என் வலைத்தளம்!

Thursday, June 16, 2016

ஏக் தின் ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான்....

சென்ற பதிவில் (என்னடா நடக்குது இங்கே) நம் பிரதமர் மோடி அவர்கள்  அமெரிக்க காங்கிரஸ் அவையில் ஆங்கிலத்தை குஜராதியில் எழுதி படித்தார் என்று எழுதி இருந்தேன்.

அதை படித்து விட்டு.. பிரதமர் மோடி ரசிகர் மன்றத்தின்  பிதாமகன் .. சிம்ம குரலோன்..  கிழக்குசீமை நாயகன் "மதுரை தமிழன்" ...

//மோடி ஆங்கிலத்தில் பேசினார் என்று இந்தியர்களும் இல்லை இல்லை அவர் பேசியது ஹிந்திதான் என அமெரிக்கர்களும் சொல்லி கொண்டிருக்கும் வேலையில் நீங்கள்தான் அவர் ஆங்கிலத்தை குஜராத்தி மொழியில் எழுதி அதை எதிரே உள்ள கண்ணாடியில் இருந்து படித்தார் என்று உண்மையை சொல்லி இருக்கிறார்கள்//

என்ற பின்னூட்டம் இட்டு இருந்தார்.

இதில் என்ன அதிசயம்.. ?

இதை கேட்டவர்கள் உடனே இது குஜராத்தி என்று புரிந்து கொண்டு இருக்க முடியுமே என்று நினைத்து கொண்டு இருந்தபோது..

பிரதமர் மோடி அவர்களின் பக்தர் ஒருவர் மினஞ்சலில்..

என்னது..? ஆங்கிலத்தை குஜராத்தி  மொழியில் எழுதி படித்தாரா ? நிருபியுங்கள் என்றார்.

எதை நிரூபிக்க வேண்டும்.. ?

படித்ததையா (இன்னும் நிறைய பக்தர்கள் பிரதமர் மோடி அவர்கள் பேசினார் என்றே நினைத்து கொண்டு இருகின்றார்கள்) அல்ல.. ? குஜராத்தியில் படித்ததையா ? என்று கேட்க.. அவர் படித்தார் என்று எனக்கு தெரியும்.. குஜராத்தியில் படித்தார் என்று நிரூபிக்கவும் என்றார்.

School என்ற வார்த்தையை ஸ்ஸ்கூல்   என்றும்
Vision என்ற வார்த்தையை விஜன் என்றும்..
Exactly என்ற வார்த்தையை எக்ஜாக்ட்லி என்றும்
Zero என்ற வார்த்தையை ஜீரோ என்றும்
Zoo என்ற வார்த்தையை ஜூ என்றும்
Station என்ற வார்த்தையை டேசன் என்றும்
Program என்ற வார்த்தையை போக்ரம் என்றும்
Risk என்ற வார்த்தையை ரிக்ஸ் என்றும்
Special என்ற வார்த்தையை பெஷல் என்றும்
Fan என்ற வார்த்தையை பேன் என்றும்
Driver என்ற வார்த்தையை டைவர் என்றும்
Shoes என்ற வார்த்தையை சூஸ்  என்றும்

படித்தாரே.. அப்போதே  அனைவருக்கும் இது ஆங்கிலத்தை குஜராத்தியில் எழுதி படித்துள்ளார் என்று தெரிந்து இருக்க வேண்டுமே..

இது என்ன கம்பசூத்திரமா?

பின் குறிப்பு :

சரி.. ஒத்துக்குறேன் .. அவர் ஆங்கிலத்த குஜராதியில் எழுதி தான் படித்தார்.
ஓகே.

ஆனால் அவர் முன்பு எங்கேயோ .. மிசர்ஸ் சிரிசேனாவனை .. எம். ஆர். எஸ். சிரிசேனான்னு படிச்சாருன்னு  சொன்னீங்களே .. அதை நிருபியுங்க.. பாக்கலாம்..
எம். ஆர். எஸ். சிரிசெனா

அட பாவி.. அதை நானே மறக்க நினைத்தாலும் விட மாடீங்க போல இருக்கே.. பக்தர்களே.. கொஞ்சம் மறக்க விடுங்க.. ப்ளீஸ்.


பின் குறிப்புக்கு  பின் குறிப்பு :

மோடி பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்! ஒட்டுமொத்தமா கிளம்பி வந்து, நீ யோக்கியமா .. உன் ஆங்கிலம் எனக்கு தெரியாதான்னு கேக்காதிங்க! என்னுடைய ஆங்கில உச்சரிப்பை ஒரு நாளைக்கு 32,108 (சராசரியா)  திருத்த வீட்டுல ரெண்டு ராசாத்திங்க இருக்காங்க. 

6 comments:

  1. ""Zero என்ற வார்த்தையை ஜீரோ என்றும்""
    இங்கிலாந்தில்...
    இந்திய மருத்துவர்களுக்கு ஆங்கில PLAB எக்ஸாம் வர காரணமே இந்த குஜதிராயின் ஜீரோ தான் காரணம்? புரியவில்லையா?

    புரியும்...
    என் தனி பதிவில் முழு விவரம் வரும்!

    ReplyDelete
    Replies
    1. Cant wait to read that.... Hurry up my man...

      Delete
  2. ஹாஹாஹா! மோடி உங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிபிதுங்கி நிக்கறார்!

    ReplyDelete
  3. மோடி படிக்காமல் பட்டம் வாங்கினார் ஆனால் நான் பதிவுகள் எழுதியே உங்களிடம் இருந்து இத்தனை பட்டம் ( பிதாமகன் .. சிம்ம குரலோன்.. கிழக்குசீமை நாயகன் ) கொடுத்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி. ஆமாம் பட்டமளிப்பு விழா எங்கே எப்போது என்று சொன்னால் செளரியமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. யப்பா கொஞ்ச நாள் நாங்க வராம இருந்தா இங்க என்னென்னலாமோ நடக்குதே!!!!சரி சரி பட்டமளிப்பு விழாவுக்காவது நாங்க ஒரு வேளை வலைப்பக்கம் வரலைனாலும் ஒரு செய்தி எங்க பெட்டிக்குப் போட்டுருங்கப்பா...

      Delete
  4. விசு இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் வார்த்தை உச்சரிப்பிற்குக் காரணம் இதற்கு அடுத்த பதிவில் கொடுத்திருக்கிறேன் அதே தான் இதற்கும்...

    கீதா

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...