Tuesday, July 26, 2016

அந்த மான் இந்த கானுக்கு தான் சொந்தம்..

1998 வருடம். வட இந்திய கூத்தாடி சனியன் சல்மான்கானுக்கு 34 வயது போல் இருக்கும். இவர் மிகவும் நல்லவராயிற்றே.. அதனால்... படப்பிடிப்பு இல்லாத ஒரு நாள்.. தன்னுடன் சில நண்பர்களையும் அழைத்து கொண்டு காட்டிற்கு சென்றார்.

இவர் ஒரு இயற்கை  பிரியராயிற்றே.. அதனால் போகும் வழியில், இயற்கையின் இரு புறத்தையும் கண்டு கழித்து கொண்டே காட்டுக்குள் சென்றார் இந்த செல்வ  "குடி"மகன்.

அங்கே ஒரு மரத்தடியில் இவரும் மற்றும் இவர் நண்பர்களும் காட்டில் உள்ள குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது.. அங்கே ஒரு மான் வந்தது.

அந்த மானை பார்த்தவுடன் ஒரு பரதேசி, நாய், புறம்போக்கு அதை துரத்தி...  கையில் வைத்து கொண்டு இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டான். சுருண்டு விழுந்தது அந்த மான்.

அந்த மானை அவன் எடுத்துக்கு கொண்டு போகையில் காட்டிலாகா அதிகாரிகள் யாரோ பார்த்து விட .. அவன் நேராக குப்பையை பொருக்கி கொண்டு இருந்த சல்மான் கானின் கையில் துப்பாக்கியை அமுக்கி விட்டு ஓடிவிட்டான்.

பட உபயம் .. :மலர்வண்ணன். 

கட்டிலாகா அயோத்திகாரி சும்மா விடுவாரா? இந்த கூத்தாடி தான் மானை சுட்டான் என்று ஒரு பொய் அவிழ்த்து விட... பாவம் இந்த சனியன்.

காட்டை சுத்தம் செய்ய நினைத்த எனக்கு ஏன் இந்த துன்பம் என்று நொந்து  கொண்டே அடுத்த நான்கு வருடங்களில் பல படங்களில் சட்டையை அவிழ்த்து போட்டு, வழுக்கை தலையில் தோப்பா போட்டு கொண்டு அதே காட்டில் தன்   காதலிகளை பட பிடிப்பில் அணைத்து கொண்டும் யாரும் இல்லாத வேளையில் அதே காதலிகளை அடித்து துன்புறுத்தியும்  வந்தார்.

1998 ஆரம்பித்த இந்த சோதனை.. 2002 வரை தொடர்ந்தது. 2002 ல்.. இறந்த இந்த மானின் ஆண்டுவிழாவை பாம்பேயில் ஒரு பாரில் இவர் கொண்டாடி கொண்டு இருக்கும் போது.... இவர் பட்ட பாடையும் சோகத்தையும் பார்த்து கொண்டு இவரின் கார் ... டிரைவர்  இல்லாமலே  கிளம்பியது.பாம்பேயின் அனைத்து சாலைகளையும் பதமாக கடந்து அங்கே சாலையில் ஓரம் படுத்து கொண்டு இருந்த ஒரு நபரின் மீது ஏறி அவரை கொலை செய்தது.

இந்த காரை துரத்தி கொண்டு வந்த கானுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. எப்படி இந்த கார் தானாக இவ்வளவு தூரம் ஓடியது. அதை  யோசித்து கொண்டே இறந்தவரின் முகத்தை பார்த்தால்.. இன்னொரு அதிர்ச்சி.
1998 மானை சுட்ட அதே நபரை தான் இந்த கார் கொலை செய்து உள்ளது.

ஆனால்.. அங்கே இருந்த காவல் அதிகாரியோ ....கூத்தாடி சனியன் மேல் இருந்த பொறாமையினால் .. இவர் தான் காரை ஏற்றி கொன்றார் என்று பொய் குற்றம் சுமத்த ... 1998 மான் வழக்கோடு 2002 கொலை வழக்கும் சேர்ந்து கொண்டது.

ஒரு வழக்கு 20 வருடம், மற்றொன்று 16 வருடம்.. இந்திய சட்ட துறையும் .. நீதி மன்றமும்.. இந்த இரு வழக்கையும் சீராக நேர்த்தியாக கடந்த பல வருடங்களாக விசாரித்து, சென்ற வருடம்..

கார் செய்த கொலையில் சல்மானுக்கு தொடர்பே இல்லை என்ற தீர்ப்பையும், இந்தவாரம், எந்த ஒரு மானுமே கொள்ள படவில்லை என்றும் தீர்ப்பளித்தது.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் இந்த கூத்தாடி சனியன் பாவம் " ஒரு கற்பழிக்க பட்ட பெண்ணை போல் உணர்ந்தார்" என்பதை சொல்லவும் வேண்டுமா..

போங்காடா ... நீங்களும் உங்க சட்டமும்... நல்லா வருது என் வாயில் இருந்து.

அது சரி.. வேண்டியதை வாங்கினு 1998 - 2002லே தீர்ப்பை தரவேண்டியது தானே.. அதை இத்தனை வருஷம் இழுத்தடித்து... எங்கள் வரிப்பணத்தை ஏன்டா நாசம் பண்றீங்க.

இனிமேல் .. இந்த சனியன் மானை கொன்றாலும் சரி... மனுஷனை கொன்றாலும் சரி, பொம்பளைய அடிச்ச்சாலும் சரி.. கற்பழிப்பை பற்றி தவறாக பேசினாலும் சரி.. எந்த வழக்கும் போட்டு மக்கள் வரி பணத்தை விரயம் பன்னாதீங்க.

பின் குறிப்பு :

2014 ல்..

வாத்தியாரே.. என்ன எவனை பார்த்தாலும் தேர்தல் நேரத்தில் மோடி சாபோடு இருக்கான்.. புரியலையே..

தண்டம்.. காங்கிரஸ் மற்றும் நம்ம கூட்டணி தர்மம் ஆளுங்க பண்ண அக்கிரமத்தில் மோடி அவர்கள் மகத்தான வெற்றி பெற போறார் .. அது தான், அவரோடவே இருக்காங்க.

இல்ல, பொதுவா.. இஸ்லாமியர்கள்..மோடிக்கும் பி ஜெ பி க்கு ஆதரவு தரமாட்டாங்களே.. ஆனால் சல்மான் கான் மட்டும் மோடியோடு காத்தாடி உட்டுனு ...

டேய்.. அந்த சனியன் மேலே தான் மானை சுட்டான் மனுஷனை கொன்னானு வழக்கு இருக்கே .. இப்பவே இவரை புகழ்ந்து பேசி ஒரு செலஃபீ  எடுத்துக்குனா நாளைக்கு இந்த வழக்குல.. செத்தவன் தான் மனை சுட்டான்.. கார் தான போய் மானை சுட்டவனை கொலை பண்ணிச்சிடிச்சுன்னு தீர்ப்பு வரும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே,,,

6 comments:

 1. பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதி இருக்கும் உலகத்தில்
  இருக்கிற ஒரே ஒரு நாடு காந்தி தேசம் என்ற அடைமொழியுடன்
  அறியப்படும் இந்தியாவாகும்.

  ReplyDelete
 2. நெஞ்சு பொறுக்குதில்லையே,,,enakkum

  ReplyDelete
 3. நெஞ்சு பொறுக்குதில்லையே,,,enakkum

  ReplyDelete
 4. அட, எனக்கும் கிரெடிட் குடுத்துடீங்களா?! நன்றி...
  பதிவு செம்ம..

  ReplyDelete
 5. என்ன விசு! சல்மான்கோன் ஹை விசு? அப்படினு ஒருத்தர் இருக்காரா என்ன? கோர்ட்ல அப்படி ஒருத்தர் இந்தியாவுல இல்லவே இல்லைனு இல்ல தீர்ப்பு சொல்லிருக்கணும்...நீதி அப்படினா இப்ப வந்த தீர்ப்புக்கு மட்டும்தான் பணம் வாங்கிருக்கு போல...அப்படி ஒருத்தன் இல்லவே இல்லனு சொல்லணும்னா இன்னும் அதிகம்ல ரேட்? சல்"மான்" ஆச்சே!!! அதான் சலேகா நு விட்டுப் போட்டாங்க போல..இந்தக் கான் பார்க்கும் போதெல்லாம் காண்டாகுது ...

  பதிவு செம பதிவு விசு....

  ReplyDelete
 6. நெஞ்சு பொறுக்குதில்லையே.....

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...