Tuesday, July 5, 2016

இந்திய பட்டதாரி என்ற முறையில் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.

இரண்டு வருடங்களுக்கு முன், மோடி தலைமையிலான பிஜேபி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது...மனதில் ஒரு வித சலனம் இருக்கத்தான் செய்தது.

குஜராத் கலவரத்தில் இவரின் செயல்பாடு..... மற்றும் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை...  போன்ற சில விஷயங்கள் உறுத்த தான் செய்தது.

இருந்தாலும்.. மோடி அவர்களின் வெற்றி சில காரணங்களினால் மனதிற்கு ஓர் நிம்மதியை தந்தது என்று தான் சொல்லவேண்டும்..

முதல் காரணம்..

கிட்டத்தட்ட 50 வருடத்திற்கும் மேல் நம் நாட்டை கேடு கெட்டத்தனமாக ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியை சின்னாபின்னமாக்கினார்... இந்த ஊழல் பெருச்சாளிகளிடம்  இருந்தும்.. அவர்களின் பங்காளிகளிடம் இருந்தும் நம்மை மீட்டு  எடுத்தார் என்ற ஒரு ஆறுதல்.
இரண்டாம் காரணம்..

இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்த  அத்வானி அவர்களை பிரதமராக்க முடியாமல் அதை தடுத்தார்.  Lets face it. சென்ற தேர்தலில் பிஜேபி சார்பில் யார் நின்று இருந்தாலும் வெற்றி பெற்று இருப்பார்கள். (இவ்வளவு  மகத்தான வெற்றியா என்பது சந்தேகமே) .

வளரும் போது.. ஹிந்து , முஸ்லிம், கிறிஸ்டியன், நாத்திகன் என்று நாங்கள் அனைவரும்.. தீபாவளி அன்று நண்பன் வீட்டில் சாப்பிட்டு ....பின்னர் ஒரு ஆட்டம் ஒரு சினிமா என்று மத பிரச்சனை இல்லாமல் வாழ்ந்தோமே.. அதை தன் அரசியல் ஆதாயத்திற்காக சீரழித்தவர் அத்வானி என்பது தான் என் கருத்து.

இந்த இரண்டை தவிர வேறு சில காரணங்களும் உள்ளது.. அதை பற்றி மற்றொரு நாள் பார்ப்போம்.

சரி.. தலைப்பிற்கு வருவோம்.

//இந்திய பட்டதாரி என்ற முறையில் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.//

மோடி பிரதமர் ஆனபின் அனைவரை போல் நானும் அவரின் அமைச்சவரைக்காக காத்து கொண்டு இருந்தேன். மனித  வளம்   மற்றும் கல்வி துறைக்கு முன்னால் நடிகை "ஸ்மிரிதி  இராணி"என்றதும் பேய் அறைந்தவன் போலாகினேன் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்).

கல்வி துறை என்பது எவ்வளவு பெரிய காரியம். அதை நிர்வாகிக்க அதற்கு தலைமை தங்க இந்த அம்மணியை விட வேறு யாருமே பிஜேபி கட்சியில் இல்லையா? என்று நான் கேட்கையில்.. அநேகர்.. அவர்கள் மேல் உனக்கு என்ன வெறுப்பு என்றார்கள்.

வெறுப்பு உண்மை தான்.. ஆனால் , தனிப்பட்ட முறையில் அல்ல... பொது  வாழ்வில் தான்.

91'ல் B.com, 94 ல் BA,  என்று பல விண்ணப்பங்களில் பொய் சொல்லி வந்தவர் தான் ஸ்மிரிதி இராணி.

ஏன் படிக்காதவர் அமைச்சராக  கூடாதா?  கர்ம வீரர் காமராஜரை மறந்து விட்டாயா என்று நீங்கள் கூறுவது கேட்கின்றது.

படிக்காதவர்கள் கண்டிப்பாக அமைச்சராகலாம். ஆனால் படித்தேன் என்று பொய் சொல்பவர்கள் அமைச்சராக கூடாது.

சரி.. இந்த அம்மணி  Bcom , BA என்று சொல்லி விட்டு  விட்டு இருந்தால் பரவாயில்லை. அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் வேறு டிகிரி வாங்கினேன் என்று இன்னொரு பொய் அவிழ்த்து விட்டார்கள்..

இப்படி பொய் சொல்லி கொண்டு இருப்பவர்கள் கல்வி துறையின் தலைமை இடத்தில் அமர்ந்தால்... நினைக்கவே பயமாக உள்ளது.

இந்த அம்மணி கடந்த இரண்டு வருடங்களாக ... பல்வேறு கல்வி நிறுவனங்களின் மேடையில், பட்டமளிப்பு உடை, மற்றும் தொப்பி அணிந்து இருப்பதை பார்க்கையில்..... நெஞ்சு பொறுக்குதில்லையே...

இன்று நடந்த அமைச்சவரை மாற்றத்தில் மோடி அவர்கள் இந்த அம்மணியை கல்வி துறையில் இருந்து எடுத்துவிட்டு ஜவுளி துறைக்கு அனுப்பியுள்ளார். பிரகாஷ் ஜவடேகர் என்ற மற்றொருவர் கல்வி துறையின் அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார்.

இவர் புனே பல்கலைக்கழகத்தில் B  Com  படித்தவர்.  அதைத்தவிர வேறு எதுவும் படித்தேன் என்று பொய் சொல்லாதவர்.  இவர் இந்த பதவியில் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துவோம்.

இதற்கு போய் ஏன் மோடி அவர்களுக்கு நன்றி சொல்கிறாய். இது அந்த அம்மணியை பதவி நீக்கம்  செய்வது போல் அல்ல. உ பி யில் வரும் தேர்தலில் இவர்கள் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. அதற்காக தான் இந்த மாற்றம்..

எதுவாய் இருந்தால் என்ன? இவர்கள் ...நாளை பிரதமாராகவே வரட்டும். ஜனாதிபதியாக கூட வரட்டும். ஆனால் படித்தேன் என்று பொய்  சொன்னவர் கல்வித்துறையின் தலைமை பொறுப்பில் இருப்பது, அருவருக்கதக்கது.

 இவரை இந்த பதவியில் இருந்து நீக்கிய பிரதமருக்கு கோடி நன்றி.

பின் குறிப்பு :

ஜவுளி துறையில் இந்த அம்மணி நன்றாக செயல்பட வாய்ப்பு உள்ளது. முன்னால் நடிகை .. மற்றும் மாடல். ஜவுளி விஷயங்கள் பல தெரியும் வாய்ப்பு உள்ளது. இந்த துறையில் சிறக்க இவர்களையும் வாழ்த்துவோம். 

5 comments:

 1. சில நல்லதும் செய்றாரோ?

  ReplyDelete
 2. தங்கள் கூற்றுச் சரியே
  பின் குறிப்பை மிகவும் இரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கல்வி துறையில் ஸ்மிருதி இரானி ..அரைகுறையாக செய்த இந்துத்துவ திணிப்பை , முறையாக, முழுமையாக செய்யவே ..பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கபட்டுள்ளார்.....

  ஜவடேகரின் வரலாற்றை பார்த்தால்..இது தெளிவாக தெரிகிறது ..அவரது தந்தை இந்துமகா சபையின் பதவியில் இருந்தவர் ..சாவர்க்கரின் நெருங்கிய நட்பில் இருந்தவர் ...ஜவடேகர் படிக்கும் காலத்திலே ABVP யில் பதவி வகித்தவர் ..பின்னர் RSS சுயம் சேவக்காக நெடுநாட்கள் இருந்தவர் ...

  சீரியல் நடிகை செய்து முடிக்காத காரியத்தை ..சீரியஸான RSS ஆள் மூலம் செய்யவே ..இந்த அமைச்சரவை மாற்றம் ....

  ReplyDelete
 4. பின் குறிப்பு சூப்பர்...ரசித்தோம்...

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...