Wednesday, September 7, 2016

படித்ததும் புரிந்ததும்....எம்புட்டு வித்தியாசம்...!

செய்தி தாளில் படித்ததும் ... நமக்கு புரிந்ததும்.

தினமும் முகநூலில் (RJ Visu Awsm) நான் படித்த செய்திகளையும் அதில் எனக்கு புரிந்தவைகளையும் பதிவிடுவேன்.

பதிவு உலகில் உள்ள சில தோழமைகள் முகநூலில் இல்லாத காரணத்தினால் அவர்களும் படிக்க இந்த முயற்சி.
படித்தது .. கருப்பு நிற எழுத்துக்கள்.

புரிந்தது .... சிவப்பு நிற எழுத்துக்கள்...
                                                                          *********
நதிநீர் இணைப்பு: மோடியை சந்திக்க ஆர்வம் - ரஜினிகாந்த்!
அம்பி....ஆசை இருக்கலாம்.. ஆனா பேராசை இருக்கக்கூடாது.
நதிநீர் இணைப்பது ஆசை...அது நடக்க கூடிய காரியம். ஆனால் மோடியை சந்திப்பது நடக்குற காரியமா ? அவரு தான் பறந்து பறந்து நாட்டுக்காக உழைக்கிறாரே?

                                                                          *********

பிரதமர் மோடி இன்று லாவோஸ் பயணம்!

சத்தியமா சொல்றேங்க... லாவோஸ் என்ற பெயரில் ஒரு நாடு இருக்கிறதே இன்னைக்கு தான் எனக்கு தெரியும்.
மோடி மட்டும் நான் 10 வது படிக்கும் போது பிரதமரா இருந்து இருந்தார்.. பூகோளத்தில் 100 க்கு 100 எடுத்து நான் எங்கேயோ போய் இருப்பேன்.
உண்மையா சொல்லணும்.. உங்களில் எத்தனை பேர் லாவோஸ் என்ற நாட்டின் பெயரை இன்னைக்கு தான் முதல்முதலா கேட்டீங்க ?
                                                                          *********

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அப்பாடா...கடைசியா இந்த புண்ணியவான் திருமணமான ஆண்களுக்கு "கருணை" காட்டி இருக்கான்,
நீங்க நல்லா இருக்கணும் எசமான்
                                                                          *********

திண்டுக்கல் மாவட்டத்தில் 500 போலி டாக்டர்களுக்கு வலை!

இதோடா.. இந்த 500 பேரும் திமிங்கலம் பாரு.. அதுதான் வலை வீசுறாங்க... ஒரே மாவட்டத்தில் இதனை பேரா? அப்புறம் தமிழகம் முழுக்க இருக்க இவங்கள பிடிக்க நம்ம வலைக்கு எங்க போவோம்?
                                                                          *********

பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
அட பாவி... முந்தியெல்லாம் பிரதமர் வெளிநாடு போனாருன்னா .. பிரதமர் இங்கே போறார் .. அங்கே போறாருன்னு செய்தி வரும். இப்ப என்னடானா டெல்லி திரும்பியதே செய்தியா போச்சே !
                                                                          *********

சென்ற வருடம் அமெரிக்காவின் மிஸ் அமெரிக்கா போட்டியில் வெற்றி பெற்றவர் ஒரு இந்திய பெண்.. இந்த வருடம் ஜப்பானிய போட்டியில் வெற்றி பெற்றவர் ஒரு இந்திய பெண். வெற்றி பெற்ற இருவருமே ஒரு சராசரி இந்தியனின் கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தான். ஜப்பான் அமெரிக்காவில் தான் இவர்களுக்கு வெற்றி,
நம்ம ஊரில் இன்னும் ஷா ருக் கான் சொல்லை கேட்டு... Fair and Lovely தான் !
                                                                          *********

போலீஸ் பாதுகாப்பு நிறைந்த வேலூர் சுற்றுலா மாளிகையில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரத்தை வெட்டி கடத்திய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்
அட பாவிகளே.... இதுல தேடுறதுக்கு என்ன இருக்கு? இன்னொரு முறை படிச்சு பாருங்க... மேலே இருக்கிற வாக்கியத்தில்... யாரு திருடி இருப்பான்னு ரெண்டு முறை சொல்லி இருக்காங்களே.
                                                                          *********
மதுரை விமான நிலையத்தை அழகுபடுத்த முயற்சி
கிழிஞ்சது போ... இனிமேல் மதுரை விமான நிலையத்துக்கு கூட ஹெல்மெட்டோட தான் போகணுமா?
                                                                          *********

தமிழக காங்கிரசுக்கு பெண் தலைவர் : ஆதரவு கொடி தூக்குகிறார் நக்மா
வேற வழி இல்லையே நக்மா .... தமிழக காங்கிரஸில் ஆம்பிளை யாரும் இல்லையே!
                                                                          *********

சட்டம் ஒழுங்கு பாதிப்பில் முன்னிலை : தமிழிசை திடுக்கிடும் தகவல்
அது எல்லாம் எங்களுக்கு தெரிஞ்ச விஷயம்.... தினந்தோறும் ஒரு வேளை தலித் வீட்டில் தான் சாப்டிடுவேன்னு சொன்னீங்களே.... உப்பு காரம் எல்லாம் எப்படி?
                                                                          *********

முதல்வர் ஜெ., வழிகாட்டுதலில் வளர்ச்சி பாதை சேர்மன் இந்திரா பன்னீர் பெருமிதம்
ஏனுங்க.. இந்த வளர்ச்சி பாதை எங்க போதுங்க ?
நேரா டாஸ்மாக் தான் போது.... நீயும் போய் குடிச்சிட்டு சாவு.
*********
சேலம் ரயில் கொள்ளை தொடர்பாக இதுவரை 1200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
என் இனிய முட்டாள் மக்களே,
ரயிலில் நடந்தது ஓர் சின்ன பிக்பாக்கட் போல தான். அதை வைச்சின்னு இவங்க விசாரணைக்கு கோடி கணக்கில் செலவு பண்ணுறாங்க பாருங்க.,., அது தான் கொள்ளை!
                                                                           *********

2 comments:

  1. BRO LERT RAJINI CONTRIBUTE ONE CRORE OF RUPEES AS PROMISED BY HIM YEARS BACK.......RECENTLY THE FARMERS ASSN HAD ALSO PRESSED THIS ISSUE.....IT IS PATHETIC TO NOTE THAT RAJINI IS STILL BELIEVED IN TAMILNADU

    ReplyDelete
  2. well congress has leaders like nagna kushboo..... god save congress

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...