Saturday, September 10, 2016

காவேரி கரை இருக்கு, கரை மேல மணல் இருக்கு

கருநாகம் போல் கருநாடக
அரசியல் வியாதி நேற்று கூறுகிறான்...

எங்கள் ஊரில் பாயும் வரை தான்
காவேரி ஆறு..
எல்லையை கடந்ததும்..
சுடுகாடு.. .பாலைவனம்.. குப்பை.

சொன்னது வியாதி என்றாலும் சொல்ல பட்ட விஷயம்
தொழுநோய் பற்றி அல்லவா

சற்றே யோசித்தேன்.

உண்மை தான்.

அவன் ஊரில் உள்ளவரை அது ஆறு தான்..
இங்கே தான் அது நாறி போய் உள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில்
தமிழனாக நாம்  செய்த ஒரு உறுப்புடியான காரியம் என்ன?

மீண்டும் வந்தோரை வாழவைத்தோம் என்றால்
காலனி பிய்ந்து விடும்.

கூத்தாடிகளை தூக்கிவைத்து
கூத்தையே மந்திரம் என்றல்லவா
செய்தோம்.

நேற்று வரை மறப்போம். மன்னிப்போம்.

இன்று .. இன்று நம் தலைமைகளை பாருங்கள்.

மாண்புமிகு என்று ஆரம்பித்து அம்மையை
கூம்முட்டைகள் அறிமுகப்படுத்தும்   நேரத்தில்
கோடிமூட்டை மணல் கொள்ளை.

அது சரி..

இந்த மணல் எல்லாம் எங்கே போகிறது.
அண்டை மாநிலத்தில் அணை கட்டத்தான்.

ஒரு .. ஒரு .... தலைமை
பகுத்தறிவோடு இருக்கின்றதா?

பெரியவர் பறந்து கொண்டு.
மூத்தவரோ உருட்டு வண்டியில்.
ஆள்பவரோ .. பாடலை ரசித்து...

நாம்  தேர்ந்து எடுத்து அனுப்பி உள்ளோமே
234 பேர்..

அதில் ஒருதனுக்காவதுகாவேரியில் நீர் வரவில்லை என்றால்
ஏதாவது பாதிப்பு?
ஒன்றுமே இல்லை.

அவனுக்கும் காவேரியினால் பாதிப்பு உண்டு
ஆனால் நீருக்காக அல்ல..

மணலுக்காக...
அங்கே கட்டின - கட்டிக்கொண்டுள்ள -  நாளை கட்டப்போகும்
கல்லூரிக்காக..

நாம் நாசமா போவது நிச்சயம்.

கொட்டும் வரத்தை கட்டிக்காக்க
குளத்தை சீர் செய்யாமால் ..

சென்ற வருடம் கிடைத்த வரத்தை
சரியாக வைத்து இருந்தால்...

கருநாடக நண்பர்களே..

காவேரி "பேடா" குரு....
நீயே வைச்சிக்கோ.

எத்தனை  அணை கட்டவேண்டும்னு மட்டும்
முன்கூட்டியே சொன்னா.
எங்களுக்கு மணல் வாரி அனுப்ப வசதியா இருக்கும்.

எங்களுக்கு புரியாது..
மணலின் அருமை எங்களுக்கு புரியாது.
அது எங்களுக்கு புரியவும் வேண்டாம்.

ஏன்னா..
பொங்கல் கொண்டாட கூட வக்கு இல்லாமல்
அரசாங்கம் தர 500 ரூபாய்க்கும் அடி  கரும்புக்கும்அடிச்சி பிடிச்சிட்டு
நிற்க நாங்கள் தயார்.

இனிமேல் எங்களால் சுயமரியாதையாக
ஒன்றுமே செய்ய  முடியாது!


எங்களை நிரந்தரமா பிச்சைகாரனாக்கி
வைக்க  நீங்க அனுப்பி வைச்ச
தலைகளும் தயார்.

என்னது? நீங்க அனுப்பி வைச்ச தலையா?
கூட்டி கழித்து பாருங்கள் புரியும்.

அது சரி..
எங்கள் தலையை விடுங்க.. உங்கள் தலைகள்
என்னாச்சுன்னு கேட்பது
விழுகிறது...

தருதலைக்கு ஏது தலை.?

நாங்க,,

காஷ்மீர் பீடிபுல் காஷ்மீர்.. ன்னு ஆரம்பிச்சு..
நீங்க நல்லா  இருக்கனும்.. ன்னு
பாட தெரிந்த நாதாரிகளை தானே
தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கோம்.

வேண்டாம் ஐயா
 காவேரி.
பத்திரமா பாதுகாப்பா வைச்சி
உங்க விவசாயிகளை காப்பாத்துங்க.

எங்க தலைகளின் சாயமான போக்கால்..
எங்கள் விவசாயம் எப்பவோ செத்தாச்சி.
இப்ப விவசாயி தான் பாக்கி.

அவனையும் உங்க ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்..

மணல் வந்து இறங்கியவுடன்
அதை வச்சி அணை கட்ட..
எங்க விவசாயியை விட எவனும்
சீப்பா கிடைக்க  மாட்டான்.

மீண்டும் சொல்றேன் வேண்டாமையா
உங்கள் காவேரி..

கசப்பான உண்மை தான்.

அவன் ஊரில் இருக்கிற வரை தான்
காவேரி ஆறு.

எல்லையை தாண்டியவுடன்... 

2 comments:

 1. காவிரினால உங்களுக்கு இப்படித் தோணுது. புனிதம் மிக்கது என்று பெரும்பான்மை நம்பும் கங்கையையும் சரி, யமுனையையும் சரி, இதைவிட மோசமாகத்தான் வைத்திருக்கிறோம். தாமிரவருணியை நாசமாக்கியாச்சு. பார்த்தால், ரொம்ப வருத்தமா இருக்கு. எவனேனும் தன் காலைத் தானே வெட்டிப்பானா? பிற நாடுகளைப் பார்த்துக் கத்துக்கவேண்டாம். பிற மானிலங்களைப் பாத்துக் கத்துக்கவேண்டாமா? கேரளால, ஆற்றுமணலை எடுப்பதை 10க்கும் மேற்பட்ட வருடங்களாகத் தடை செய்தாகிவிட்டது. நம்ம ஊருல மணல் கொள்ளையடிப்பவனையெல்லாம் (மணலை எடுப்பதே கொள்ளைதான்) தீவாந்திர சிட்சைக்கு அனுப்பவேண்டும். சென்னைல வெள்ளம் என்று சொல்லி 6 மாதம்கூட இல்லை. ஒரு மாற்றமும் மக்களிடத்தில் இல்லை.

  ReplyDelete
 2. விசு மிக நல்ல வரிகள் காவேரி பொங்கிவிட்டாள் உங்கள் வார்த்தைகளில்!!!!எத்தனை அணை கட்டவேண்டும்னு மட்டும்
  முன்கூட்டியே சொன்னா.
  எங்களுக்கு மணல் வாரி அனுப்ப வசதியா இருக்கும்.// அருமை...

  ஆனால் பாருங்கள் விசு, வரைபடத்துல கொஞ்சம் கீழ வாங்க..வை"கை??? தாமிரவருணியாறு? இரு ஆறுகளும் பல கலாச்சாரங்கள்ம் நதி நாகரீகங்கள் பேசும் ஆறுகள்...தமிழ் இலக்கியத்தில் காவேரி மட்டுமல்ல இந்த நதிகளும் இடம் பெற்றவைதான்...ஆனால் அதன் நிலைமை....கொஞ்சம் மேலே போங்கள்...உங்கள் ஊர் பகுதியில் இருந்த பாலாறு? எங்கே போச்சு? வரைபடத்தில் இல்லாமல் போகப் போகிறது! தென் பெண்ணை வட பெண்ணை, என்று போய்க் கொண்டே இருங்கள்..அடுத்து கங்கை பிணம் மிதக்கும் நதியாகிவிட்டது....

  இன்னும் நிறைய பேசலாம் விசு...எல்லா நதிகளும் தங்களின் வார்த்தைகளில் பொங்கினால்!!!


  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...