Saturday, August 13, 2016

மதிகெட்ட மாந்தர்களானோம்.. நெஞ்சு பொறுக்குதில்லையே...

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை நினைத்து பெருமை படுகிறோம் - பிரதமர் மோடி

நேற்று நம் நாட்டின் பிரதமர் பேசிய பேச்சுதான் இது.


ஏட்டு சுரைக்காய் தான் ஐயா நீர். பேச்சை நிறுத்திட்டு காரியத்தில் இறங்கும். போட்டியில் பங்கேற்க போகும் வீரர்கள் சாதாரண வகுப்பில் 36 மணி நேர பயணம். செல்பி அமைச்சர் "விஜய் ங்கொய்யால " தலைமையில் உற்சாகப்படுத்த போனவர்களுக்கு முதல் வகுப்பு.

விளையாட்டு வீரர்கள் ஒரு நாட்டின் அடையாளம் அல்லவா? அவர்களை நம் போற்றி பாதுக்காக்க வேண்டாமா? வேலைக்கு ஆகாத கிரிக்கெட் என்ற ஆட்டத்தை சூதாட்டமாக மாற்றி  விட்டு அந்த சனியங்களை மட்டும் தெய்வத்திற்கு நிகராக போற்றி கொண்டு...

இந்த வீரர்களை தீண்டாதவர்கள் போல் நடத்துவது...?

நம் நாட்டின் ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகளின் பெயர்களை படித்தேன். அதில் ஒருவரின் பெயர் கூட ஏதாவது விளையாட்டில் கேள்வி பட்டது போல் இல்லை. (இந்த தொடர்பில் அவர்களின் பெயர்களை பார்க்கலாம்.,தங்களில் யாராவது இந்த பெயர்களை அறிந்தவர்கள்  இருந்தால் பின்னூட்டத்தில் இடவும்)

இந்த இந்த ஒலிம்பிக் சங்கம் சென்ற வருடம் மட்டும் கிட்ட தட்ட 32 கோடியை விளையாட்டுக்காக செலவளித்துள்ளது ( இந்த விவரத்தை அவர்களின் இணைய தளத்தில் உள்ள தணிக்கையாளர்களின் விவரத்தில் கண்டேன்)

இந்த பணம் எதற்க்காக யாருக்காக செலவிடப்பட்டது. கொஞ்சம் விசாரித்தால்... 

இந்த ஒழும்பிக் சங்க நிர்வாகிகளில் 90% ஓய்வுபெற்ற அரசியல் செல்வாக்குள்ள அதிகாரிகள். இந்த பதவி பணி காலத்தில் அவர்கள் செய்த உதவிகளுக்காக அவர்களுக்கு வழங்க படுகின்றது.

இதற்காக சம்பளம் (அதுவும் எவ்வளவு உண்மையோ) இல்லாவிடிலும் அலுவலகம், வாகன, ஓட்டுநர்... பஞ்ச படி... இதர செலவுகள், இலவச பயணங்கள்... இப்படியான காரணத்திற்க்காக செலவு செய்யபட்டது தான் இந்த 32 கோடி.. ஒரு வருடத்தில் 32 கோடி... இந்த சனியங்களுக்கு..

இப்போது தமிழக ஒலிம்பிக் சங்கத்திற்கு வருவோம்.

இதற்க்கு தலைமை யார் தெரியமா? 

தேவாரம் IPS . இவருக்கு இப்போது 78 வயது, இவர் தான் தமிழக ஒலிம்பிக் சங்க தலைவர். 1997 ல் காவல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். 

இங்கு எனக்கு ஒரு சந்தேகம்.


வயதாகிவிட்டது .. இனிமேல் தங்களால் இந்த பணியை சீராக செய்ய முடியாது என்று தானே ஒருவருக்கு ஓய்வு கொடுத்து அனுப்புகிறோம். இவ்வாறு ஓய்வு பெற்றவர் எப்படி இப்படி ஒரு முக்கியமான பதவிக்கு தலை ஏற்க அழைக்க படுகின்றார். 

அப்படியானால் ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை பதவிக்கு வேலை பொறுப்பு என்று ஒன்றுமே கிடையாதா? 

என்னதான் நடக்குது இங்கே..?

சரி.. தமிழக  ஒலிம்பிக் சங்கத்தின் அடுத்த பதவிக்கு வருவோம். இங்கே நான் கொடுக்கும் தொடர்பை தயவு செய்து சொடுக்கி பாருங்கள். இதில் உள்ள நபர்களில் ஒருவராவது.. எந்த விளையாட்டிலாவது ஏதாவது ஆணியை புடிங்கி இருப்பார்களா என்று சொல்லுங்கள்..

இவர்கள் அனைவருக்கும்...சென்னையில் அலுவலகம்... லொட்டு லொசுக்கு வேற...

சில வருடங்களுக்கு முன் அஸ்வினி என்ற ஒரு வீராங்கனையின் பேட்டி ஒன்றை காண நேர்ந்தது. அதில் அவர்கள்... வருத்தம் கலந்த கேலியோடு.. ஒரு காரியத்தை சொன்னார்கள்..

இந்திய நீச்சல் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு நீச்சல் அடிக்க தெரியாதாம்!

என்ன ஒரு அநியாயம்? இதைவிட கேவலமாக ஒரு அமைப்பு செயல் பட முடியுமா?

பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு வேண்டு கொள்...

வாய் சொல்லில் வீரனாய் இருப்பது எளிது. செய்து காட்டுங்கள். சென்ற தேர்தலில் பாரதமே தன் நம்பிக்கையை  தம் மேல் வைத்து ...பெரிய வெற்றியை அளித்தது.

அன்றில் இருந்து இன்று வரை.. தாம் அளித்த வாக்கு ஒன்று கூட நிறைவேற படவில்லை.

தாம் பதவி ஏற்ற பின் எல்லா துறையிலும் தமக்கு சாதகமான ஆட்களை தலைமை பதவியில் வைத்துள்ளீர்கள். இந்த கேவலமான காரியத்தை தான் காங்கிரஸ் மற்றும்.. கூட்டணி சனியன்கள் வருடக்கணக்கில் செய்து நாட்டையே அழித்தார்கள். நீங்களும் அதே காரியத்தை செய்யும் போது... 

நெஞ்சு பதறுகிறது.

வீரர்களின் மேல் பெருமை இருந்தால்... தோல்வியை கண்டு அவர்கள் துவண்ட வேண்டாம் என்றால்.. ஒலிம்பிக் போட்டியில் இருந்து திருப்பும் வீரர்களை முதல்வகுப்பு பயணத்திலும்.. அவர்கள் கூட போன தங்களின் அல்லக்கைகளை சாதாரண  வகுப்பிலும் பிரயாணம் செய்ய சொல்லுங்கள். அப்போது தான் தங்களின் பெருமை எப்படி என்று வீரர்களுக்கு தெரியும்.

சரி.. வைத்தெரிச்சலை விடுங்க...

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்களை உற்சாக படுத்த மனைவியோடு முதல் வகுப்பில் போன "விஜய் ங்கோயாலு" வை .. 

உற்சாக படுத்த போனீர்கள் சரி.. அதுக்கு ஏன் தங்கள் மனைவியை அழைத்து சென்றீர்கள்...

என்று கேட்டதற்கு...அவரோ பதிலாக..

நல்ல கேள்வி... உற்சாக படுத்துவது என்பது ஒரு சுலபமான காரியம் அல்ல.. மற்றவர்களை உற்சாக படுத்துவதற்கு முன்பு நம்மை நாமே உற்சாக படுத்திக்கொள்ளவேண்டும். நாம் எப்போதும் உற்சாகமா இருந்தால் தான் அடுத்தவர்களை உற்சாக படுத்த முடியும். உற்சாகமில்லாத ஒரு நபரிடம் இருந்து எந்த ஒரு உற்சாகத்தையும் யாரும் பெற முடியாது ... 

என்றார்... அதை கேட்டவுடன்.. 

பெரிய பதில்.. இருந்தாலும்... நான் கேட்ட கேள்விக்கான பதில் இல்ல.. நீங்கள் ஏன் தம் மனைவியை அழைத்து சென்றீர்கள்..?

உற்சாகப்படுத்தும் போது.. எனக்கு கை தட்டி வாய் கூச்சல் சத்தம் தான் போட தெரியும். என் மனைவிக்கோ நன்றாக "விசில்"  அடிக்க வரும். அதனால் தான் அவர்களை அழைத்து சென்றேன்.

பின் குறிப்பு :

இந்த ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகளாக யார் யார் இருக்கின்றார்கள்.. எந்த விளையாட்டு துறையில் பிரகாசித்தார்கள் என்று Right to Information  வழியாக எழுதி இருக்கின்றேன்...

இதோ அந்த கடிதம்..என்னதான் சொல்கின்றார்கள் பார்ப்போம்.

Dear Sir / Madam,

After Compliments,


It breaks our hearts to see the pathetic performance of Indian Athletes at the ongoing Olympics events being held in Rio. 

Dont get me wrong, being the parent of two daughters who are competitive Athletes, I have the utmost respect for the Athletes. I am aware of the hard work they put, day after day to get to Olympics.

But, we are really wondering about, why we Indians cant compete at Olympic levels, and are convinced that its not the lack of talent, but the Association's the mismanagement.

I am not sure whether these are genuine news, but I remember reading that Indian contingent had more officials attending Rio, then the actual athletes. The cause may be genuine, is it true.

As a fellow Indian, I would like to know, the names and Bio Data of all Indian officials who attended Rio Olympics at the expense of Tax payers.

I want to know, how they got they got their position in Indian Olympic Association, who recommended then, and above all... WHAT IS THEIR SPORTING BACK GROUND?

Can we please have these details.

Regards

Vish Cornelius

10 comments:

 1. http://thaenmaduratamil.blogspot.com/2016/08/hate-olympics2016-memes.html?m=1

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. கிணறு வெட்ட பூதம் வந்தது போல் உள்ளது.... நாளை தங்களின் பதிவை எதிர்பார்த்து...

   Delete
 3. எங்குமே அரசியல், வணிக நோக்கு பரவியுள்ள நிலையில் நாம் வெட்கப்படவேண்டிய நிலையில் உள்ளோம்.

  ReplyDelete
 4. Visu:
  I think it will be more meaningful and fun if I put the above plus other materials in the same [my] post that I will do soon. So I removed this.

  ReplyDelete
 5. படிக்கறவங்களுக்கு பிளட் பிரஷர் ஏத்திவிடுறதே உங்க வேலையாப்போச்சு. சீக்கிரம் தண்டத்தோடு நடந்த கதையை எடுத்துவிடுங்க.

  ReplyDelete
 6. அறச் சீற்றம் அருமை
  கடிதமும்....
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 7. அடுத்த ஒலிம்பிக் முடிவிற்குள் பதில் வந்து விடலாம்.

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...