Tuesday, July 5, 2016

மருத்துவ தொழிலுக்கு ஒரு கேவலம்... நெஞ்சு பொறுக்குதில்லையே

மனதை மிகவும் பாதித்த விஷயம்...நெஞ்சு பொறுக்குதில்லையே..

பொதுவாகவே " இளகிய மனது கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்" என்ற எச்சரிக்கையுடன் வரும் காணொளியை நான் எப்போதும்  தவிர்த்துவிடுவேன். வளரும் பருவத்தில் இருந்தே இந்த மாதிரியான காட்சிகள்   என்னை மிகவும் பாதிக்கும், தூக்கத்தை இழந்து துக்கத்தோடு அலைய நேரிடும்.

சென்ற வாரம், முகநூலில் அலசி கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு காணொளி இது போல் எச்சரிக்கையோடு வந்தது. அதில் ஒரு நபர் நாயை ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அதன் மதில் சுவரின் மேல் வைத்து பிடித்து கொண்டு இருந்தார்.

நான் , அந்த எச்சரிக்கையை  சாதாரணமாக எடுத்து கொண்டு, இது பழக்க பட்ட நாய் போல் உள்ளது.. அந்த மதில் சுவரில் குதித்து ஏதாவது வித்தை காட்டும் என்று நினைத்த்து சுட்டியை அழுத்த... அந்த நாயும் தான் வாலை ஆட்டிக்கொண்டே அந்த நபருக்கு தன் மேல் உள்ள நம்பிக்கையை காட்டியது...

சில நொடிகள் தான்..

அந்த மனிதன்.. சிரித்துக்கொண்டு இருக்கைகளினாலும் அந்த நாயை தூக்கி அந்த மாடியில் இருந்து தூக்கி ஏறிய... அந்த ஜீவன் ... நாடு வானில்  .....
எனக்கோ இன்னும் நம்பிக்கை.. ஓ.. கீழே யாராவது ஒரு வலையோ அல்லது ..வேறு எதையோ வைத்து  இதை பிடிப்பார்கள் என்று தான் நினைத்தேன்... ஏன் என்றால் இந்த அயோக்கியனின் சிரிப்பு அப்படித்தான் இருந்தது.

அவ்வளவு தூரத்தில் இருந்து தள்ளப்பட்ட அந்த நாய்..  மரத்தில் அடிபட்டு... தரையில் மோதி ஒரு மரணஓலமிட்டது..

ஒரு சில நிமிடங்கள் நான் அதிர்ந்து போனேன்.தன்னை நம்பி வந்து .. வாலாட்டி கொண்டு இருந்த ஒரு நாயை ஒரு மனிதனால் எப்படி இப்படி சிரித்து கொண்டு அனுபவித்து கொள்ளும் அளவிற்கு ..எப்படி ஒரு கொடூர மனம் வரும் என்று நினைத்து கொண்டு...

அந்த பின்னூட்டத்தில் என் எதிர்ப்பை தெரிவித்து விட்டு.. விசனத்தோடு கிளம்பினேன்.

இன்று காலை .. ஒரு செய்தி..

"மூன்றாம் அடுக்கு மாடியில் இருந்து நாயை வீசியவரை  காவல் துறையினர் தேடுகிறார்கள்"

இந்த சனியனை கண்டிப்பாக பிடித்து தண்டிக்கவேண்டும் என்று யோசித்து கொண்டே செய்தியை படித்தேன். அந்தத் செய்தியை படிக்கையில்.. என் அதிரிச்சி பயமாக மாறியது.

இந்த காரியத்தை செய்த இந்த கொடியவன் ஒரு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கின்றவராம். இன்னும் ஒரு வருடத்தில் இவர் மருத்துவராக பணி புரிவாரம்.

அட பாவி மக்களே.. என்ன ஒரு சமுதாயமாக மாறி உள்ளோம்.

ஒரு வாயில்லா ஜீவன்.. தன்னால் எதிர்த்து போராடாத முடியாத ஒரு ஜீவனை.. அடுக்கு மாடியில் இருந்து எறிந்து  விட்டு அதை சிரித்து கொண்டே படம் எடுக்கும் இவன் நாளை ஒரு மருத்துவனா?

மருத்துவம் என்பது எவ்வளவு ஒரு புனிதமான தொழில். நம் உயிரை காப்பாற்றும் புண்ணியவான்கள் அல்லவா இவர்கள். இந்த மகத்தான தொழிலை செய்பவர்கள் எவ்வளவு உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.. இவனோ... ?

இவன் நாளை பணி புரிய போகும் இடத்தில் .. நாம் நம் மனைவியையோ.. அல்லது.. மகளையோ.. அனுப்ப முடியுமா?

பட்ட பகலில் புகைப்பட கருவியை வைத்து கொண்டு  சிரித்து கொண்டே இந்த வேலையை செய்யும் இவன்...உடம்பு  சரியில்லாத நேரத்தில் நாம் நினைவற்று இருக்கையில்.. சக மனிதரை  என்னவெல்லாம் செய்ய துணிவான என்று நினைக்கையில் .. நெஞ்சு பதறுகிறது.

இந்த கொடூரகாரன் கையில் நம் உயிரா? நினைக்கவே பயமாக உள்ளது,.

மற்றும்..இவன் செய்த இந்த பொல்லாத காரியத்தை சற்று ஒதுக்கி வைத்து விட்டு இன்னொரு விஷயத்திற்கு  வருவோம்..

மருத்துவ படிப்பை எல்லாராலும் படிக்க இயலாது. இதை நன்றாக படிப்பவர்கள் .. சிந்திப்பவர்கள்  தான்  படித்து தேர்ச்சி பெற இயலும். இதை முடிக்க அதிக IQ தேவை. இந்த சனியனிற்கு ஏதாவது அறிவு இருக்கின்றதா?  இவ்வளவு முட்டாள்தனமான வேலையை செய்யும் இவன் அதை காணொளியாக மாற்றி " நான் செய்த கேவலத்தை பார்.. என்னை பிடித்து சிறையில் அடை.. " என்று சொல்லும் அளவிற்கு முட்டாள்.

இவனை நம்பி ... நாம் சிகிச்சைக்கு செல்ல முடியுமா?

சரி .. இந்த சனியங்களின்  வளர்ப்பிற்கு வருவோம். கொஞ்சமும் மனசாட்சியில்லாமல், கொடூர குணத்தோடு, ரசித்து கொண்டே ... இருக்கும் இப்படியான முட்டாளை .. ஒருவேளை தவம் எடுத்து பெற்று இருப்பார்களோ..

என்னே ஒரு வளர்ப்பு...

கடைசியாக..

"உன் நண்பன் யாரென்று சொல்.. நீ யார் என்பதை நான் சொல்கிறேன்.. " என்று ஒரு கூற்று உள்ளது.

இந்த நிகழ்ச்சியை  புகை பட கருவியில்  பதிவு செய்த மற்றொரு சனியன் இவனின் நண்பனாம். அவனும் மருத்துவ கல்லூரி மாணவனாம்..
கொஞ்சம் விசாரித்து பாருங்கள். இந்த ரெண்டு சனியங்களும் ஏதாவது ஒரு அரசியல்வாதி அல்லது அதிகாரிகளின் வாரிசுகளாகத்தான் இருக்கும். அதிக  அளவு பணத்தையும் - அதிகார பலத்தையும் வைத்து கொண்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருப்பார்கள்.

நாளை இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மருத்துவமனை ஆரம்பித்து....

நெஞ்சு பொறுக்குதில்லையே

பின் குறிப்பு :

இது விஷயம்னு, இதைபோய் மருத்துவ தொழிலுக்கே கேவலம்ன்னு சொன்னா எப்படி?

மருத்துவ படிப்பு என்பது கிட்டத்தட்ட ஐந்து வருடம் படிக்கவேண்டிய படிப்பு. இந்த சனியன்கள் ... ஐந்தாவது, அதாவது இறுதி வருடம் படிக்கும் மாணவர்களால். இந்த சனியங்களுக்கு கடந்த நான்கு + வருடங்களில் அங்கே உள்ள ஆசிரியர்கள் என்னத்த சொல்லி கொடுத்தாங்க. ஒரு நல்ல காரியம் சொல்லி கொடுத்து இருந்தாலும் இப்படி செய்ய தயங்கி இருப்பார்களே..

போது அறிவும் இல்ல.. படிப்பும் இல்ல. முட்டாள் தானம் வேறு... என்னத்த சொல்வேன்.. போங்க.. 


5 comments:

 1. u r right sir, based on this, both culprits should be punished and permanently suspended from pursuing mbbs.

  ReplyDelete
 2. மை காட் விசு நான் காணொளி பார்க்கவில்லை....உங்கள் பதிவே போதுமானது...அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிட்டது...

  //மருத்துவ படிப்பை எல்லாராலும் படிக்க இயலாது. இதை நன்றாக படிப்பவர்கள் .. சிந்திப்பவர்கள் தான் படித்து தேர்ச்சி பெற இயலும். இதை முடிக்க அதிக IQ தேவை. இந்த சனியனிற்கு ஏதாவது அறிவு இருக்கின்றதா? இவ்வளவு முட்டாள்தனமான வேலையை செய்யும் இவன் அதை காணொளியாக மாற்றி " நான் செய்த கேவலத்தை பார்.. என்னை பிடித்து சிறையில் அடை.. " என்று சொல்லும் அளவிற்கு முட்டாள்.// உண்மை மருத்துவம் படிப்பது எளிதல்ல....அது நன்றாகவே தெரியும்....என் மகனும் கால்நடை மருத்துவன் தானே...

  இந்த காட்டேறிகளிக்கு, தூத்தேரிகளுக்கு சனியங்களுக்கு யார் விசு அட்மிஷன் கொடுத்தது? இந்தப் படுபாவிகளை இப்படி மதில் மேல் ஏற்றிக் தள்ளிக் கொல்ல வேண்டும் விசு. சத்தியமாக அரபு நாடுகளைப் போல இங்கு தண்டனை வரவேண்டும் விசு. நான் ரொம்பவும் எமோஷனலாகிவிட்டேன் விசு ப்ளீஸ் தயவு செய்து இனி என் கண்ணில் இது போன்றவை படக் கூடாது...சத்தியமாக மனது ரொம்ப நொந்து விட்டது....விசு...கேடு கெட்ட சமுதாயத்தில் வாழ்கின்றொமே என்று கேடுகெட்ட நாட்டில் வாழ்கின்றோமே என்று வெட்கமாக உள்ளது.....முடியலை

  கீதா

  ReplyDelete
 3. மருத்துவ படிப்பு என்பது கிட்டத்தட்ட ஐந்து வருடம் படிக்கவேண்டிய படிப்பு. இந்த சனியன்கள் ... ஐந்தாவது, அதாவது இறுதி வருடம் படிக்கும் மாணவர்களால். இந்த சனியங்களுக்கு கடந்த நான்கு + வருடங்களில் அங்கே உள்ள ஆசிரியர்கள் என்னத்த சொல்லி கொடுத்தாங்க. ஒரு நல்ல காரியம் சொல்லி கொடுத்து இருந்தாலும் இப்படி செய்ய தயங்கி இருப்பார்களே..//

  இவனை நம்பி ... நாம் சிகிச்சைக்கு செல்ல முடியுமா?//

  இந்த கேடு கெட்ட நாட்டில் ஊரில் இந்த அட்மிஷன் எப்போது நேர்மையாக மாறுகிறதோ அப்பொதுதான் விடிவு காலம் விசு.
  கீதா

  ReplyDelete
 4. நிச்சயம் இவனை மருத்துவனாக
  அங்கீகரிக்கக் கூடாது
  கற்பழிப்புப் பேர்வழியை
  மாணவியர் விடுதிக் காவலனாக
  வைப்பதற்கும் இதற்கும்
  நிச்சயம் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்

  ReplyDelete
 5. IN TAMIL NADU new brahmins DOMINATE IN ALL GOVT KEY POSTS AND IN OTHE FIELDS ALSO>>> EVEN IN CASTE BASED RESERVATIONS INCOME CEILING SHOULD BE FIXED........this students parents are doctors

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...