term-களுக்கு மேல் பதவி வகிக்கலாம்--பல மாநிலங்களில். கவர்னர்கள் நம் நாட்டு முதல் அமைச்சர்கள் மாதிரி அல்ல--ஒரு நாட்டின் அதிபர் மாதிரி---United States of America. இந்தியா மாதிரி மத்திய அரசு வால் ஆட்டமுடியாது. ஒவ்வொரு state-உம் ஒரு நாடு மாதிரி!

    பதிலளிநீக்கு
  2. //கவர்னர்கள் விட்டு விட்டு (இடைவெளி விட்டு) இரண்டு term-களுக்கு மேல் பதவி வகிக்கலாம்//

    அறியா தகவல் நண்பரே. நன்றி.

    பதிலளிநீக்கு

  3. அண்ணே தமிழகத்தை விட்டு விடுங்கண்ணே இங்கே யாருக்கண்ணே வோட்டு போடுவது ஹில்லாரிக்கா அல்லது டிரெம்புக்கா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே தான் அடுத்தவர் சொல்லி வாக்கு போடஅவசியம் இல்லையே.. 19 ம் தேதி மீண்டும் ரெண்டு பேரும் பேசுவாங்க. அதுல யாரு பேச்சு உங்கள் கருத்தோட ஒத்து போதோ அவங்களுக்கு போடுங்க!

      நீக்கு
  4. இது நான் அடிக்கடிச் சொல்லுவது என் மகனும் நானும் பேசிக் கொள்ளும் போது...நல்ல விஷயம்

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...