Sunday, August 14, 2016

விஜய் "ங்கோயாலுவுடன்" ஒரு பேட்டி..


ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த தம் மனைவி மற்றும் அல்லக்கைகளோடு ரியோ சென்ற விஜய் ங்கொய்யாலுக்கு...

தங்களின் பிடிவாதமான சேட்டை உடனடியாக நிறுத்த படாவிட்டால் தங்களையும் தங்களின் அல்லக்கைகளையும் ஒலிம்பிக்  மைதானத்தில் இருந்து வெளியேற்ற நேரிடும்.

என்று ஒரு கடிதத்தை ஒலிம்பிக் அமைப்பினர்  எழுதினார்கள்.

ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் எந்த பதக்கமும் பெறாமல் இருக்கும் இந்தியாவிற்கு இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல்....

இந்திய வீரர்களை அனைவரையும் இரண்டாம் வகுப்பில் பயணிக்க சொல்லி விட்டு முதல்வகுப்பில் தம் மனைவியோடும் அல்லக்கைகளோடும் மீண்டும் தாயகம் திரும்பினார், "விஜய் "ங்கோயாலு"

நம்ம நல்ல ராசி... அவரோட பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதோ அந்த பேட்டி..


வணக்கம்.. விஜய் ங்கோயாலு வணக்கம்..


நமஸ்கார் ... என் பெயர் ங்கோயாலு இல்லை... கோயல்.

இருக்கலாம்.. நாங்க மறுக்கல.. இருந்தாலும் எங்கள் அழகிய தமிழில் நீங்க பண்ண காரியத்துக்கு "ங்கோயாலு"ன்னு தான் அழைப்போம்.

சரி விடுங்க.. நான் ங்கோயாலு தான்.. ஒரு நிமிஷம் .... என்னுடைய மனைவி மற்றும் பாசக்கார அல்லக்கைகள் எங்கே ?

அவங்க... குடிவரவு அதிகாரிகளிடமும் கஸ்டம் அதிகாரிகளிடமும் எதோ சண்டை போட்டுனு இருக்காங்க..

சண்டையா? எனக்கு வேண்டியவங்கன்னு சொன்னீங்களா?

சொன்னனாலே தான் பிரச்சனையே.. சரி.. பேட்டியை ஆரம்பிக்கலாமா?

ஆரம்பியுங்கள்.

முதல் கேள்வி... ஒலிம்பிக் போட்டியை பார்க்கவேண்டும்ன்னு எப்ப முடிவு பண்ணீங்க..

2014 ல் மோடி அரசாங்கம் வந்தவுடன் எனக்கு இந்த ஆசை வந்தது.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்.

சந்தோசம்.. ஆனாலும் நீங்க இப்ப ஒரு ரெண்டு மாசமா தான விளையாட்டு துறை அமைச்சராகினீர்கள் .. ஏன் இவ்வளவு தாமதம்.

நல்ல கேள்வி.. கிட்ட தட்ட ரெண்டு வருடம் மோடி அவர்களிடம் இதை பேச பார்த்தேன். ஆனால் என் கெட்ட காலம் அவர் ரெண்டு வருடமா நாட்டுல இல்ல.. அதனால தான் தாமதமாகிவிட்டது.


சரி.. இந்த மாதிரி பயணத்திற்கு லட்ச கணக்கில் செலவாகுமே.. அதை எப்படி சமாளிக்கிறீங்க ?

என்ன புரியாம பேசுற.. இந்த கேள்வியை நான் தானே உங்கள கேக்கணும்..

புரியல..

உங்க .. அதாவது பொது மக்கள் செலவில் தானே நாங்க போறோம்.

சரி... இந்த விளையாட்டு துறைக்கு அமைச்சர் ஆனீங்களே...எந்த எந்த விளையாட்டில் என்ன என்ன பதக்கம் வாங்குனீங்க சொல்லுங்க..

யாரை பாத்து என்ன கேள்வி கேட்ட? கல்லூரிக்கு கூட போகாதவங்கள  கல்வி துறை மந்திரி ஆக்குனாரே, நீல படத்தில் நடிச்சவன திரைபட கல்லூரி முதல்வராக்குனரே.. அப்பா கேக்காத கேள்வியை எப்படி என்னிடம் கேட்கலாம்? பேட்டி ரத்து.. நான் உடனடியா ஒரு செல்பி எடுக்க போகணும்.

ஐயோ மன்னிக்கனும், தெரியாமல் கேட்டுட்டேன்..

பி கேர்புல்.. என் அல்லக்கைகள் வந்தால் என்னவாகும்ன்னு ஒலிம்பிக் அதிகாரிகளை கேட்டு பாருங்க..

சரி..இந்த போட்டிக்கு ஏன் மனைவியை அழைச்சினு போனீங்க..?

ஏன் யா.. இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது. எனக்கு மட்டும் என்ன அம்மணியை கூப்பிட்டுனு போகணும்ன்னு ஆசையா? எவனோ ஒருத்தன் வேண்டாதவன்.. அம்மணிட்ட.. யக்கா... அந்த ஊரு பொண்ணுங்க ரொம்ப அழகாமேன்னு சொல்லிப்புட்டான்...

அம்மணிக்கு என் மேலே அம்புட்டு நம்பிக்கை.. கூடவே கிளம்பிட்டா!

இதுக்குதான் மனைவியை கூட்டின்னு  போறேன்னு பிரதமரிடம் சொன்னீங்களா?

சே சே.. அவருக்கு மனைவியை விட்டுட்டு ஊர் ஊரா போறது கை  வந்த கலை.. இது புரியாது..

சரி.. அவருக்கு என்ன கரணம் சொன்னீங்க?

உற்சாகப்படுத்தும் போது எனக்கு கை தட்டி வாய் கூச்சல் போட மட்டும் தான் தெரியும். அம்மணி விசில் கூட அடிப்பாங்கன்னு சொன்னேன்.. கூட்டினு போன்னு சொல்லிட்டார் (நன்றி "கோ" )

எடுத்ததுக்கெல்லாம் எட்றா வண்டிய ன்னு சொல்லி கிளம்புவார்? இதை மட்டும் எப்படி மிஸ் பண்ணார்..?

எங்களை மாதிரி ஆளுங்க விளையாட்டுத்துறையில் இருக்கிற வரை இந்தியன் எவனும் பதக்கம் வாங்கமாட்டானு அவருக்கு நல்லா  தெரியும். அங்கே வருவதற்கு பதிலா இங்கேயே சுதந்திர தினத்துக்கு நிறைய செல்பி எடுக்க வாய்ப்பு இருக்கு இல்ல, அதுதான் இங்கேயே தங்கிட்டார்.

உங்களுடைய உற்சாகத்தை இந்திய அணி வீரர்கள் எப்படி வரவேற்றார்கள்.

நல்ல வரவேற்பு  தான். உதாரணத்திற்கு பாருங்க.. இந்தியா ஜெர்மனி ஹாக்கி விளையாட்டு 1-1ன்னு  விறு விறுப்பா போய்  கோண்டு இருந்த நேரத்தில் தான் நானும் மனைவியும் மைதானத்தில் நுழைந்தோம். எங்களை பார்த்தவுடன்.. 2-1 ன்னு  தோத்துட்டாங்க. நாங்க மட்டும் போய் இல்லாட்டி எங்க உற்சாகம் மட்டும் இல்லாட்டி 4 கோலாவது வாங்கி இருப்பாங்க.

சரி.. வீரர்களை சாதாரண வகுப்பில் அனுப்பிட்டு நீங்க முதல் வகுப்பில் போனீங்களாமே.

நல்ல கேள்வி... அவங்களும் முதல் வகுப்பில் வந்தா எங்களுக்கு என்ன மரியாதை.. மேலும்... அவங்க முதல் வகுப்பில் வந்தா நல்ல ரெஸ்ட் எடுத்து ஆட்டமும் நல்லா ஆடுவாங்களே.. அப்புறம் எங்க உற்சாகம் அவங்களுக்கு தேவை படாதே.. அதனால் தான் அவங்கள சாதாரண வகுப்பில் அனுப்பிட்டு நாங்க முதல் வகுப்பில் போனோம்.

சரி.. இப்ப இந்த மாதிரி கேவலமா ஒரு கடிதம் கொடுத்து இருக்காங்களே... அதுக்கு என்ன சொல்றீங்க...?

என்னய்யா நாடு பிரேசில். ஒரு மந்திரிக்கு மரியாதை தராத நாடா இருக்கே.. ஒரு செல்பி ஒழுங்கா எடுக்க கூட விடமாடுறாங்க...

ஒரு பதக்கம் கூட வாங்காம இருக்கும் பரிதாபமான நிலையில் இருக்கும்  இந்திய அணியை பற்றி தங்கள் கருத்து..

இது ஒரு சர்வதேச சதி...

புரியல..

இந்திய கலாச்சாரத்தின் மேல் பொறாமை கொண்ட மாட்டு கறி உண்ணும்  யூத - ஜெர்மானிய - இஸ்ரேல் தேசங்களை சேர்ந்தவர்கள் நாம் வெற்றி பெற கூடாதுன்னு மறைமுகமாக செய்த சதி தான் நம் நாட்டின் அந்தோ கதிக்கு காரணம். ( நன்றி மலர்வண்ணன்)

சரி, இந்தியாவிற்கு அவமான பெயர் எடுத்துன்னு வந்ததால் உங்க மேலே வழக்கு போட போறங்கலாமே..

கிழிச்சாங்க ... காமன் வெல்த் விளையாட்டுன்னு சொல்லி .. கடப்பாரை கூட வாங்காம மைதானத்துக்கு கணக்கு காட்டினாரே.. களவாடி..

யு மீன் கல்மாடி...

அதே களவாணி தான்...

சொல்லுங்க..

அவனையே ஒரு ஆணியும் புடுங்க முடியல.. என்னை என்ன பண்ண போறீங்க...?

பின் குறிப்பு :

ஒலிம்பிக் அமைப்பு கமிட்டி .. தலைமை அலுவலகம்..

2044 ல் இந்தியா ஒலிம்பிக் நடத்த விண்ணப்பிக்க போதாமே?

ஒலிம்பிக்கே ரத்து ஆனாலும் பரவாயில்லை.. அங்கே மட்டும் வைச்சிடாதீங்க?

ஏன்..

ரியோவில் ஒலிம்பிக் பாக்குறேன்னு  வந்த ஒரே ஒரு இந்திய அமைச்சரை சமாளிக்க முடியல.. அங்கே போனா .. ஒலிம்பிக்கு சமாதியை கட்டிடுவாங்க.. 

6 comments:

 1. 'நியாயம்தான். என்ன செய்வது. இந்தியாவில் கல்மாடிகளுக்குத்தான் காலம்.

  ReplyDelete
 2. // ஒரு கடிதத்தை ஒலிம்பிக் அமைப்பினர் எழுதினார்கள்.// என்னதாங்க அங்க நடந்தது?

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நல்ல கலாய்ப்பு
  மொழி மாற்றி அவர்களுக்கு
  அனுப்பி வைக்க வேண்டும்
  அப்போதேனும் கொஞ்சம்
  உறைக்குமா எனப் பார்க்கவேண்டும்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 5. ஹாஹாஹா! சிரிப்பா சிரிக்குது ஒலிம்பிக்!

  ReplyDelete
 6. ஹஹஹஹ் ஒலிம்பிக் ஒலி பெருக்கி இல்லாமலேயே இப்படி எதிரொலிக்குதே!!! பல "தள"ங்களிலும்!!!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...