Friday, August 26, 2016

குடி இருந்தால் தான் கோன் உயரும்

மருத்துவ சிகிச்சை அளித்து கொண்டு இருக்கும் போதே  ... இரவோடு இரவாக அந்த பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணின் கணவர் அவளை மருத்துவமனையில் இருந்து தூக்கி சென்று விட்டார்- மருத்துவமனை அதிகாரிகள்.

டேய்.. சனியன் பிடிச்ச முட்டாள்களா?

கூட்டி கழிச்சி  பாருங்க... நீங்க எவ்வளவு பெரிய முட்டாளுனு தெரியும் .

அதுக்கு முன்னாலே..

நீங்கள் எல்லாம் உண்மையாகவே இவ்வளவு  பெரிய முட்டாள்களா.. இல்ல எங்களை எல்லாம் உங்களைவிட பெரிய முட்டாள்கள்ன்னு முடிவே பண்ணிட்டிங்களா?

இந்த மாதிரி மனிதாபிமானமற்ற பிரச்சனைகளுக்கு இன்னொரு முக்கியமான காரணமும்  இருக்கு.நம்ம அரசியல் தலைவர்களில் பாதி பேருக்கு ஒரு சீரான குடும்பம் இல்லை.

மோடி சாப்..
ஜெயலலிதா..
மமதா...
ராஹுல்.. (இவர் ஒரு தலைவரே இல்ல, இருந்தாலும்.. திருஷ்ட்டிக்கு   சேத்துக்குறேன்).
வாஜ்பாய்
கருணாநிதி
உமா பாரதி
ஸ்மிரிதி இராணி
நவீன் பட்நாயக்...

இந்த பட்டியல் நீண்டுக்கிட்டே போகும்..

இந்த பட்டியலை பாருங்க..

ஒன்னு... கண்ணாலமே பண்ணமா இருந்து இருப்பாங்க..
இல்லாட்டி... கண்ணாலம் பண்ணிட்டு விவாகரத்து பண்ணி இருப்பாங்க.
இல்லாட்டி.. ரெண்டு கண்ணாலம் பண்ணி இருப்பாங்க
இல்லாட்டி அடுத்தவ புருஷன கண்ணாலம் பண்ணின்னு இருப்பாங்க.

இந்த மாதிரி ஒரு சராசரி குடும்பத்தில் வாழாதவங்க எப்படி நமக்கு ஓர் சராசரி வாழ்வை அமைத்து தர முடியும்?

காலையில் அலாரம் அடித்தவுடன்.. அடிச்சி பிடிச்சி எழுந்து போய்.. அன்பான அதட்டலோடு பிள்ளைகளை  எழுப்ப...

அவர்களோ..

அஞ்சு நிமிசம்ன்னு கெஞ்ச..

அம்மணி சமையலறை போய் .. காபியோ டீயோ போட...

நாமும் ஓடி போய் எல்லாருடைய மத்திய உணவை கட்டி அவங்க வாங்க பையில் போட்டுட்டு..கையில் கிடைத்த இட்லி தோசையை.. .அவசரமா முழுங்கிட்டு..

வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு காலை உணவு மத்திய உணவை தயார் செய்து மேசையில் வைத்து விட்டு...

அம்மணி ஒரு புறம்.. மூத்தவள் ஒரு புறம்.. அடியேன் ஒரு புறம் இளையவளோடு கிளம்பும்  போது...

அலை பேசி..

இன்னைக்கு அவ பள்ளிக்கூட மீட்டிங் .. நீங்க போறீங்களா..

அடுத்த வாரம் மூத்தவளை கூட்டினு வேற ஊருக்கு ஒரு விளையாட்டு போட்டி.. டிக்கட் வாங்கிட்டிங்களா?

அம்மாவுக்கு மாத மருத்துவ சோதனை.. டாக்கரிடம் கூட்டினு போகணும்.

இளையவள பள்ளியில் விட்டுட்டு நம்ம அலுவலகம் போகும் போது, அலை பேசி அலற..

மூத்தவள்..

டாடி..

சொல்லு..

ஐ லவ் யு ..

என்ன வேணும்...?

இல்ல சும்மாவா தான் ஐ லவ் யு..

சீக்கிரம் சொல்லு என்ன வேணும்?

வீடு பாடத்தை மறந்து வீட்டிலே வைச்சுட்டு வந்துட்டேன்..ப்ளீஸ்..

அட உங்கப்பனுக்கு  தப்பாம பிறந்தவளே...

ஐ லவ்  யு டாடி..


மீ டூ...

என்று வைக்கும் போது


சின்னவள் அழைத்து..

டாடி...

சொல்லு..

அக்காவுடைய வீட்டு பாடத்துக்கு வீட்டுக்கு போறீங்களா?

ஆமா!

ஐ லவ் யு டாடி..

நீ எதை மிஸ் பண்ண?

லன்ச்.. விட்டுட்டு வந்துட்டேன்.

ஐ லவ்  யு டூ.. பை.

என்று  வைக்கையில்..

ஏங்க... போன மாசம் போன் பில் ஒரு கவரில் போட்டு  கொடுத்தனே?  போஸ்ட் பண்ணிங்களா?

பண்ணிட்டேன்.. என்று சொல்லிவிட்டு வண்டியின்  முன்புற பெட்டியை திறந்து பார்த்தால்.. அந்த கவர்.. என்னை பார் என் அழகை பார் என்று சிரிக்க..

எதிரில்...  இரண்டு காவல் அதிகாரிகள்  "Funeral " என்ற எழுத்தை வண்டியில் பதித்து கொண்டு செல்ல ... அவர்களை தொடர்ந்து நிதனமாக சென்றேன்.. கிட்ட தட்ட 50-60 வண்டிகள் வரிசையாக.. ஒவ்வொன்றாய் பின்னாலும் "Funeral " என்று எழுதி இருந்தது.

இந்த வண்டிகள் மிக குறைந்த வேகத்தில் சென்றாலும், ஒருவரும் அவர்களை முந்தாமல்.. செல்கையில்..

ஒரு கருப்பு லிம்மாஸின்.. இறந்தவரின் குடும்பம் இதில் தான் செல்லும்..

இறந்தது யாராக இருக்கும்.. அம்மாவா.. அப்பாவா.. தாத்தாவா.. அய்யயோ.. புத்திரசோகமா ?

என்று எண்ணி கொண்டே ஒரு  மனதில் அவர்களின் சமாதானத்திற்காக ஒரு பிரார்த்தனை செய்து விட்டு..

வண்டியை ஓட்டுகையில்..

ஒடிசாவில் நம்மில் ஒருவன் பட்ட கஷ்டமும் அவன் பிள்ளையின் கதறலும் நினைவிற்கு வந்தது.

மருத்துவ சிகிச்சை அளித்து கொண்டு இருக்கும் போதே  ... இரவோடு இரவாக அந்த பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணின் கணவர் அவளை மருத்துவமனையில் இருந்து தூக்கி சென்று விட்டார்- மருத்துவமனை அதிகாரிகள்.

இவங்கள நம்பினா... நாமும் பிணத்தை தோளில் தூக்கி போட்டுனு  தான் நடக்கணும்.


சரி.. மருத்துவமனையில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிட்டாங்கன்னு சொன்னாங்க இல்ல..

இப்படி சொல்லி மருத்துவமனை அதிகாரிகள் தப்பிக்கலாம் ... ஆனால்..

ஒருத்தன் எப்படி மருத்துவமனையில் இருந்த நோயாளியை அவங்களுக்கு தெரியாம தோளில் போட்டுனு  வர முடியும்?

அதுவும் .. .ஒரு பனிரெண்டு வயது பொண்ணோட....அழுது கொண்டே...

ஆறு மணி நேரம் .... 10 கிலோ மீட்டர் நடந்து இருக்கான்... காவல் துறை என்ன ஆணிய புடுகினு இருந்தது?

என்னதான் நடக்குது இங்கே..?

உடனடியாக மாற வேண்டும்.. இல்லையேல்  நம்மை போல் பிணம் எவனும் இல்லை...

பின் குறிப்பு :

குடும்ப வாழ்க்கையினா என்னன்னே தெரியாதவங்களுக்கு  எப்படி.. நம் வீட்டு சாவு புரியும் ?

தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...


4 comments:

  1. மனதை உலுக்கிய சம்பவம். மனிதம் என்ற சொல் சுத்தமாக இல்லாதவர்கள்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். உங்கள் பின் குறிப்பு சரியே...ஆனால் அன்பும் மனிதம் என்பது இருந்தால் அதுவும் இருந்துருக்குமே....

    ReplyDelete
  2. 'நீங்கள் எழுதியிருப்பது சரிதான். சட்டியில் இருப்பதுதானே அகப்பையில வரும். அவர்கள் கட்சியில் இருப்பவர்களின் தரமே அப்படித்தானே இருக்கிறது. எனக்கு இதில் ஆச்சர்யம், இதைக் கண்டவர்களில் (செய்திகளில் வந்தபிறகல்ல) ஒரு இந்தியனுக்குக்கூடவா மனசாட்சி உலுக்கவில்லை? அந்த மருத்துவமனையிலோ அல்லது பாதையிலோ இருந்த ஒருத்தர்கூடவா அதிர்ச்சியடையவில்லை? 5 ரூபாயோ அல்லது ஒருவாய் சோறோ கொடுக்கத்தோன்றவில்லை? ஹிட்லரைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அவர் அ'நியாயம் செய்தபோது, ஒவ்வொருவரும், தான் பாதிக்கப்படவில்லை, அவர்கள்தானே என்று கண்டுக்காமல் இருந்ததால், தான் பாதிக்கப்பட்டபோது உதவ யாருமே இல்லாமல் போய்விட்டது தெரிந்ததாம். தலைவர்களின் (கவுன்சிலர்களில் ஆரம்பித்து) சிண்டைப் பிடித்து உலுக்க ஆரம்பிக்காதவரை, நமக்கு விமோசனமே கிடையாது.

    ReplyDelete
  3. in tamil nadu some persons would have come to the rescue for this NOBLE MAN

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...