Friday, July 22, 2016

ரஜினியை நிம்மதியாக வாழவிடுங்கள் ப்ளீஸ்...

அனைவரும்  அதிகம் எதிர்பார்த்த "கபாலி" இந்த வாரம் வெளிவந்தது. பாபா படத்தின் போது நொந்து  பாதியில் எழுந்து வந்த நான், அதற்கு பிறகு வந்த படங்களை  பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

இடையே நண்பர்கள் வற்புறுத்தியதால் இரண்டு படங்கள் பார்க்க நேரிட்டது. அதில் ஒன்று "மொழி" நன்றாக ரசித்து பார்த்தேன். அடுத்து "சிங்கம் 2", அதை பார்த்த அடுத்த நான்கு நாள் காதில் "ங்கோயினு" ஒரு சத்தம் ...

அதோடு  நிறுத்திவிட்டேன், புதுப்படங்களை தான் நிறுத்திவிட்டேன். நேரம் இருக்கும் போது பழைய படங்களை பார்ப்பேன். சென்ற வார இறுதியில் கூட ரஜினியின் " கழகு" என்ற படத்தை பார்த்தேன். என்னை பொறுத்தவரை அருமையான படம். அட்டகாசமான இசை  மற்றும் பாடல்கள். இந்த படம் ஏன் தோல்வியடைந்தது என்று என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை.

சரி... தலைப்பிற்கு வருவோம்.

கபாலி படத்தின் ஸ்டில்கள் சில நாட்களுக்கு முன் பார்க்கையில்... அடேங்கப்பா.. வயதிற்கு  ஏற்ற பாத்திரம்.. ரஜினி அட்டகாசமாக இருக்கின்றார் என்ற எண்ணம் வர கூடவே ஓர் நப்பாசை. பல வருடங்களுக்கு பின் ஒரு நல்ல ரஜினி படம் பார்க்க வாய்ப்பு உள்ளது போல் இருக்கின்றதே என்று மனதில் ஓர் அசை போட்டேன்.

கூடவே அறிந்த சில நண்பர்கள்.. இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் அவர்களை பற்றி மிகவும் புகழந்து பேச என் நப்பாசை பேராசையாகியது.

இருந்தாலும் வேலையின் நிமித்தம் முதல் நாளே போக முடியாத நிர்பந்தம். சரி, வார இறுதியில் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தேன்.  படம் வெளியானது.. முதல் காட்சியை இந்தியாவில் பார்த்த ஒரு ரஜினி ரசிகரை அழைத்து ....

எப்படி... இருந்தது...

ஹ்ம்ம்,.. ஓ கே....

அம்புட்டுதான்.

ரஜினியின் தீவிர ரசிகரே ஓ கே என்று உற்சாகம் இல்லாமல் சொல்லிவிட்டதால் ... என்னுடைய நாப்பாசை மீண்டும் வீணாகி போனது.

பிறகு, இங்கே அந்த படத்தை  பார்த்த நண்பர் ஒருவரை மதிய  உணவு வேளையில் சந்திக்க நேர்ந்தது.

கபாலி , பார்த்திங்களா...இல்ல.. நீங்க..

நான் முதல் நாள் முதல் ஷோ ...

எப்படி இருந்தது.

விசு .. நான் ரஜினி ரசிகன், பாபா படத்தையே நாலு முறை பார்த்த ஆளு .. எனக்கு பிடிச்சி  இருந்தது.

சந்தோசம்..

இருந்தாலும் பாரு விசு.. என்னதான்  "மேக் அப்"  இருந்தாலும் தலைவர்  ரொம்ப சுகவீனமா தெரியிறாரு .

அவர் அறுபதை  தாண்டியாச்சு.. அது மட்டும் இல்லாமல் வருட கணக்கில் புகை மற்றும் குடி.. ( இது ரஜினியே  சொன்னது தான் ... என்னை திட்டாதிங்க), அதனால் உடல் நிலை கொஞ்சம் கெடும் தானே..

இல்ல விசு.. அவரை பார்க்கும் போனதே.. மனசில்... கொஞ்சம் கஷ்டம்.. நான் அவரை நாற்பது வருசமா பார்துன்னு வரேன்... அவர் ரொம்ப வீக்கா இருக்காரு.

இருக்கலாம்... இங்கே கூட சிக்கிச்சைக்கு  வந்ததா ஒரு பேச்சு அடிபடுதே...

விசு.. இவரை நிம்மதியா வாழ விடணும்.

புரியல..

அவர். என்னமோ இது எல்லாம் எனக்கு தேவை இல்லனு காசி ராமேஸ்வரம், ஹிமாலயா , ஐரோப்பா, அமெரிக்கா போய் ஊரை சுத்தி பார்த்து நிம்மதியா  இருக்கனும்ன்னு ஆசை படுறாரு...

அப்படியா..?

ஆனால் , அவரை சுத்தி ஒரு "இரத்த உறிஞ்சும்" கோஷ்டியே இருக்கு. அவர் பேரை வைச்சி எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கனும்ம்னு கங்கணம் கட்டினு இருக்கு இந்த கூட்டம்.

சுத்தமா புரியல..

விசு ... ரஜினிக்கு எதுக்கு பணம். சம்பாரிச்சத செலவு பண்ணவே நேரம் இல்லை.

ஆமா..

ஆனா கூட இருக்குறவங்க... படம் எடுக்குக்குறேன்...இதை பண்ணுறேன் அதை பண்ணுறேன்னு சொல்லிட்டு .. இவரு சம்பாதிக்கறதையெல்லாம் விரயம் பண்ணிட்டு ... கடன் கோர்ட்டு... வட்டி... ன்னு இருக்காங்க..

அப்படியா..

இவங்க பண்ண தப்புக்கு பாவம் இந்த வயசுலயும் அவரை வைச்சி சம்பாதிக்க பார்க்குறாங்க.

அட பாவி... இது உண்மையா இருக்குமா?

நீ போய் பாரேன் இந்த படத்தை ..அவர் எவ்வளவு வீக்கா இருக்காருன்னு உனக்கே தெரியும்.

வேண்டாம்பா.. வயசான ரஜினி இப்படி தான் இருப்பாருன்னு நான் முப்பது வருஷம் முன்னாலே பாத்துட்டடேன். அந்த இமேஜ் அப்படியே இருக்கட்டும்..

முப்பது வருஷம் முன்னாலையா.. அப்ப அவருக்கு 30 வயசு தானே. எப்படி அவரை வயசானவரா பார்த்தே..?

நெற்றிகண் "சக்கரவர்த்தி" தான்..

நீ ஒன்னு.. அதுல என்ன கெட் அப்.... இது அப்படி இல்ல..

சரி என்னதான் சொல்ல வர..

பாவம், விசு அவர்... இனிமேலாவது அவரை சினிமா அது இதுன்னு இழுக்காம நிம்மதியா வாழ விடுங்க...

டேய்.. நான் என்னமோ தப்பு செஞ்ச மாதிரி என்னை திட்டுற..

நான் உன்னை திட்டலை.... நீ தான் பதிவராச்சே.. இதை பத்தி ஒரு பதிவு போடு...

சரி..

அப்ப, என்ன இந்த வார இறுதியில் ... ரஜினி படமா?

கண்டிப்பா..

டிக்கட் வாங்கிட்டியா?

வீட்டுல உட்கார்ந்து நெற்றி கண் பாக்குறதுக்கு எதுக்கு டிக்கட்?

பின் குறிப்பு :

நான் கபாலி பார்க்கவில்லை, பார்க்கும் உத்தேசமும் இல்லை. இந்த நண்பர் கூறியது உண்மையாக இருந்தால், இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். வீட்டில் உள்ள வயதான பெரியவரை வேலைக்கு அனுப்பி அவர் உழைப்பில் சாப்பிடும் ஜென்மங்கள் ஒரு மனித ஜென்மமே இல்லை.

அவரை வாழ விடுங்கள்.. ப்ளீஸ்.. 

9 comments:

 1. அப்படியெல்லாம் விட மாட்டாங்க..., ஏன்னா அவர் சிக்கியிருக்க குடும்பம் அப்படி?

  ReplyDelete
 2. I watched the movie and felt the same. He really looks exhausted in most of the scenes. His family should have some courtesy.

  ReplyDelete
 3. mami udathu........magalum udathu.............

  ReplyDelete
 4. The fact is, YOU DONT LET HIM LIVE his life either unfortunately! :(

  Visu: I thought you said, you would watch his movies if he acted as an "old guy" and not singing duets with young heroines. I DONT KNOW whether you remember that BUT I DO. I also remember one of my girl friend (long time ago) made LOTS OF PROMISES that she will be a "good friend" till she dies, no matter what happens in her life later. She never kept her word either just like YOU ARE.

  We are all human beings. We kill all animals and use anything everything in the world and we pollute the earth and we are full of garbage. We think the world is ours. We created God for our convenience. The world was a better place when human beings (like you and me) were not evolved from monkeys. Animals lived a simple life. Plants are always happy doing some things to the world like photosynthesis and crops. There was no God then either.

  Anyway, What are you trying say Visu? I think we should worry about our life and Rajini worry about his life and his family. Am I going to stop blogging if some "well wisher" who cares about me, tells me I should stop blogging? I wont. I guess that's true with you too.

  Why are we keep advising others how they should live their life when we have so much to repair in our own life? Because it is easy to do so, I guess. :)

  Sorry if I am little bit harsh. I am just being HONEST. These days "honesty" is a bad word and so you might not like it. :)

  ReplyDelete
 5. Varun,

  Long time no see.. How have you been? Thanks for being honest..."Truth Hurts" .. offcourse, being honest migght sound harsh...but then again, we gotta call the spade .. spade...

  Thanks for dropping by...and I get your views. I did say, that I would watch Rajini's movies if he acts his age, thats true. *I still stand by that statement, lets see.

  Dude, I am just an Accountant, who does blogging, cos I like writing. You cant hang me for that my man. Show some mercy.

  ReplyDelete
 6. https://www.youtube.com/watch?v=GaiHk_sZgcg

  In this clip "Kazhugu" director SP Muthuraman shares his view about why that film flopped. Thought you might be interested.

  ReplyDelete
 7. சந்திரமுகி பார்க்கும் போதே எனக்கு பழைய ரஜினியின் வேகம் இல்லாதது போன்று தோன்றியது! வயசாகிவிட்டது உண்மை! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!

  ReplyDelete
 8. விசு இதேகருத்தைத்தான் தளத்தில் சொல்லியுள்ளோம். இனி அவருக்குத் தேவை ஓய்வு. இந்தப் படத்தில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும், நெற்றிக்கண் சக்கரவர்த்தி மனதில் இருப்பதைப் போல் கபாலி மனதில் ஒட்டவில்லை. ...மட்டுமல்ல நிறைய ரீடேக் எடுத்ததாக ரஞ்சித்தே சொல்லியிருக்கிறார். பாவம் ரஜனி...நல்ல நடிகரை, மனிதரை இனியேனும் ஓய்வெடுக்க வைக்க வேண்டும்.

  எங்கள் மனதில் இருந்த கருத்துகளைப் பிரதிபலித்த பதிவு விசு

  கீதா: நான் படம் பார்க்கவில்லை ஆனால் கருத்து சேம்...

  ReplyDelete
 9. [[ரஜினியை நிம்மதியாக வாழவிடுங்கள் ப்ளீஸ்...]]
  விசு உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது; இனி ரஜினியை ரஜினியை நிம்மதியாய் வாழவிடுவேன். என் தமிழ் மீது ஆணை!

  பின்குறிப்பு:
  எப்பா சாமி! இது ஒரு தாமாஷ்! அதுக்கு என்று என்னை பிராண்டி விடாதீர்கள்!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...