Saturday, June 18, 2016

வக்கீலாலும் .. வக்கில்லாதவரினாலும் வந்த பாடு...

சென்ற வாரம் என் இளையவளின்  பள்ளி கூடத்தில் வருட இறுதி விழா - கூடம் இருந்தது. 6வது முதல் 8வது வரை படிக்கும் பிள்ளைகள் இவர்கள்.  இந்த விழாவில் 8 வது முடித்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை  கௌரவபடுத்தி அனுப்புவார்கள்.

மொத்த நிகழ்ச்சியும் 60 நிமிடத்திற்குள் முடிந்து விடும். இந்த 60 நிமிடத்தில்.. அங்கு இருந்தவர்கள் .. 72 முறையல்ல.. 100க்கும் மேல் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினார்கள்.

அன்று மாலை வெற்றிக்கு வந்ததும் அம்மணி.., சற்று  நேரம் நடந்து விட்டு வரலாம் என்று கூறுகையில்.. இன்னும் ஒரு வாரத்திற்கு எனக்கு உடற்பயிர்ச்சி வேண்டாம் என்றேன்.

எழுந்து நின்று  கை தட்டுவது இவர்களின் கலாச்சாரம். அதுவும் காங்கிரஸ் என்றால் சொல்லவே தேவையில்லை.

மோடி அவர்கள் வாங்கிய கை தட்டு இந்தியாவில் வாழும் அவரின் பக்தர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் அமெரிக்காவில் வாழும் எந்த ஒரு இந்தியனும்...

கை தட்டலை பார்த்தீர்களா.. அது இது என்று மிகை படுத்தி பேசினால் அது அந்த "ஆசாமியின்"  (என்னே ஒரு அருமையான வார்த்தை) அறியாமை என்று தான் சொல்லவேண்டும்.இந்த கை தட்டல் சாதாரண விஷயம் என்று அறியாத மற்ற கட்சிகாரகள்.... மோடிக்கு கை மாட்டும் தான் தட்டினார்கள்...ராஜீவ் காந்திக்கு ரீகன் அவர்கள் குடை பிடித்தார் என்ற ஒரு செய்தியை படத்தோடு போட்டு ஆறுதல் அடைந்தார்கள்.

ரீகன், ராஜீவ் காந்திக்கு குடை பிடித்தது என்னமோ உண்மை தான். அதற்கு காரணம், இவர்களின் விருந்தோம்பல் மற்றும் கலாச்சாரம் தான்.

இந்த குடை பிடித்தலை பெரிதாக நாம் பேசுகையிலே.. நம்முடைய விருந்தோம்பலின் ... நிலைமை என்ன என்று தெரிந்து இருக்கும்.

என்ன பேசினார்.. மன்னிக்கவும் படித்தார் என்று எந்த ஒரு மோடி பக்தர்க்கும் தெரியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் .. .72 முறை கை தட்டினான் என்பதே,.

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. பக்தர்கள் பேசுவது எல்லாம்..
ஏற்றுமதி சதவீதத்தை பார்த்தீர்களா?

இறக்குமதி இறங்கும் நிலயை பார்த்தீர்களா?

உலக பொருளாதார சந்தையில் நம் முன்னேற்றத்தை பார்த்தீர்களா.?

நம் பிரதமர் உலக தலைவர் ஆகுவதை பார்த்தீர்களா?

இப்படி.. தான்..

ஒரு சராசரி மனிதனின் வாழ்வின் தரம் கடந்த இரண்டு வருடத்தில் எப்படி உள்ளது?

ஒரு வேலை சாப்பாட்டின் நிலைமை எப்படி உள்ளது?


  • பருப்பு வாங்க முடிந்தால்.. வெங்காயம்... விலை ஏறுகிறது..
  • வெங்காயம் வாங்க முடிந்தால் ... தக்காளி விலை ஏறுகிறது...
  • தக்காளி வாங்க முடிந்தால் ... பருப்பு விலை ஏறுகிறது.


ஒருவன் வீட்டில் ஒரு பருப்பு சாம்பார் கூட நினைத்து பார்க்க முடியவில்லையே! அதற்க்கு பதிலை காணோம்.

சரி.. சாம்பாருக்கு தான் வக்கு இல்லை.. உழைக்க உடம்பில் சக்தி வேண்டுமே.. மாட்டு இறைச்சி தான் கொஞ்சம் குறைந்த விலையில் கிடைக்கின்றது என்றால்... அது நமக்கு தெய்வம்.. சாப்பிட கூடாது.. மாட்டை வெட்டி வெளிநாட்டிற்கு அனுப்பி அந்த பணத்தை  சில முதலாளிகள் பங்கு போட்டு கொள்ளலாம் என்ற ஒரு திட்டம்.

100 நாளில் கருப்பு பணம் .. கானல் நீராகிற்று. சரி.. கருப்பு பணத்தை விடுங்கள்.. 9000 கோடி கடனை வாங்கியவன் ஆட்டையை போட்டு விட்டு லண்டனில் ஆட்டம் போட்டு கொண்டு இருகின்றான். அவனுக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட 5 லட்சம் செலவு. நமக்காக   லண்டனில் அயராது உழைக்கும் ராஜ்யசபா உறுப்பினர் தானே அவன்.

என்னை பொறுத்தவரை.. கேடு கெட்ட காங்கிரஸ் ஆட்சிக்கும் இவர்களுக்கும் ஒரே வித்தியாசம் தான். இரு கட்சிகளுமே சுயநலவாதிகளால் நிரப்பப்பட்டு நம் நாட்டை சூதாடும் கட்சிகள்.

என்ன.. காங்கிரஸ் காலத்தில்.. மன்மோகன் அவர்கள் ஒரு பொருளாதார நிபுணராக இருந்து இருந்ததால்... சில அத்தியாவாசிய பொருட்களின் விலை கட்டுப்பாடில் இருந்தது. அது இப்போது இல்லை.

காங்கிரஸ் கட்சியில் நிரைய ஊழல் பெருச்சாளிகள் இருப்பது என்னமோ உண்மை தான். இருந்தாலும்.. இந்த "கூட்டணி தர்மத்தினால்" வந்து சேர்ந்த நம்ம ஊரு பண்ணையார்களின் ஊழல் காங்கிரஸ் கட்சிகாரனின் ஊழலை என்னமோ..

"4வது படிக்கையில் பக்கத்துக்கு சீட் பையனிடம் பல்பம் திருடியது போலாக்கிவிட்டது".

சரி தற்போதைய நிலைமைக்கு வருவோம்...

விமானத்திற்க்கே "ஜெட் லாக்" வரும் அளவு பயணம் செய்து  , பறந்து பறந்து உழைக்கும் பிரதமர்... வக்கீல் ஜெட் லி.. நிதி அமைச்சர்.. வக்கில்லா   ஸ்மிர்தி கல்வி துறை...

நெஞ்சு பொறுக்குதில்லையே... 

2 comments:

  1. ஆதங்கப்பட்டு கொள்ள மட்டுமே முடிகிறது! கட்டுரையில் சொன்னது அனைத்தும் நிஜம்!

    ReplyDelete
  2. சரிதான் விசு. இதில் மோடி டைம் மேனேஜ் செயவதில் மிகவும் திறமையானவராமே அப்படித்தான் ஊடகங்கள் சொல்லுகின்றன. ஹும் ஆனால் இங்கு விலை வாசி எகிறி வயிற்ரைக் கலங்கடிக்குது...

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...