Tuesday, August 9, 2016

தனி மனிதனுக்கு உணவில்லையேல்.. சோறு போடாதீங்க.. என்னை சுடுங்க...

வேண்டுமானால் என்னை சுடுங்கள்.. தலித்துகளை சுடாதீர்கள் -
 பிரதமர் மோடி..

என்ன ஒரு வீரமான பேச்சு. கேட்க்கையிலே நெஞ்சு புல்லரிக்குது. ஐம்பது ஆறு இன்ச் ஆளாச்சே.. அதனால் தான் தன் நெஞ்சுக்கு குண்டை கேட்கின்றார்.

தனி மனிதனுக்கு உணவில்லையேல் .. எனக்கு சோறு போடாதீர்கள் என்று என் பாட்டன் பாரதியார் சொன்னது போல் உள்ளது.

தனி மனிதனுக்கு உணவில்லையேல்... ஜகத்தினை அல்லவா அழித்திட சொன்னான் என் பாட்டன்.

தலித்தோ.. சிறுபான்மையினரோ.. பெரும்பான்மையினரோ..  உயர்ந்த ஜாதியோ... தாழ்ந்த ஜாதியோ..


ஒரு மனிதனுக்கு அநியாயம் நடக்கின்றது  என்றால் ஒரு தலைவன் அதை தட்டி அல்லவா கேட்க வேண்டும்.. அதை விட்டு விட்டு...

அவனை விட்டு விடுங்கள் .. வேண்டுமானால் என்னை சுட்டு கொள்ளுங்கள்.. என்ன ஒரு நாடக பேச்சு..

யாரும் யாரையும் கொல்ல கூடாது. ஒருவன் உயிரை எடுக்கும் அதிகாரம் இன்னொருவனுக்கு கிடையாது. பிரதமராகட்டும் ... நாட்டின் கடைசி குடிமகனாகட்டும் ... எல்லாரும் நீடுடி வாழவேண்டும் என்பது தான் என் ஆசை.

வருடத்தில் .. 300 நாட்கள் ஊரிலேயே இருப்பதில்லை.. மீதி உள்ள நாட்களில் கருப்பு பூனை.. மற்றும்... குண்டு துளைக்காத வாகனம்,. எவனும் தன்னை சுடமுடியாது என்ற நினைவில் பேசியது போலல்லவா உள்ளது.

என் ஆட்சியில் "தன்னை" பாதுகாத்து கொல்ல இயலாத ஒருவனை யாரேனும் தாக்கினால்.. இரும்புகையினால் தண்டிக்க படுவார்கள் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு... அவனை விட்டுவிடு. என்னை அடி என்று சொல்வது... நாடக பேச்சே..

இங்கே இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டும். இந்த கூற்றை பேசியதின் மூலம் நம் நாட்டின் பிரதமர்.. நம் நாட்டில்.. இந்த மாதிரி தாக்குதல்கள் நடக்கின்றது  என்பதை ஊர்ஜிக்கப்படுத்திவிட்டார்.

பிரதமர் மோடி அவர்களே....

 வெளி நாடு பயணம் எல்லாம் தற்காலிகமாக நிறுத்திவைத்து விட்டு... நாடு நடப்பையும் கொஞ்சம் கவனியுங்க.

கோட்டும் .. சூட்டும் போட்டுக்கிட்டு நீங்க ஒவ்வொரு நாடா போயினே இருந்திங்கனா.. இந்த பாழா போன காங்கிரஸ்.. கூட்டணி பங்காளிங்களோடு திரும்பவும் வந்துடும்.

என்னை சுடு.. எண்ணெய் போட்டு சுடு எல்லாம்,... ஏட்டு சுரைக்காய்.. எதுக்கும் உதவாது..

நெஞ்சு  பொறுக்குதில்லையே...

7 comments:

 1. தாங்கள் கூறுவது 100% உண்மை . ஆனால் 56 இன்ச் உள்ளவர் கேட்கவேண்டுமே? நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர் காவிகளிடம் கென்சுகிறார் இது தலித்துகளை ஏமாற்றும் ( VOTE ) நாடகம் என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும்.

  நன்றி
  M.செய்யது
  துபாய்

  ReplyDelete
 2. "வேண்டுமானால் என்னை சுடுங்கள்.. தலித்துகளை சுடாதீர்கள்..." என்ற மோடி..."

  "தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று "உளறிய" தேசியக் "கவி" பாரதி...

  இவை எல்லாவற்றையும் விட நாட்டை கெடுத்து குட்டிசுவர் செய்த காந்தி....

  ஏழையை முன்னேற்ற என்ன திட்டம் இருக்கு என்றால்...
  ஏழையை முன்னேற்றாமல், முன்னேற்ற முயலாமல்...
  நானும், அவனை மாதிரி கோமணம் கட்டுவேன் என்று உலகெங்கும் அசிங்கமாக அலைந்த அரை நிர்வாண பக்கிரி...

  இவர்கள் எல்லாம் வாயில் வடை சுடுவார்கள்...தண்ணீரில் பணியாரம் சுடுவார்கள்...சுருங்க சொன்னால் வாய் சொல்லில் பீத்துவார்டி! [விஜயகாந்த்] தூத்தெறி!

  ReplyDelete
 3. அருமையான வரிகள்
  தொடருங்கள்  குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
  http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

  ReplyDelete
 4. தலித்தோ.. சிறுபான்மையினரோ.. பெரும்பான்மையினரோ.. உயர்ந்த ஜாதியோ... தாழ்ந்த ஜாதியோ..
  ஒரு மனிதனுக்கு அநியாயம் நடக்கின்றது என்றால் ஒரு தலைவன் அதை தட்டி அல்லவா கேட்க வேண்டும்.. நறுக்குன்னு சொன்னீங்க...

  ReplyDelete
 5. அவர் பேச்சைக் கேட்டதும்
  அனைவரும் உண்டான எண்ணத்தை
  அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ஏன்...!?
  "இஸ்லாமிய சகோதரர்களை கொல்லாதீர்கள், என்னைச் சுடுங்கள்.."ன்னு ஒரு தபா சொல்லி தான் பாக்குறது..!!

  ReplyDelete
 7. modi had cut a sorry figure because of this irresponsible speech
  much was expected from him now it is evident tamil nadu may not give him even five seats in the next parliamentary elections

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...