Monday, June 20, 2016

ஜி டி பி தெரியாத உனக்கு எதுக்கு தக்காளி சாம்பார்?


Sivakumar Enrum Anbudan என்ற நண்பர் முக நூலில் ஒரு கருத்தை இன்று வெளியிட்டு இருந்தார். நெத்தி அடி.. அதை அவரின் கருத்தை அனுமதி  கேட்டு விட்டு இங்கே வைக்கின்றேன்.

//காலையில எழுந்து பொழப்ப பாக்கணும்... புள்ளைய பள்ளியில விடணும்... வீட்டுக்கு காய்கறி வாங்கணும்... நெட் ஒழுங்கா வேலை செய்யணும்... இன்னைக்கு கரண்ட் கட் இருக்க கூடாது... பேங்கு போனா கூட்டம் இருக்க கூடாது... ரேசனுக்கு போகணும்... சின்ன பாப்பாவ டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போகணும்... மாச பட்ஜெட்ல 2000 ஆயிரம் குறையுது... டாக்டர் செலவு இன்னும் 500 கூடும்... இத சமாளிக்கணும்... பிரண்டு ஒருத்தன் 1000 ரூபா வாங்கினான்... அவன் சூழ்நிலையும் சரியில்ல.. அவனையும் நெருக்க முடியாது... தினமும் ராத்திரி ஒரு மணிநேரம் எக்ஸ்ட்ரா வேலை பார்த்தா இந்த சூழ்நிலைய சமாளிக்கலாம்...

ஒரு சாமானியன் நிலைமை இது தாங்க...

5 இலக்கம் - 6 இலக்கம் சம்பளம் வாங்குறவன்... தின்ன சோறு செரிக்க ஜாக்கிங் போறவன்... யூரோ டாலர் மதிப்பை ஷேர் மார்க்கெட்ல நோட் பண்றவன் தான் அதபத்தியெல்லாம் கவலை படணும்...


பெட்ரோல் 40 விற்றாலும் 70 விற்றாலும், அண்ணே 30க்கு அடிண்ணே சொல்றவனுக்கு அவர எப்படி தெரியும்...

ஜிடி யோ -- பீடியோ -- 1.77 சதவீத வீக்கமோ... அயோடெக்ஸோ... இதெல்லாம் என்னனு அவனுக்கு தெரியாது...

தம்பி பருப்பு வேல 150 ரூபா...
அய்யோ அவ்வளவா... சரி அரை கிலோ போடுங்க... 10 தேதி ஆகட்டும் அப்புறம் வாங்கிக்கலாம்...


தம்பி தக்காளி 80 ரூபா..

என்ன 80 தா..

100 ரூபா வித்துச்சு... இப்போ 20 குறைஞ்சுருக்கு...

சரிதான்... நீங்க 15 ரூபாய்க்கு கணக்கு பண்ணி தக்காளி போடுங்க...

இது தான் அவன் வாழ்க்கை.... // அவன போல இந்தியாவுல 90 கோடி பேரு இருக்கான்.... :(  //

ரெண்டு நாளா எல்லோரும் பேசுறீங்களே.... அந்த ரகுராம்ராஜன்... அவரு 
யாருங்க...???


பின் குறிப்பு :

நண்பரே.. நான் தொழில் ரீதியாக தணிக்கையாளன் தான்.. இந்த ஜி டி , பி டி.. அர்த்தடக்ஸ்... ஐயோடெக்ஸ் எல்லாம் எனக்கும் தெரியும். அது எல்லாம் நீங்க சொன்ன 90 கோடி ஆட்களுக்கு வேலைக்கு ஆகாது.. அதை பத்தி யாரும் கவலை பற்ற மாதிரியும் தெரியல.

காங்கிரஸ் போய் பி ஜே பி வந்தது.. பேய்க்கு பயந்து பிசாச்க்கு வாழ்க்கை பட்டுடோமொன்னு ஒரு பயம் தருது.

இதுந்தாலும் நம் அருமை நண்பர் பிரகாஷ் போலோரின் உற்சாகபடுத்தும் வார்த்தைகளால்.. அப்படி எதுவும் நடக்காதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

எந்த நம்பர் எப்படி இருந்தா இன்னா? இன்றைக்கு மதியம் ...

ராஜன் வீட்டுல... தக்காளி சாம்பார்.

சுனா சான வீட்டுல.. வெங்காய  குழம்பு.

மோடி வீட்டுல .. அவரு எங்கே வீட்டுலே இருந்தாரு..? விமானத்துல... மேக் இன் இந்தியா லஞ்ச்.

சுஷ்மா வீட்டுல( செவ்வாய் இல்ல , வெங்காயம் சேர்க்கமாட்டாங்க) வத்த    கொழம்பு.

தமிழிசை.. யாராவது தலித் தலையில பில்லை கட்டி இருப்பாங்க.

சோனியா - ராகுல்.. வீட்டுல "பார் பி க்குயு ..."

நீங்க சொன்ன 90 கோடி மக்களுக்கு.. முதலில் ஜி டி பி க்கு அர்த்தம் சொல்லி கொடுங்க.. ஜி டி பி தெரியாத ஆளுக்கு எதுக்கு தக்காளி சாம்பார்? தங்களின் இந்த வார்த்தை அடியேனை மிகவும் கவர்ந்தது. இதை ஒரு பதிவாக போடுகிறேன். ஆட்சேபனை இருந்தால் சொல்லவும், எடுத்து விடுகிறேன்.

3 comments:

 1. //தமிழிசை.. தயாராவது தலித் தலையில பில்லை கட்டி இருப்பாங்க.//
  மரண ROFL

  ReplyDelete
 2. உண்மைதான்! சாமானியர்களுக்கு எதற்கு இந்த ஜி.டி.பியும் ரகுராம் ராஜனும்!

  ReplyDelete
 3. அட போங்கப்பா நாங்களும் அந்த 90 கோடில தான் இருக்கோம். ஹும் அப்படித்தான் ஐயோ 80 ரூபாவா...ம்ம்ம்ம்ம் சரி ஒரு காக்கிலோ போடு போதும். பருப்பு விலை தினம் சாம்பார் வைக்கிற ஏழைங்க 250 270 கொடுத்தா வாங்க முடியும்...

  ஆனால் ஒண்ணு இங்கு சொல்லியே ஆகனும். ரேஷன்ல போடும் துவரம் பருப்பு நன்றாகவே இருக்கிறது. 30 ரூபாய்தான். ஆனால் வீட்டு வேலை செய்பவர்களுக்கு அந்தப் பருப்பு நல்லா இல்லையாம் என்று சொல்லி அதை என்னிடம் கொடுத்துவிடுவார் என் வீட்டிற்கு வரும் பெண்.

  கீதா

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...