Wednesday, June 15, 2016

என்னடா நடக்குது இங்கே?

தமிழக தேர்தல் முடிந்தவுடன் ....இனி சில காலம் நமக்கு அரசியல் வேண்டாம் என்று முடிவு பண்ணி "சொந்த கதை சோக கதையில் " என் பதிவுகளை எழுதி வந்தேன்.

என்னதான் வேண்டாம் என்று இருந்தாலும் ... நம்மூர் அரசியல்வாதிகள் நம்மை விட்டு வைப்பார்களா...ஒவ்வொரு நாளும் செய்திகளை சுட்டினால் அத்தனையும் சுவாராசியமான தகவல்கள்.

சரி... இனி எப்பவாவது ஒரு அரசியல்  - நாட்டு நடப்பு பதிவு போடலாம்னு யோசித்து வந்த பதிவு.

முதல் செய்தி..

அமெரிக்க காங்கிரஸ் அவையில் பிரதமர் மோடி  அவர்களைன் பிரமாத பேச்சு. 70 முறைக்கும் மேலே கை தட்டினார்கள்.

இதை  எழுதும் முன் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். அடியேன் மோடி  பக்தனும் அல்ல.. அதற்குநேர் மறையும் அல்ல.
குஜராத் கலவரத்தில் அவர் செயல்பட்ட விதம் என்னை மிகவும் பாதித்தது. அதனால் அவர் மீது எனக்கு மரியாதை வர தவருகிறது. அதே  நேரத்தில்.. கேடு கெட்ட காங்கிரஸ் கட்சியை அவர் தவிடு பொடியாக்கியத்தை என்னை விட யாரும் அதிகம் ரசித்து இருக்க முடியாது.சரி, இப்போது இவரின் பேச்சுக்கு வருவோம். பிரதமர் மோடி ஒரு சிறந்த பேச்சாளர் என்பது நாம் அறிந்த ஒன்றே. இந்த காங்கிரஸ் உரை அவர் பேச்சு அல்ல. ஆங்கிலத்தை குஜராத்தி மொழியில் எழுதி அதை எதிரே உள்ள கண்ணாடியில் படித்தார். அதை அவரே எழுதினாரா? வேறு யாராவது எழுதி தந்தார்களா ? நல்ல எழுத்து. அதை நன்றாக படித்தார்.

இவர் படிப்பதில் நல்ல  முன்னேற்றம். முன்பு ஒரு முறை.. ஆங்கிலத்தை படிக்கும் போது ...மிஸர்ஸ் சிறிசேனா என்பதற்கு பதிலாக எம் .  ஆர் .  எஸ்.   சிறிசேனா என்று படித்தது நினைவில் இருந்து இன்னும் அகலவில்லை .

மற்றும்.. தனக்கு விசா மறுத்த நாட்டிலே அவர்கள் ஆளும் இடத்திலே வந்து அவர்களின் பாராட்டை பெற்றது மோடி அவர்களின் தனிப்பட்ட வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.

இங்கே உள்ள ஆட்கள் கை தட்டினார்கள்  என்பது எல்லாம் ஒரு விஷயமே  இல்லை. இன்னும் சொல்லப்போனால் .. அரசியல் கன்றுக்குட்டி ராகுல்
 காந்தி வந்து பேசி இருந்தாலும் அந்த மரியாதை தான். அது இந்திய நாட்டு பிரதமருக்கு இவர்கள் தரும் மரியாதை

அடுத்த செய்தி...

கருணாநிதி அவர்களின்சமஸ்கிருதம் பற்றியது "விரட்டி அடிக்க வேண்டுமாம்" . இப்படி தான்  ஹிந்தியை விரட்டி அடிக்க சொல்லிவிட்டு .. தன் குடும்பத்தை சேர்ந்த தாயநிதி மாறனுக்கு ஹிந்தி தெரியும் என்றே ஒரே காரணத்தினால் மத்திய அமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்தார்.

சமஸ்கிருதம் வேண்டுமா வேண்டாமா.? அது தனி மனித விருப்பம். தலைவர் நம்மை மீண்டும் முட்டாள் ஆக்குவதை பார்த்தால்..

"இன்னும்மா இவங்க நம்மை நம்பூராங்க என்ற கேள்வி தான் வருகின்றது ..."

அடுத்த செய்தி.. நம்ம இரட்டை பட்டதாரி ... யெல் பல்கலைகலக அறிவு களஞ்சியம் .மத்திய அமைச்சர் ஸ்மிரிடி இறாணி . பீஹாரின் கல்வி அமைச்சர் இந்த அம்மையாரை ட்விட்ட்ரில்  .. "டியர் " என்று அழைத்து கல்வி துறை சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்டு  விட்டாராம் .. ஒரு பெண்ணை எப்போதில் இருந்து "டியர்" என்று அழைக்க ஆரம்பித்தோம் என்று பொங்கி எழுந்து விட்டார்.
இவ்வளவு  பொங்கியவர் கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லை என்பது கூறுப்பிட தக்கது.

மற்றும்..

இந்த வாரம் கருப்பு பணம் மீட்பு பற்றி பேச ஒரு குழு ஸ்விஸ்போக உள்ளதாம். மீட்பது இருக்கட்டும். இவர்கள் போகும் போது எதுவும் கருப்பு பணம் எடுத்து போகாத மாதிரி பார்த்து கொள்ளவும்..

கடைசியாக .. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆபத்தாம் ... ஆம் ஆத்மி
 கட்சி ஒன்றும் இல்லாமல் அழிய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பி ஜே பி கட்சிகள் நினைப்பததில் தவறே இல்லை.

என்னை பொருத்தவரை .. ஆம் ஆத்மி நாம் நாட்டுக்கு மிக்க தேவை. நாட்டின் தலை நகரில் பாராளுமன்றம் அமைந்துள்ள டெல்லியில் இன்னொரு கட்சி
 ஆட்சி செய்வது.. மத்திய ஆளுங்கட்சியை சற்று கவனமாக இருக்க வைக்கும்.

இப்போது புதிதாய் படித்தது..

ரகசியம் எதுவும் இல்லை .... சிதம்பரம்..

இவர் விட்டா.... சிதம்பர ரகசியமே இல்லைனு சொல்வாரு...

நெஞ்சு பொறுக்குதில்லையே  ...

3 comments:

 1. //அவர் மீது எனக்கு மரியாதை வர தவருகிறது//
  - அது எப்படிங்க கரெக்டா தவறியிருக்கீங்க?!

  66 தடவை தட்டுனாங்க, 72 தடவை தட்டுனாங்கன்னு சொல்றாங்களே, அவரு என்னதான் பேசினாரு, எதுக்கு கை தட்டுனாங்கன்னு யாரும் சொல்றதே இல்ல... (45 நிமிசப் பேச்சுல 72 தடவை எந்திரிச்சு நின்னு கை தட்டுனாங்கன்னா கொஞ்சம் மெர்சல் ஆகுதில்லே...!)

  ReplyDelete
 2. மோடி ஆங்கிலத்தில் பேசினார் என்று இந்தியர்களும் இல்லை இல்லை அவர் பேசியது ஹிந்திதான் என அமெரிக்கர்களும் சொல்லி கொண்டிருக்கும் வேலையில் நீங்கள்தான் அவர் ஆங்கிலத்தை குஜராத்தி மொழியில் எழுதி அதை எதிரே உள்ள கண்ணாடியில் இருந்து படித்தார் என்று உண்மையை சொல்லி இருக்கிறார்கள். அன்புமணியும் அமெரிக்க பல்கலைகழகத்தில் பேசிய போது இப்படிதான் அவருக்கும் கைதட்டினார்கள் என்று முன்பு சொல்லி பெருமை பட்டு இருக்கிறார் இப்போது இவரும் அது மாதிரி பெருமை பட்டுக் கொண்டிருக்கிறார்

  ReplyDelete
 3. விசு அமெரிக்கரகளைப் பர்றியும், அமெரிக்காவைப் பற்றியும் - ஹும் உலக அறிவே - இல்லாதவர்கள்தான் இப்படிப் பேசுகின்றார்கள்..சரி அதை விடுங்க அவரு அப்படி என்னதான் பேசினாருப்பா...

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...