வெள்ளி, 7 அக்டோபர், 2016

மருத்துவமனையில் நடந்த அதிசயம்!

கெவின் ... கெவின்...

அலறியது அந்த மருத்துவமனையின் அவசர ஒலி பெருக்கி.

ஆம். .. கெவின் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக சேர்ந்த மருத்துவர். சேர்ந்து சில நாட்கள் துணை  சிகிச்சை நிபுணராக பணியாற்றிய இவர் அன்று தான் துணை பதவியில் இருந்து முதன்மை சிகிச்சை நிபுணராக பணியேற்று இருந்தார். பணியேற்றிய சில மணி நேரங்களில் தான் அந்த ஒலி பெருக்கி ..

கெவின் கெவின் என்று அலறியது..

மருத்துவமனையின் சிற்றுண்டி சாலையில் இருந்த கெவின் குடித்து கொண்டு இருந்த தேநீரை ஒரே முடக்காக குடித்து விட்டு அறுவை சிகிச்சை அறையை நோக்கி ஓடினான்..

அந்த அறையை அடைந்து அதற்காக மேலாடைகளையம் முகமூடிகளையம் அவசரமாக அணிந்து கொண்டு இருக்கும் போது  அவன் எதிரில் அவனுக்கு மிகவும் பரிச்சயமான மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் திருமதி. டார்தி சேத், அவனுக்கு எதிரில் வந்தார்கள்.

ஹை கெவின்..

ஹை..

உன்னால் இந்த சிகிச்சை செய்ய முடியுமா?

டார்தியின் வார்த்தைகளில் ஒரு பயம் கலந்த உணர்வு தான் வெளிப்பட்டது.

கண்டிப்பாக டார்தி..  ஜஸ்ட் செய் எ பிரேயர் பார் மீ அண்ட் தி பேஷண்ட்,  பாஸ்ட் !

டார்தி கெவினின் இரு கைகளையும் பற்றி கொண்டு ...

எல்லாம் வல்ல இறைவனே.. நீ இன்றி ஒரு அணுவும் அசையாது. கெவின் இந்த அறுவை சிகிச்சை செய்யும் போது நீ அவனுள் இருந்து இதை செய்யவேண்டும், ஆமென்..
Dr. Kevin Morton
என்று சொல்லி கெவினை கட்டிப்பிடித்து அனுப்பினாள். கெவின் அடுத்த அறைக்கு சென்றான்.

டார்தி மனதிலோ...

அய்யகோ... ஒரு வேளை  இந்த சிகிச்சையை நானே செய்து இருக்கலாமோ... அவன் கையை பிடித்து ஜெபிக்கும் போது ... அவன் கைகள் இரண்டும் நடுங்கியதே..

அவனை கட்டிப்பிடித்து அனுப்பும் போது அவன் இதயம்... அப்படி வேகமாக  துடித்ததே... நாம் ஒரு வேளை அவசரப்பட்டு கெவினை முதன்மை சிகிச்சை நிபுணராகி விட்டோமா? இன்னும் சில காலம் பொறுத்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டு ... தன் அறையின் இருக்கையில் அமர்ந்தாள்.

நேற்று மாலை 4 மணிக்கு வேலைக்கு வந்தவள்... இப்போது காலை 8 மணி..வயதும் அறுபதை  தாண்டி விட்டது.. தன்னை அறியாமலே உறங்கினாள்..

சில நொடிகளில்...


டாக்டர் டாரத்தி.. டாக்டர் டாரத்தி.. ஒலி பெருக்கி அலறியது! ... அடித்து பிடித்து ஓடினாள் டாரத்தி. அறுவை சிகிச்சை அறை சென்றவள்...

என்ன கேஸ்?

அஸ் யூஷுவல் ... துப்பாக்கி சூடு.

பேஷண்ட் என்ன வயது..

பாவம்.. சின்ன பையன்.. 20 தான் இருக்கும்.

என்ன ஆச்சி? ஏதாவது போதை பொருள் ..?

இல்ல.. நல்ல பையன் தான். பகல் முழுக்க கல்லூரி போயிட்டு இரவில் மட்டும் இங்கே இருக்க ஒரு ஹோட்டலில் மானேஜராக இருக்கான்.  பாவம்.. வேலை முடிந்து வெளியே வந்து காரில் ஏறினான். பின்னாலே வந்த ஒரு ஆள் இவனை வயிற்றில் சுட்டுட்டு இவனிடம் உள்ளதெல்லாம் திருடிட்டு போய்ட்டான்.

ஓ மை  காட்.. யாரு இங்கே கூட்டினு வந்தா..

போலீஸ் தான்.
10% Chance of Survival
வாட் இஸ் தி நேம் ஆப் தி பேஷண்ட்? ஏஜ் அண்ட் எத்தினிசிட்டி?

கெவின் மார்ட்டன், 20, ஆப்பிரிக்கன் அமெரிக்கன் !

அறையில் சென்று படுக்கையில் கண்களை மூடி மரண நித்திரையில் இருந்த கெவினை பார்த்த டார்தி..  தன்னை அறியாமலே அழுதாள்.

20 வயது.. பார்க்க ஹாலிவ்யூட் பட கதாநாயகன் போல் தோற்றம். கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் வேளையில் மாலையில் வேலை செய்யும் அளவிற்கு பொறுப்பு.

ஆண்டவா.. இது என்ன சோதனை.. இவனுக்கு ஏன் இது? நீ தான் காப்பாற்ற வேண்டும்.. என்று சிகிச்சை ஆரம்பித்தாள். அடுத்த சில மணிநேரங்களில் சிகிச்சை முடிந்தது.

டார்தி வெளியே வந்தாள். அங்கே உறவினர்கள் அறையில் கெவினின் குடும்பம்.. அப்பா- அம்மா மற்றும் அவனுக்கே உயிரான இரண்டு குட்டி தங்கைகள்..

டாக்டர்... என் பையன்...?

ஆப்பரேசன் நல்ல படியா முடிஞ்சது. நீங்க தைரியமா வீட்டுக்கு போங்க.. காட் இஸ் குட்.

என்று டார்த்தி சொல்லிய பொய் கெவினின் தாய்க்கு புரிந்தது.

டார்த்தி சொன்ன எதையும் நம்பாமல் இரு பெண் குழந்தைகளையும் அவள் கட்டி கொண்டு மூவரும் அழ, டார்த்தியோ அந்த தகப்பனை ...

நீங்கள் ஒரு நிமிடம் என் அறைக்கு வர முடியுமா?

அறையில்..

சொல்லுங்க டாக்டர்..

ஐ அம் வெரி சாரி.. உங்க பையனுக்கு நடந்த இந்த துப்பாக்கி சூடு அவன் கல்லீரலில் பாதியை சிதற வைத்துவிட்டது.

டாக்டர்..என் பையன் பிழைப்பானா?

எங்கனால முடிஞ்சது நாங்க செஞ்சிட்டோம். இனிமேல் ... 10% Chance of Survival! மேலே இருந்து ஒரு அதிசயம் வந்தா தான்...

"வி பிலிவ்  இன் மிரக்கிள்ஸ் டாக்டர்".. கண்டிப்பாக என் பையன் பிழைப்பான்.. தேங்க்ஸ். யு ஆல்சோ கீப் அஸ் இன் யுவர் ப்ரேயர்ஸ்.

ஐ வில் ! கண்டிப்பாக..

தகப்பன் அங்கு இருந்து கிளம்ப ..

ஒரு வாரம் ஓடியது..

அந்த ஒரு வாரத்தில் டாரத்தி கெவினுக்கு எந்த சிகிச்சை அளிக்காவிட்டாலும், காலையில் வேலைக்கு வந்தவுடன் அவன் அறைக்கு  சென்று உறங்கி கொண்டு இருக்கும் அவனை பார்த்து அவன் கையை பிடித்து ஒரு ஜெபம் செய்து விட்டு  தான் தன் நாளை ஆரம்பிப்பாள்.

ஒவ்வொரு நாள் அவனை பார்க்கும் போதும்.. இன்றைக்காவது விழிப்பானா .. இன்றைக்காவது விழிப்பானா என்ற ஒரு நப்பாசை.

வெளி உலகத்திற்கு தானே அவன் விழிக்கவில்லை. கண்கள் மூடி கொண்டு இருந்தாலும்.. அவன்  நினைவிலோ...

பணி புரிவது ஒரு ஹோட்டலில் அல்லவா. வேலை முடிந்ததும்.. தன் தங்கச்சிகளுக்கு பிடித்த உணவினை வாங்கி கொண்டு  வாகனத்தில் ஏறிய கெவின்.. வாகனத்தின் அருகில் ஒரு நிழல் வருவதை  கவனித்தான். அவன் சுதாரிப்பதற்கு முன் "டுமீல்" என்ற சத்தம்.

அவனிடம் இருந்ததை எடுத்து கொண்டு வந்தவன் ஓட
.. கெவினின் இருக்கை முழுக்க இரத்தம்.

நொடிக்கு நொடி வலி அதிகரிக்க .. நினைவையும் இழக்க ஆரம்பித்தவன்.. அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு  சென்று விட்டால் அங்கே நம்மை மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள் என்று வண்டியை ஓட விட்டு.. ஆனால்பாதி வழியிலே நினைவை இழக்க போவதை அறிந்து அவசர விளக்கை போட்டு விட்டு ...

எழுந்து பார்க்கும் போது.. சிகிச்சை அறையில். இவனுக்கு சற்று நினைவு இருந்தாலும்.. அது அவனுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு தெரியவில்லை.

இவன் மனதில் தோன்றியதெல்லாம்..

என் தங்கைகள்.. நான் உயிர் வாழ வேண்டும். என் தங்கைகளுக்காக.. நான் சாக கூடாது.. சாக மாட்டேன்.. சாகவே மாட்டேன். என் தங்கைகளுக்கு நான் தேவை.

கடந்த ஒரு வாரத்தில் அவன் மனதில் தோன்றிய ஒரே எண்ணம் " அவனின் தங்கைகள் " தான்.


வாரம் மாதமாகியது. கெவினின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற...

டாகடர் டார்தி.. டாக்டர் டார்தி...

ஒலி பெருக்கி அலறியது.

என்ன இது? இப்போது தானே ஓர் அறுவை சிகிச்சை முடித்தோம். அதற்குள் எப்படி அடுத்து ? என்று நினைத்து கொண்டே ஓடியவளின் எதிரில் ...

கெவினின் தங்கைகள் இருவரும் ஓடி வந்தனர்..

டாக்டர்.. கெவின் இஸ் அவெக். ஹி இஸ் டாக்கிங். ஹி இஸ் ஆஸ்கிங் பார் யு.

மூவரும் ஓடினார்கள்.. அங்கே அறையில் கெவினின் தாயும் ..

"தேங்க்யு சோ மச்"  என்று அவர்கள் அழ..டார்தி கெவினின் கையை பிடித்தாள். வழக்கத்திற்கும் மேல் சூடாக இருந்தது.

கெவின்..

கண்ணாலே தான் பேசினான்.

எவெரிதிங் வில் பி ஆல்ரைட்.!

அவனுக்கு வாயில் எதோ ஒரு கருவி போட்டு இருந்ததால்.. எதையோ எழுத வேண்டும் என்று கை  அசைத்து  காட்ட.. ஒரு காகிதமும் பென்சிலும் தரப்பட்டது.

Thank You so Much Dr. Darthi. Thanks for not letting me Die.

படித்த டார்தி அதை மடித்து பையில் வைத்து கொள்ள அனைவரும் ஆனந்த கண்ணீர் விட..

அடுத்த  ஆறுமாதத்தில்...

கெவின் வீட்டில் ... டாரத்தி...

கெவின்.. சும்மா என்ன கம்ப்யூட்டரில் ... என்ன பண்ற?

டார்தி.. ஐ அம் ரெடி பார் காலேஜ் ... அப்பளை பண்றேன்.

நீ படிச்சியே அதே கல்லூரியா?

நோ.. அது பிசினஸ் காலேஜ். ஐ டோன்ட் வாண்ட் டு டூ பிசினஸ் எனிமோர் ..

பின்ன வேற என்ன படிக்க போற?

ஐ வாண்ட் டு பி லைக் யு.. ஐ வாண்ட் டு பி எ டாக்டர்.

டாரத்தி மீண்டும் அவன் கையை பிடித்து ...

அப் கோர்ஸ்.. யு வாண்ட் டு பி எ டாக்டர்.. அண்ட் கெஸ் வாட் ? வி வில் மேக் சுவர் தட் யு பி கம் எ டாக்டர்.

அடுத்த ஏழு வருடங்கள்.. படிப்பு. சிகிச்சை.. சிறிய சிறிய வேலை..
கல்லூரியில் 

டார்தி...

அலை பேசி அலறியது.

டெல் மி  கெவின்...

அடுத்த மாதம் எனக்கு பட்டமளிப்பு விழா. ஐ வாண்ட் யு டு பி தேர் வித் மை டாட்.. மாம் அண்ட் சிஸ்டர்ஸ்.

பட்டமளிப்பு விழா சீராக நடக்க.. அன்று இரவு.. நிகழ்ச்சியில் அனைவரும் கெவினை பாராட்டி அவனுக்கு பரிசளித்து கொண்டு இருந்தனர்.

டார்தியின் முறை வந்தது. இரு சிறிய தாளை அவன் கையில் வைத்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்தாள்.


பட்டமளிப்பு விழா 

அந்த தாளை பார்த்த கெவினின் கண்கள் அவனை அறியாமலே ஈரமானது.  அதில் அவன் கைப்பட எழுதிய...


Thank You so Much Dr. Darthi. Thanks for not letting me Die.

என்று எழுத்தோடு.. கூடவே.. டார்தியின் கைபட எழுதிய.. 

Now it is your turn Kevin. You go and take care of them. Dont let them Die.

Love 

Darthi 

என்று எழுதி  இருந்தது.

மேடையில் இறங்கி வந்த கெவின் டார்தியின் தோளில் மேல் கையை வைத்தான்.

ஹாய் டார்தி?

கெவின்? 

ஆபரேஷன் எப்படி போனது...?
Happy Times. 
One Young Kid, Daarthi.. so young.. Shot in his Chest. Some random shooting. He was so lucky that they brought him right on time.

He was not lucky, Kevin. Theres a reason for everything.

I dont know Daarthi.. I just could not let that kid die. I had to keep him alive...

Is that so? May I ask you why?

Darthi.. you should have seen his little Sisters... I wouldnt let this kid die... just  for their sake!

Is that so? May I ask you why?

Daarth.. Every Girl needs her Brother. 


பின் குறிப்பு :

நண்பர்களே,  அடியேன் பதிவுகள் எழுத ஆரம்பித்து ரெண்டு வருடங்களாகி விட்டன. இந்த இரண்டு வருடங்களில் நான் எவ்வளவோ எழுதி இருந்தாலும் நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவு இது தான்.

அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சற்றே கற்பனை கலந்து படைத்துள்ளேன் . 

தயவு செய்து எப்போதும் போல் படித்து விட்டு போய் விடாதீர்கள். Anonymous  போல வந்தாவது தங்களின் நிறை குறைகளை சொல்லுங்கள். 


இந்த உண்மை  சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க...இங்கே சொடுக்கவும்.

http://www.cnn.com/2016/10/07/health/kevin-morton-surgeon-st-john-hospital-detroit/index.html

நன்றி. 



34 கருத்துகள்:

  1. I wept and wept..tears of joy indeed. More than often, angels just don't come from above fluttering their wings. They move amid us, ministering to us in myriad ways. God bless the Darthis and Kevins of this world.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. You made my day. Thanks for your lovely comment. Yes. God bless the Darthis and Kevins.. and may we also pray for more of these people!

      நீக்கு
  2. மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  3. விசு..மிக மெல்லிய நடை...உருக்கம்,,தன்னம்பிக்கை..
    மருத்துவப்புனிதம்,தங்கைகள் மீதான பாசம் என ஒரு பதிவுக்குள் ஓராயிரம் உணர்வுகள்....உங்களால் இன்னும் பல பரிணாமங்களில் எழுதமுடியும் விசு சார்.
    உங்கள் விரல்களுக்கு ஒரு சகோதரனாய் அன்பு முத்தங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் அருமையான வார்த்தைகளுக்கும் நன்றி நண்பரே..

      நீக்கு
  4. மிகவும் நெகிழ வைத்த பதிவு! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ வைக்கும் மக்கள் தானே .. இமயவரம்பன்.. அதனால் தான் அவர்களை பற்றி எழுதும் போதும் சரி படவைக்கும் போதும் சரி.. மனம் நெகிழ்கிறது.

      நீக்கு
  5. விசு சத்தியமாக உங்களின் ஆங்கிலப் பதிவைப் படித்து கண்ணில் நீர் வழிந்தோட.....தமிழில் முதலில் இதை வாசித்திருந்தாலும் வார்த்தைகள் இல்லை என்றே எழுதியிருப்பேன். இப்போது அங்கு படித்துவிட்டு இங்கு வந்த போது முதலில் மனது சமாதானமாக வாசித்தாலும் கெவினுக்குக் கண்களில் நீர் வந்ததே டாரதி அவர் கையில் அந்தச் சீட்டைக் கொடுக்கும் போது அங்கு எனக்கும் மீண்டும் கண்களில் நீர் வந்து விட்டது.

    ஆங்கிலத்தில் வாசிக்கும் போது ஆரம்பத்திலிருந்தே கண்ணில் நீர் வர ஆரம்பித்தது...கெவினுக்கு முதல் அறுவைச் சிகிச்சை...டாரதிக்கு சற்றுத் தடுமாற்றம் அவனுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தது.என்று...என் மகன் என் கண்ணில் வந்தான். கெவினின் இடத்தில் என் மகன் வந்தான். அவனுக்கு அடி படவில்லை எதுவும் நடக்கவில்லை. சரி இதற்கு மேலும் வேண்டாம் பதிவாகி வரும்....

    அருமையான பதிவு விசு. மனதைத் தொட்டது ஒரு பக்கம் என்றால், பலருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் ஒரு நிகழ்வு. மிக மிக அருமை.

    இதே போன்று கிட்டத்தட்ட...ஒரு பதிவை வலைப்பதிவர் நண்பர் திரு கரந்தைஜெயக்குமார் சகோ அவர்கள் வெற்றிவேல்முருகன் என்பவரது கதையை எழுதி வருகிறார். அவருக்குப் பார்வை கிடையாது அவர் அமெர்க்கா வந்து தனது படிப்பைத் தொடர்ந்த விதத்தை எழுதிவருகிறார்.

    இது போல் இன்னும் எழுதுங்கள் விசு! அருமை. எழுதிய விதமும் அருமை அழகு நடை!!! ஆங்கிலமும் சரி தமிழும் சரி இரண்டுமே!!

    துளசிக்கு இனிதான் அனுப்ப வேண்டும் அவர் பாலக்காடு வந்தால் இணையத்தில் பார்க்க முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.. தங்களின் விவரமான விவேகமான பின்னூட்டத்திற்கு !

      நீக்கு
  6. அருமையான படைப்பு. நல்லதோர் மக்களை அருமையாக எடுத்து காட்டியுள்ளீர். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்மனம் அவர்களே.. என்னதான் சொல்லுங்க .. நம்ம சகா தணிக்கையாளர் ஒருவரிடம் இருந்து வரும் வார்த்தைகளிலிலே ஒரு தனி சுகம் தான்.

      நீக்கு
  7. its great that you plant something to people through stories like this ... many of us think of earning than providing service.. the doctors nowadays not caring the patients like this... i hope someone would turn to be good...
    all the best.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for dropping by. // many of us think of earning than providing service//

      Are you a Doc? Man, I have not seen a Doc who could read tamil for a very long time. You made my day.

      நீக்கு
  8. Visu...
    This is one of your best. Phenomenal composition
    sentiment கலக்காத நெகிழ்வான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர்...

      வார்த்தைகளுக்கு நன்றி. தங்களின் பின்னூட்டத்திற்கு ஆவலாக காத்து கொண்டு இருந்தேன்...

      நீக்கு
  9. Dear Visu,
    I am very proud of you indeed. Now like Dr.Kevin , you have also graduated.Its time to move on start your Novel projects.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே.. நாவ பழம் பொறுக்கின்னு இருப்பவனிடம்.. நாவல் எழுத சொல்றீங்களே...

      வாழ்த்தி எழுதிய வார்த்தைகளுக்கு நன்றி அண்ணே

      நீக்கு
    2. ஏங்க... வள்ளுவர் கூட "நா"காக்க தான் சொல்லியிருக்கார், "நாவல்"காக்கன்னு சொல்லல...
      நம்மாலே நாவல் ஆபிஸர் ஆக முடியாது, ஆனா நாவல் ஆசிரியர் ஆகலாம்...!!
      சுகருக்கு நாவல் பழம், விசுவுக்கு இனி நாவலே பலம்..!!
      கடவுள் மேல பாரத்த போட்டு தைரியமா ஆரம்பிங்க...!!

      நீக்கு
  10. உயிரோட்டமான நடை, சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தது போன்ற உணர்வு.

    நல்ல பதிவு

    -வெங்கட்

    பதிலளிநீக்கு
  11. Awesome brother heart touching story .We need more Dorathy & Kevins.God bless you

    பதிலளிநீக்கு
  12. மனம் நெகிழ வைத்த பதிவு...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...