Friday, July 1, 2016

என் பதிலுக்கு என்ன கேள்வி? கொலைகாரனின் பேட்டி!

நுங்கம்பாக்கத்தில் நடந்த கொலையை பற்றி ஒரு பதிவினை (ஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு..) எழுதிவிட்டு, இருக்கையை  விட்டு எழும்போது.. "மோடி - அர்னாப் கேள்வி நேரம்" பற்றிய ஒரு செய்தி வந்தது.

பிரதமர் மோடி அவர்கள், இரண்டு வாரத்திற்கு முன்பே தான் என்ன என்ன சொல்ல போகிறோம் என்பதை அர்னாபிற்கு அனுப்பிவைத்து விட்டு, அதை வைத்து கொண்டு கேள்வி கேட்க்குமாறு சொன்னாராம்.

இந்த பதிலை தயாரித்து கேள்வி கேட்பது ... அரசியல்வாதிகளுக்கு பழக்கம் தான்.  மோடி இவ்வாறு செய்தது ஒன்றும் புதிது அல்ல. இருந்தாலும் இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மட்டுமே அறியலாம்.

பொதுவாக நான் பிரதமர் மோடியின் உரைகளை கேட்பவன் அல்ல. உடனே  அடியேனை ..  "Modi Hater"  என்ற முத்திரை குத்தி விடாதீர்கள்.

காங்கிரஸ் கட்சியை வேருடன் அறுத்து எரிந்ததற்கு நான் எப்போதும் மோடி அவர்களுக்கு நன்றி கடமை பட்டுள்ளேன். மோடியின் பேச்சில் எனக்கு ஏன் பிடி இல்லை? நல்ல கேள்வி.

நிறைய விஷயங்கள் உண்டு. இருந்தாலும் அந்த  இல்லந்தோறும் 15 லட்சம் பொய் வாக்குறுதி. (இந்த சந்திப்பில் இந்த கருப்பு பணத்தை பற்றி பேசினார்களா? தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும் )

சரி விஷயத்திற்கு  வருவோம்.

நுங்கம்பாக்கம் கொலையும் .. மோடி அவர்களின் பதிலும் நினைவில் இருந்து அகல மறுக்க, புரண்டு புரண்டு படுக்க.. எப்போது உறங்கினேன் என்று தெரியாது... கனவிலோ .. அர்னாபும்.... முகத்தை திரையில் மறைத்து கொண்டு" நுங்கம்பாக்கம் கொலையாளியும்"..

ஏன் இந்த கொலையை செய்தீர்கள் ?


அதுவா முக்கியம்? நான் என்ன மதம் .. அவள் என்ன சாதி அல்லவா முக்கியம்? அதை விட்டு விட்டு ஏன்.. எதற்கு எப்படி என்று.. அடுத்த கேள்வி..

காவல் துறையின் மீது பயம் ...?

எனக்கு காவல் துறையின் மேல் எப்போதும் பயம் இருந்தது அல்ல. அதற்கு மாறாக காவல் துறையின் மேல் நம்பிக்கை மட்டும் தான் இருந்தது.

காவல் துறையின் மீது நம்பிக்கையா?

கண்டிப்பாக! நுங்கம்பாக்கம் பகுதியில் அதுவும் ரயில் நிலையத்தில் நான் இதுவரை எந்த ஒரு காவல்துறை அதிகாரியையும் பார்த்தது கிடையாது. காலை 6.30 மணிக்கு வேலைக்கு வர இவர்களுக்கு என்ன தலை விதியா?

சரி, பொது மக்கள் மீதான பயம் ?

இருந்தது. பொது மக்கள் மீதான பயம் கண்டிப்பாக இருந்தது. ஆனாலும் கொலை செய்ய போகும் என்னை விட காவல் துறையின் மேல் பொது மக்களுக்கு அதிக பயம்.  நான் என்ன செய்தாலும் பொது மக்களில் யாரும் என்னை பிடித்து காட்டி கொடுக்க மாட்டார்கள் .. என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

சரி.. கொலைக்கான தண்டனையை பற்றிய பயம்..

தண்டனையா? நம் நாட்டிலா...நம் நாட்டில் எப்போது நாம் தவறு செய்தவனை தண்டித்தோம். 9000 கோடி ஆட்டையை போட்டவன் லண்டனில்  உல்லாசம்... தான் என்னை மிகவும் உற்ச்சாகப்படுத்தியது. நான் இந்த காரியத்தை செய்ததே நம் நாட்டின் ஒற்றுமைக்காக நன்மைக்காக தான்.

ஒற்றுமையா... நன்மையா? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

இந்த கொலையை நான் செய்யாவிடில் ... சரவணபவ உணவகத்தில் ஹிந்தி தெரியாமல் தோசை சாப்பிட முடியாது என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்குமா?

சரி.... ஒரு வேளை .. நீங்கள் அங்கு இருந்து தப்பி ஓடுகையில் ..

மன்னிக்கவும்.. நான் ஓடவில்லை.. நிதானமாக நடந்து தான் சென்றேன்..

சரி நடந்து செல்கையில், அங்கே தற்செயலாக வந்த போலீஸ் அதிகாரி உங்களை துரத்தி பிடித்து இருந்தால்?

அர்னாப்.. நீங்கள் டெல்லி போலீஸ் ஆட்களை பற்றி பேசுகின்றீர்கள். தமிழக போலீஸ் நீங்கள் பார்த்தது இல்லை போல் இருந்திறது. அவர்களால் ஆமையை கூட துரத்தி பிடிக்க இயலாது.

ஒரு வேளை .. வாகனத்தில் வந்து பிடித்து இருந்தால்...

நல்ல கேள்வி.. இந்த கொலை நடந்த பின் தானே அரசாங்கம் அவர்களுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளது. அடுத்த கொலையில் ஜாக்கிரதையாக இருப்பேன்.

சரி .. மீண்டும் கேட்கிறேன்.. ஏன் இந்த கொலை...

மீண்டும் சொல்கிறேன்.. ஏன் இந்த கேள்வி.. அதைவிட்டு . விட்டு... அவள் என்ன ஜாதி .. நான் என்ன ஜாதி என்று பேசுவோமா...

சரி சமூக வலைத்தளத்தை பற்றி தங்கள் கருத்து...

யார் என்ன அனுப்பினாலும் எதையும் விசாரிக்காமல் அதை நம்பும் ஆட்கள் இருக்கும் வரை ...எனக்கு பிரச்சனை இல்லை.

இந்த கொலையை திட்டமிட்டு தான் செய்தீர்களா?

அதுவா முக்கியம்... கொலையை விட.. தப்பிக்க தான் திட்டமிட்டேன். ஒருவேளை காவல் துறையிடம் அகப்பட்டு கொண்டு விட்டால்.. என்று நினைத்தேன்... போன வரம் முழுவதும் .. ராப்பகல் பார்க்காமல் .. யோகா செய்ய கற்று கொண்டேன். அப்படியே நான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும்.. .அடுத்த காந்தி ஜெயந்தியில் யோகா பரீட்சையில் தேர்வு பெற்று வெளியே வருவேன்.

அப்படியே வெளியே வந்தவுடன்.... தங்களின் எதிர்காலம்..

கற்பழித்து கொலை செய்தவனுக்கே தையல் மிஷன் தந்த நம் பாரத தாய்நாடு என்னை மட்டும் கைவிடுமா என்ன? நம்பிக்கை தானே வாழ்க்கை.

சரி.. இப்போது தங்களின் விருப்பு வெறுப்பு பற்றிய ஒரு கேள்வி..

எனக்கு பிடித்த பாட்டை பற்றி தானே..

அதே தான்... எப்படி கண்டுபிடித்தீர்கள்?

முட்டாள்.. பதிலை எழுதி கொடுத்து கேள்வியை அதற்கு ஏற்றார் போல் கேள் என்று சொன்னதே நான் தானே..

தங்களுக்கு பிடித்த பாட்டு....

Y.G.Mahendra  என்ற நடிகரின் பங்காளியின் மகனும் ..... அவரின் தோழர்.... சிம்பு அவர்களும்  சேர்ந்து சென்ற வருடம் ஒரு பாடல் போட்டார்களே,அது தான் எனக்கு பிடித்த பாடல்.


7 comments:

 1. ஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு..) சுட்டி வேலை செய்யவில்லை

  ReplyDelete
  Replies
  1. Thanks for letting me know. It is working now.

   Delete
 2. Y.G.Mahendra என்ற நடிகரின் பங்காளியின் மகனும் ..... அவரின் தோழர்.... சிம்பு அவர்களும் சேர்ந்து சென்ற வருடம் ஒரு பாடல் போட்டார்களே,அது தான் எனக்கு பிடித்த பாடல்.... சுருதி தலித் பொண்ணா இருந்தா இதே மாதிரிதான் சொல்லுவீங்களா ?

  ReplyDelete
  Replies
  1. போயே போச்சி... பின்னூட்டத்திலேயும் ஜாதியா? நெஞ்சு பொறுக்குதில்லையே...
   BTW, You got the victim's name wrong......

   Delete
 3. சூப்பர் விசு! கொலையாளி பிடிபட்டுவிட்டானே. இனி என்ன திடுக்கிடும் தகவல்கள் வெளிவரப் போகுதோ. அவன் திருநெல்வேலியைச் சேர்ந்தவனாம். இஞ்சினியரிங் படித்திருப்பவனாம். அவன் இரு மாதங்களாகத்தான் சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறான். அந்தப் பெண்ணின் வீட்டருகில் என்றும் செய்தி சொல்லுகிறது. அவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இங்கு பலரும் சொல்லுவது இதற்குப் பின் வேறு ஏதோ இருக்கிறது என்று...அப்படியிருந்தால் இந்தக் கேஸிற்குச் சீக்கிரமே சமாதி கட்டிடுவாங்க ஒன்றும் வெளியில் வராது என்று..என்னவோ போங்க

  கீதா

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...